Wednesday, April 15, 2009

பாகம் 2:வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.

பாகம் 1

வீட்டுக்காரம்மா: இந்த மனுசனுக்கு வாக்கப்பட்டு காலம் பூரா பேச்சு வாங்கியே என் ஆயிசு ஓடிருச்சு.

முருகன்: சரி அத்தோட விடுங்க..
-----


விநாயகம்: பட்டைகிட்ட செங்கல்லுக்கு பேசிட்டேன், நீயும் முருகனுமா போய் ஏத்திட்டு வாங்க.

பரமன்: முருகன் சின்னப்பைய அவனும் நானும் போதுமா, வைத்திய வேணும்னா கூப்புட்டுக்கலாமா?

முருகன்: வேண்டாம்பா எனக்கு 15 வயசு ஆயிடுச்சு, நான் செங்கல் வண்டில ஏத்துறேன். நீயும் வைத்தியும் வந்தா அப்புரம் உங்க ரெண்டு பேரையும் வண்டில ஏத்தனும்.

--

செங்கல் ஏற்றிக்கொண்டு வீட்டில் வந்து சேர்ந்தனர்.

விநாயகம்: என்னய்யா இது செங்கல்லு, உடைஞ்ச கல்லா இருக்கு, பாத்து வாங்கறதில்லை, அவந்தான் சின்னப்பையன் ஒன்னும் தெரியாது உனக்கு எங்க போச்சு அறிவு.

பரமன்: அவன் ஏத்திக்க சொன்னத தான் நாங்க ஏத்துனோம் ,நீ இதத்தான் வாங்கினேன்னு சொன்னான்

--
விநாயகம்: யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா? நீ அனுப்பிருக்க செங்கல்லுல பல்லுதான் விளக்கமுடியும்.

பட்டை: இல்லடா தம்பி, லேசா கார்னர்தானடா உடைஞ்சிருக்கும். அத வெச்சு நல்லா வீடு கட்டலாம்டா நல்லா சுட்ட செங்கல்லுடா?

விநாயகம்: நீயெல்லாம் ஏன்யா பெரிய மனுசன்னு வேட்டிய கட்டிட்டு அலையுற? மரியாதையா காச திருப்பிக்கொடுத்துட்டு உன் கல்லை வந்து ஏத்திட்டு போயிரு, அதுல பல்லு விளக்குவியோ வீடு கட்டுவியோ உன் இஷ்டம். காசு திருப்பிக்கொடுக்கலைன்னா நடக்கிறதே வேற.

பட்டை: என்னடா இது பெரிய மனுசன்னு பாக்காம மரியாதை கெட்டத்தனமா பேசுற?

விநாயகம் : நாலு பேர அழைச்சிட்டு வா,நீ வித்த செங்கல்ல காட்டுவோம்.

பட்டை: இந்தாப்பா உன்காசு, நான் நாலு இடத்துல வட்டிக்கு விட்டு பொழப்பு நடத்துறவன் என் பொழப்புல மண்ணல்லி போட்டுறதா.

விநாயகம்: சரி சரி மறக்காம அந்த செம்மண்ண திருப்பி ஏத்திட்டு போயிரு.

----

விநாயகம்: யப்பா சிப்பினாம்பட்டில வேப்பமரம் மலிவா கிடைச்சது, கணேசன் கிட்ட கடன் வாங்கி அந்த மரத்தை வாங்கிட்டேன். நீ முத்தையன் ஆசாரிய அழைச்சிட்டு போய் அத உத்திரத்துக்கும் ஓடு போடறதுக்கு சட்டமும் மத்த வேலைக்குமா கரம்பக்குடி மில்லுல அறுத்து எடுத்துட்டு வாங்க. லாரிக்கு கரம்பக்குடில சொல்லிருக்கேன்.

பரமன்: சரிடா நான் பாத்துக்கறேன்.

--

புதிய இடத்தில் செங்கல் வாங்கி, சிமெண்ட் வாங்கி வீடு கட்டுதல் நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில்.

குமரன்: டேய் எவண்டா இங்க கொத்தன், என் பொண்டாண்டி இங்கே சித்தாளா வேலை பாத்தா நீ மரியாதையா பேசாம முறைகேடா பேசிட்டிருக்க. எப்ப பாத்தாலும் தூக்கு இறக்குன்னு பேசிட்டிருக்க. அவள திமிராட உனக்கு பிழைக்க வந்த நாயே.

