தலையை மட்டும் குழம்பு வைக்கலாம்
சொல்கிறாள் அம்மா.
குடல் பொறியல் செய்யலாம்
சொல்கிறார் அப்பா
தொடைக்கறி முடிச்சுகள் உடுத்தியபடி.
உப்புக்கண்டம் அப்புறம் பிரிச்சுக் கோர்த்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் காய வைத்துக்கொண்டிருந்தாள்
வாசம் இழுத்தபடியே
அவனை பார்க்கிறேன்
கழுத்தில் பளபளத்தது புதுமணி.
வெறும் எலும்புதானா, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
ஏறிக்கெழுத்தி வலையில் பிடிபட்டது
மாமனாரும் வந்து சேர்ந்தார் சாக்கு நிறைய மீனோடு.
தாலி கட்டியவனை புளிவாங்க அனுப்பி
எனை விடுப்பெடுக்க வைத்து
சாக்கு மீனும் சமைத்தெடுத்து
பிரித்து மேயப்பட்டது மீன்கள்
தட்டு மட்டும் முட்களுடன்.
சாப்பிட்டு முடித்து ஏப்பம்
விட்டுத் திரும்புகையில்
அவனது
கழுத்து மணி ஓசை
விரைவில் உப்புக்கண்டம் ஆகப்போவது
தெரியாமல்
அவனது தொடைய பிரித்துக் கோர்ப்பது
யார்??
அசல் இங்கே
17 comments:
அவ்வ்வ்....இது மாட்டு பொங்கல் கொசுவத்தியா! :-)
ஆஹா இது கூட நல்லாத்தான்யா இருக்கு..
(ச்சே, பொங்கல் அன்னிக்கு சன் டிவி பட்டிமன்றம் பாக்காதன்னா கேக்குறியா?)
நாங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டோமுல்ல..
ஜக்கம்மாவுக்கு பொங்க வெச்சிட்டாங்கப்பா:))
பொங்கல் வாழ்த்துகள்
பொங்கலோ பொங்கல்..,
கவிதையும் அதன் சாரமும் விளிம்பில் நிற்க கவுஜயும் அதன் புன்முறுவலும் மட்டும் முன்னோட்டமாக பின்னூட்டமாவது ஏன்? போதாதற்கு போட்டி கவுஜர் நசரேயன்:)
ஹா ஹா ஹா
நல்லா கோத்து பிரிக்கிறீங்கப்பா
கவிதையையும் கவுஜையையும் ...
:-))
இந்த பொங்கள், பப்புஆச்சி vs பாப்பையா?
இனிய பொங்கள் வாழ்த்துக்கள்!
:-)
போதுமடா சாமி உம்மோட மீன் குழம்பு வெளக்கம். நீறு சொன்நீருன்னு சொல்லி வீணாப்போன இந்தியன் சாப்பாட்டு கடை "செட்டிநாடு மெஸ்" போனா அந்த பரதேசி நாயி மீன் கொழம்புன்னு என்னதோ ஒரு நாதம் புடிச்சத கொடுத்து (உப்பில்லாம உறப்பில்லாம) நாப்பதாறு டாலர் வாங்கிபுட்டான். எங்க வீட்டு தங்கமணி உங்கள பாத்தா உங்க கிட்ட நாப்பதாறு டாலர் வாங்கிபுடனும்னு கோல வேர்ல அலையுறாங்க........ ஜாக்கிரதை........
ஜக்கம்மா (ஊட்டம்மா) பொங்கல் வசுடான்களா...... சாப்பிட வரலாமா????????????????? எனிக்கு வைகாங்க வீட்டுல பொங்கல்..... சாப்பிட வர நாங்க ரெடியா இருக்கோம்....
நல்லாருக்கு... வாழ்த்துக்கள்...
//ஆகப்போவது தெரியாமல்அவனது தொடைய பிரித்துக் கோர்ப்பதுயார்?? //
ஜக்கம்மா தான்
+"*ç%&?=)(/&++"*ç%&... ithellaam thittu...
கலகல
ரொம்ப திட்டாதீங்க....
//ஏறிக்கெழுத்தி//
ஏரின்னு வரனும்னு நினைக்கிறேன், இல்ல நீங்க வேற அர்த்தத்துல எழுதியிருக்கிங்களா!?
Post a Comment