முந்தைய பதிவுகளில் உணவு,சீன மருத்துவம்,மற்றும் சில பார்த்த மக்கள் பார்த்தோம், நான் மஸாஜ் எடுத்துக்கொண்ட சீன மருத்துவமனையில் தமிழ் நன்றாக தமிழ் பேசக்கூடிய ஒரு பாகிஸ்தானியரை சந்தித்தேன்,அவருடைய அம்மா தமிழ்நாட்டைச்சேர்ந்தவர், அப்பா பாகிஸ்தானியர், கத்தாரில் இருக்கிறார்கள் நன்றாக தமிழ் பேசுகிறார், இட்லி தோசை ரொம்ப பிடிக்குமாம், ஒருமுறை கூட தமிழ்நாட்டிற்கு வந்ததில்லை என்றார். அவர் கத்தாரில் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்க்கிறார், அதனாலோ என்னவோ சீனர்களிடம் எப்படியாவது எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்.அரபு நாட்டில் உள்ள இரண்டு மனைவி கதைகளெல்லாம் சீனர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார், சீனர்களுக்கு குழந்தையே ஒன்றுக்கு மேல் கூடாதாம் இதில் இரண்டு மனைவி எங்கே, கண்டிப்பாக அவர்களுக்கு புரியவில்லை என்றே தோன்றியது.தமிழ் பேசும் என்னைக்கண்டதில் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி,அரேபியரிடம் பேசுவதை விட என்னிடம் பேசுவதையே விரும்பினார், தாய்மொழியை பேச சீனாவில் கிடைத்த வாய்ப்பை இருவரும் பயன்படுத்திக்கொண்டோம்.அவர் கொண்டு வந்திருந்த கத்தாரி மிக்ஸ் சுவையாக இருந்தது.
முதலில் சென்ற இடம் பெய்ஜிங் பாடலிங் பகுதியில் உள்ள கிரேட்வால்(great wall of china).காரில் ஒரு மணி நேர பயணம், பெய்ஜிங் சாலைகள் அமெரிக்கவை நகரைவிட 15 வருடம் பின் தங்கியுள்ளது, இந்தியாவைவிட 15 மடங்கு முன்னேறியுள்ளது, பாடாலிங் செல்லும சாலை நல்ல தரத்திலேயெ இருந்தது.
இந்த வாத்து நான் சாப்பிட்டாச்சு

நான் சென்ற நேரம் கொஞ்சம் மேக மூட்டமாக இருந்தது, கீழ்
மட்டத்திலிருந்து நடந்து மே

இன்னொரு நாள் நான் சென்றது பீஜிங் பேலஸ் இதுவும் பார்க்க நன்றாக இருந்தது, நுழைவாயிலில் சுற்றி ஒரு நீர்வழிப்பாதை ராணிகள் நீராட போல அதில் ஒரு சுற்று படகில் சென்றேன்.பின்னர் அரண்மனையை சுற்றிப்பார்க்க சிறிய மலை நிறைய படிக்கட்டுகள் ஏறினேன்,அழகான கட்டடக்கலை ரசிக்கும்படியாக இருந்தது. அங்கே ஒரு பெரிய புத்தர் சிலை மற்றும் சில புத்த மத விக்கிரகங்கள் இருந்தது ஒரே ஒரு சீனப்பெண் கையை மேலே தூக்கி இந்தியர்கள் கும்பிடுவது போலவே கும்பிட்டு வழிபட்டார்.
மன்னர் குடுகுடுப்பை

பீஜிங் பேலஸ்

அடுத்து நான் சென்ற இடம் forbidden city, இதற்கு எதிரில் உள்ள இடம்தான் டியானன்மென் ஸ்கொயர் பகுதி,600 ஆண்டுகளுக்கு முன் வரை அரண்மனை, இப்போது அருங்காட்சியகம் ஆகிவிட்டது, கிட்டத்தட்ட இரண்டு மைல் சுற்றளவு இருக்கும், அவ்வளவு பெரிய இடம், நடந்து எல்லா பகுதிகளையும் பார்ப்பது ஒரு நாளில் சாத்தியமில்லை என்று சொன்னார்கள்.நான் சென்ற பொழுது ஸ்டார்பக்ஸ் காபி கடை உள்ளே இருந்தது, இப்போது இல்லை.நான் பார்த்ததில் மிகவும் பிடித்த இடம் இதுதான் மன்னர்களின் அந்தப்புரம், அரசவை, சாமி கும்பிட கோவில் சாப்பிட அறை, பொதுமக்களை பார்வையிட என் நூற்றுக்கு மேற்பட்ட அறைகள்.







கடைசி படம் தியானென்மென் சதுக்கம்.
.