சித்தாள்: இந்தாய்யா குடிச்சிட்டு சும்மா பேசமா அந்தப்பக்கம் போ.

கொத்தனார்: யோவ் இங்க சாந்து சட்டிய தூக்கு, இறக்குன்னுதான்யா சொல்லியாகனும், அப்புறம் எப்படிய்யா சொல்றது? பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பிச்சிட்டு வெட்டியா குடிச்சிக்கிட்டு வீண் வம்புக்கு ஏன்யா அலையுற, வேணும்னா நீயும் வந்து மம்மட்டி ஆளா வேலையப்பாரு.

குமரன்: யாரப்பாத்து என்ன பேசுற ,அதுவும் என் ஊர்ல வந்து, டேய் விநாயகம் இந்த நாயை அடிச்சி வெரட்டு, இல்லன்னா நீ எப்படி வீடு கட்டறேன்னு பாக்கிறேன்.

கொத்தனார்: யப்பா விநாயகம் இவன் தொல்லை தாங்க முடியல இவன் என் பேரக்கெடுத்துருவான், நீ வேற ஆள் வெச்சு வீடக்கட்டிக்கப்பா, உன் ஊரு பக்கமே நான் இனிமே தலை வெச்சு படுக்கமாட்டேன்.


சித்தாள்: குடிக்குறதும் இல்லாம என் பொழப்ப வேற கெடுத்துப்புட்டான் இந்தப்படுபாவி.

விநாயகம்: என்னடா ஓடு போடவேண்டிய நேரம் வந்தாச்சு, கொத்தனார் வேற விட்டுட்டு போயிட்டார், இப்ப என்ன பண்றது,சான் ஏறுனா முழம் சறுக்குது.

முருகன்: நம்மூரு அம்பேத்கார் இப்ப கொத்தனார் வேலை பாக்கிறாப்ல நல்லாதான் பண்றாரு அவர வெச்சு வேலையை முடிப்போம்.

பரமன்: கீழ் சாதிக்காரப்பயல வெச்சு வீடு கட்ட சொல்லுறியா நீ?

விநாயகம்: பெரிசா வந்துட்ட நீ வேற கீழ்சாதி மேல்சாதின்னு,குடிக்கறப்ப மட்டும்தான் அது உனக்கு தெரியாது, சரிடா தம்பி நீ அம்பேத்கார கூட்டிட்டு வா நம்ம வேலைய ஆரம்பிப்போம்..

----------
முத்தையன் ஆசாரி: அந்த கொத்தனார் சைடு சுவர ரொம்ப பெரிசா கட்டிட்டாருப்பா, அத இடிக்கனும் உத்திரத்திலேந்து குத்துச்சட்டம் இவ்வளவு உயரந்தான் கணக்கு ஆனா சுவரு உயரமா இருக்கு, இடிக்கனும்.

அம்பேத்கார்: இல்லண்ணே சுவர் இவ்ளோ உயரம் இருந்தாதான் ஓட்டு வீட்டுக்கு நல்லது, நீங்க குத்துச்சட்டம் பெரிசா பண்ணிருக்கனும் இல்லண்ணா வீடு பந்தல் மாதிரி ஆயிரும் அப்புரம் ஒழுகும்.

முத்தையன் ஆசாரி: தம்பி நீ தொழிலுக்கு புதுசு சின்னப்பய ,நான் பல காலமா தொழில்ல இருக்கேன், எனக்கு நீ புத்திமதி சொல்லவேண்டாம்.

அம்பேத்கார்:உங்களுக்கும் இதுதானே முதல் வீடு கட்டுற அனுபவம் , நான் நிறைய கவர்மெண்ட் குவாட்டர்ஸ்,டவுண்ல நிறைய வீட்ல வேல பாத்திருக்கேன். நீங்க பெஞ்சு,நாற்காலி நல்லா செய்வீரூ, ஆனா வீட்டு அனுபவம் உங்களுக்கு பத்தாது.

விநாயகம்: யோவ் என்னய்யா ஆசாரி கூட்டிட்டு வந்திருக்க, இது வரைக்கும் வீடே கட்டினதில்லையாம், எனக்கும் இதுதான் முத வீடு அந்தாளுக்கும் இதுதான் முத வீடாம்.

பரமன்: என்ன என்னடா பண்ண சொல்றா சாராயக்கடைல பேமசா பேசிக்கிட்டாங்க அதான்.

