Monday, April 6, 2009

வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.

ஒரு வழியா திருவல்லிக்கேணி மென்சன்ல ஜாவா தீவிரமா படிச்சு, நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிற அளவுக்கு தேறிட்டோம்.(!?? )அந்த சமயம் எங்க கூட தங்கியிருந்த என் மாப்பிள்ளை அவனும் மெக்கானிக்கல் எஞ்ஜினியர். அவனும் ஜாவா படிச்சான் நம்ம நண்பன் ஒருத்தன் அவனுக்கு சொல்லிக்கொடுப்பான்.

அது எப்படி உங்களுக்கு வொர்க் ஆகுது, எனக்கு வொர்க் ஆக மாட்டேங்குது.

அதுவா ,அது இப்படி பண்ணா அப்படி வொர்க் ஆகும்.

ஓ ஓ அப்படியா இப்ப புரியுது.

என்ன மாப்பிள்ளை நல்லா புரிஞ்சிருச்சு போல -நான்

எங்க புரிஞ்சது உங்க பிரண்டு பாவம் எவ்ளோ நேரம்தான் சொல்லிக்கொடுப்பாரு அதான் தலைய ஆட்டி வெச்சேன்.எனக்கு இது வேலைக்கு ஆவாது.சரி மணி எவ்ளோ?

மணி இவ்ளோ. பத்தாச்சி

சரி வாங்க ரோட்ல ஒரு சண்டை நடக்குது மொட்டை மாடிலேந்து வேடிக்கை பாத்து ரிலாக்ஸ் பண்ணிட்டு வருவோம்

மொட்டைமாடிலேந்து ரோடு.

டேய் எனக்கு பொற்ந்தது அஞ்சும் ஆம்பிள பிள்ளை. என்னை எவனும் ஒன்னும் பண்ண முடியாது இந்த தீத்தாரப்பன் தெருவில.-ஒருவர் சென்னைத்தமிழில் அவருக்கே உரித்தான வார்த்தைகளுடன்.

யப்பா சாப்பிட வாப்பா சாப்பிட்டு அப்புரமா வந்து கூவிகினு கெட -அந்த ஒருவரின் மகள்களில் ஒருவர்.

மாப்பிள்ளைக்கு பதினோரு மணிக்கு மேல முழிக்க முடியாது, எங்களுக்கு தூங்க முடியாது, காலைல நாலு மணிக்கு ஜாம்பஜார் குப்பை அள்ளுரப்ப ஒரு வாடை வரும் , அந்த சமயத்துல ஒரு டீக்கடை திறப்பாங்க முத ஆளா போய் டீ குடிச்சிட்டு தம்ம போட்டு நல்ல பிள்ளையா தூங்கிருவோம்.

அப்படி தூங்கும்போது ஒருநாள் திடீரென்று போலீஸ் எங்க மேன்சனில் உள்ள எல்லா ரூம்லேயும் வந்து இருக்கிற எல்லாரோட பேர் முகவரி கேட்டாங்க, ஜூன் மாதத்திலேயும் போர்வைய நல்லா இழுத்து போத்தி தூங்கிட்டிருந்தேன். வந்த போலீஸ்காரர் எங்க ரூம்ல தங்கியிருந்த இன்னோரு நண்பனிடம்

அது என்னா ? என்னைக்காட்டி?

சார் எங்கப்பா கலெக்டர் ஆபிஸ்ல வேலை பாக்கிறார்.

அதெல்லாம் தேவையில்லை அது என்னா? -லத்தியால் கட்டிலைத்தட்டுகிறார்.

அது குடுகுடுப்பை சார்.

என்னாது சும்மா லத்திக்கு போர்வை போத்துனது மாதிரி இருக்கு.உண்மையாவே மனுசனா அது.(இன்றைய போல் இருந்திருந்தால் மேளத்திற்கு உரை போட்டது மாதிரி இருக்கும்).

ஆமாம் சார் அது குடுகுடுப்பைன்னு ஒரு பையன் காலைலதான் சார் தூங்கினான்.

அவரு போயிட்டார். நான் அவரு போகிற வரைக்கும் எந்திருக்கவே இல்லையே...

---

நண்பன் : (என் மாப்பிள்ளையிடம்: நான் இல்லாத ஒருநாள்) ஜாவா படிக்கலாமா ?

