Tuesday, January 12, 2010

இக்கொடுமை எதிரிக்கும் கூடாது

தூக்கி வீசப்பட்ட ஊறுகாய் பாட்டில்

சரக்கு மட்டும் ஊறுகாயற்று

எனக்கு நானே சமாதானம் கொண்டவன் போல்

சாவதானமாகவே குடித்தேன்

சைடிஷ் இல்லாமல் குடிப்பவன் என்ற

பெருமைகளை புறம் தள்ளி

சரக்கு மட்டுமே கதி

சரக்குக்கு நானே கதி

என்றொரு காலம்

இருந்தவரை எல்லாமே சரியெனும்

போதையில் மூழ்கிப்போய்

ஊறுகாய் தவிர்க்கப்பழகி

முழுதும் குடித்தபின்

அடுப்படியில்

எனக்கே எனக்கென சமைத்த

சிக்கன் ஊறூகாய்

சட்டி நிறைய

கிடைத்த குஷியில்

சரக்கு தேடினேன்

பூட்டப்பட்ட வீட்டில்

சரக்கில்லாமல் தேம்பியழும் நான்

இக்கொடுமை எதிரிக்கும் கூடாது!!

அசல் இங்கே


26 comments:

பிரபாகர் said...

அலுவல் முடித்து
அயற்சியாய் வந்தேன்
ஆவலாய் இடுகை பார்த்து
அவரமாய் படிக்க
அடுத்தொரு சரக்கூறுகாய்...

ஜக்கம்மா சோதனை
சத்தியமாய் வேண்டாம்
சிந்திக்க வைக்கும்
முருங்கைக்காய் மீண்டும்
கொடுப்பீரா குடுகுடுப்பை?

(ஹி, ஹி... பொங்கல் வாழ்த்துக்கள்)

பிரபாகர்.

Unknown said...

எதிர்க் கவுஜயா? இல்ல ஒரிஜினலா??

எப்பிடியோ டாஸ்மாக் சரக்கு மாதிரி இருக்கு..

வால்பையன் said...

எனக்கு கொஞ்சம் சிக்கன் ஊறுகாய் கிடைக்குமா!?

குடுகுடுப்பை said...

எதிர்கவுஜதான், மிஸஸ். தேவின் கவிதைதான் இங்கே இப்படி ஊறுகாய் ஆனது.

குடுகுடுப்பை said...

வால்பையன் said...
எனக்கு கொஞ்சம் சிக்கன் ஊறுகாய் கிடைக்குமா!?
//

சரக்கு எப்பயுமே ஸ்டாக் இருக்கா?

குடுகுடுப்பை said...

ஜக்கம்மா சோதனை
சத்தியமாய் வேண்டாம்
சிந்திக்க வைக்கும்
முருங்கைக்காய் மீண்டும்
கொடுப்பீரா குடுகுடுப்பை?//

நான் என்ன பாக்கியராஜா?

வால்பையன் said...

//சரக்கு எப்பயுமே ஸ்டாக் இருக்கா? //


அவசரத்திற்கு தேடி கொண்டிருக்க முடியாதே!

பிரபாகர் said...

//
குடுகுடுப்பை said...
....

நான் என்ன பாக்கியராஜா?
//

பாஸ் உங்க இடுகை “முருங்கை மரமும் பசுமாடும் நொண்டியும்” மாதிரி வேணும்னு ஜக்கம்மாவ கேக்கறேன்!

பிரபாகர்.

Radhakrishnan said...

தேடலின் போது, அனைத்தும் எளிதில் கிடைத்துவிட வேண்டும் என்கிற உணர்வை அள்ளித் தெளிக்கும் கவிதை சிறப்பு.

சந்தனமுல்லை said...

ஒரிஜினல் கவிதையா?!!

சிக்கன் ஊறுகாயா? கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே!!

சந்தனமுல்லை said...

/சரக்கில்லாமல் தேம்பியழும் நான்

இக்கொடுமை எதிரிக்கும் கூடாது!!/

ஸ்ப்பா...எவ்ளோ நல்ல மனசு!! :-))

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

ஒரிஜினல் கவிதையா?!!

சிக்கன் ஊறுகாயா? கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே!!
//

சிக்கன் ஊறூகாய் சூப்பரோ சூப்பர். ஆந்திரா ஸ்பெசல்.

நானாவது கவிதையாவது? மிஸஸ்.டவுட்டக்காவோடதுதான்

குடுகுடுப்பை said...

வெ.இராதாகிருஷ்ணன் said...

தேடலின் போது, அனைத்தும் எளிதில் கிடைத்துவிட வேண்டும் என்கிற உணர்வை அள்ளித் தெளிக்கும் கவிதை சிறப்பு.//

சத்தியமா இந்தப்பாராட்டுக்கு நான் சொந்தக்காரன் அல்ல. சிந்திந்து எழுதியது அல்ல. ரீமேக் கவுஜதான் சார்.

