Monday, August 25, 2008

P.வாசுவிற்கு ஜக்கம்மாவின் ஐடியா.

அய்யா பீ.வாசு நீங்களும், ரஜினியும் குசேலன் படம் எடுத்து படுர கஷ்டத்தை பார்க்கவே ரொம்ப கவலையா இருக்கு. உங்க கவலையை ஜக்கம்மா கிட்ட சொன்னப்ப அவுங்க உங்களுகிட்ட உள்ள பழைய தெறமைய காட்ட சொன்னாங்க.

இதாங்க ஜக்கம்மா சொன்னது.

அய்யா பீ.வாசு அவர்களே நீங்க வேற மொழி படங்களை தமிழுக்காக சில மாற்றம் செஞ்சு மொழி மாற்றம் செய்வதால் தான் இவ்வளவு பிரச்சினைகளும் வருது, இதனை நீங்க உணர்ந்து உங்களுடைய பலம் அறிந்து படங்களை இயக்கினால் மறுபடியும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

உங்க பலம் என்னான்னு ஒங்களுக்கு மறந்து போச்சா
உதாரணத்திற்கு உங்க பலம் சில

நடிகன் - நாளும் தெரிந்தவன் என்ற படத்தின் மறுபதிப்பு,

மன்னன் - சவாலே சமாளி யின் மறுபதிப்பு.

வால்ட்டர் வெற்றிவேல் – தங்கபதக்கம் படத்தை காது கிழிய எடுத்தபடம்.குடுகுடுப்பைகாரன் புல்லா குடிச்சுட்டு இந்த படத்துக்கு போயும் சத்யராஜ் போட்ட சத்தத்தில தூங்க முடியலன்னு சொல்றார்.

செந்தமிழ்பாட்டு – சின்ன தம்பியை படத்தையே அதே பிரபுவை வைத்து துணிச்சலுடன் எடுத்த படம்

இந்த படங்களை தமிழ் மக்கள் பார்த்தாங்க. இப்பயும் பாப்பாங்கனு ஜக்கம்மா உத்திரவாதம் எல்லாம் தரமுடியாது. ஆனாலும் இது மாதிரி தமிழ் படங்களையே நீங்க மீண்டும் எடுக்கலாமே.

இப்படி எடுத்திட்டா தமிழர்களுக்கு என்ன பிடிக்கும் என்ற அவஸ்தையிலுருந்து நீங்க விடுபடலாம்.

அய்யா நீங்க உங்க புதிய (?) முயற்சிகளை ஓரங்கட்டி வெச்சுட்டு பழைய தமிழ் படங்களையே ரீமேக் பண்ணுங்கய்யா.

என்ன ஜக்கம்மா வாசுக்கு மட்டும் தான் குறி சொல்லுமா, ரஜினிக்கு கெடயாதா. வாசுக்கு குறி சொல்லி முதுகை காண்பிச்சா அது தமிழ் முதுகா இருந்துச்சுன்னா அப்படியே படம் எடுப்பாரு,வேற மொழி முதுகா இருந்துச்சுன்னா தமிழ் ஏத்த மாதிரி மாத்தி எடுப்பாரு பாதிக்கப்பட போறது என்னமோ படம் பாக்கிறவங்க மட்டும் தான். ஆனா ரஜினிக்கு குறி சொன்னா ரஜினியை பிடிச்சவங்களும் முதுகை பதம் பாத்துருவாங்க, பிடிககாதவங்களும் பதம் பாத்துருவாங்க, அதுனால ஜக்கம்மா எஸ்கேப்.


என்னப்பா எனக்கு சரியா எழுத வரலை, நல்ல பழைய வலைப்பதிவு இருந்தா சொல்லுங்கப்பா மறுபதிவு போட்டுருவோம்.

12 comments:

puduvaisiva said...

HI kudukuduppai

really nice pice of yours today

and you anything writing about Superstar ask permission our dear Blog writer Singai Singam Kiri.

puduvai siva

ers said...

அய்யா நீங்க உங்க புதிய (?) முயற்சிகளை ஓரங்கட்டி வெச்சுட்டு பழைய தமிழ் படங்களையே ரீமேக் பண்ணுங்கய்யா.}}}}

ஒங்களுக்க எழுத வரைலை? பட்டைய கிளப்புறீங்களே...

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
புதுவை சிவா, தமிழ் சினிமா

இப்போதான் எழுத கத்துக்கிறேன்ங்க. யாரும் படிக்காட்டியும் விடுறதா இல்லீங்க.

ஜியா said...

//ஆனா ரஜினிக்கு குறி சொன்னா ரஜினியை பிடிச்சவங்களும் முதுகை பதம் பாத்துருவாங்க, பிடிககாதவங்களும் பதம் பாத்துருவாங்க, அதுனால ஜக்கம்மா எஸ்கேப்.
//

Romba adi vaangirupeenga pola ;))

//ஒங்களுக்க எழுத வரைலை? பட்டைய கிளப்புறீங்களே...//

Repeatye... :)))

குடுகுடுப்பை said...

எழுத கத்துக்கறேன். ஆனாலும் வாசு மாதிரி ஒரு நல்ல பழைய பதிவு கிடைச்சா சுட்டுடாலாம்னு ஒரு நப்பாசைதான்.

Anonymous said...

chinna thambi vairamuthuvin kumudam kadhayin ultaa..

Anonymous said...

chinna thambi vairamuthuvin kumudam kadhayin ultaa..

கயல்விழி said...

நல்லா எழுதி இருக்கீங்க, குடுகுடுப்பை.

உலகத்தரமா எழுதி இருக்கீங்க :) ;)

குடுகுடுப்பை said...

chinna thambi vairamuthuvin kumudam kadhayin ultaa..

வாங்க அனானி
வைரமுத்து அவ்ளோ கேவலமா கதை எழுதினாரா நம்ப முடியலீங்க.

குடுகுடுப்பை said...

/உலகத்தரமா எழுதி இருக்கீங்க :) ;)//

வாங்க கயல்விழி
மொக்கை போடறதுன்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் உலகத்தரமா இல்லாட்டி எப்படி.

நாநா said...

இந்த வாசுவெல்லாம் ஒரு டைரக்டர்ன்னு சொல்லிகிட்டு.... ஏன் இந்த ஆளுக்கு சொந்த சரக்கே கிடையாதா?

குடுகுடுப்பை said...

வாங்க நானா

ஓசி சரக்குன்னா ஒரு கிக்குதான்