Sunday, June 14, 2009

நானும் அமெரிக்கா போறேன்.

முந்திய பகுதி
குடுகுடுப்பை: வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.

ஒருவழியா வேலை கிடைச்சி வெற்றிகரமா வாழ்க்கை திருவல்லிக்கேணி மேன்சனில் வாழ்க்கை தொடர்ந்தது, இரண்டு வேலை நல்ல சாப்பாடு, வில்ஸ் பில்ட்டர் அப்படின்னு நல்லபடியா கழிந்தது.காலை உணவு எப்போதும் கிடையாது, காலை உணவாக எங்கள் கல்லூரி விடுதியில் போடப்பட்ட பொங்கல், சேமியாவின் பலனாக அதனை இன்று வரை மறந்துவிட்டேன்.

திடீரென்று ஒருநாள் எங்க அலுவலக ஹெச்சார் கூப்பிட்டு உனக்கு பிராட்விசன்(Broadvision) training ஒரு மாசம் இருக்கு நீங்க நாளைலேந்து அந்த பில்டிங் போகனும் அப்படின்னாரு. எனக்கு ஒன்னும் புரியல ஒருவேலை என்னுடைய அழகிய கண்களை பார்த்து இப்படி ஒரு விசனுக்கு அனுப்புறாங்கன்னு நெனச்சிட்டேன்.

அங்கே போய் பாத்தப்ப தெரிஞ்சது அது ஒரு ஈகாமர்ஸ் சாப்ட்வேர் அதுக்கு டிரெய்னிங்,அமெரிக்காவிலேந்து ஒருத்தர் வந்து பாடம் நடத்தப்போறாருன்னு, பாடம் நடத்தும்போது அவரு சொல்லிட்டாரு நீங்க கூடிய விரைவில் அமெரிக்கா போகனும். ஹெச்சார் என்னோட பாஸ்போர்ட் வாங்கி உடனடியா B1 ஸ்டாம்பிங் பண்ணிட்டாங்க.

கூடிய விரைவில் அமெரிக்கா போகப்போறோம், அங்கே உள்ள உணவு பழக்கத்து தயாராகனும்னு முடிவு பண்ணி அதுவரைக்கும் பொன்னுசாமி, அஞ்சப்பர்னு மதியம் வலைச்சு அடிச்சு சாப்பிட்டு இருந்த நண்பர்கள் சிலர், கீரீம்ஸ் ரோட்டில் உள்ள அமெரிக்க இத்தாலியன் ஈட்டரிங்கற ரெஸ்டாரண்ட்ல லஞ்சப்போணோம். ஆளாளுக்கு என்னமோ ஆர்டர் பண்ணாங்க வந்து இருந்த எல்லாரும் என்னமோ பாஸ்டா அப்படி இப்படின்னி ஆர்டர் பண்ணாங்க, நான் என்னோட நண்பர் ஒருத்தன்கிட்ட என்னடா ஆர்டர் பண்ணலாம்னு கேட்டேன், அவன் சொன்னபடி சிக்கன் பர்கர் ஆர்டர் பண்ணியாச்சு.

கொண்டு வந்து கொடுத்தான் 50 காசு பண்ணுக்கு நடுவில ஒரு சிக்கன் வெச்சி அரை அடி உயரத்துல, நானும் அதை வாயில கடிக்கறதுக்குள்ள வாயெல்லாம் வலிக்குது, ஒரு வழியா கண்ணுல தண்ணிவர வாய் வலிக்க வலிக்க முதல் பர்கரில் கால் வாசி சாப்பிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒடி வந்தோம்.ஏற்கனவே இந்த பண்ணுல எனக்கு ஒரு அனுபவம் இருக்கு, திருவல்லிக்கேணி ரத்னா கபேல பாவ் பஜ்ஜின்னா என்னன்னு தெரியாம ஆர்டர் பண்ணி பண்ணையும் , வெங்காயத்தயும் வெச்சத பாத்து, பக்கத்து சீட்டில இரண்டு இட்லிக்கு குண்டான் சாம்பார் குடிக்கிறவன பாத்து வயித்தெரிசலோட வந்திருக்கேன்.

வழக்கம் போல இந்த வாட்டி B1 விசால யாரும் வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க,ஆறு மாசம் இப்படியே போச்சு, அதுக்குள்ள H1விசா பண்ணிடாங்க. திரும்பவும் நாள் குறிச்சிட்டாங்க, நானும் கோட், சூட் குளிருக்கு ஜாக்கெட் எல்லாம் வாங்கி தயாராகிட்டென். எங்க ஊர்லேந்து எங்கப்பா அண்ணன் , கல்பாக்கம் நண்பர்கள் எல்லாரும் வழியனுப்ப வந்திட்டாங்க, எல்லாருக்கும் திருவல்லிக்கேணில ரூம் போட்டாச்சு. வழக்கம் போல ஒரு வாரம் இன்னைக்கு நாளைக்கு இழுத்ததில எங்கப்பா நான் ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டார்.

