Monday, September 28, 2009

நிலாவில் தண்ணீர் - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பும் மதங்களும்.

நிலாவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக, இந்தியாவின் சந்திராயன் எடுத்து அனுப்பிய படங்களின் மூலம் ஆராய்ந்து நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. தண்ணீர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மதங்கள்(மதத்தை அறிவியலோடு இணைக்கும் சிலர்) அவற்றின் அறிவியல் உரிமையை தாங்கள் சார்ந்த மதங்களுக்கு கொடுப்பர் அவை இப்படியெல்லாம் இருக்கலாம் என்ற கற்பனை.

மதம் 1:

"சந்திரஜலம் கொண்டு ஒரு காலம் அந்தணன் பூஜித்தான்" மறை: 1.2.21 இதிலிருந்து நிலாவில் தண்ணீர் இருந்தது தெரிகிறது.

மதம் 2 :

"நிலாவைப்படைத்தோம், அதற்கு ஒளியைப்படைத்தோம் அது சூடாகும் போது ஆற்றிக்கொள்ள தண்ணீரையும் படைத்தோம்" : மறை : 2.1.21

மதம் 3:

"நிலாவைப்படைத்தோம், அதில் குண்டு,குழிகளை படைத்தோம், நிலாமழை படைத்தோம், குண்டு குழிகளில் நிரம்பச்செய்தோம்" : மறை 3.2.4

பழந்தமிழர் பழமொழி:

நிலாநீர் ஓடிவர கொங்கைகள் ஆட
ஆடிவந்தாள் கன்னிப்பெண்.
கண்டதும் மையல் கொண்டான்
பழமைபேசி நிலாநீர் மேல் --- பழமை 3.4.1


ஷீப்ரமணியசாமி பேட்டி:

நாந்தான் அப்பவே சொன்னேனே , மூன்ல தண்ணி இருக்கு, இங்கே யாரும் நதிநீர் பிரச்சினைக்கு அடிச்சிக்காதேள்னு, நானே நாளைக்கு நிலாவுக்கு போய் நிலா நதி, பூமி நதி நீர் இணைப்பை உறுதிப்படுத்துகிறேன். நிலாவிலேந்து நேரடியா எல்லா நதியிலும் இணைச்சிட்டா சுற்றுப்புறச்சூழல் பத்தி ராகுல் காந்தி அறிக்கை விடாம பண்ணிறலாம், அறிக்கைன்னா அது நான் மட்டும்தான் விடனும்.

நாகம்மாள்: அதுதான் உப்புண்டா மாரி மாதிரி ஒருத்தி நிலாக்குளத்துள துணி துவைக்கிறது நீ அன்னாந்து பாத்தாலே தெரியுமே, இதை அமெரிக்கா ”நாசா”மான போனவங்க
இப்பதான கண்டுபிடிச்சாங்களா, நீ சீக்கிரம் கெளம்பி ஊரப்பாக்கா வாப்பா உங்க தாத்தன் மாதிரியே உங்கப்பனும் சரியா வெள்ளாமை போட மாட்டேங்குறான் நீயாவது வந்து நல்லா வெள்ளாமை பண்ணு.


பி:கு: இது ஒரு மொக்கைப்பதிவு.மதங்கள் பற்றிய அறிவு எனக்கு கிடையாது ஆர்குட் போன்ற தளங்களில் மதத்தையும் அறிவியலையும் இணைத்து உரிமை கொண்டாடும் சில கருத்துக்களை வைத்து உருவாக்கின மொக்கை.

Thursday, September 24, 2009

கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி.

கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி.

உன்னைப்போல் ஒருவன் படத்தில் மூன்று முஸ்லீம் தீவிரவாதிகள், ஒரு இந்து தீவிரவாதியையும் காண்பித்து உள்ள கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதியை காண்பிக்கவில்லை. இதிலிருந்து இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சண்டை மூட்டும் கிறிஸ்தவ தீவிரவாதி கமல்ஹாசன் என்று என்னுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பி:கு: இது ஒரு மொக்கைப்பதிவு நானும் உன்னைப்போல் பற்றி ஒருவன் பதிவு போடவேண்டும் என்பதற்காக போட்டது.

Monday, September 21, 2009

முகிலனின் பிதற்றல்கள்.

முகிலனின் பிதற்றல்கள்.

கு.ஜ.மு.க பொதுச்செயலாலர் கைது என்று முகிலன் நேற்று பிதற்றியிருந்தார். கைதுக்கு, நான் புதிய செல்போன் வாங்கியதை காரணமாக சொல்லியிருந்தார். அது அப்பட்டமான பொய் என்பதை நான் இப்போது உபயோகிக்கும் இந்த செல்போனின் படமே விளக்கும்.







பி.கு: இந்த செல்போனை காப்பீடு செய்ய ஆசைப்படுகிறேன். உங்களுக்குத்தெரிந்த காப்பீட்டுக்கம்பெனிகள் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும்.

