Thursday, January 14, 2010

காணும் பொங்கலும் என் பங்காளி தனசேகரனும்

பாகம் 1.

வில்லு விமர்சனத்துல தவறவிட்ட முக்கியமான ஒரு விசயம். இந்தப்படத்தில ஏகப்பட்ட திருப்பங்கள் இருப்பது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயந்தான். ஆனா திருப்பவே முடியாத ஒன்னும் இருந்துச்சுங்க அதாங்க குஷ்பூவும் ஒரு குத்தாட்டம் போட்டாங்க திரும்பவே முடியாம....

என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்


மேலே உள்ள எல்லாத்தையும் சாப்பிட்டு, அடுத்த நாள் முறை பார்த்து யார் வீட்டு மாட்டை முதலில் அவிழ்த்து கோவிலுக்கு அழைத்துசெல்வது என்று ஒரு ஊர் கூட்டம்.இந்த முறை பாக்கிர தாத்தா இறந்து போனதுக்கு அப்புரம் தூங்கிரதுக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் போகாத அவரோட பையன் வந்து அவங்கப்பா வெச்சிருந்த முறை பார்க்கும் நோட்ட (டேட்டாபேசு) மடியில வெச்சிட்டு கூட்டத்துக்கு வந்துருவார்.விசயம் எல்லாருக்கும் தெரியும்கிறதுனால அப்புரம் வேற ஒருத்தர் டேட்டாபேச படிச்சி இந்த வருசம் யார் வீட்டு மாடு கியூவில முதலில் இருக்குன்னு பார்க்கனும்.அதுல பிரச்சினை வேற வரும்.

பங்காளி தனசேகரன் இப்போ முழு போதையில் இருப்பார்.இந்த வருசம் என் முறைதான் நாந்தான் மாடு அவுக்கனும் அப்படின்னு அலப்பறைய ஆரம்பிச்சிருவாரு. ஆமாண்டா தம்பி எங்கப்பன் ஊர விட்டு வெளில போனதுக்கு அப்புரம் எல்லாருக்கும் துளிர் விட்டு போச்சு சும்மா விடக்கூடாது அப்படின்னு சொல்லிட்டே வம்பு இழுத்த படி இருப்பாரு.

இந்த வருசம் அவரு வீட்டு முறை இல்லன்னு தெரிஞ்சா அது எப்படின்னு சண்டைக்கு நிப்பாரு.

இல்லப்பா பெரிய மனுசன் சொன்னா கேட்டுக்கனும்.

பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு. பேச வந்துட்டாங்க அது எப்படி என் முறை இன்னும் வரவேயில்லை.எங்கப்பன் வரட்டும்டா உங்களுக்கெல்லாம் வெச்சுக்கிறேன்.இன்னைக்கு எவன் மாடு அவுக்கிறான்னு பாக்கிறேன். எவனாவது அவுத்தான் இன்னைக்கு வெட்டுதான்.

சரி விடுங்கப்பா அவன் எப்பயுமே அப்படிதான் பேசுவான் கண்டுக்காதீங்க.

என்னாங்கடா கண்டுக்காதீங்க. நீங்க எல்லாம் இப்ப புதுப்பணக்காரன் திமிர்ல பேசரீங்களாடா.உங்க லெட்சணம் தெரியாது, இந்த குருசாமி வீட்டு பயலுவ இன்னைக்கு வேணா லட்சாதிபதியா இருக்கலாம், ஆனா அன்னைக்கு நீங்க கூலு குடிச்ச கொட்டாச்சியெல்லாம் என் வீட்டு வேலி ஓரம் இன்னைக்கும் கெடக்குதுடா, பிச்சைக்கார பயலுவலா.எங்கப்பன் வரட்டும் கணக்கு கேட்டு எவன் எவன் என் சொத்தை அனுபவிக்கிறான்னு பாக்கிறேன்.அன்னைக்கு இருக்குடா உங்களுக்கெல்லாம்.

