Friday, January 8, 2010

பின்பக்கம் கிழிந்த என் காருக்கு பட்டர்பிளை எபெக்ட் காரணமா?.

வட அமெரிக்காவில் தற்போது நிகழும் கடும்குளிர் மற்றும் பனிப்பொழிவினால், எப்போதும் பனிப்பொழுவு /குளிரினால் பாதிக்கப்படாத மாடு சார்ந்த டெக்ஸாஸ் மாகானமும் பாதிக்கப்பட்டது, வழக்கமா பனிப்பொழிவு அதிகம் உள்ள மாகானங்களில் சாலையில் பனியை சுத்தம் செய்யும் வாகனம் இருக்கும், டெக்ஸாஸில் அதெல்லாம் கிடையாது. நேற்று கொஞ்சம் ஐஸ் ஸ்லீட் இருந்தது, ஆனாலும் கடமையே கண்ணாக வாழும் நான் ,கடுங்குளிர் மற்றும் சாலைகளில் உள்ள ஐஸ் ஸ்லீட்களை துச்சமாக மதித்து அலுவலகம் செல்ல காரை எடுத்து பனி படர்ந்த சாலைகளில் செலுத்தினேன்.(ராஜேஸ்குமார் நாவலில் வரும் கார் மாதிரி)

ஸ்டாப் சைனில் காரை நிறுத்தும்போது பிரேக் வழுக்கி எப்படியோ நிறுத்தியும் விட்டேன். ஆனாலும் விதி வலியது, என் பின்னால் வந்தவர் காரை நிறுத்தமுடியாமல் பனியில் சறுக்கி என் காரின் பின்பக்க பம்பரை காலிசெய்துவிட்டார். என்னுடன் என் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணியும் வந்தார், இவர் சாலை சூழ்நிலை சரியில்லாத நாட்களில் தனியாக கார் ஓட்டமாட்டார்.

இருவரும் இறங்கி எங்கள் காரை இடித்தவரை நோக்கி நடந்தோம், போலிஸை அழைக்கச்சொன்னார் என் மனைவி, ஏற்கனவே ஒருமுறை இவர் கார் ஓட்டிச்செல்லும்போது இன்னொருவர் எங்கள் காரில் இடித்துவிட்டார், போலிஸில் சொல்லாமல் போன் நம்பரை மட்டும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார், ஆனால் அந்த மனிதர் இன்சூரன்சுக்கு போன் செய்து தவறு என் மனைவி மேல் என்று அழகாக மாற்றிச்சொல்ல கடைசியில் நாங்கள் டிடக்கிடிபிள், மூன்று வருடம் அதிக இன்சூரன்ஸ் பிரிமியமெல்லாம் கட்டினோம், அந்த அனுபவத்தால் போலிஸ் ரெக்காட் யார் மேல் தவறு என்பதை பதிவு செய்துவிடும் என்பதாலும் அப்படிச்செய்யச் சொன்னார்.

மோதியவரிடம் பேசினோம் அவர் தவறு என்னுடையதுதான் என்றார், போலிஸை அழைக்கவேண்டுமா, இல்லை இன்சூரன்ஸ் நம்பர் மட்டும் வாங்கிக்கொள்ளட்டுமா என்றேன். உங்கள் விருப்பம் என்றவர், தன்னுடைய கணவருக்கு போன் செய்துவிட்டு போலிஸை அழைப்பது கட்டாயமாம் என்றார், இருவரும் அழைத்தோம் , யாருக்கும் அடிபடாமலும் , கார் ஓட்டக்கூடிய நிலையிலும் இருந்தால் இன்சூரன்ஸ் தகவல்களை பறிமாறிக்கொண்டு கிளம்பச்சொன்னார்.

