Sunday, August 9, 2009

பாஸ் பண்ணது போதும் நிறுத்துடி

”ஏய் சாந்தி அருவாமனையை எடுத்து சுரைக்காய் வெட்டி வை, மத்தியானத்துக்கு கூட்டு பண்ணனும்.”

சரிம்மா நான் போய் யூரின் பாஸ் பண்ணிட்டு வந்து வெட்டி வைக்கிறேன்.

ஆமா 9 வதையே 3 வருசமா பாஸ் பண்றண்ணுதான் சொல்லிட்டிருந்த,அதெல்லாம் ஒன்னும் பாஸ் பண்ணவேண்டாம் நீ போய் வேலையப்பாரு ஆத்தா.

இந்த உரையாடல் சிரிப்பை வரவழைக்கும். ஆனால் எந்த மாதிரி சூழ்நிலையில் இம்மாதிரி உரையாடல் பிறக்கிறது,நான் எடுத்துக்கொள்ளப்போவது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.

மேலே சொல்லப்பட்ட சாந்தி, ஒரு கிராமப்பள்ளிக்கூடத்தில் மூன்று முறை பத்தாம் வகுப்பை எட்டிவிடும் முயற்சியில் தவறுகிறாள்,தவறாமல் பத்தாம் வகுப்பு சென்றவர்கள் எல்லாம் நம் தேர்வுத்திட்டத்தின் படி அறிவாளிகள், அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடுமையாக பயிற்றுவிக்கப்பட்டு, பத்து கேள்வி வங்கி புத்தகத்தை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டால் 100 % தேர்ச்சி பெற வைக்கமுடியும். எங்கள் பள்ளி 100% தேர்ச்சி என்று பெருமை அடித்துக்கொள்ளமுடியும். இந்த 100% தேர்ச்சி என்ற ஒரு மந்திரத்திற்காக 9 ம் வகுப்பில் 50 % மாணவர்கள் வடிகட்டப்படுவார்கள்.அவர்களில் ஒருத்திதான் சாந்தி.

இதே சாந்தி பத்தாவது படித்திருந்தால் ஒரு முறையோ இரண்டு முறையே தேர்வில் தவறி. கேள்வி வங்கிகளுக்கு பழக்கப்பட்டு எப்படியாவது வெற்றி பெற்று பின்னர் நல்ல வேலைக்கும் கூட சென்றிருக்க முடியும், ஆனால் 100% சதவீத தேர்ச்சி மந்திரம் அவளை முடக்கிவிட்டது.

முதலில் இதற்கெல்லாம் காரணம் இந்த தேர்வு முறைதான். பத்தாவது தேர்வு எந்த விதத்திலும் ஒரு மாணவனின் கற்றதை தேர்வு செய்யும் விதத்தில் இருப்பதாக இல்லை. இக்கல்வித்திட்டம் தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டது போல் ஆகிவிட்டது.
பத்தாம் வகுப்பு கணக்குப்பாடத்தில் உள்ள அணிகள்(Matrix) மிகவும் எளிது. ஆனால் அதன் பயன் படிப்பவனுக்கும் தெரியாது சொல்லிக்கொடுப்பவருக்கும் தெரியாது. (எனக்கும் தெரியாது). பயிற்றுவித்து 100 மார்க் எடுக்க வைத்துவிடலாம்.

மற்றொரு சிறு உதாரணம் நான் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஆயிரம் முறை எழுதச்சொல்லி கொடுக்கப்பட்ட இம்போசிசன் இது

”ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”

இதே மாதிரி பல, ஆங்கில வழியில் கற்றவனுக்கும் இன்றைக்கு வரைக்கும் ஞாபகம் இருக்கும். ஆனால் வேதிவினை என்றால் என்னவென்று கற்றிருக்கமாட்டோம்.

இந்த பத்தாம் வகுப்பு தேர்வு, கற்றல் இல்லா கல்வித்திட்டம், பள்ளிகளின் நூறு சதவீத தேர்ச்சி வெறி, நிறைய சாந்திகளை எளிதில் உருவாக்கும்.