அம்பேத்கார்: என்னாட விநாயகம் என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்க கூடாதா, சாதி பாத்துதானடா நீயும் என்னைக்கூப்புடல.

விநாயகம்: நீ வேறடா , நீ கொத்தனார் வேலை பாக்கிறத முருகன் சொல்லிதான் எனக்கு தெரியும், நீ டவுண்ல வேலை பாத்திட்டு அங்கேயே இருக்கே , எனக்கு தெரியாம போச்சுடா. இப்பவே செலவு தலைக்கு மேல ஆயிருச்சு.

அம்பேத்கார்: இதெல்லாம் ஒரு சிரமமாடா நாங்க படற சிரமத்தோட. விடுறா எல்லாம் நல்லா நடக்கும்.

----

ஒருவழியா ஓடு போடும் நாள் வந்தது..

முத்தையன் : என்ன மருமவனே அந்த சட்டத்தை நல்லா அடிச்சிட்டிங்களா?

சிவக்குமார்: அடிச்சிட்டேன் மாமா. ஆனா வெச்சு பாத்தா ஓடு ஒன்னுமேல ஒன்னு ஏறி வருது.

விநாயகம் : என்னய்யா சொல்ற உனக்கும் வீட்டு வேலை தெரியாதா?

சிவக்குமார்: தம்பி நான் கொல்ல ஆசாரி இரும்பு வேலை பாக்கிற ஆள், வேலை இல்லாம இருந்தேன் மாமா கூப்பிட்டாருன்னு வந்தேன்.

விநாயகம் : யோவ் உன் குடும்பத்துக்கு வேலை கொடுக்கவாய்யா நான் வீடு கட்டறேன். இப்ப என்னய்யா பண்றது. எல்லா சட்டத்தையும் பிரிச்சுதான் அடிக்கனுமா?

முத்தையன் : ஊரு நாட்டுல நடக்காததயா நான் பண்ணேன். சொந்தக்காரங்களுக்கு நாம செய்யலண்ணா வேற யாரு செய்யுறது.பிரிச்செல்லாம் அடிக்கவேணாம், ஓடு நெறுக்கு வாட்டில போட்டா ஒழுகாது, இப்படியே போட்டிருவோம்.

அம்பேத்கார்: ஓடு சரியா அந்த காடில பிட் ஆகலண்ணா, ஓட்டு மேல ஏறி நடந்த உடையும்னே.

முத்தையன் : அதெல்லாம் உடையாது, இப்ப பிரிச்சு அடிச்சா நிறைய சட்டம் வீணாப்பொயிரும், ஓடு போடுற வேலைய பாப்போம்.

---

ஒரு வழியாக வீடு கட்டி முடிச்சாச்சு கொத்தனார் அம்பேத்கார் நல்லமுறையில் வீட்டிற்குள், தளம் பூச்செல்லாம் பூசி முடித்தவுடன் அவரிடம் மெதுவாக சென்ற பரமன். தம்பி கிரஹப்பிரவேசம் முடிஞ்சதுக்கப்புறம் நீ வீட்டிக்குள்ள வரக்கூடாதென்றார்.

விநாயகம்: போய்யா உன் வேலையப்பாரு? நீ வாடா அம்பேத். இந்தாளுக்கு வேற பொழப்பு இல்லை, நீயே மதம் மாறி வந்தா உன்னோட உக்காந்து பாரின் சரக்கடிப்பான். இப்ப நம்ம போய் ஒரு 90 அடிச்சிட்டு வருவோம் வா.

அம்பேத்: இல்லடா நான் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடப்போறேன் எனக்கு வேண்டாம்.


ஒரு வழியாக நல்ல படியாக வீடு கட்டி விநாயகத்திற்கு கல்யாணமும் இனிமையாக விமரிசையாக நடந்தது, முருகனும் கல்யாணத்துக்கு வந்த சின்னப்பெண்களையெல்லாம் தனக்காக இப்போதே பெண் பார்த்து வைத்திருந்தான்.
----------------------------------

விநாயகம் மனைவி : ஏங்க இந்த வீடு சின்னதா இருக்கு எங்க அண்ணன் வீடு மாதிரி பெரிய வீடு கட்டி தனியா போயிரலாமா?

விநாயகம்:அம்பேத் நீதாண்டா என்னைக்காப்பாத்தனும்..