ஒருவழியா மூன்று பேர் அடுத்த வாரத்தில் ஒருநாள் கிளம்பினோம்.அதில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்கா சென்று வந்தவர், நீங்க கவலைப்படாதீங்க என் பின்னாடியே வாங்க நான் பாத்துக்கறேன்னு சொன்னார். பிரிட்டிஸ் ஏர்வேய்ஸ் பிளைட் லண்டன் சென்று பின்னர் சிகாகோ வரை செல்லவேண்டும். ஏர்போர்ட்டில் அவர் வழிகாட்டுதலில் அவர் பின்னாடியே சென்றோம்.அவர் செக்கின் பண்ணி முடித்துவிட்டார். அவருக்கு பின்னால் நான் எனக்கு பின்னால் என் நண்பர். செக்கின் செய்பவர் என்னை சிறிது நேரம் காத்திருக்க சொன்னார், இந்த பிளைட் ஓவர்புக் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆஹா நம்மள திருப்பி அனுப்பிச்சிட்டாங்கடான்னு நானும் நண்பனும் முடிவு பண்ணிட்டோம்.

கவலைப்படாதீங்க உங்க டிக்கெட் அப்கிரேட் பண்ணி நீங்க business class ல போறீங்கன்னாங்க, அப்படின்னா என்னான்னு கூட எனக்கு தெரியாது, ஆனா நம்மள திருப்பி அனுப்பலன்னு மட்டும் தெரிஞ்சது. சென்னை, லண்டன் பயணம் மிக சொகுசு, நினைச்ச நேரமெல்லாம் சரக்கு சாப்பாடு, உயர்தரமான இருக்கை , முதல் விமானப்பயணம் இனித்தது.

லண்டனில் இருந்து சிகாகோ மீண்டும் economy class க்கு மாத்திட்டாங்க, அப்பதான் தெரிஞ்சது 36 ம் நம்பர் பஸ்ஸுல படிக்கட்டுல கர்ச்சிப்ப போட்டு உட்காந்து வர வசதி கூட இதில இல்லையேன்னு, முதுகு பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. சிகாகோல வந்து இறங்கியாச்சு கூப்பிட்டு போக யாரும் வரலை.நல்லவேலையா அனுபவசாலி கூடவே இருந்ததினால் அவரு வழக்கமா வருகிற கேப் டிரைவருக்கு போன் பண்ணி ஒரு வழியா ஹோட்டல் அறையை அடைந்தேன்.

இனி எதிர்பாத்தவை எதிர்பாராதவை.......

34 comments:

மருதநாயகம் said...

//காலை உணவாக எங்கள் கல்லூரி விடுதியில் போடப்பட்ட பொங்கல், சேமியாவின் பலனாக அதனை இன்று வரை மறந்துவிட்டேன்//

ஒரே ஃபீலிங்க்ஸா அயிடுச்சு போங்க

நட்புடன் ஜமால் said...

னக்கு ஒன்னும் புரியல ஒருவேலை என்னுடைய அழகிய கண்களை பார்த்து இப்படி ஒரு விசனுக்கு அனுப்புறாங்க நெனச்சிட்டேன்.\\

ஹா ஹா ஹா

பொங்கல் நிறைய சாப்பிட்டு இப்படி ஆயிட்டியோ!

நட்புடன் ஜமால் said...

கொண்டு வந்து கொடுத்தான் 50 காசு பண்ணுக்கு நடுவில ஒரு சிக்கன் வெச்சி அரை அடி உயரத்துல\\

யப்பா! அருமையான அறிமுகம்ப்பா இது.

காசு மட்டும் தான் போகும் பசி அப்படியே! ...

நட்புடன் ஜமால் said...

பக்கத்து சீட்டில இரண்டு இட்லிக்கு குண்டான் சாம்பார் குடிக்கிறவன பாத்து வயித்தெரிசலோட வந்திருக்கேன்.\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

இனி எதிர்பாத்தவை எதிர்பாராதவை.......\\

நாங்களும்

நீங்களும்

குடுகுடுப்பை said...

மருதநாயகம் said...

//காலை உணவாக எங்கள் கல்லூரி விடுதியில் போடப்பட்ட பொங்கல், சேமியாவின் பலனாக அதனை இன்று வரை மறந்துவிட்டேன்//

ஒரே ஃபீலிங்க்ஸா அயிடுச்சு போங்க//

பொங்கல் சாப்பிடனும் போல இருக்கா ?