ஒருவழியா அவர எப்படியோ அடக்கி முறை வீட்டில் மாடு அவிழ்த்து கோவிலுக்கு செல்ல புறப்படுவோம்.அதற்கு முன்னர் அன்று காலையிலேயே மாடுகளுக்கு செண்டிப்பூமாலை,பேப்பர் மால்,வண்டி மாடுகளுக்கு பிளாஸ்டிக் மாலை அவரவர்கள் சார்ந்த் அரசியல் கட்சிகளின் கலரில் மாடுகளின் கழுத்தில் ஜொலிக்கும்.மாட்டுக்கொம்புகளும் திமுக,அதிமுக,காங்கிரஸ்,மதிமுக அப்படி மாறிடும்.அண்ணன் அதிமுக தம்பி திமுக என்றால் மாடு ஒவ்வொரு கொம்பும் ஒவ்வொரு கட்சியில் இருக்கும்.

இந்த மாடுகளை அவித்துவிட்டு மல்லுக்கட்டி மாலைகளை அவிழ்ப்பதுதான் வீரவிளையாட்டு,வீரவிளையாட்டுன்னு சொன்னதுக்கப்புரம் அதுல நான் கலந்துக்கமாட்டேன்னு தனியா வேற சொல்லனுமா?ரோட்டில அவித்துவிட்டு குதூகலமான ஜல்லிக்கட்டும், மல்லுக்கட்டும்தான் இந்த நேரத்தில முக்கால்வாசிப்பேரு தண்ணிலதான் இருப்பாங்க,தானும் தண்ணி போட்டு மாட்டுக்கு தண்ணி போட்டு விடற ஒருத்தரும் எங்கூர்ல உண்டு. தனசேகரனும் எல்லா மாட்டையும் மல்லுக்கட்டி,ரகளை பண்ணி விழுப்புண்ணோடு கட்டியிருந்த வேட்டியையும் ஏதாவது ஒரு மாட்டுக்கொம்பில் இழந்து ஜட்டியுடன் சவுண்ட் விட்டபடி எங்காவது விழுந்து விடுவார்.

இந்தக்கூத்தெல்லாம் முடிந்தவுடன் காணும் பொங்கலுக்கு காசு உள்ளவர்கள் தஞ்சாவூருக்கு படத்துக்கு போயிருவாங்க, இல்லாதவனுக்கு பக்கத்து ஊரில் உள்ள கீழே காட்டாறும், மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வெள்ளைக்காரன் கட்டிய மஹாராஜ சமுத்திரம் பாலம் பாக்க போவாங்க.சரி நான் எங்கே போவேன்.எங்கப்பா ரொம்ப கண்டிப்பு,உடனே எதாவது விழா நாள் வந்துட்டா வயலுக்கு தண்ணி கட்ட போ, அந்த சைக்கிள் தொடச்சி ஒரு மாசம் ஆகுதுன்னு வேல கை மேல வெச்சிருப்பாரு.

காணும் பொங்கலுக்கு அடுத்த நாள் நிறைய பேர விழுப்புண்ணோட பாக்கலாம். பங்காளி தனசேகரனும் நல்ல பிள்ளையா மாறி அவரு வேலைய பாக்க போயிடுவாரு.....

நீங்களும் உங்க கருத்த சொல்லிட்டு போங்க மக்களே.

39 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வெள்ளைக்காரன் கட்டிய மஹாராஜ சமுத்திரம் பாலம் பாக்க போவாங்க//


அங்கேயும் சினிமா ஓடுமாங்கண்ணா...

Anonymous said...

நீங்கேல்லாம் ஜல்லிக்கட்டு காளைய அடக்கப்போறதில்லையா

தேவன் மாயம் said...

இந்த மாடுகளை அவித்துவிட்டு மல்லுக்கட்டி மாலைகளை அவிழ்ப்பதுதான் வீரவிளையாட்டு,வீரவிளையாட்டுன்னு சொன்னதுக்கப்புரம் அதுல நான் கலந்துக்கமாட்டேன்னு தனியா வேற சொல்லனுமா//

நல்லாச்சோன்னீங்க
நம்ம வீரத்தை

அது சரி(18185106603874041862) said...

//
என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்
//

இது என்ன ஒரு நாளைக்கா இல்ல ஒரு வாரத்துக்கா? :0))

அது சரி(18185106603874041862) said...