இன்சூரன்ஸ் தகவல் பரிமாறும் போது அவருடைய கடைசிப்பெயரை வைத்தே அவர் தமிழர் என்று தெரிந்துகொண்டேன், பின்னர் தமிழிலேயே பேசிவிட்டு என் காருக்கு வந்தேன், ஒரு வெளிநாட்டுக்காரரோடு மோதியிருந்தால் இது ஒரு உலகத்தரமான் மோதல் என்று சிலாகித்திருப்பேன்.கார் ஓடும் நிலையில் இருந்தாலும் பம்பர் உடைந்து அடுத்த லேனையும் ஆக்கிரமித்தபடி இருந்ததால், மீண்டும் வீட்டுக்கு வந்து மற்றொரு காரை எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் தாமதமாக அலுவலகம் வந்தேன்.

பார்க்கிங்க் லாட்டில் சில கார்களே இருந்தன ,அலுவலத்தின் உள்ளே சென்றேன் ஒருவர் மட்டும் இருந்தார், இன்றைக்கு அலுவலகம் பனிப்பொழிவிற்காக மூடப்பட்டுள்ளது என்றார், வழக்கமாக இந்த மாதிரி நேரங்களில் அலுவலக பிரத்யோக நம்பருக்கு போன் செய்தால் தகவல் இருக்கும். சமீப காலமாக ஏற்பட்ட இலக்கியவாதி , பின்நவீனத்துவவாதி சிக்கலில் இதைச்செய்ய மறந்துபோனேன்.ஒருவேளை நசரேயன் இதைத்தான் எதிர்பார்த்திருப்பாரோ?

காரில் இடித்தவர் எனக்கு போன் செய்து அவருடைய இன்சூரன்ஸ் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் என்று கூறினார், இன்சூரன்ஸ் காரர்களும் அவ்வாறே கூறினர். இன்றைக்கு காலையில் காரை எடுத்துச்சென்றேன், பம்பரின் இடது பக்கம் கிழிந்து தொங்கியதால் பம்பர் முழுவதும் மாற்றவேண்டும் என்றார், ஆனால் பம்பரின் வலது பக்கத்தில் என் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு ஒரு சின்ன கீறல் அது இந்த இடித்தலால் வந்ததல்ல அதனால் அதற்கு நீங்கள்தான் பணம் கொடுக்கவேண்டும் என்றார். ஒரே பாகம்தானே எப்படி இருந்தாலும் மாற்றித்தானே ஆகவேண்டும். நான் காசு கொடுக்கமுடியாது வேண்டுமென்றால் மாற்றாமல் சரி செய்து கொடுங்கள் என்றேன். இல்லை நாங்கள் புரோரேட் பண்ணிதான் பே பண்ணுவோம் என்று இறுதியாக சொல்லிவிட்டார், என் பங்கு சிறிய தொகைதான் அவரின் வாதிடலும் ஒரு வகையில் சரிதான், ஆனால் இடிபடாமல் இருந்தால் இந்த சிறிய கீறலை நான் சரி செய்யப்போவதில்லை என்றேன், ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. எனக்கும் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி இருந்ததாலும் தொகை சிறிதாக இருந்ததாலும் சரி தொலைகிறது என்று வந்துவிட்டேன். திங்கள் கிழமைதான் சரி செய்யக்கொடுக்கவேண்டும்.

இந்த ஆக்ஸிடெண்டுக்கு ஐஸ் ஸ்லீட் அதிகமாக இருந்தது மட்டுமே காரணம், ஆனாலும் இலக்கியவாதியாகிவிட்ட பிறகு யாரையாவது குறை சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது, பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் இதற்கு காரணம் பதிவர் முகிலன் என்று. உங்களுக்குத் தெரிந்து இருக்கும் பதிவர் முகிலனின் கார் சமீபத்தில் ஆக்ஸிடெண்ட் ஆன செய்தி, நேற்றைக்கு முந்திய இரவு என்னிடம் அது பற்றி போனில் பேசினார், அடுத்தநாள் என் கார் ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கிறது, ஆகவே ஒரு பட்டர்பிளை எபெக்டினால்தான் இது நடந்ததாக உறுதியாக இல்லாவிட்டாலும் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்.