குடுகுடுப்பை said...

நட்புடன் ஜமால் said...

னக்கு ஒன்னும் புரியல ஒருவேலை என்னுடைய அழகிய கண்களை பார்த்து இப்படி ஒரு விசனுக்கு அனுப்புறாங்க நெனச்சிட்டேன்.\\

ஹா ஹா ஹா

பொங்கல் நிறைய சாப்பிட்டு இப்படி ஆயிட்டியோ!
//

இல்லப்பா அது ஸ்டோன்

வேத்தியன் said...

ரசனையாக எழுதியிருக்கீங்கண்ணே...

எங்க இவ்வளவு நாளா ஆளையே காணோம்???
:-)

வேத்தியன் said...

அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்...

எம்.எம்.அப்துல்லா said...

ஜீப்பரு

:)

புதியவன் said...

//ஒருவேலை என்னுடைய அழகிய கண்களை பார்த்து இப்படி ஒரு விசனுக்கு அனுப்புறாங்கன்னு நெனச்சிட்டேன்.//

இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியல....?

புதியவன் said...

//லஞ்சப்போணோம்//

புதுமையான வார்த்தை தேர்வு...

சந்தனமுல்லை said...

//காலை உணவாக எங்கள் கல்லூரி விடுதியில் போடப்பட்ட பொங்கல், சேமியாவின் பலனாக அதனை இன்று வரை மறந்துவிட்டேன்.
//

:-))

Anonymous said...

பிஸினஸ் க்ளாஸ்ல போயிட்டு முதுகுவலின்னு வேற குறை சொல்லறீங்களா!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

கதை மிகவும் வேகமாக செல்கிறது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

முதல் வேலை கிடைத்தவுடன்.. பக்கத்துக்கு சீட்டில் உள்ள பெண்ணிடம் ஜொள் விட்டது போன்றவற்றை லாவகமாக தவிர்த்ததற்கு மற்றும் ஒரு கண்டனம்

புல்லட் said...

எங்களுக்கும் அமெரிக்க கனவுகள் உண்டு... உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பாடங்களே...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நல்ல தொடர்..

ஏன் இவ்ளோ நாளா இடைவெளி விட்டுடிங்க..??

குடுகுடுப்பை said...

பித்தன் said...

கதை மிகவும் வேகமாக செல்கிறது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

முதல் வேலை கிடைத்தவுடன்.. பக்கத்துக்கு சீட்டில் உள்ள பெண்ணிடம் ஜொள் விட்டது போன்றவற்றை லாவகமாக தவிர்த்ததற்கு மற்றும் ஒரு கண்டனம்
//

உங்கள் கண்டனத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

குடுகுடுப்பை said...

நன்றி
வேத்தியன்
அப்துல்லா
புதியவன்
சந்தனமுல்லை

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

பிஸினஸ் க்ளாஸ்ல போயிட்டு முதுகுவலின்னு வேற குறை சொல்லறீங்களா!!//

லண்டன் -சிகாகோ எகனாமி கிளாஸ்தாங்க

குடுகுடுப்பை said...

புல்லட் பாண்டி said...

எங்களுக்கும் அமெரிக்க கனவுகள் உண்டு... உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பாடங்களே...//

கிளம்பி வாங்க அப்படியெ இங்கெ பக்கமா ஒரு தீவு வாங்கி தன்மானத்தோட வாழலாம்.

குடுகுடுப்பை said...

பட்டிக்காட்டான்.. said...

நல்ல தொடர்..

ஏன் இவ்ளோ நாளா இடைவெளி விட்டுடிங்க..??//

வேலை, வேலை..

நசரேயன் said...

பழைய வேகம் வருதுண்ணே

மணிப்பக்கம் said...

:) :) :)

குடுகுடுப்பை said...

மணிப்பக்கம் said...

:) :) :)

நன்றி மணி

RAMYA said...

//
முந்திய பகுதி
குடுகுடுப்பை: வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.
//

இதை ஏற்கனவே படிச்சி வயறு கிழிஞ்சி போச்சு
மறுபடியுமா?? :))

RAMYA said...