இப்போது இந்தக்கதையின் தலைப்பு மாறுகிறது : கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார்.

உங்க பொன்னான கருத்தை சொல்லுங்க

38 comments:

CA Venkatesh Krishnan said...

கதையைப் படித்துப்பார்

தலையை சுத்தும் பார்!!!
===
அண்ணே, எங்க வீட்டைக் கட்டும் போது கூட இதே மாதிரி அனுபவங்கள்தான். கிராமத்தில் வீடு அதுவும் ஓட்டு வீடு கட்டுவதென்பது இதைப் போன்ற கத்துக்குட்டிகளின் கைகளில்தான் இருக்கிறது:((

குடுகுடுப்பை said...

இளைய பல்லவன் said...

கதையைப் படித்துப்பார்

தலையை சுத்தும் பார்!!!//

குழப்புதா? கதை முயற்சி எனக்கு புதுசு,அடுத்தமுறை சரி பண்ண முயற்சிக்கிறேன்

புதியவன் said...

//சிவக்குமார்: தம்பி நான் கொல்ல ஆசாரி இரும்பு வேலை பாக்கிற ஆள், வேலை இல்லாம இருந்தேன் மாமா கூப்பிட்டாருன்னு வந்தேன்.//

ஹா...ஹா...ஹா...என்ன இதெல்லாம்...?

புதியவன் said...

//இப்போது இந்தக்கதையின் தலைப்பு மாறுகிறது : கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார்.//

தலைப்பு இன்னும் அப்படியே தானே இருக்கு...

//"பாகம் 2:வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்."//

Mahesh said...

நல்லா ஊடுகட்டி அடிக்கிறீங்களே !!

Anonymous said...

12B பாத்த மாதிரி இருக்கு

Poornima Saravana kumar said...

சின்ன அம்மிணி said...
12B பாத்த மாதிரி இருக்கு
//

இல்லை விருமாண்டி மாதிரி இருக்கு

Poornima Saravana kumar said...

யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா? நீ அனுப்பிருக்க செங்கல்லுல பல்லுதான் விளக்கமுடியும்.//

லோடு மாறி வந்திருக்கும் நல்லா பாருங்க..

பழமைபேசி said...

முழு நீளக் கதை..சிறப்பா இருக்கு, ரெண்டு பாகமும்...

Suresh said...

super pathivu kudukuduppai

//இப்போது இந்தக்கதையின் தலைப்பு மாறுகிறது : கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார்.//

sari than appadiye software la velaiya vangi paru nu ennaiku recession thethikku serthukonga

குடுகுடுப்பை said...

புதியவன் said...

//இப்போது இந்தக்கதையின் தலைப்பு மாறுகிறது : கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார்.//

தலைப்பு இன்னும் அப்படியே தானே இருக்கு...

//"பாகம் 2:வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்."////

இனிமே கதை வராது ஆனா விநாயகம் கட்டப்போற வீடு கதைக்கு தலைப்பு அதுதான்

குடுகுடுப்பை said...

Suresh said...

super pathivu kudukuduppai

//இப்போது இந்தக்கதையின் தலைப்பு மாறுகிறது : கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார்.//

sari than appadiye software la velaiya vangi paru nu ennaiku recession thethikku serthukonga//

நன்றி

அதுதான் தனியா ஒரு டிராக்ல ஓடுதே

வெற்றி-[க்]-கதிரவன் said...

//இப்போது இந்தக்கதையின் தலைப்பு மாறுகிறது : கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார்.
//

நன்னா இருக்கு, பேஸ்

குடுகுடுப்பை said...

Mahesh said...

நல்லா ஊடுகட்டி அடிக்கிறீங்களே !!//

ஊடு கட்டுறவனை அடிக்கிறாங்க இங்க நீங்க வேற

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

12B பாத்த மாதிரி இருக்கு

April 15, 2009 4:25 AM
Delete
Blogger Poornima Saravana kumar said...

சின்ன அம்மிணி said...
12B பாத்த மாதிரி இருக்கு
//

இல்லை விருமாண்டி மாதிரி இருக்கு//

ரொம்ப குழம்பி போயிட்டீங்களா.

குடுகுடுப்பை said...

Poornima Saravana kumar said...

யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா? நீ அனுப்பிருக்க செங்கல்லுல பல்லுதான் விளக்கமுடியும்.//

லோடு மாறி வந்திருக்கும் நல்லா பாருங்க..//

இப்படி வேற பதில் சொல்ல முடியுமா?