முகிலன் சுயேச்சையாக நிற்கிறார் அவரை வம்புக்கு இழுத்து குற்றம் சாட்டவேண்டும் என ஆவலாக இருந்த வானம்பாடிகளின் ஆசை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்தப் பதிவை படிப்பவர்கள், யாருடைய வாகனமோ விபத்துக்குள்ளாவதை கேள்விப்பட்டால் அதற்கும் பட்டர்பிளை எபெக்ட்தான் காரணம் என்று நீங்கள் கதைக்கலாம்.இலக்கியவாதிகள் இலக்கியத்தை மட்டும்தான் விமர்சிக்கவேண்டுமா என்ன ? இந்த மாதிரி கொஞ்சம் கூட புத்தியில்லாத / நேர்மையில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது நம் இலக்கியவாதி உலகத்தில் சாதாரணம்தானே.

29 comments:

நசரேயன் said...

நேரிலே வாங்க நல்லா கிழிக்கலாம் .. காரைத்தான்

நசரேயன் said...

//சமீப காலமாக ஏற்பட்ட இலக்கியவாதி , பின்நவீனத்துவவாதி சிக்கலில் இதைச்செய்ய மறந்துபோனேன்.ஒருவேளை நசரேயன் இதைத்தான் எதிர்பார்த்திருப்பாரோ?//

ஆமா.. ஆமா

பிரபாகர் said...

ஓ... அப்படியா?

இனிமே பேசும்போது நல்ல விசயத்தை மட்டும் பேசினா, பட்டர்பிளை எஃபக்ட்ல இருந்து தப்பிச்சிக்கிலாம்ல!

பிரபாகர்.

நசரேயன் said...

//கடமையே கண்ணாக வாழும் //

நம்பிட்டேன்

நசரேயன் said...

//முகிலன் சுயேச்சையாக நிற்கிறார்//

எங்கே விருதுநகர்லையா ?

குடுகுடுப்பை said...

பிரபாகர் said...
ஓ... அப்படியா?

இனிமே பேசும்போது நல்ல விசயத்தை மட்டும் பேசினா, பட்டர்பிளை எஃபக்ட்ல இருந்து தப்பிச்சிக்கிலாம்ல!

பிரபாகர்//

நல்ல விசயத்தை மட்டும்தான் படிக்கனும் ஓய்.

Unknown said...

//பார்க்கிங்க் லாட்டில் சில கார்களே இருந்தன ,அலுவலத்தின் உள்ளே சென்றேன் ஒருவர் மட்டும் இருந்தார், இன்றைக்கு அலுவலகம் பனிப்பொழிவிற்காக மூடப்பட்டுள்ளது என்றார், வழக்கமாக இந்த மாதிரி நேரங்களில் அலுவலக பிரத்யோக நம்பருக்கு போன் செய்தால் தகவல் இருக்கும். சமீப காலமாக ஏற்பட்ட இலக்கியவாதி , பின்நவீனத்துவவாதி சிக்கலில் இதைச்செய்ய மறந்துபோனேன்.ஒருவேளை நசரேயன் இதைத்தான் எதிர்பார்த்திருப்பாரோ?//

உங்க அலுவலகம் லீவுன்னா கூட உங்க தங்கமணியை விட போய்த்தானய்யா ஆகனும். இதையெல்லாம் தவிர்க்க முடியாது.. :)

குடுகுடுப்பை said...

நசரேயன் said...
நேரிலே வாங்க நல்லா கிழிக்கலாம் .. காரைத்தான்
//

யோவ் வேற மாதிரி அர்த்தம் வருது. நியூயார்க் பக்கமே நான் வரலை சாமி.

குடுகுடுப்பை said...