//
ஒருவழியா வேலை கிடைச்சி வெற்றிகரமா வாழ்க்கை திருவல்லிக்கேணி மேன்சனில் வாழ்க்கை தொடர்ந்தது, இரண்டு வேலை நல்ல சாப்பாடு, வில்ஸ் பில்ட்டர் அப்படின்னு நல்லபடியா கழிந்தது.காலை உணவு எப்போதும் கிடையாது, காலை உணவாக எங்கள் கல்லூரி விடுதியில் போடப்பட்ட பொங்கல், சேமியாவின் பலனாக அதனை இன்று வரை மறந்துவிட்டேன்.
//

மாற்றங்கள் மகிழ்ச்சியை கொடுத்ததா :)

RAMYA said...

//
திடீரென்று ஒருநாள் எங்க அலுவலக ஹெச்சார் கூப்பிட்டு உனக்கு பிராட்விசன்(Broadvision) training ஒரு மாசம் இருக்கு நீங்க நாளைலேந்து அந்த பில்டிங் போகனும் அப்படின்னாரு. எனக்கு ஒன்னும் புரியல ஒருவேலை என்னுடைய அழகிய கண்களை பார்த்து இப்படி ஒரு விசனுக்கு அனுப்புறாங்கன்னு நெனச்சிட்டேன்.
//

கண்ணு அழகா?? யாருமே சொல்லவே இல்லை.

நல்லா சொல்லுங்க உங்கள் கண்ணு பாக்கறதுக்கு குமரிமுத்து கண்ணு மாதிரிதானே இருக்கும் :))

RAMYA said...

//
அங்கே போய் பாத்தப்ப தெரிஞ்சது அது ஒரு ஈகாமர்ஸ் சாப்ட்வேர் அதுக்கு டிரெய்னிங்,அமெரிக்காவிலேந்து ஒருத்தர் வந்து பாடம் நடத்தப்போறாருன்னு, பாடம் நடத்தும்போது அவரு சொல்லிட்டாரு நீங்க கூடிய விரைவில் அமெரிக்கா போகனும். ஹெச்சார் என்னோட பாஸ்போர்ட் வாங்கி உடனடியா B1 ஸ்டாம்பிங் பண்ணிட்டாங்க.
//

வாழ்த்துக்கள் !!

RAMYA said...

//
நான் என்னோட நண்பர் ஒருத்தன்கிட்ட என்னடா ஆர்டர் பண்ணலாம்னு கேட்டேன், அவன் சொன்னபடி சிக்கன் பர்கர் ஆர்டர் பண்ணியாச்சு.
//

ரொம்ப நல்ல பிள்ளை போல குடுகுடுப்பையார் :))

RAMYA said...

//
கொண்டு வந்து கொடுத்தான் 50 காசு பண்ணுக்கு நடுவில ஒரு சிக்கன் வெச்சி அரை அடி உயரத்துல, நானும் அதை வாயில கடிக்கறதுக்குள்ள வாயெல்லாம் வலிக்குது, ஒரு வழியா கண்ணுல தண்ணிவர வாய் வலிக்க வலிக்க முதல் பர்கரில் கால் வாசி சாப்பிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒடி வந்தோம்.ஏற்கனவே இந்த பண்ணுல எனக்கு ஒரு அனுபவம் இருக்கு, திருவல்லிக்கேணி ரத்னா கபேல பாவ் பஜ்ஜின்னா என்னன்னு தெரியாம ஆர்டர் பண்ணி பண்ணையும் , வெங்காயத்தயும் வெச்சத பாத்து, பக்கத்து சீட்டில இரண்டு இட்லிக்கு குண்டான் சாம்பார் குடிக்கிறவன பாத்து வயித்தெரிசலோட வந்திருக்கேன்.
//

கண்ணுலே தண்ணி மட்டுமா?? காத்து வழியா புகை கூட வந்திருக்குமே?
ஹையோ ஹையோ ரொம்ப சிரிப்பா இருக்கு :))

RAMYA said...

//
லண்டனில் இருந்து சிகாகோ மீண்டும் economy class க்கு மாத்திட்டாங்க, அப்பதான் தெரிஞ்சது 36 ம் நம்பர் பஸ்ஸுல படிக்கட்டுல கர்ச்சிப்ப போட்டு உட்காந்து வர வசதி கூட இதில இல்லையேன்னு,
//

பயங்கர அனுபவம் குடுகுடுப்பையாருக்கு :)

ஷண்முகப்ரியன் said...

சென்னை, லண்டன் பயணம் மிக சொகுசு, நினைச்ச நேரமெல்லாம் சரக்கு சாப்பாடு, உயர்தரமான இருக்கை , முதல் விமானப்பயணம் இனித்தது.//

முதல்விமானப் பயண்மே பிஸினஸ் கிளாஸா?
உங்கள் அதிர்ஷ்டம் அப்போதே டேக் ஆஃப் ஆகி விட்டிருக்கிறது,குடுகுடுப்பை.வாழ்த்துகள்.