Saturday, June 12, 2010

வடிவேலுவும் கமலும் உரையாடல்:

முன் குறிப்பு: சும்மா ஒரு நகைசுவை உரையாடல், யாரையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்

வடிவேலு: வாங்கய்யா உங்கள பேட்டி எடுக்க சொல்லி வலை உலகத்தில கேட்டுக்கிட்டாக வந்து கொடுங்கய்யா கொடுங்க?

கமல்ஹாசன் : அய்யா என்று அழகு தமிழில் அழைத்தமைக்கு நன்றி, அய்யா என்றழைக்காமல் கமல்ஹாசன் என்றழைத்தாலே சந்தோசப்பட்டிருப்பேன்.அதற்காக நீங்கள் அய்யா என்று அழைத்ததற்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன. நீங்கள் சொல்லும் வலை உலகம் அறிவியலின் குழந்தை அதை யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் உலகமே ஒரு வலை அதை அறிவியலால் தடுக்கமுடியாது.

வடிவேலு: கம்பராமாயணம் நான் படிச்சதில்லை, ஆனா நீங்க சொல்றது எனக்கு புரிஞ்ச மாதிரியே இருக்கு, உங்க படம் மருதநாயகம் என்ன ஆச்சு?

கமல்ஹாசன் : தேவர் மகனில் நான் உங்களை நடிக்க அழைக்கும்போது உங்களை இசக்கியாக பார்த்தேன், மருதநாயகம் கண்டிப்பாக வரும், உங்களை பார்த்தவுடன் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, 23ம் புலிகேசி, இந்திரலோகம் போன்ற படங்களில் நடித்த உங்களை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன், உங்களின் எட்டு வருட கால்ஷீட் அதற்கு தேவைப்படலாம். டைரக்டர் பாலாவும் நானும் இணைந்து இயக்கும் எண்ணமும் உள்ளது.

வடிவேலு: (மனதிற்குள்) இவருக்கு நம்ம மேல இவ்ளோ கோபம்.ஒருவேளை விஜயகாந்த் மூலமா எதுவும் சதி நடக்குதோ.

ரொம்ப நன்றி கமலய்யா ஆனா எனக்கு ஹீரோ வேசமெல்லாம் வேண்டாம்யா ஹீரோயினியோட ஒரேயொரு குத்து டான்ஸ் மட்டும் வெச்சு ஒரு காமெடி ரோல் மட்டும் போதும்யா சம்பளம் கூட வேண்டாம், அப்புறம் மருதநாயகம் படத்துல விஜயகாந்த ஹீரோவா போட்டு ஒரு பத்து வருடம் வெளிநாட்டுல சூட்டிங் வெச்சுக்கிட்டா உங்களுக்கு புண்ணியமா போகும்யா?

கமல்ஹாசன் : உங்களின் திறமையை நீங்கள் இன்னும் உணரவில்லை என்று நான் எண்ணவில்லை வியாபாரிகளின் சினிமாவில் நீங்கள் ஒரு விட்டில்பூச்சி, இதை நான் சொல்வதால் நான் விட்டில்பூச்சி இல்லை என்று அர்த்தம் கொண்டால் அது என்னுடைய தவறல்ல.

வடிவேலு: (மனதிற்குள்)பார்த்திபன் என்னை வேற மாதிரி குழப்புனாரு,ஆனா இவரு தெளிவா பாராட்டியே குழப்புறாரே.

அய்யா உங்களுக்கும் கவுதமிக்கும் பிரச்சினைன்னு?

கமல்ஹாசன் : நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல, இப்படி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்வி தேவையில்லாதது இது உங்களுக்கும் பொருந்தும் மற்றவர்களுக்கு பொருந்தாது என்று பொருள் அல்ல.வெளிநடப்பு செய்கிறார்.

வடிவேலு: அய்யா நான் தேவர்மகன் படத்துல உள்ள சீன பத்திதானே சொன்னேன் அதுக்கு ஏன்யா கோபபடுறீங்க, நான் ஒரு கைப்புள்ள அடித்தவங்க விசயத்திலெல்லாம் தலையிட மாட்டேன்யா..............

52 comments:

தமிழ் அமுதன் said...

ME THA 1ST

நசரேயன் said...

ஜீவன் முந்திவிட்டார், நானும் வாரேன்

நசரேயன் said...

/*
நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல
*/
கமல் கவுதமி வாரமா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன.//என்ன? [23ம் புலிகேசிஸ்டைலில் படிக்கவும்]

Anonymous said...

சூப்பர்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

ha ha haaa

CA Venkatesh Krishnan said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

நசரேயன் said...

அய்யா?

மருத்துவர் அய்யா?
கலைஞர் அய்யா?

Dr. சாரதி said...

அஹா...சூப்பர்......

ஓட்டு பொறுக்கி said...

"நான் ஒரு கைப்புள்ள அடித்தவங்க விசயத்திலெல்லாம் தலையிட மாட்டேன்யா"
என்னமோ போங்க அடுத்த MLA பத்தி ரொம்ப கிண்டல் பண்ணபிடாது அவ்வ்வ்வ்

ரவி said...