முகிலன் said...
//பார்க்கிங்க் லாட்டில் சில கார்களே இருந்தன ,அலுவலத்தின் உள்ளே சென்றேன் ஒருவர் மட்டும் இருந்தார், இன்றைக்கு அலுவலகம் பனிப்பொழிவிற்காக மூடப்பட்டுள்ளது என்றார், வழக்கமாக இந்த மாதிரி நேரங்களில் அலுவலக பிரத்யோக நம்பருக்கு போன் செய்தால் தகவல் இருக்கும். சமீப காலமாக ஏற்பட்ட இலக்கியவாதி , பின்நவீனத்துவவாதி சிக்கலில் இதைச்செய்ய மறந்துபோனேன்.ஒருவேளை நசரேயன் இதைத்தான் எதிர்பார்த்திருப்பாரோ?//

உங்க அலுவலகம் லீவுன்னா கூட உங்க தங்கமணியை விட போய்த்தானய்யா ஆகனும். இதையெல்லாம் தவிர்க்க முடியாது.. :)
//

இப்படியா பொதுவில போட்டு உடைக்கிறது.

Unknown said...

//இந்த ஆக்ஸிடெண்டுக்கு ஐஸ் ஸ்லீட் அதிகமாக இருந்தது மட்டுமே காரணம், ஆனாலும் இலக்கியவாதியாகிவிட்ட பிறகு யாரையாவது குறை சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது, பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் இதற்கு காரணம் பதிவர் முகிலன் என்று. உங்களுக்குத் தெரிந்து இருக்கும் பதிவர் முகிலனின் கார் சமீபத்தில் ஆக்ஸிடெண்ட் ஆன செய்தி, நேற்றைக்கு முந்திய இரவு என்னிடம் அது பற்றி போனில் பேசினார், அடுத்தநாள் என் கார் ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கிறது, ஆகவே ஒரு பட்டர்பிளை எபெக்டினால்தான் இது நடந்ததாக உறுதியாக இல்லாவிட்டாலும் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்.
//

நடந்திருக்கலாம். 500 வருடத்துக்கு முன்னால கடலுக்குள்ள விழுந்த பெருமாள் சிலையால சுனாமியே வரும்போது இதெல்லாம் சாதாரணம்.

Unknown said...

//முகிலன் சுயேச்சையாக நிற்கிறார் அவரை வம்புக்கு இழுத்து குற்றம் சாட்டவேண்டும் என ஆவலாக இருந்த வானம்பாடிகளின் ஆசை நிறைவேற்றப்பட்டுவிட்டது.
//

வானம்பாடி கோர்ட்டுக்குப் போய் சாட்சி சொன்னது கூட இதோட எஃபக்ட் தானோ?

//இந்தப் பதிவை படிப்பவர்கள், யாருடைய வாகனமோ விபத்துக்குள்ளாவதை கேள்விப்பட்டால் அதற்கும் பட்டர்பிளை எபெக்ட்தான் காரணம் என்று நீங்கள் கதைக்கலாம்.
//

நானும் நீங்களும் கார் ரிப்பேர் பாத்து வந்ததும் அதப்பத்தி ஒரு பதிவு போட்ருவோம். அதப் படிச்சா விபத்துக்குள்ளான காரெல்லாம் தானா சரியாயிடும் பட்டர்ஃப்ளை எஃபக்ட்ல.


//இலக்கியவாதிகள் இலக்கியத்தை மட்டும்தான் விமர்சிக்கவேண்டுமா என்ன ? இந்த மாதிரி கொஞ்சம் கூட புத்தியில்லாத / நேர்மையில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது நம் இலக்கியவாதி உலகத்தில் சாதாரணம்தானே.
//

ஆமா, ஆமா, இலக்கியவியாதி ச்சீ கலக்கியவாதி ச்சீ இருக்கியா வியாதி ச்சீ என்ன இன்னிக்கி வாய் கொழறுது இலக்கியவாதின்னு ஆனப்புறம் இதெல்லாம் சகசந்தான.

Thekkikattan|தெகா said...

தென்னக மாநிலக்காரய்ங்களுக்கு மழை பேஞ்சாவே சரியா ஓட்ட வராது, இதில ஐஸ் ஸ்லீட் வேறையா ;-), பார்த்துவோய், மெதுவா ஒரு ஓரமா பொயித்து வாங்க :))...