//
பங்காளி தனசேகரன் இப்போ முழு போதையில் இருப்பார்
//

பங்காளி மட்டும் தானா?

அது சரி(18185106603874041862) said...

//
பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு
//

அதான...ஆனா உள்ளங்கையில மசுரு மொளச்சா ரொம்ப கோரமா இருக்குமே :0))

அது சரி(18185106603874041862) said...

//
,வீரவிளையாட்டுன்னு சொன்னதுக்கப்புரம் அதுல நான் கலந்துக்கமாட்டேன்னு தனியா வேற சொல்லனுமா?
//

அதெல்லாம் வேணாம்...ஊருக்கே தெரிஞ்ச விஷயத்த நீங்க வேற ஒவ்வொரு தடவையும் சொல்லணுமா?

அது சரி(18185106603874041862) said...

//
தனசேகரனும் எல்லா மாட்டையும் மல்லுக்கட்டி,ரகளை பண்ணி விழுப்புண்ணோடு கட்டியிருந்த வேட்டியையும் ஏதாவது ஒரு மாட்டுக்கொம்பில் இழந்து ஜட்டியுடன் சவுண்ட் விட்டபடி எங்காவது விழுந்து விடுவார்.
//

நல்ல வேள...ஜட்டியாவது போட்ருந்தாரே...இல்லாட்டி காணும் பொங்கல் வேற ஒரு "மேட்டரை" காணும் பொங்கலாயிருக்கும் :0))

நல்ல பங்காளிங்கப்பா..

பழமைபேசி said...

//SUREஷ் said...
//மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வெள்ளைக்காரன் கட்டிய மஹாராஜ சமுத்திரம் பாலம் பாக்க போவாங்க//


அங்கேயும் சினிமா ஓடுமாங்கண்ணா...
//

இல்ல! பட்சிக பின்னாடி, குடுகுடுப்பை ஓடுவாரு!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

குடுகுடுப்பை சார், அருமை!
உங்கள் கிராமம் எது என்று தெரிந்து கொள்ளலாமா?

நசரேயன் said...

தலைவரை வில்லு ரேம்பல்லா தாக்கி இருக்கு

நசரேயன் said...

//பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு//
நல்ல கேள்வி

நசரேயன் said...

//
ரோட்டில அவித்துவிட்டு குதூகலமான ஜல்லிக்கட்டும், மல்லுக்கட்டும்தான் இந்த நேரத்தில முக்கால்வாசிப்பேரு தண்ணிலதான் இருப்பாங்க//
காவிரி தண்ணியா?

கபீஷ் said...

//எங்கப்பா ரொம்ப கண்டிப்பு//

நிறைய பேர் அப்பா இப்படித்தான், எங்க அப்பாவும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கண்டிப்பு.

நல்லா எழுதியிருக்கீங்க காணும் பொங்கலை, எங்க ஊர்ல இந்த நாளை சிறுவீட்டுப் பொங்கல்னு கொண்டாடுவோம்

குடுகுடுப்பை said...

SUREஷ் said...

//மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வெள்ளைக்காரன் கட்டிய மஹாராஜ சமுத்திரம் பாலம் பாக்க போவாங்க//


அங்கேயும் சினிமா ஓடுமாங்கண்ணா...//

தண்ணிதாங்கண்ணா ஓடும்

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

நீங்கேல்லாம் ஜல்லிக்கட்டு காளைய அடக்கப்போறதில்லையா//

நம்மள நாமே அடக்க முடியுமா:))))

குடுகுடுப்பை said...

thevanmayam said...

இந்த மாடுகளை அவித்துவிட்டு மல்லுக்கட்டி மாலைகளை அவிழ்ப்பதுதான் வீரவிளையாட்டு,வீரவிளையாட்டுன்னு சொன்னதுக்கப்புரம் அதுல நான் கலந்துக்கமாட்டேன்னு தனியா வேற சொல்லனுமா//

நல்லாச்சோன்னீங்க
நம்ம வீரத்தை//

நீங்களும் அப்படித்தானா?