கமல் பேசுறதை அப்படியே கமலஹாசனை மனசுல நினைச்சுக்கிட்டு அவர் பேசுறமாதிரியே படிச்சா சூப்பரா இருக்கு :)))

RAMYA said...

suupeeeeeeeeeeeeeeeer

RAMYA said...

சும்மா அசத்துங்க நண்பரே !!!!

RAMYA said...

/*
நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல
*/

இது ஒத்து கொள்ள வேண்டிய விஷயம் தானே
வடிவேலுக்கு வம்பா? இல்லை ..........

Anonymous said...

கமல் பகுதி நன்று. வடிவேலுவில் என்னமோ குறையுது.

தொடர்ந்து எழுதுங்கள்.

குடுகுடுப்பை said...

முகில் said...

கமல் பகுதி நன்று. வடிவேலுவில் என்னமோ குறையுது.

தொடர்ந்து எழுதுங்கள்.
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீங்கள் சொல்வது மிகச்சரி, இதை எழுதும் போது கமலை மட்டுமே மனதில் வைத்து எழுதிவிட்டேன்.வரும் பதிவுகளில் சரி செய்துவிடுகிறேன்.

குடுகுடுப்பை said...

ஜீவன் said...

ME THA 1ST
//
என்ன பிஸியா ஒன்னும் கருத்தே சொல்லக்காணோம் சமீப காலமா.

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*
நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல
*/
கமல் கவுதமி வாரமா?
//
அவங்கள பத்தி நமக்கேன் கவலை.இது சும்மா ஒரு சினிமா ஜல்லி.

கயல்விழி said...

LOL.

நல்லா இருக்கு

நட்புடன் ஜமால் said...

நல்லா தான் இருக்கு ஜல்லி
அப்படீன்னு சொல்லி ...

அது சரி(18185106603874041862) said...

//
கமல்ஹாசன் : அய்யா என்று அழகு தமிழில் அழைத்தமைக்கு நன்றி, அய்யா என்றழைக்காமல் கமல்ஹாசன் என்றழைத்தாலே சந்தோசப்பட்டிருப்பேன்.அதற்காக நீங்கள் அய்யா என்று அழைத்ததற்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன. நீங்கள் சொல்லும் வலை உலகம் அறிவியலின் குழந்தை அதை யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் உலகமே ஒரு வலை அதை அறிவியலால் தடுக்கமுடியாது.
//

ஆஹா, கமலுக்கு வசனம் எழுதி குடுக்கறது யாருன்னு இப்ப புரிஞ்சி போச்சிய்யா, புரிஞ்சி போச்சி :0)))

நசரேயன் said...

/*ஒரு யோசனை தோன்றுகிறது, 23ம் புலிகேசி, இந்திரலோகம் போன்ற படங்களில் நடித்த உங்களை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன்*/
டைரக்டர் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா?

குடுகுடுப்பை said...

SUREஷ் said...

//கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன.//என்ன? [23ம் புலிகேசிஸ்டைலில் படிக்கவும்]
//

வருகைக்கு நன்றி சுரேஷ்

குடுகுடுப்பை said...

நன்றி இராகவன், நைஜிரியா said...

சூப்பர்..

குடுகுடுப்பை said...

நன்றி T.V.Radhakrishnan said...

ha ha haaa

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
இளைய பல்லவன்
Dr. சாரதி

குடுகுடுப்பை said...

ஓட்டு பொறுக்கி said...

"நான் ஒரு கைப்புள்ள அடித்தவங்க விசயத்திலெல்லாம் தலையிட மாட்டேன்யா"
என்னமோ போங்க அடுத்த MLA பத்தி ரொம்ப கிண்டல் பண்ணபிடாது அவ்வ்வ்வ்//

நாம யாரு வருங்கால முதல்வருள்ள

http://urupudaathathu.blogspot.com/ said...

Ha ha ha

http://urupudaathathu.blogspot.com/ said...

கொஞ்ச வேலை ( கொஞ்சுறதுக்கு இல்ல)
அப்புறமா வரேன்..
கண்டிப்பா வருவேன்..

Mahesh said...

இஃகி ! இஃகி !!! இஃஃஃஃஃஃஃகி !!!

RAMASUBRAMANIA SHARMA said...

SUPER...."UNKANTHU YOSICHEENGALA"...PLEASE CONTINUE WRITING THESE TYPE OF ARTICLES...!!!!

Poornima Saravana kumar said...

:))))))))))

Poornima Saravana kumar said...

// செந்தழல் ரவி said...
கமல் பேசுறதை அப்படியே கமலஹாசனை மனசுல நினைச்சுக்கிட்டு அவர் பேசுறமாதிரியே படிச்சா சூப்பரா இருக்கு :)))

//

ரிப்பிட்டேய்..........

Poornima Saravana kumar said...

கலக்கலா இருக்கு.. ரசித்துச் சிரித்தேன் ..