நமது கல்வித்திட்டம் முதலில் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அவ்வப்பொழுது தேர்வாக வைத்து அவன் கற்றதை எழுத/செய்ய சொல்லவேண்டும். தேர்வுக்காக கற்றால் குறுக்கு வழி நிறைய கிடைக்கும், ஆனால் குறுக்கு வழி அனைவருக்கும் கிடைக்காது.ஒரு உருப்படியான கற்றல் கல்வித்திட்டத்துடன் ஆராய்ச்சிகள்,செயல்முறை, மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளும் ஒவ்வொரு ஆண்டும் மாறும் ஒரு சமச்சீர் கல்வித்திட்டம். செயல்படுத்தினால். பத்தாம் வகுப்பு தேர்வு என்ற ஒன்றை கண்டிப்பாக தூக்கிவிடலாம். எல்லாருக்கும் கற்கும்படியான கல்விமுறை வந்தால் தேர்வு என்பது அனைவருக்கும் இனிமையான ஒன்றே.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

"அம்மா நான் சுரைக்காய் வெட்டி வெச்சிட்டேன், நம்ம ஊரு பள்ளிக்கூடத்தில படிச்ச குடுகுடுப்பை மச்சான் பிளாக் எழுதுறார், தமிழ்மண நட்சத்திரம் ஆகிருக்கார், பக்கத்து வீட்டு மலர் வீட்டு கம்பியூட்டர்ல போயி படிச்சிட்டு வறேன்"

அவரு அமெரிக்காவில போய் வேலை பாத்து சம்பாதிச்சிட்டே பிலாக்காய் ஒடிக்கிறார், நீ சமையல் வேலையை பண்ணிட்டு போய் பிலாக்காய் ஒடி ஆத்தா.
---------------
குடுகுடுப்பை என்ன பதிவு எழுதிருக்காரு மலர்.

அடிப்போடி மாவட்டத்திலே பத்தாம் வகுப்புல முதல் ரேங்க் எடுத்து இஞ்சினியரிங் படிச்சிட்டிருக்கிற என்னைப்பத்தி எழுதுவாருன்னு பாத்தா, 9 ம் வகுப்பையை தாண்டாத உன்னைப்பத்தி எழுதிருக்காரு, பெரிய ஸ்டாருன்னு நெனப்புதான்.

53 comments:

ஆயில்யன் said...

//ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”//

ஞாபகம் வருதே....

ஞாபகம் வருதே....! :)

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

நா. கணேசன் said...

Are you in Dallas, TX? we can meet some day, and our house is in Houston.

Best wishes,
N. Ganesan

குடுகுடுப்பை said...

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

நன்றி ஆயில்யன்

குடுகுடுப்பை said...

நா. கணேசன் said...

Are you in Dallas, TX? we can meet some day, and our house is in Houston.

Best wishes,
N. Ganesan//

கண்டிப்பாக சந்திப்போம், உங்களை சந்திக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். வருடம் ஒரு முறையாவது ஹீஸ்டன் வருவதுண்டு.

Anonymous said...

என் முதல் வருகை.பதிவு எதார்தமாக இருக்கிறது....

நட்புடன் ஜமால் said...

நட்ச்சத்திர வாழ்த்துகள்.

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் குடுகுடுப்பையாரே!

நட்புடன் ஜமால் said...

”ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”
]]


எனக்கு என்னமோ செய்யுதே ;)

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள். ஜக்கம்மா பேரை காப்பாத்துங்க.

Anonymous said...

//பத்தாம் வகுப்பு கணக்குப்பாடத்தில் உள்ள அணிகள்(Matrix) மிகவும் எளிது. ஆனால் அதன் பயன் படிப்பவனுக்கும் தெரியாது //

எனக்கு இன்னைக்கும் அதோட பயன் என்னன்னு தெரியாது.

மணிஜி said...

ஒரு வாட்டி மழை கொட்டிச்சா..அப்ப ஒரு இடத்துல ஒதுங்கினேன்..அது எதோ ஸ்கூல்னு சொன்னாங்க..

RAMYA said...

தமிழ்மன நட்ச்சத்திரத்துக்கு என் மனதார வாழ்த்துக்கள்!!

அப்புறம் படிச்சிட்டு பின்னூட்டமிடுகிறேன்.

சந்தனமுல்லை said...

நட்சத்திர வாழ்த்துகள்...குடுகுடுப்பை!! :-)

சந்தனமுல்லை said...

//
”ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”//

avvvvvvv!!

துபாய் ராஜா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

புல்லட் said...

வாழ்த்துக்கள் குடுகுடு :-)

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் குடுகுடுப்பை..