குடுகுடுப்பை said...

Blogger பழமைபேசி said...

முழு நீளக் கதை..சிறப்பா இருக்கு, ரெண்டு பாகமும்...//

நீங்களே நல்லா இருக்குண்ணா நல்லாதான் இருக்கும் போல

அது சரி(18185106603874041862) said...

//
உங்க பொன்னான கருத்தை சொல்லுங்க
//

நகைச்சுவையா சொன்னாலும் நச்சுன்னு கருத்து சொல்லியிருக்கீங்க...

கதையப் பத்தி சொல்றதுன்னா, நிறைய கேரக்டர்ஸ் வர்றதுனால, யாரு என்னன்னு கொஞ்சம் புரியலை...அதுவில்லாம கதை ஒரே நேர்கோடா, கேரக்டரைசேஷன் இல்லாம வசனமாவே போகுது....ஒரு வேளை, கதையை ரெண்டே பாகத்துல முடிக்கணும்னு ரொம்பவே சுருக்கிட்டீங்களோ??

(பி.கு. தப்பா எடுத்துக்காதீங்க...சொல்லணும்னு தோணிச்சி...சொல்லிட்டேன்!)

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
உங்க பொன்னான கருத்தை சொல்லுங்க
//

நகைச்சுவையா சொன்னாலும் நச்சுன்னு கருத்து சொல்லியிருக்கீங்க...

கதையப் பத்தி சொல்றதுன்னா, நிறைய கேரக்டர்ஸ் வர்றதுனால, யாரு என்னன்னு கொஞ்சம் புரியலை...அதுவில்லாம கதை ஒரே நேர்கோடா, கேரக்டரைசேஷன் இல்லாம வசனமாவே போகுது....ஒரு வேளை, கதையை ரெண்டே பாகத்துல முடிக்கணும்னு ரொம்பவே சுருக்கிட்டீங்களோ??


நிறைய பேருக்கு உங்களைப்போலவே தொன்றி இருக்கிறது, சிலரின் வசனத்தை அப்படியே வைக்கலாம் என்பதுதான் நோக்கம். இடையில் அம்பேத்கார், குடிகாரன், சித்தாள் எழுதும்போதே உதித்தது.அதுதான் கொஞ்சம் கதையின் கோணம் காமெடிலேந்து மாறிப்போச்சு. மத்தபடி எனக்கு கதை எழுதவெல்லாம் வருமென்று தோனவில்லை.


(பி.கு. தப்பா எடுத்துக்காதீங்க...சொல்லணும்னு தோணிச்சி...சொல்லிட்டேன்!)//

தப்பாதான் எடுத்துக்கொண்டேன், முகவரி சொன்னால் தானியங்கி மூவுருளி அனுப்ப வசதியா இருக்கும்

ஷண்முகப்ரியன் said...

யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா?//

இன்னும் நிறைய மேற்கொள்களை எடுத்தாள நினைத்தேன். இரண்டு நாட்களாக் எனது கணிணியின் வைரஸ் நோயால் அதுவும் நானும் சேர்ந்து கஷ்டப் படுகிறோம்.

அருமை,அருமை குடுகுடுப்பை சார்.
கதையின் கரு,குணசித்திரங்கள்,உரையாடல்கள் அனைத்துமே சூப்பர்.
வெறும் வசனங்களாலேயே சொல்ல முயற்சித்த உங்கள் TECHNICAL FLAW வினால் சில வாசகர்கள் புரிந்து கொள்ளச் சிரமப் பட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.கதை சொல்லியாக நீங்கள் வந்து அங்கங்கே விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருந்திருக்கும் என்பது எனது எண்ணம்.மற்றபடி WELL DONE.

புல்லட் said...

நான் வீடு கட்டுற ஐடியாவை விட்டாச்சு... கலியாணத்தின் போது சீதனமா ஒரு வீட்ட வாங்கிட்டா வெற்றிதானே குடுகுடு சார் ... ஹிஹஹி!

குடுகுடுப்பை said...

ஷண்முகப்ரியன் said...

யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா?//

இன்னும் நிறைய மேற்கொள்களை எடுத்தாள நினைத்தேன். இரண்டு நாட்களாக் எனது கணிணியின் வைரஸ் நோயால் அதுவும் நானும் சேர்ந்து கஷ்டப் படுகிறோம்.

