நீள் ஆறுகள்
குறுக்கே பாலங்கள்
ஆதிக்கச் சூரியன்
துருப்பிடித்த இரும்பு போல
செப்பனிடா பழுப்பில்
கரடு முரடு தடித்தண்டில்
அடிவான மஞ்சளை
உரசித் தேய்க்கும் ஆவலுடன்
கருகின கால்கள் போல்
உயர்ந்து நிற்கும்
கரண்ட் மரங்கள்
அலைபாயும் மின்இலைகள்
கரண்ட் பில்
குறைத்திடவே
லேட்டாக பள பளக்கும்
வெள்ளைநிற பல்புகள் ...
கருப்பு நிற வாத்தியாரை
வெள்ளைக்காரன் கிள்ளிப் போட
நிறவெறி அப்பளமாய்
உடைந்தது பிரச்சினையே
ரிசெசன் ஒரு கண்ணிலா
மருத்துவம் மறு கண்ணிலா
உலகம் ஒரு வெண்ணிலா
இல்லாத அப்பளப்பிரச்சினை
தடுக்க பீருருஞ்சும் தலைமகன்...
மேலேப் பறக்கும் செலவினங்கள்...
தேவை உடனடி
பச்சை நிற பணம்.
பணம் ... பச்சை பணம் ... பண எந்திரம்
அழகே...!
பணம்
அழகே ..!
தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு !!!
அசல் இங்கே
13 comments:
அசலைப்[ படித்த பிறகே உங்கள் நையாண்டி புரிந்தது.
அமெரிக்கக் காட்டையும் கவித்துவமாய்ப் பார்க்க ஒரு தனிப் பார்வை வேண்டும்.அது உங்களிடம் இருக்கிறது.
பாராட்டுக்கள்.
//
கருப்பு நிற வாத்தியாரை
வெள்ளைக்காரன் கிள்ளிப் போட
நிறவெறி அப்பளமாய்
//
என்ன கலர் அப்பளம்?? :0)))
//
கருகின கால்கள் போல்
உயர்ந்து நிற்கும்
கரண்ட் மரங்கள்
//
நம்ம நடிகர் விஷால் அங்க எங்க வந்தாரு....புதுப்பட ஷூட்டிங்கா??? :0)))
//
தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு !!!
//
தகரமில்லாம அடிச்சா அமெரிக்கா...தகரம் வச்சே அடிச்சா அது கொம்யூனிஸ்ட்டு :0)))
//அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு //
அதிகமா இருந்தா வங்கி விவரம் தாரேன் அனுப்பிவையுங்க பச்சையை
அது சரி said...
//
தங்கமல்ல தகரம் கூட இல்லாமல்
அமெரிக்கா நீ அச்சடிக்கும் பணம் கோடி அழகு !!!
//
தகரமில்லாம அடிச்சா அமெரிக்கா...தகரம் வச்சே அடிச்சா அது கொம்யூனிஸ்ட்டு :0)))
//
கொமிஸ்டு காரங்க ஒரு மதம் மாதிரி, ஏகாதிபத்தியம்,பாஸிஸம்,முதாலலித்திவம். அப்படின்னு பேசுவாங்க ஒன்னும் புரியாது. உங்களுக்குத்தெரியாதா என் கஷ்டம்............
ஷண்முகப்ரியன் said...
அசலைப்[ படித்த பிறகே உங்கள் நையாண்டி புரிந்தது.
அமெரிக்கக் காட்டையும் கவித்துவமாய்ப் பார்க்க ஒரு தனிப் பார்வை வேண்டும்.அது உங்களிடம் இருக்கிறது.
பாராட்டுக்கள்.
//
மேற்கு மாவட்டத்துக்கு காரர், இப்படி வஞ்சப்புகழ்ச்சியா இருக்கே சார். கவித்துவம் அப்படின்னு பாராட்டி புல்லரிக்க வெக்கிறீங்களே சார்
இது ஈசியா புரியறமாதிரி இருக்கே!! :)) அவங்க கவிதை எழுதினாத்தான் நீங்க போஸ்ட் போடுவீங்களா! அவ்வ்வ்!
aha...sari...sari !!!
:)
சந்தனமுல்லை said...
இது ஈசியா புரியறமாதிரி இருக்கே!! :)) அவங்க கவிதை எழுதினாத்தான் நீங்க போஸ்ட் போடுவீங்களா! அவ்வ்வ்!
September 13, 2009 1:05 PM//
நேரமின்மைதான். வனம் உடனே பணம் ஆனது.
அய்யோ பாவம் நடுவுல மாட்டிக்கிட்டு அவஸ்தை படுற இந்தக் கவிதை :)
அமிர்தவர்ஷினி அம்மா said...
அய்யோ பாவம் நடுவுல மாட்டிக்கிட்டு அவஸ்தை படுற இந்தக் கவிதை :)/
எந்தக்கவிதை?
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
Post a Comment