நிஜமா நல்லவன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

/மற்றொரு சிறு உதாரணம் நான் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஆயிரம் முறை எழுதச்சொல்லி கொடுக்கப்பட்ட இம்போசிசன் இது

”ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....இந்த கெமிஸ்ட்ரி வாத்தியாருங்களே இப்படித்தானா? இதை படிச்சதும் எங்க கெமிஸ்ட்ரி வாத்தியார் சங்கர நாராயணன் தான் நினைப்புக்கு வாரார். படுத்தி எடுத்திட்டாருங்க:))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

அருமையான பதிவு

அமுதா கிருஷ்ணா said...

இந்த வருடம் 2008-2009ல் ஸ்கூலில் அறிவியல்+கணக்கில் மாதாந்திர பரீட்சைகளில் பாஸ் செய்யவில்லை என்ற காரணத்திற்காக டிசம்பரில் டி.ஸி கொடுக்கப்பட்ட என் சொந்தகாரர் மகனை மூன்றே மாதம் வீட்டில் பயிற்சி கொடுத்து தனிதேர்வு எழுத வைத்து 300 மார்க் வாங்க வைத்தேன்.இப்பொழுது பாலிடெக்னிக் முதல் வருடம் படிக்கிறான். ஸ்கூல் ரிசல்ட் போய் விடும் என்று 10 குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டனர் திண்டுக்கலில் அந்த ஸ்கூலில். .

அமுதா கிருஷ்ணா said...

இந்த வருடம் 2008-2009ல் ஸ்கூலில் அறிவியல்+கணக்கில் மாதாந்திர பரீட்சைகளில் பாஸ் செய்யவில்லை என்ற காரணத்திற்காக டிசம்பரில் டி.ஸி கொடுக்கப்பட்ட என் சொந்தகாரர் மகனை மூன்றே மாதம் வீட்டில் பயிற்சி கொடுத்து தனிதேர்வு எழுத வைத்து 300 மார்க் வாங்க வைத்தேன்.இப்பொழுது பாலிடெக்னிக் முதல் வருடம் படிக்கிறான். ஸ்கூல் ரிசல்ட் போய் விடும் என்று 10 குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டனர் திண்டுக்கலில் அந்த ஸ்கூலில். .

அமுதா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

மாசிலா said...

பதிவு நல்லா வந்திருக்கு. அப்படியே தத்ரூபமா எழுதி இருக்கீங்க. நன்றி.

நட்சத்திர பதிவர் வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

கலாட்டாப்பையன் said...

நான் " பத்தாம்பு " படிக்கும் போது கடைசி ரிவிசன் டெஸ்ட் ல இரண்டு பாடத்துல மட்ட ஆகிட்டேன் அதுக்கு என்னோட ஹால் டிக்கெட் தராம கொய்யால என்ன பாடு படுத்தினாங்க தெர்யுமா???? எக்ஸாம் முதல் நான் தான் கொடுத்தாங்க...

geevanathy said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே

அருமையான பதிவு

அறிவிலி said...

பிலாக்காய் நல்லா ஒடிச்சிருக்கீங்க.

வாழ்த்துகள

துளசி கோபால் said...

இந்த வாரம் கூடுதல் ஜொலிப்பு நிச்சயம்:-)))))

இனிய வாழ்த்து(க்)கள்.

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

அண்ணே, ஜக்கம்மாகிட்டச் சொல்லி உங்க முகத்தைக் கொஞ்சம்.... இஃகிஃகி!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஐயோ!

குடு...!

நம்ம அத்திவெட்டி வட்டார வழக்கு போல இருக்கே...

கலக்குங்க...

தமிழ்மண விண் மீனா இருந்து ஒளி வீசுங்க, சுவையையும் கொடுங்க...

நேரம் இல்லன்னீரே மாட்டிக்கிட்டியளா!?

வால்பையன் said...

//ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”//

தமிழ்ல இபடியெல்லாம் கெட்டவார்த்தை இருக்கா!?

தமிழ் காதலன் said...

nice.

தருமி said...

வாழ்த்துக்கள்........

பாலகுமார் said...

வாழ்த்துக்கள்...

gulf-tamilan said...

வாழ்த்துக்கள் !!!