அருமை,அருமை குடுகுடுப்பை சார்.
கதையின் கரு,குணசித்திரங்கள்,உரையாடல்கள் அனைத்துமே சூப்பர்.
வெறும் வசனங்களாலேயே சொல்ல முயற்சித்த உங்கள் TECHNICAL FLAW வினால் சில வாசகர்கள் புரிந்து கொள்ளச் சிரமப் பட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.கதை சொல்லியாக நீங்கள் வந்து அங்கங்கே விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருந்திருக்கும் என்பது எனது எண்ணம்.மற்றபடி WELL DONE.//

நன்றி ஷண்முகப்ரியன் சார்.ஒரு இளைஞனின் வீடு கட்டும் சிரமங்களை அதனை சூழ்ந்த மற்ற கதாபாத்திரங்களை வைத்து நகைச்சுவையாக சொல்ல நினைத்தேன், விடுபட்டவை நிறைய நீளம் கருதி, கதை சொல்லும் திறனை வளர்க்க முயற்சிக்கிறேன்.

குடுகுடுப்பை said...

புல்லட் பாண்டி said...

நான் வீடு கட்டுற ஐடியாவை விட்டாச்சு... கலியாணத்தின் போது சீதனமா ஒரு வீட்ட வாங்கிட்டா வெற்றிதானே குடுகுடு சார் ... ஹிஹஹி!

//

உமக்கு கலியாணத்துக்கு சீதனமா, காயல்பட்டிணம் அல்வாதான் அதை சிமிண்டுக்கு பதிலா பயன்படுத்தலாம்

குடுகுடுப்பை said...

பித்தன் said...

//இப்போது இந்தக்கதையின் தலைப்பு மாறுகிறது : கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார்.
//

நன்னா இருக்கு, பேஸ்

//
நன்றி
பித்தன்

வில்லன் said...

//விநாயகம்: யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா? நீ அனுப்பிருக்க செங்கல்லுல பல்லுதான் விளக்கமுடியும்.//

உங்க ஊருல செங்கல் வச்சுதான் பல்லு வேலக்குவியலோ!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

//நீயெல்லாம் ஏன்யா பெரிய மனுசன்னு வேட்டிய கட்டிட்டு அலையுற? //

பெரிய மனுசங்க மட்டும்தான் வெட்டி கட்டணும்னு எதுவும் சட்டமோ!!!!!!!!!!!!!! அப்ப என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் வெட்டி கட்ட கூடாதோ..... இதென்ன புது கூத்து.....

வில்லன் said...

படிச்சி பாத்தா எதோ பரமாத்த குருவும் சீடர்களும் வீடு கட்டின மாதிரி இருக்கு. ஒரே காமெடி போங்க. ஆமா எதுக்கும் கல்யாணம் கட்டிபாருக்கும் என்ன சம்பந்தம்..... கல்யாணம் பண்ணுறதும் இதேமாதிரி காமெடி தானா?????????????

வில்லன் said...

//அம்பேத்கார்: இதெல்லாம் ஒரு சிரமமாடா நாங்க படற சிரமத்தோட. விடுறா எல்லாம் நல்லா நடக்கும்//

அம்பேத்கார் என்ன செரமம் பட்டார்??????

வில்லன் said...

//அது சரி said...
//
உங்க பொன்னான கருத்தை சொல்லுங்க
//

நகைச்சுவையா சொன்னாலும் நச்சுன்னு கருத்து சொல்லியிருக்கீங்க...

கதையப் பத்தி சொல்றதுன்னா, நிறைய கேரக்டர்ஸ் வர்றதுனால, யாரு என்னன்னு கொஞ்சம் புரியலை...அதுவில்லாம கதை ஒரே நேர்கோடா, கேரக்டரைசேஷன் இல்லாம வசனமாவே போகுது....ஒரு வேளை, கதையை ரெண்டே பாகத்துல முடிக்கணும்னு ரொம்பவே சுருக்கிட்டீங்களோ??

(பி.கு. தப்பா எடுத்துக்காதீங்க...சொல்லணும்னு தோணிச்சி...சொல்லிட்டேன்!)//

அதே தான்..... எதோ கமலகாசன் படம் பதபுல இருக்கு. மூணு நேரம் படிச்சேன் அப்புறம்தான் புரிஞ்சுது. நெறைய காரெக்டர் ரொம்ப கொளபடி

வில்லன் said...