மாப்பிள்ளை: இல்லை ஜாவா படிச்சி எனக்கு வயிறு வலி வந்துருச்சு? என்னைக்கொண்டு வந்து தஞ்சாவூர்லேயே விட்டிருங்க.

தஞ்சாவூர் வந்து மாப்பிள்ளை அவங்க வீட்ல உள்ள குளத்தில உள்ள மீனில் பாதிய சாப்பிட்ட உடன் வயித்து வலி அவருக்கு சரி ஆகிவிடும், இந்த சமயம் ஊரில் இருந்த நான் நண்பனோட சென்னை வந்துட்டேன்.

மாப்பிள்ளையும் குளத்தில மீனெல்லாம் முடிச்சிட்டு வந்துட்டார், அவரோட அண்ணன் ஒரு தல ஆனா ரொம்ப நல்லவர் / இரக்க குணம் யார் வேண்டுமானாலும் ஏமாத்தலாம்.இருக்கிற கட்சியும் அப்படி(ம.தி.மு.க), அவரும் அடிக்கடி அவரோட அடிப்பொடிகளோட வருவார்.ஒருநாள் நான் தம் அடிக்கறத பாத்துட்டார், சும்மா செரிமானதுக்கா மாப்பிள்ளை அப்படின்னார், தம்பி மேலேயும் சந்தேகம்,நம்மள மாதிரி தம்பியும் வருவானோன்னு, ஆனால் அவர்களின் குடும்பத்தில் ஒரு விதிவிலக்கு அந்த மாதிரி பழக்கமெல்லாம் கிடையாது.

அவரோட அடிப்பொடிகளில் ஒருவரிடம், எனக்கு 900 ரூபாய்க்கு இண்டர்வியூ அட்டெண்ட் செய்ய நண்பர் நெட்டையன் வாங்கி கொடுத்த லீயி பிலிப் சட்டைய காண்பித்தான், வயித்துவலிக்காரன்.

900 மா நான் இரண்டு மூட்டை யூரியா வாங்கி போட்டிருப்பேனே, வாத்தியார் சம்பாதிக்கிறார் நீ அழிக்கிற.

இன்னோருவரை பஸ் ஏத்திவிட ஒருநாள் எக்மோர் சென்றேன். மாப்பிள்ளை நீங்க நல்லப்பையன் கிட்ட வராதீங்க இந்த பழக்கமெல்லாம் நீங்க பாக்கக்கூடாது.மனுசன் ஒரு குவாட்டர மிக்சர் வாசனையிலேயே அடிச்சார்.நான் அந்த மிக்சரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஊரில் போய் இன்னோரு அல்லக்கை என்னா சார் உங்காளு எப்பப்பாத்தாலும் ஒரே தூக்கம்தான்.

என்னடா அவன் அப்படி சொல்றான்?

நான் இரவில் படிப்பது அவருக்கு தெரியாது? இந்த மாசம் 5000 ரூபாய் வேணும்.

இனிமேல் சொந்தக்காலில்.

40 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஒரு வழியா திருவல்லிக்கேணி மென்சன்ல ஜாவா தீவிரமா படிச்சு, நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிற அளவுக்கு தேறிட்டோம்.\\

வலையிலையிம் சொல்லி கொடுங்கோ

நட்புடன் ஜமால் said...

\\அதெல்லாம் தேவையில்லை அது என்னா? -லத்தியால் கட்டிலைத்தட்டுகிறார்.

அது குடுகுடுப்பை சார்.\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\இனிமேல் சொந்தக்காலில்.\\

அப்போ

இம்பூட்டு நாளு?!@## ;) :D

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இன்றைய போல் இருந்திருந்தால் மேளத்திற்கு உரை போட்டது மாதிரி இருக்கும்).//

:-))))

ஆ.ஞானசேகரன் said...

//எங்க புரிஞ்சது உங்க பிரண்டு பாவம் எவ்ளோ நேரம்தான் சொல்லிக்கொடுப்பாரு அதான் தலைய ஆட்டி வெச்சேன்.எனக்கு இது வேலைக்கு ஆவாது.சரி மணி எவ்ளோ?//

அதுசரி... நல்லாதான் இருக்கு

சந்தனமுல்லை said...

//என்னாது சும்மா லத்திக்கு போர்வை போத்துனது மாதிரி இருக்கு.உண்மையாவே மனுசனா அது.(இன்றைய போல் இருந்திருந்தால் மேளத்திற்கு உரை போட்டது மாதிரி இருக்கும்).