Tuesday, September 15, 2009

கொலம்பஸில் கொலம்பஸ் பற்றி ஒரு கொலம்பஸ்தனமான ஆய்வு.

நான் சிறிது காலம் ஒன்னுக்கும் உதவாத ஓகாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்த காலம், நானும் என்னோட வேலை பார்த்த சர்தார்ஜி நண்பரும்தான் ஆன்சைட் இன்ஜார்ஜ், பெரும்பாலும் இரவு பதினோரு மணிவரை இருந்து ஆப்ஷோர் டீமிடம் கை கலந்துவிட்டு(அறிவு பறிமாறல்) செல்வோம்.

ஒரு நாள் இரவு ஏழு மணியளவில், ரெஸ்ட் ரூமுக்கு உச்சா அடிக்க சென்றபோது, சர்தார்ஜி எல்லா டாய்லெட்டையும் ஓப்பன் பண்ணி டிஷ்யூ பேப்பர் இல்லைங்கிறத என்னிடம் சொன்னார். ஏன் காஸ்ட் கட்டிங்கா அப்படின்னு கேட்டேன்.அதுக்கு அவரு ஆமாம் காஸ்ட் கட்டிங்தான் ஆனா இந்த கம்பெனி காஸ்ட் கட்டிங் கிடையாது, நம்ம ஊருல உள்ள ஒரு கம்பெனிலேந்து சுமார் இருநூறு பேரு வந்திருக்காங்க அவங்களோட காஸ்ட் கட்டிங், வீட்டிலே டிஷ்யூ பேப்பர் வாங்காம இங்கேயே, மாலை ஆறு மணியளவில எல்லாத்தையும் முடிச்சிட்டுதான் போவாங்க, ஆறு மணிப்பக்கம் இந்தப்பக்கம் வந்தா எல்லா ரூம்லேயும் கால் தெரியும் அப்படின்னார்.அதுக்கப்புறம் சுத்தமா பேப்பர் இருக்காதுன்னார்.

இந்த ஆராய்ச்சியை நினைத்து சிரித்துவிட்டு மீண்டும் எங்கள் இடம் திரும்பியபோது, பெங்களூரில் இருந்து பால்ராஜ் என்பவர் சர்தாருக்கு போன் பண்ணினார்.

பாஸ் அந்த டுக்சான்(Tucson) மெசின் டவுனா இருக்கு, ஆன் பண்ணி விடுங்க....

அது என்ன டுக்சான், அதை அப்படி சொல்லக்கூடாது. டுசான் அப்படின்னு சொல்லனும், முதல்ல உனக்கு அந்த மெசினுக்கு ஏன் டுசான்னு பேர் வந்தது தெரியுமா?

தெரியாது.

சரி நம்ம டீமோட டெஸ்ட் சர்வர் பேர் எல்லாத்தையும் சொல்லு

டுக்சான், மேசா, பீனிக்ஸ், கொலம்பஸ்

இதெல்லாம் நம்ம கிளையண்ட் பிராஞ்ச் இருக்கிற முக்கியமான ஊர். அந்தப்பேரிலதான் நம்ம டெஸ்ட் சர்வர் பேரெல்லாம் இருக்கு, இதுல டுசான், மேசா மற்றும் பீனிக்ஸ் அரிசோனா மாகாணத்துல இருக்கு. கொலம்பஸ் ஓகாயோ மாகாணத்துல இருக்கு, அரிசோனா வெஸ்டல இருக்கு, ஓகாயோ ஈஸ்ட்ல இருக்கு. அரிசோனால Grand canyon இருக்கு, பக்கத்துல லாஸ் வேகாஸ் இருக்கு.ஆனா ஒகாயோவில என்ன விசேசம்னா அமெரிக்காவில உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி போகனும்னா ஓகாயோ தாண்டிதான் டிரைவ் பண்ணி போகனும். 70 மைலுக்கு மேலே ஓட்டினா கண்டிப்பா டிக்கட் கிடைக்கும். சரி இது பத்தி அப்புறம் பேசலாம்.

சரி பாஸ்

ஆமா கொலம்பஸ் பத்தி சொல்ல மறந்துட்டேன், கொலம்பஸ்ன்னு ஒரு ஐரோப்பியர் இந்தியாவுக்கு மளிகை ஜாமான் வாங்க கப்பல் எடுத்துக்கிட்டு புதுவழியா போனார், ஆனால் அவர் இந்தியான்னு நினைத்து அமெரிக்காவில வந்து இறங்கிட்டார், அவர் வந்ததுக்கப்புறம் இங்கே இன்னும் நிறைய ஐரோப்பியர் வந்து, இங்கேயே வாழ்ந்த காட்டு வாசிகள் கையில் இருந்த அம்பை புடிங்கிட்டு சொம்ப கொடுத்துட்டாங்க, அதுனாலதான் இன்னைக்கு நானெல்லாம் இங்கே வந்து வேலை பாக்கிறேன், நீ அங்கேயே இருந்தாலும் இங்கதான் வேலை பாக்குறே என்ன புரியுதா?