ஆமா, என்னாதிது இன்னொரு ஐஸ் ஏஜ் -ஆ?

Anonymous said...

//முகிலன் சுயேச்சையாக நிற்கிறார் அவரை வம்புக்கு இழுத்து குற்றம் சாட்டவேண்டும் என ஆவலாக இருந்த வானம்பாடிகளின் ஆசை நிறைவேற்றப்பட்டுவிட்டது.//

இப்பத்தான் வேடிக்கை பாக்கற எங்களுக்கு நிம்மதியா இருக்கு.

கல்வெட்டு said...

// என்னுடன் என் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணியும் வந்தார்//

//இருவரும் இறங்கி எங்கள் காரை இடித்தவரை நோக்கி நடந்தோம்,//

// போலிஸை அழைக்கச்சொன்னார் என் மனைவி, //


நீங்கள் ‍= 1
உங்களுடன் , உங்கள் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணி = 2
போலிஸை அழைக்கச் சொன்ன உங்கள் மனைவி = 3

மூன்று பேரா காரில் போனீர்கள் ?

****

கேள்வி மொக்கையாக இருக்கு என்று நினைத்தால்....
இந்த மாதிரி கொஞ்சம் கூட புத்தியில்லாத, நேர்மையில்லாத, ,அற்பமான , கொஞ்சம்கூட வாசிப்பனுவம் இல்லாத, பிரதியை பிரதிகூட எடுக்கத் தெரியாத , உலகப்படம் பார்க்காத , இன்னும் ..இன்னபிற இல்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது நம் இலக்கியவியாதிகள் உலகத்தில் சாதாரணம்தானே. :-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

ரவி said...

:)))))))))))))

Unknown said...

//நீங்கள் ‍= 1
உங்களுடன் , உங்கள் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணி = 2
போலிஸை அழைக்கச் சொன்ன உங்கள் மனைவி = 3

மூன்று பேரா காரில் போனீர்கள் ?
//

நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு

சிங்கை நாதன்/SingaiNathan said...

// என்னுடன் என் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணியும் வந்தார்//

//இருவரும் இறங்கி எங்கள் காரை இடித்தவரை நோக்கி நடந்தோம்,//

// போலிஸை அழைக்கச்சொன்னார் என் மனைவி, //


நீங்கள் ‍= 1
உங்களுடன் , உங்கள் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணி = 2
போலிஸை அழைக்கச் சொன்ன உங்கள் மனைவி = 3

மூன்று பேரா காரில் போனீர்கள் ?

Kalvettu here also Same Blood

:)

Ithula idithathum தமில் பேசும் பெண்மணி so total 4

Anputan
Singai Nathan

நட்புடன் ஜமால் said...

நீங்க இலக்கியவாதின்னு ஒற்றுகொண்டீர்களா ...

அதென்னங்க பட்டஃபிளை எஃப்க்ட்டு

அளவிலா சந்தேகத்துடன் ...

சந்தனமுல்லை said...

ஹிஹி..இதுக்கு கண்டிப்பா நசரேயன் தான் காரணம்னு உறுதியா சொல்றேன்...இலக்கியவாதின்னு இடுகையின் நிறைய இடங்களில் நிரூபிக்கறீங்க!!! :-)

vasu balaji said...

/முகிலன் சுயேச்சையாக நிற்கிறார் அவரை வம்புக்கு இழுத்து குற்றம் சாட்டவேண்டும் என ஆவலாக இருந்த வானம்பாடிகளின் ஆசை நிறைவேற்றப்பட்டுவிட்டது./

தலைவர் அவர்கள் திடீரென முகிலன் சார்பாக பேசுவதன் ரகசியம் என்ன? அரசியல் இலக்கிய விதிப்படி ஓட்டு பிரிக்க டம்மி பீஸாக பயன்படுத்தப் பட்டாரா. அல்லது கட்சியில் பதவி கொடுப்பதாக உறுதி அளிக்கப் பட்டதா? :))

vasu balaji said...