//

LOL!

ஜாவா புயலா நீங்க!! நல்லாத்தான் ஜாவா படிச்சிருக்கீங்க..நாங்க கோர் ஜாவா படிச்சதுக்கே கொஞ்சநாள் குழம்பிக்கிடந்தோம்!

Unknown said...

:))))))))))))

குடந்தை அன்புமணி said...

மேன்சன் வாழ்க்கை, (சில சமயம் ஜாலி, சில சமயம் (பாக்கெட்) காலி!)அது ஒரு ஜாலிதான் இல்ல...

குடுகுடுப்பை said...

நட்புடன் ஜமால் said...

\\ஒரு வழியா திருவல்லிக்கேணி மென்சன்ல ஜாவா தீவிரமா படிச்சு, நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிற அளவுக்கு தேறிட்டோம்.\\

வலையிலையிம் சொல்லி கொடுங்கோ//

சரியாப்போச்சு

ஷண்முகப்ரியன் said...

என்னாது சும்மா லத்திக்கு போர்வை போத்துனது மாதிரி இருக்கு.உண்மையாவே மனுசனா அது.(இன்றைய போல் இருந்திருந்தால் மேளத்திற்கு உரை போட்டது மாதிரி இருக்கும்).//

இன்னும் ஆளைப் பார்க்கவில்லையே என்ற குறையைப் போக்கி விட்டீர்கள்.
உங்கள் வாழ்க்கைக் கதை ரஷ்ய நாவலைப் படிப்பது போல் இருக்கிறது.வேண்டுமென்றே திருப்பங்களை வைக்காமல்.
அமெரிக்காவில் இருந்து ஒரு ரஷ்யப் படைப்பாளி!

அமெரிக்காவில் இருந்து ஒரு ரஷ்யப் படைப்பாளி!//

எனக்கு வாசித்தல் அனுபவமெல்லாம் கிடையாது சார். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இன்றி எழுத ஒரு களம். வேலை செய்கிறேன் சம்பளத்திற்கு அங்கே தரக்கட்டுப்பாடு,வீட்டில் குடும்பம் என்ற கட்டுப்பாடு, இந்த வலை எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற ஆசையில் உதித்தது.போகும் வரை போகட்டும்.

ரஷ்ய எழுத்தாளர் மாதிரியா? இதுக்காவாவது ஒரு புத்தகம் படிக்கனும் போலருக்கே சார்.ஆனா இன்னும் பேய்ஹொவே படிக்கல :)))))))

Poornima Saravana kumar said...

வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.

தலைப்ப எப்படி கவுந்து படுத்துகிட்டு யோசிப்பீங்களோ!!!

புதியவன் said...

//(இன்றைய போல் இருந்திருந்தால் மேளத்திற்கு உரை போட்டது மாதிரி இருக்கும்).

ஹா...ஹா...ஹா...

Raju said...

ஜாவான்னா என்னண்ணே..

புல்லட் said...

சார் எப்பிடி சார் குண்டானீங்க ?.. அத முதல்ல சொல்லுங்க ப்ளீஸ் ....! கிக்கி!

வெற்றி-[க்]-கதிரவன் said...

// நான் இரவில் படிப்பது அவருக்கு தெரியாது? //

எனக்கு தெரியுமே, சத்தியம் பக்கம்,,, தேவி பக்கம் நிறைய நாள் இரவு காட்சில பாத்திருக்கேனே...

//இந்த மாசம் 5000 ரூபாய் வேணும்.
இனிமேல் சொந்தக்காலில். //

அம்புட்டு நாள் வாடகைகாலிலா நின்னிக ?

அந்த வாடகைக்கு தான் ஐயாயிர ரூபாயா ?

KarthigaVasudevan said...

Poornima Saravana kumar said...

வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.

தலைப்ப எப்படி கவுந்து படுத்துகிட்டு யோசிப்பீங்களோ!!!

:)

இளமாயா said...

//நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிற அளவுக்கு தேறிட்டோம்//
குடுகுடுப்பை அண்ண..,
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுக்குறது..

குடுகுடுப்பை said...

T.V.Radhakrishnan said...

//இன்றைய போல் இருந்திருந்தால் மேளத்திற்கு உரை போட்டது மாதிரி இருக்கும்).//

:-))))

சிரிப்புக்கு நன்றி,நேர்ல பாத்தா சிரிப்பா சிரிப்பீங்க. 5 அடி உயரம் , 2 -5 அடி வரை அகலம்.அதுதான் குகு

நசரேயன் said...