புரியுது பாஸ், அப்படியே அந்த டுக்சான் மெசின ஆன் பண்ணுங்க பாஸ்

இவ்வளவு நேரம் சொல்லியும் நீ இன்னும் டுக்சான்னு சொல்றே, அது டுசான், ஏய் குடுகுடுப்பை அந்த டுசான் மெசின ஆன் பண்ணு. எப்படி ஆன் பண்ணனும்னு தெரியுமா? இல்லை நான் விளக்கமா சொல்லட்டுமா?

இல்லை கொண்டையரே , நான் ஆன் பண்ணி பால்ராஜ் பண்ணவேண்டிய வேலையும் முடிஞ்சிருச்சி, பீஸா வந்திருச்சி சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம் வாங்க..

Monday, September 14, 2009

கவிதையில்லா கவிதை

எந்த ஊர் என்றவனே
அத்திக்காய் காய் காய்
கிலியில் கிளியைக் கிழித்து
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
வாழ்வனத்தில் வழியும் துளிகள்
மரணம் உன்னைக் காதலிக்கிறது
மீண்டும் சந்திப்போம்

நெஞ்ச நதிக்கரை
என்னோடு நான்
ஓரினச்சேர்க்கை
கடவுள்

பச்சைமிளகாய் இளவரசி
வெளிச்ச அழைப்புகள்
அன்புடன் இதயம்
கிடைக்கும் இடங்கள்
சரணமென்றேன்


----

அன்புடன் புகாரி என்ற பதிவரின் லேபிள்களே மேலே இருக்கும் கவிதையில்லா கவிதை. அவரிடம் அனுமதி கேட்காமலே பதிவிடுகிறேன் புகாரி புகார் கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்.

அவரைப்படிக்க அறிதலில்லா அறிதலுக்கு செல்லுங்கள்.

அறிதலில்லா அறிதல்

Saturday, September 12, 2009

அழகு நீ கோடி அழகு

நீள் ஆறுகள்
குறுக்கே பாலங்கள்
ஆதிக்கச் சூரியன்
துருப்பிடித்த இரும்பு போல
செப்பனிடா பழுப்பில்
கரடு முரடு தடித்தண்டில்
அடிவான மஞ்சளை
உரசித் தேய்க்கும் ஆவலுடன்
கருகின கால்கள் போல்
உயர்ந்து நிற்கும்
கரண்ட் மரங்கள்
அலைபாயும் மின்இலைகள்
கரண்ட் பில்
குறைத்திடவே
லேட்டாக பள பளக்கும்
வெள்ளைநிற பல்புகள் ...
கருப்பு நிற வாத்தியாரை
வெள்ளைக்காரன் கிள்ளிப் போட
நிறவெறி அப்பளமாய்
உடைந்தது பிரச்சினையே
ரிசெசன் ஒரு கண்ணிலா
மருத்துவம் மறு கண்ணிலா
உலகம் ஒரு வெண்ணிலா
இல்லாத அப்பளப்பிரச்சினை
தடுக்க பீருருஞ்சும் தலைமகன்...
மேலேப் பறக்கும் செலவினங்கள்...
தேவை உடனடி
பச்சை நிற பணம்.
பணம் ... பச்சை பணம் ... பண எந்திரம்
அழகே...!
பணம்
அழகே ..!
தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு !!!


அசல் இங்கே

Wednesday, September 2, 2009

மழிக்க சிரைக்க

சலூன்கள்

திறக்கப்படும்

நேரத்தில்

தாடி

சிரைக்கப் படுகையில்

மெதுவாக முளைத்திடும்

தாடியின் ஆயுள்

அடுத்து சலூன்

திறக்கப்படும் வரையோ ?!

சிரைக்கப் படுதலும்

வளர்தலுமாக

நகர்கின்றன தாடிகள்

சலூன்களை நோக்கி...!
கனவுகள் இங்கே

Tuesday, September 1, 2009

அழுக்கான வேட்டிகள்

அசுத்தமான கோடுகளுடன்
அழுக்காக கட்டிக் கொண்ட
ஒரு வேட்டி
துவைக்க முடிந்தும்
துவைக்க நினைத்தும்
துவைக்காமல் காத்துக் கொள்ளவே
அனுதினமும்
பிரம்மப் பிரயத்தனத்துடன்
வேட்டியை
தாண்டியபடியே நிற்கும்
கால்களுடன்
தள்ளாடிய நடை
சிவந்த பார்வை
திமிர்ந்த பானச் செருக்கும்
கொண்டவனாய்
நிற்பவன்
.
.
.
.
.
ஆண்

இப்படியும் கவிதை எழுத முடியும் இங்கே சென்று படியுங்கள்