நாடோடி இலக்கியன் said...

என்ன ஒரு அவதானிப்பு,

கலக்கல் பதிவு.

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி said...

கமல் பேசுறதை அப்படியே கமலஹாசனை மனசுல நினைச்சுக்கிட்டு அவர் பேசுறமாதிரியே படிச்சா சூப்பரா இருக்கு :)))
//
நன்றி ரவி

நீங்க கமலஹாசனாவே நெனச்சுக்கிட்டும் படிக்கலாம் அதில் ஒன்றும் தவறில்லை

குடுகுடுப்பை said...

RAMYA said...

/*
நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல
*/

இது ஒத்து கொள்ள வேண்டிய விஷயம் தானே
வடிவேலுக்கு வம்பா? இல்லை ..........//

நன்றி ரம்யா, வடிவேலுக்கு வம்பு இல்லை,எட்டிப்பார்ப்பவர்களுக்கு

குடுகுடுப்பை said...

கயல்விழி said...

LOL.

நல்லா இருக்கு

//
நன்றி கயல்விழி

குடுகுடுப்பை said...

அதிரை ஜமால் said...

நல்லா தான் இருக்கு ஜல்லி
அப்படீன்னு சொல்லி .

நன்றி ஜமால்.

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
கமல்ஹாசன் : அய்யா என்று அழகு தமிழில் அழைத்தமைக்கு நன்றி, அய்யா என்றழைக்காமல் கமல்ஹாசன் என்றழைத்தாலே சந்தோசப்பட்டிருப்பேன்.அதற்காக நீங்கள் அய்யா என்று அழைத்ததற்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன. நீங்கள் சொல்லும் வலை உலகம் அறிவியலின் குழந்தை அதை யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் உலகமே ஒரு வலை அதை அறிவியலால் தடுக்கமுடியாது.
//

ஆஹா, கமலுக்கு வசனம் எழுதி குடுக்கறது யாருன்னு இப்ப புரிஞ்சி போச்சிய்யா, புரிஞ்சி போச்சி :0)))//

கல்கி எழுதுன பொன்னியின் செல்வன்ல உங்க பங்கும் இருக்கிறத நீங்க வெளில சொல்லாட்டியும் எங்களுக்கு தெரியும்

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

அய்யா?

மருத்துவர் அய்யா?
கலைஞர் அய்யா?//

நீங்க தின்னவேலிதானே, உங்கய்யா கிட்ட சொல்றேன்

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*ஒரு யோசனை தோன்றுகிறது, 23ம் புலிகேசி, இந்திரலோகம் போன்ற படங்களில் நடித்த உங்களை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன்*/
டைரக்டர் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா?//

உன்கொடுமைக்கு ஒரு எல்லையே இல்லயா. அதுக்குதான் பாலா, கமல் ரெண்டு பேரு இருக்காங்க, நீங்க சேந்தா புராஜக்ட் 15 வருடம் ஆயிடும்

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

Ha ha ha//

ஆஹா வந்துட்டாரு. இது கும்மிப்பதிவுதான் வந்து வரிக்கு வரி கமெண்டு குடுங்க

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

கொஞ்ச வேலை ( கொஞ்சுறதுக்கு இல்ல)ட்
அப்புறமா வரேன்..
கண்டிப்பா வருவேன்.

//

கொஞ்சுதலும் வேலைதான், அது பட்டை சாராயமாக இருந்தாலும் சரி, பாட்டில் அழகியாக இருந்தாலும் சரி

குடுகுடுப்பை said...

Mahesh said...

இஃகி ! இஃகி !!! இஃஃஃஃஃஃஃகி !!!//

வாங்க மகேசு, பழமையாரின் சிரிப்பை இழுத்து காப்பியா.

எனது அடுத்த பதிவின் ஹீரோ நீங்கள்தான்

குடுகுடுப்பை said...

RAMASUBRAMANIA SHARMA said...

SUPER...."UNKANTHU YOSICHEENGALA"...PLEASE CONTINUE WRITING THESE TYPE OF ARTICLES...!!!!

//
வாங்க RAMASUBRAMANIA SHARMA

// எனக்கு சினிமா அறிவு கம்மி,ஆனால் அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்

குடுகுடுப்பை said...

PoornimaSaran said...

// செந்தழல் ரவி said...
கமல் பேசுறதை அப்படியே கமலஹாசனை மனசுல நினைச்சுக்கிட்டு அவர் பேசுறமாதிரியே படிச்சா சூப்பரா இருக்கு :)))

//

ரிப்பிட்டேய்..........//

நன்றி பூர்ணிமா

குடுகுடுப்பை said...

நாடோடி இலக்கியன் said...

என்ன ஒரு அவதானிப்பு,

கலக்கல் பதிவு.

நன்றி

சி தயாளன் said...

அசத்தல் :-)

Unknown said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

soundr said...

nice...

vasu balaji said...

இதெப்படி என்கண்ணுல சிக்காம போச்சி. :))