எனக்கு ஒரு ஜாவா மீன்குழம்பு வேணும்

நசரேயன் said...

//
இன்னும் ஆளைப் பார்க்கவில்லையே என்ற குறையைப் போக்கி விட்டீர்கள்.
உங்கள் வாழ்க்கைக் கதை ரஷ்ய நாவலைப் படிப்பது போல் இருக்கிறது.வேண்டுமென்றே திருப்பங்களை வைக்காமல்.
அமெரிக்காவில் இருந்து ஒரு ரஷ்யப் படைப்பாளி!
//
ஐயா.. நீங்க புகழுற மாதிரி தெரியலை.. எப்படியோ வந்த வேலை முடிந்தது

Mahesh said...

என்னாத்துக்கும் என்னாத்துக்கும் முடிச்சு போடறீங்க? நீங்க குடுகுடுப்பையா கலகலப்பையா?

RAMYA said...

//ஒரு வழியா திருவல்லிக்கேணி மென்சன்ல ஜாவா தீவிரமா படிச்சு, நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிற அளவுக்கு தேறிட்டோம்.
//

சரி, சரி ஜாவா புலிதானா நீங்க??

RAMYA said...

//எங்க புரிஞ்சது உங்க பிரண்டு பாவம் எவ்ளோ நேரம்தான் சொல்லிக்கொடுப்பாரு அதான் தலைய ஆட்டி வெச்சேன்.எனக்கு இது வேலைக்கு ஆவாது.சரி மணி எவ்ளோ?
//

தலையை ஆட்டினதுக்கேவா வெளிநாட்டுலே எல்லாருக்கும்
வேலை கிடைக்குது. ஹையோ ஹையோ :))

RAMYA said...

//என்னாது சும்மா லத்திக்கு போர்வை போத்துனது மாதிரி இருக்கு.உண்மையாவே மனுசனா அது.(இன்றைய போல் இருந்திருந்தால் மேளத்திற்கு உரை போட்டது மாதிரி இருக்கும்).
//

ஹா ஹா நல்லா இருக்கு
ரொம்ப ஒல்லியா இருக்கிறதை
இவ்வளவு நகைச்சுவையா
சொல்லி இருக்கீங்க சூப்பர் :))

RAMYA said...

//
நசரேயன் said...
எனக்கு ஒரு ஜாவா மீன்குழம்பு வேணும்

//

வந்துட்டாருய்யா நெல்லை புயலு
கேக்கறாரு பாருங்க :))

ஜாவா மீன்குழம்பு ஹா ஹா :))

RAMYA said...

//
நசரேயன் said...
//
இன்னும் ஆளைப் பார்க்கவில்லையே என்ற குறையைப் போக்கி விட்டீர்கள்.
உங்கள் வாழ்க்கைக் கதை ரஷ்ய நாவலைப் படிப்பது போல் இருக்கிறது.வேண்டுமென்றே திருப்பங்களை வைக்காமல்.
அமெரிக்காவில் இருந்து ஒரு ரஷ்யப் படைப்பாளி!
//
ஐயா.. நீங்க புகழுற மாதிரி தெரியலை.. எப்படியோ வந்த வேலை முடிந்தது
//

கலியுக நாரதரோ ??
இருக்கும் இருக்கும் :)

வந்த வேலையை கச்சிதமா
முடிச்சுட்டார் :)

இப்பதான் புரியுது சார் பின்னூட்டத்திலேயே ஒரு திருப்பம் வெச்சிருக்கார்னு.

பழமைபேசி said...

// நசரேயன் said...

//
ஐயா.. நீங்க புகழுற மாதிரி தெரியலை.. எப்படியோ வந்த வேலை முடிந்தது
//

நடக்கட்டு, நடக்கட்டு...

அமிர்தவர்ஷினி அம்மா said...

//என்னாது சும்மா லத்திக்கு போர்வை போத்துனது மாதிரி இருக்கு.உண்மையாவே மனுசனா அது.(இன்றைய போல் இருந்திருந்தால் மேளத்திற்கு உரை போட்டது மாதிரி இருக்கும்).

:)))))))))))))))

ஷண்முகப்ரியன் said...