வருகைக்கு நன்றி

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்
//

இது என்ன ஒரு நாளைக்கா இல்ல ஒரு வாரத்துக்கா? :0))//

பிரிட்டன் வரும்போது சாப்பிடறேன்.அப்ப சொல்லுங்க வாரத்துக்கா ? நேரத்துக்கான்னு

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
பங்காளி தனசேகரன் இப்போ முழு போதையில் இருப்பார்
//

பங்காளி மட்டும் தானா?

January 17, 2009 6:38 AM
Delete
Blogger அது சரி said...

//
பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு
//

:))

பங்காளி மட்டும் இல்லை சில மாப்பிள்ளைகளும்தான்.:))))



அதான...ஆனா உள்ளங்கையில மசுரு மொளச்சா ரொம்ப கோரமா இருக்குமே :0))

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//SUREஷ் said...
//மேலே கல்லனை கால்வாயும் ஓடும் வெள்ளைக்காரன் கட்டிய மஹாராஜ சமுத்திரம் பாலம் பாக்க போவாங்க//


அங்கேயும் சினிமா ஓடுமாங்கண்ணா...
//

இல்ல! பட்சிக பின்னாடி, குடுகுடுப்பை ஓடுவாரு!!

தனிப்பதிவா வருது

குடுகுடுப்பை said...

ஜோதிபாரதி said...

குடுகுடுப்பை சார், அருமை!
உங்கள் கிராமம் எது என்று தெரிந்து கொள்ளலாமா?//

மெயில் அனுப்பறேன்

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

//பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு//
நல்ல கேள்வி//

சூப்பருள்ள

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

//எங்கப்பா ரொம்ப கண்டிப்பு//

நிறைய பேர் அப்பா இப்படித்தான், எங்க அப்பாவும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கண்டிப்பு.

நல்லா எழுதியிருக்கீங்க காணும் பொங்கலை, எங்க ஊர்ல இந்த நாளை சிறுவீட்டுப் பொங்கல்னு கொண்டாடுவோம்//

மொத மொத பாராட்டி இருக்கீங்க ரொம்ப நன்றிங்கண்ணா?

வில்லன் said...

//தனசேகரனும் எல்லா மாட்டையும் மல்லுக்கட்டி,ரகளை பண்ணி விழுப்புண்ணோடு கட்டியிருந்த வேட்டியையும் ஏதாவது ஒரு மாட்டுக்கொம்பில் இழந்து ஜட்டியுடன் சவுண்ட் விட்டபடி எங்காவது விழுந்து விடுவார்.//

மாடு கூட மல்லுக்கட்டியா இல்ல மப்புல கீழ விழுந்தா?. ஏன்னா பொங்கல்ன்னா மப்பும் மந்தாரமுமா இல்லாம இருக்க முடியுமா.

வில்லன் said...

//இன்னைக்கு எவன் மாடு அவுக்கிறான்னு பாக்கிறேன். எவனாவது அவுத்தான் இன்னைக்கு வெட்டுதான்.//

எதுக்கு கருநாளுக்கு (பொங்கலுக்கு மறுநாள்) பிரியாணி போடவா.

வில்லன் said...

//
பெரிய மனுசன்னா என்னாங்கடா உள்ளங்கையிலா மசுரா மொளச்சிருக்கு
//

எனாதூ உள்ளாங்கையில மசுரு மொளச்சா பெரிய மனுசன்னா?

அப்ப எங்க தலைவர் நம்ம செகரேடரி (நசரேயன்) எல்லாம் பெரிய மனுஷனா??????????

Unknown said...

என்ன ஒரே மறு ஒளிபரப்பா இருக்கு??

ஆனா நல்லாத்தேன் இருக்கு.

வில்லன் said...

//அதாங்க குஷ்பூவும் ஒரு குத்தாட்டம் போட்டாங்க திரும்பவே முடியாம....//

என்னத்த திருப்பவே முடியாம??????????????????விளக்கம் தேவை

வில்லன் said...

//என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்//

இப்படி தின்னா கொலஸ்ட்ரால் வராம வேற என்ன வரும்........

வில்லன் said...