//தப்பாதான் எடுத்துக்கொண்டேன், முகவரி சொன்னால் தானியங்கி மூவுருளி அனுப்ப வசதியா இருக்கும்//


ஆமா அதென்ன தானியங்கி மூவுருளி. ஐயா பழமைபேசி கொஞ்சம் வெளக்கம் போடுரிங்களா....... தமிழ்ல எழுதுங்கப்பா.....

வில்லன் said...

// குடுகுடுப்பை said...
புல்லட் பாண்டி said...

நான் வீடு கட்டுற ஐடியாவை விட்டாச்சு... கலியாணத்தின் போது சீதனமா ஒரு வீட்ட வாங்கிட்டா வெற்றிதானே குடுகுடு சார் ... ஹிஹஹி!

//

உமக்கு கலியாணத்துக்கு சீதனமா, காயல்பட்டிணம் அல்வாதான் அதை சிமிண்டுக்கு பதிலா பயன்படுத்தலாம்//

காயல்பட்டிணம் அல்வாவ செங்கலுக்கு பதிலா வைக்கலாம். சிமிண்டுக்கு பதிலா பயன்படுத்த முடியாது..... நாங்க அங்க ஸ்கூல்ல பன்னெண்டாவது படிச்சவங்கள்ள.... அனுபவம்...

KarthigaVasudevan said...

காண்ட்ராக்டர் பொறுப்புல வீடு கட்டினதால நீங்க சொல்ற மாதிரி அனுபவங்கள் கிடைக்கலை ...ஆனா பில்டர் கிட்ட வீடு கட்டி முடிச்சதும் சாவி கைக்கு வர முன்னாடி அது சரியில்லை...இதை மாத்தி தா ...இந்த மார்பிள்சை தோண்டு...அந்தக் கதவு எதுக்கு இப்படி வச்சன்னு சண்டை போட்ட அனுபவம் ஞாபகம் வருது ,நல்ல முயற்சி தான் இந்தக் கதை .நல்லா இருக்கு .

குடுகுடுப்பை said...

மிஸஸ்.தேவ் said...

காண்ட்ராக்டர் பொறுப்புல வீடு கட்டினதால நீங்க சொல்ற மாதிரி அனுபவங்கள் கிடைக்கலை ...ஆனா பில்டர் கிட்ட வீடு கட்டி முடிச்சதும் சாவி கைக்கு வர முன்னாடி அது சரியில்லை...இதை மாத்தி தா ...இந்த மார்பிள்சை தோண்டு...அந்தக் கதவு எதுக்கு இப்படி வச்சன்னு சண்டை போட்ட அனுபவம் ஞாபகம் வருது ,நல்ல முயற்சி தான் இந்தக் கதை .நல்லா இருக்கு .//

காண்டிராக்டர் பேர் தேவ் தானே.?

RAMYA said...

//நீயெல்லாம் ஏன்யா பெரிய மனுசன்னு வேட்டிய கட்டிட்டு அலையுற? //

தைரியமான கேள்வி, ஆனாலும் பாவம் அவரு :))

RAMYA said...

//சிவக்குமார்: தம்பி நான் கொல்ல ஆசாரி இரும்பு வேலை பாக்கிற ஆள், வேலை இல்லாம இருந்தேன் மாமா கூப்பிட்டாருன்னு வந்தேன்.
//

இப்படி எல்லாம் எப்படிப்பா யோசிக்கறீங்க.

இவரு பாக்கற வேலையை விட்டுட்டு இங்கே வந்து ஏன் அளப்பறை பண்னறாரு.

RAMYA said...

//
யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா? நீ அனுப்பிருக்க செங்கல்லுல பல்லுதான் விளக்கமுடியும்.
//

இது சூப்பர், அருமையான நகைச்சுவை எழுத்து நடை அருமையா எழுதி இருக்கீங்க குடுகுடுப்பையாரே!!

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா? நீ அனுப்பிருக்க செங்கல்லுல பல்லுதான் விளக்கமுடியும்.
//

இது சூப்பர், அருமையான நகைச்சுவை எழுத்து நடை அருமையா எழுதி இருக்கீங்க குடுகுடுப்பையாரே!!//


அது உண்மையா இன்னொருத்தர் சொன்னது.

நசரேயன் said...

அண்ணே புது படம் வரலையா?