நசரேயன் said...
//
இன்னும் ஆளைப் பார்க்கவில்லையே என்ற குறையைப் போக்கி விட்டீர்கள்.
உங்கள் வாழ்க்கைக் கதை ரஷ்ய நாவலைப் படிப்பது போல் இருக்கிறது.வேண்டுமென்றே திருப்பங்களை வைக்காமல்.
அமெரிக்காவில் இருந்து ஒரு ரஷ்யப் படைப்பாளி!
//
ஐயா.. நீங்க புகழுற மாதிரி தெரியலை.. எப்படியோ வந்த வேலை முடிந்தது//

கலியுக நாரதரோ ??
இருக்கும் இருக்கும் :)

வந்த வேலையை கச்சிதமா
முடிச்சுட்டார் :)//

அடக் கடவுளே!உண்மையாகவுமே புகழ்ந்துதான் சார் எழுதியிருக்கேன்.
மனுஷங்களைப் புகழ்ந்தாக கூட இனிமே அது உண்மைதாங்கறதுக்கு தாசில்தார் சர்டிஃபிகேட் எல்லாம் கேப்பாங்க போல இருக்கே.

பாராட்டறதே எவ்வளவு rare commodity ஆயிடுச்சு பாருங்க சார்.

ரஷ்ய இலக்கியங்களோட பரிச்ச்யம் இருக்கறவங்களுக்கு நான் சொன்னதுலே இருக்கற உண்மை தெரியும்.

மற்றபடி கலியுகத்துலே நாரதர் எல்லாம் இருக்க மாட்டாங்க.ஒன்லி டெர்ரரிஸ்ட்கதான்.நேரடித் தாக்குதலதான்.யாருக்கும் க்லகமூட்டற அளவுக்கு நேரமில்லே.

குடுகுடுப்பை said...

//ஷண்முகப்ரியன்
மற்றபடி கலியுகத்துலே நாரதர் எல்லாம் இருக்க மாட்டாங்க.ஒன்லி டெர்ரரிஸ்ட்கதான்.நேரடித் தாக்குதலதான்.யாருக்கும் க்லகமூட்டற அளவுக்கு நேரமில்லே.//

அத நெனச்சாதான் சார் பயமா இருக்கு.

குடுகுடுப்பை said...

இளமாயா said...

//நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிற அளவுக்கு தேறிட்டோம்//
குடுகுடுப்பை அண்ண..,
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுக்குறது..//

இப்ப நிறைய மறந்து போச்சு.

குடுகுடுப்பை said...

புல்லட் பாண்டி said...

சார் எப்பிடி சார் குண்டானீங்க ?.. அத முதல்ல சொல்லுங்க ப்ளீஸ் ....! கிக்கி!//

நல்லா டயட் பண்ணனும்.

குடுகுடுப்பை said...

Poornima Saravana kumar said...

வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.

தலைப்ப எப்படி கவுந்து படுத்துகிட்டு யோசிப்பீங்களோ!!!//

எப்பயுமே ரோசனைதான்

வில்லன் said...

//சரி வாங்க ரோட்ல ஒரு சண்டை நடக்குது மொட்டை மாடிலேந்து வேடிக்கை பாத்து ரிலாக்ஸ் பண்ணிட்டு வருவோம்//

அடுத்தவங்க சண்டைல தான் நேங்க ரிலாக்ஸ் பண்ணுவியளோ..... அந்தாக்க உங்கள நோக்கி ஒன்னு உட்டா தெரியும்...

வில்லன் said...

//நான் அவரு போகிற வரைக்கும் எந்திருக்கவே இல்லையே...//

வேற ஒன்னும் போகலையே படுக்கைல

வில்லன் said...

//நான் இரவில் படிப்பது அவருக்கு தெரியாது? இந்த மாசம் 5000 ரூபாய் வேணும்.

இனிமேல் சொந்தக்காலில். //

மாசம் 5000 ரூபாய் ஊட்டுல வாங்கி வாழ்கைய ஓட்டுறத தான் உங்க ஊருல சொந்த காலுன்னு சொலுவாங்கலோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நல்ல காமெடி போங்க

Senthil said...

waiting for next post eagerly

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//இருக்கிற கட்சியும் அப்படி(ம.தி.மு.க), //

ஈரோடு தொகுதி யாருக்கிட்ட இருக்குன்னு தலைவர்கிட்ட கேட்டு சொல்லுங்க..

இருந்தாலும் வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதீங்கப்பு..