குடுகுடுப்பை said...

பிரபாகர் said...

//
குடுகுடுப்பை said...
....

நான் என்ன பாக்கியராஜா?
//

பாஸ் உங்க இடுகை “முருங்கை மரமும் பசுமாடும் நொண்டியும்” மாதிரி வேணும்னு ஜக்கம்மாவ கேக்கறேன்!

பிரபாகர்.
//
சரக்கு தீந்தா மீள் குடி குடிக்க முடியாது, ஆனா சரக்கு தீந்தா மீள்பதிவு போடலாம்.

நசரேயன் said...

அடிக்கடி சரக்கை ஞாபக படுத்துறீங்க.. நல்லா இல்லை சொல்லிபுட்டேன்

vasu balaji said...

குடுகுடுப்பை said...

பிரபாகர் said...

//
குடுகுடுப்பை said...
சரக்கு தீந்தா மீள் குடி குடிக்க முடியாது, ஆனா சரக்கு தீந்தா மீள்பதிவு போடலாம்.//

ரிப்பீட்டேய்.

கலகலப்ரியா said...

//இக்கொடுமை எதிரிக்கும் கூடாது!!//

இது ஒரு தொடர் கொடுமை... ச்சே... க(வு)ஜ.

vasu balaji said...

//சரக்கு மட்டுமே கதி

சரக்குக்கு நானே கதி

என்றொரு காலம்

இருந்தவரை எல்லாமே சரியெனும்

போதையில் மூழ்கிப்போய்//

வாழ்க்கையின் யதார்த்தம் கூறும் இலக்கிய வரிகள்:))

கலகலப்ரியா said...

btw.. like yer comment on da original post..

எம்.எம்.அப்துல்லா said...

ஹாய்! ஹேப்பி டமில் நிவ் இயர்யா

:)

குடுகுடுப்பை said...

எம்.எம்.அப்துல்லா said...
ஹாய்! ஹேப்பி டமில் நிவ் இயர்யா//


ஒரு கமெண்ட போட்டு ஒரு பதிவு போடலாம்னு இருந்தத காலி பண்ணிட்டீங்களே இப்படி.

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

வில்லன் said...

//பூட்டப்பட்ட வீட்டில்
சரக்கில்லாமல் தேம்பியழும் நான்//

என்னது தங்கமணி வெளில போகும்போது உங்கள வீட்டுல வச்சு பூட்டிட்டு போயிருவான்களா... கேக்கவே பாவமா இருக்கே அண்ணாச்சி...அச்சச்சோ... ......சத்தியமா இக்கொடுமை எதிரிக்கும் கூடாது...... அப்ப வெடுக்கு நாயே தேவபடாதே..... எப்படியெல்லாம் "காஸ்ட் கட்டிங்" பாருங்க..... அடுத்த அமெரிக்க பட்ஜெட் உங்க வீட்டு தங்கமணி (அதான் கு ஜ மு க ஜக்கம்மா.... யாரப்பா அது??? கு ஜ மு க ஜக்கம்மா யாருன்னு திருப்பவும் கேள்வி கேக்குறது....) தான் போடனும் தல........

வில்லன் said...

//சைடிஷ் இல்லாமல் குடிப்பவன் என்ற

பெருமைகளை புறம் தள்ளி//

இதென்ன பெரிய விஷயம் பெருமைப்பட..... ஒரு மண்ணும் இல்ல..... அறைகொடம் தண்ணி போல அலம்பிட்டு....

நானும் நம்ம தல நசறேயனும்... தம்ப்ளர் இல்லாம, தண்ணி/சோடா இல்லாம, சைடு டிஷ் இல்லாமல்லா சரக்கடிச்சோம் நியூயார்க்ல (கிறிஸ்துமஸ் பார்ட்டிபா)...

நிறை கொடம் எப்பவுமே தலும்பாதுப்பா........ நாங்கல்லாம் பழம் தின்னு கொட்ட போட்டவங்க....

அது சரி(18185106603874041862) said...

//
எனக்கே எனக்கென சமைத்த

சிக்கன் ஊறூகாய்

சட்டி நிறைய

கிடைத்த குஷியில்
//

அதென்னா சிக்கன் ஊறுகா?? போதையில ஊறுகான்னு எதையாவது தின்னு வைக்காதீங்க...புடுங்கிடும்...:0)))

Anonymous said...

//எம்.எம்.அப்துல்லா said...

ஹாய்! ஹேப்பி டமில் நிவ் இயர்யா

:)
//

ஹஹஹா

நானும் விஷ் செஞ்சுக்குது :)

Sanjai Gandhi said...

எச்சுச்மி.. வாட்டிஸ் ஆப்பனிங்கு இயரு?