Friday, January 8, 2010

அடைக்கப்படாத கடை

கிளர்ந்தெழும் பசி
அடங்காப் பசி
பசியில் துடிக்கும் சோகம்
அடையப்படா உணவு
பசியில் கண்டபடி உண்டபின்
எப்போதும் பெருங்கொண்ட ஏப்பம்
எல்லோர்க்கும் பொதுவென்றே கொள்
ஆட்டுக்கும் கோழிக்கும்
அடையாளம் பிரிக்கும்
உறுப்புகளை மறந்து போ
உள்ளிருக்கும் சதை
வறுத்து சிவக்கட்டுமே;
அந்த வெளிச்சத்தில் பார்
தின்றால் ருசிக்கத்தான் செய்யும்
ஆனாலும் !?
பட்டியல் படித்து விலை அறிந்ததால்
நீ ஆடு
நீ கோழி
நீ மீன்
ஏதும் அறியா எண்ணற்ற உயிர்களுக்கு !
விலைப்பட்டியல் அதிகாரச் சின்னங்கள் ஆனதும்
அதற்கொரு கடை!
அதற்கொரு கத்தி !
அதற்கொரு எடை.
ம்...மகாப் பெரிய அலுப்பு வந்து தொலைக்கட்டும்
கடைகாரனுக்கு ;
மாயா லோகத்தின்
மயக்கும் வசீகரங்களில்
சில்லறை காசாகி சிதறிச் சிரிக்கும்
ஒரு வெஜிடேரியன் பெண்ணை அவன் லுக்கும்போது
அவனிடம் நான்
கேட்டுக் கொள்வது
ஆடும், கோழியும், மீனும்
இலவசமாய் ...
எனக்கே கிடைக்கட்டும்!


இங்கே அசல்

16 comments:

Vidhoosh said...

க்கும்... இது ஒண்ணுதான் குறைச்சலாய்.. LOL :))

-வித்யா

சந்தனமுல்லை said...

/பட்டியல் படித்து விலை அறிந்ததால்நீ ஆடுநீ கோழிநீ மீன்ஏதும் அறியா எண்ணற்ற உயிர்களுக்கு !/

:-))

/மாயா லோகத்தின்மயக்கும் வசீகரங்களில்சில்லறை காசாகி சிதறிச் சிரிக்கும்ஒரு வெஜிடேரியன் பெண்ணை அவன் லுக்கும்போதுஅவனிடம் நான்கேட்டுக் கொள்வதுஆடும், கோழியும், மீனும்இலவசமாய்/

ஸ்ஸ்....ப்பா! இப்பொவே கண்ணை கட்டுதே..

Vidhoosh said...

பேசாம subscription-னை membership-பை விலக்கிக் கொண்டால், அந்த ஆயுட்கால சந்தாவான லட்ச ரூபாயை திருப்பி கொடுத்துருவீங்கள்ள..

நசரேயா; நீங்கள்தான் பொறுப்பு.

Anonymous said...

யப்பா, கடவுளே,இவங்க கம்ப்யூட்டருக்கு ஏதாவது வைரஸ் அனுப்பு!!!

க.பாலாசி said...

எண்டரல்லாம் சரியான இடத்துல அடிச்சிருக்கீங்க..

நேரோ எதிரோ... கவித நல்லாருக்கு தலைவரே.

vasu balaji said...

இதுக்குத்தான் சொல்றது. என்னதான் ஜக்கம்மா சொல்றத அப்புடியே சொல்றதுன்னாலும் கற்பூரம் காட்டி மலையேத்த ஒரு தொண்டன் வேணும்னு. இப்பவாவது சேர்த்துப்பீங்களா?:))

Mahesh said...

நீர் ஒரு இலக்கியவாதி அய்யா... இனிமே இந்தப்பக்கம் வரும்போது ஹெல்மெட் போட்டுக்கணும்...

Unknown said...

ஐயோ முடியல..
ஒரு புறாவை தின்றுவிட்டு நான் படும் பாடு இருக்கிறதே..

ஹேமா said...

வெள்ளிகிழமையும் அதுவுமா எல்லா இடதிலயும் மணக்குது.

http://imsaiilavarasan.blogspot.com/2010/01/blog-post_08.html

எம்.எம்.அப்துல்லா said...

ஆத்தி..புள்ள கவிதையெல்லாம் எழுதுது :)

நசரேயன் said...

//Blogger Vidhoosh said...

பேசாம subscription-னை membership-பை விலக்கிக் கொண்டால், அந்த ஆயுட்கால சந்தாவான லட்ச ரூபாயை திருப்பி கொடுத்துருவீங்கள்ள..

நசரேயா; நீங்கள்தான் பொறுப்பு.//

ஆமா என் வங்கி கணக்கு என் கொடுக்கிறேன், அதிலே போடுங்க

நசரேயன் said...

// சின்ன அம்மிணி said...

யப்பா, கடவுளே,இவங்க கம்ப்யூட்டருக்கு ஏதாவது வைரஸ் அனுப்பு!!!//

இதுயும் ஒரு வைரஸ் கவுஜை தான்

Unknown said...

என்னா கொல வெறி...

இதுக்கப்புறமுமா மிஸஸ் டவுட் கவுஜ எழுதுவாங்க?

குடுகுடுப்பை said...

Vidhoosh said...
பேசாம subscription-னை membership-பை விலக்கிக் கொண்டால், அந்த ஆயுட்கால சந்தாவான லட்ச ரூபாயை திருப்பி கொடுத்துருவீங்கள்ள..

நசரேயா; நீங்கள்தான் பொறுப்பு//

பணம் என் கை வந்து சேரவில்லை

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
இதுக்குத்தான் சொல்றது. என்னதான் ஜக்கம்மா சொல்றத அப்புடியே சொல்றதுன்னாலும் கற்பூரம் காட்டி மலையேத்த ஒரு தொண்டன் வேணும்னு. இப்பவாவது சேர்த்துப்பீங்களா?:))
//

உங்களுக்காக ஒரு யோசனை இருக்கிறது.

கலகலப்ரியா said...

ssssappaaa... mudiyala...