/இந்த முறை பாக்கிர தாத்தா இறந்து போனதுக்கு அப்புரம் தூங்கிரதுக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் போகாத அவரோட பையன் வந்து அவங்கப்பா வெச்சிருந்த முறை பார்க்கும் நோட்ட//

எதெதுக்கு டேட்டாபேசுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சு..... இதெல்லாம் ரொம்ப நக்கல்.....ஆமா பள்ளிக்கூடம் பக்கம் போகாத பரதேசி அந்த இத்துப்போன நோட்ட வச்சு என்ன பண்ணும்.......

வில்லன் said...

//பங்காளி தனசேகரன் இப்போ முழு போதையில் இருப்பார்.//

எப்பவுமேவா..... முழு போதையில் இருந்த கலகூது பத பீலிங் வருமே..அம்புட்டு ஜாலியா இருக்குமே தல.... அப்ப மாட்டு பொங்கல்னா ஒரே அலும்புன்னு சொலுங்க.....

வில்லன் said...

//இன்னைக்கு எவன் மாடு அவுக்கிறான்னு பாக்கிறேன். எவனாவது அவுத்தான் இன்னைக்கு வெட்டுதான்.
சரி விடுங்கப்பா அவன் எப்பயுமே அப்படிதான் பேசுவான் கண்டுக்காதீங்க.//

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.........

வில்லன் said...

//


குடுகுடுப்பை said...

ஜோதிபாரதி said...

குடுகுடுப்பை சார், அருமை!
உங்கள் கிராமம் எது என்று தெரிந்து கொள்ளலாமா?//

மெயில் அனுப்பறேன்//
ஏன் பின்னுட்டத்துல சொல்ல மாட்டியளோ?????.....சொன்னா என்ன உங்கவூரு பவுசு கொறஞ்சி போகுமாக்கும்....

வில்லன் said...

// முகிலன் said...


என்ன ஒரே மறு ஒளிபரப்பா இருக்கு??

ஆனா நல்லாத்தேன் இருக்கு.//
சரக்கு (குடிகார சரக்கு இல்ல கனவான்களே) தீந்து போச்சி.....அது தான் ரீமேக், கவுஜ அப்படி இப்படின்னு பண்ணி "கடைய" ஓட்டுறாரு அண்ணாச்சி குடுகுடுப்பையும் தல நசறேயனும்...

வில்லன் said...

ஆமா காணும் பொங்கலுக்கும் வில்லு விமர்சனத்துக்கும் (குஷ்பூவும் குத்தாட்டம்) என்ன சம்பந்தம்........ அம்மாசிக்கும் அப்துல் காதரும் போல இருக்கு..... புத்தி கித்தி கெட்டு போச்சா.....

வில்லன் said...

/தானும் தண்ணி போட்டு மாட்டுக்கு தண்ணி போட்டு விடற ஒருத்தரும் எங்கூர்ல உண்டு//

அது வேறு யாரும் அல்ல..... சாட்சாத் அண்ணன் குடுகுடுப்பை அவர்களே..... "சொல்லிதெரிய வேண்டிய அவசியம் இல்லை"....

நட்புடன் ஜமால் said...

”காணும்” பொங்கலில் ”கண்ட”தை எழுதலையே - அடுத்த பதிவா ...

வில்லன் said...

// கு.ஜ.மு.க//

இதனால அண்ணாச்சி குடுகுடுப்பை சார்பா அறிவிக்கிறது என்னன்னா "இன்று முதல் "கு.ஜ.மு.க" என்பது கு.வீ.மு.க (குடுகுடுப்பை வீட்டம்மா மேன்னேற்ற கழகம்) என பெயர் மற்றம் செய்யப்பட்டு விட்டது.... அண்ணன் குடுகுடுப்பை அதி விரைவில் தனது இணையதளத்தில் (பதிவுலகத்தில்) சரி செய்து விடுவார்....... எனவே இனிமேல் யாரும் கு.ஜ.மு.க என சொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..... மீறுவோர் தலை, கை, கால் எடுக்கப்படும் இல்லயேல் முறிக்கப்படும்.

கலகலப்ரியா said...

ஐயோ சூப்பர் பாஷை... எல்லா ஊர்லயும் இப்டித்தானா... =))