நசரேயன். பதவிக்காவது ஒழுங்கா துண்டு போடுவீங்களா?

vasu balaji said...

ஒரு வேளை முகிலனும் இந்த பின்னவீநத்துவ பிரச்சினையால் பாதிக்கப் பட்டிருப்பார் எனத்தோன்றுகிறது. இல்லையெனில் அவர் துப்பறியும் மூளை இடித்தவர் முன் நவீனத்துவ வ்யாதியா என்ற விசாரணையிலல்லவா இறங்கியிருக்கும்.?

கலகலப்ரியா said...

=)))

கலகலப்ரியா said...

last la antha punch superb..

குடுகுடுப்பை said...

கல்வெட்டு said...
// என்னுடன் என் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணியும் வந்தார்//

//இருவரும் இறங்கி எங்கள் காரை இடித்தவரை நோக்கி நடந்தோம்,//

// போலிஸை அழைக்கச்சொன்னார் என் மனைவி, //


நீங்கள் ‍= 1
உங்களுடன் , உங்கள் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணி = 2
போலிஸை அழைக்கச் சொன்ன உங்கள் மனைவி = 3

மூன்று பேரா காரில் போனீர்கள் ?

****

கேள்வி மொக்கையாக இருக்கு என்று நினைத்தால்....
இந்த மாதிரி கொஞ்சம் கூட புத்தியில்லாத, நேர்மையில்லாத, ,அற்பமான , கொஞ்சம்கூட வாசிப்பனுவம் இல்லாத, பிரதியை பிரதிகூட எடுக்கத் தெரியாத , உலகப்படம் பார்க்காத , இன்னும் ..இன்னபிற இல்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது நம் இலக்கியவியாதிகள் உலகத்தில் சாதாரணம்தானே. :-))))//

தமில் பேசும் பெண்மணி என்றே எழுத நினைத்தேன், சோம்பேறித்தனத்தில் மனைவி என்று எழுதிவிட்டேன். தமில் பேசும் அதைச்சுட்டிக்காட்டினார். எப்படியோ குழப்பி எழுதி நானும் இலக்கியவாதி ஆயிட்டேன்.

வில்லன் said...

//என்னுடன் என் திருமண நாள் முதல் வசிக்கும் தமில் பேசும் பெண்மணியும் வந்தார்//

ஏன் கு ஜ மு க ஜக்கமான்னு சொல்ல மாட்டிகளோ......

வில்லன் said...

// இந்தப் பதிவை படிப்பவர்கள், யாருடைய வாகனமோ விபத்துக்குள்ளாவதை கேள்விப்பட்டால் அதற்கும் பட்டர்பிளை எபெக்ட்தான் காரணம் என்று நீங்கள் கதைக்கலாம்.//

அட சத்தியமாங்க அதே நாள் அதே நேரம் அதே நிமிடம் என்னோட காரும் புட்டுகிச்சு.........ஒரு மொள்ளமாரியும் கெடைக்கல உமக்கு கெடசாப்ள.... "செத்தவன் சுனா செமந்தவன் தல மேல" எல்லா செலவும் என்தலையில்..... இதற்கும் "பட்டர்பிளை எபெக்ட்தான்" காரணம் உங்க இன்சூரன்ஸ் தகவல் கொடுக்கவும்..... ஆட்டைய போட வசமா இருக்கும்.....

வில்லன் said...

//குடுகுடுப்பை said...


நசரேயன் said...
நேரிலே வாங்க நல்லா கிழிக்கலாம் .. காரைத்தான்
//

யோவ் வேற மாதிரி அர்த்தம் வருது. நியூயார்க் பக்கமே நான் வரலை சாமி.///
தப்பி தவறி போய்டாதியும்....உம்ம பின்புறத்த கிழிச்சிருவாறு நசரேயன்.....