உடன்பிறப்பு said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

நன்றி தமிழரசி.
நன்றி ஜமால்.
நன்றி சென்ஷி
நன்றி சின்ன அம்மினி
நன்றி தண்டோரா
நன்றி ரம்யா
நன்றி சந்தனமுல்லை
நன்றி துபாய் ராஜா
நன்றி புல்லட்
நன்றி கார்க்கி
நன்றி நிஜமா நல்லவன்
நன்றி அமித்து அம்மா

குடுகுடுப்பை said...

நன்றி அமுதா கிருஷ்ணா
நன்றி அமுதா
நன்றி டிவீயார்
நன்றி மாசிலா
நன்றி மிஸ்டர் அடோர்
நன்றி ஜீவராஜ்
நன்றி அறிவிலி
நன்றி துளசி டீச்சர்
நன்றி பழமை
நன்றி அத்திவெட்டியார்
நன்றி வால்
நன்றி தமிழ்க்காதலன்
நன்றி தருமி அய்யா
நன்றி பாலகுமார்
நன்றி வளைகுடாத்தமிழர்
நன்றி உடன்பிறப்பு.

அது சரி(18185106603874041862) said...

எங்கள் தானை தலைவன், டெக்ஸாஸின் சிங்கம், டல்லஸின் தங்கம் குஜமுக வின் கொள்கை குன்று, குடுகுடுப்பையார் நட்சத்திரம் ஆனதற்கு (கொஞ்சம் தாமதமான) வாழ்த்துகள்!!!

தல, மொத முறையா நம்ம கட்சிய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பண்ணிருக்கு....என்னை மாதிரி தொண்டர்களுக்கு கோழி பிரியாணியும் குவாட்டரும் வாங்கி கொடுத்தா என்ன?? :0))

குடுகுடுப்பை said...

அது சரி said...
எங்கள் தானை தலைவன், டெக்ஸாஸின் சிங்கம், டல்லஸின் தங்கம் குஜமுக வின் கொள்கை குன்று, குடுகுடுப்பையார் நட்சத்திரம் ஆனதற்கு (கொஞ்சம் தாமதமான) வாழ்த்துகள்!!!

//

நீங்களும் குஜமுகல சேந்து கட்சிய உடைச்சிரலாம்னு பாக்கறீங்க.

அது சரி(18185106603874041862) said...

//
மற்றொரு சிறு உதாரணம் நான் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஆயிரம் முறை எழுதச்சொல்லி கொடுக்கப்பட்ட இம்போசிசன் இது

”ஒரு வேதிவினையில் ஈடுபடும் வினைபடு பொருள்களின் செயல்படு பொருண்மை அவ்வேதி வினையால் விளையும் பொருளின் செயல்படு பொருண்மைக்கு சமம்.”
//

இது கன்சர்வேஷன் ஆஃப் மாஸ் இல்ல??? தமிழ்ல பொருணமை அழியா விதின்னு நினைக்கிறேன்.....

you can neither create nor derstory mass...கொஞ்சம் ப்ராக்டிகலா சொன்னா, அரை லிட்டர் பால்ல அரை லிட்டர் தண்ணி ஊத்துனா, கிடைக்கிற தண்ணி பால் எப்பவும் ஒரு லிட்டர் தான்....இது முக்கால் லிட்டராவோ இல்ல ஒன்றரை லிட்டராவோ இருக்க முடியாது...

ஒரு பழைய கதை ஞாபகத்துக்கு வருது...கொஞ்ச நாளைக்கு முன்ன, ராமர் பிள்ளைன்னு ஒருத்தரு, தண்ணில மூலிகை கலந்து பெட்ரோல் ஆக்கிறேன்னு சொல்லிக்கிட்டி இருந்தாரு...அப்பிடி தண்ணில பல மேட்டரை கலந்து கடைசில பெட்ரோல் ஆக்கினா, அந்த கலவையோட எடை, அவர் கலந்த பொருட்களோட எடையை விட அதிகமா இருந்துச்சி....அந்த எடை எங்க இருந்து வந்திச்சின்னு அவரால எந்த விளக்கமும் அளிக்க முடியல.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அது சரி said...
எங்கள் தானை தலைவன், டெக்ஸாஸின் சிங்கம், டல்லஸின் தங்கம் குஜமுக வின் கொள்கை குன்று, குடுகுடுப்பையார் நட்சத்திரம் ஆனதற்கு (கொஞ்சம் தாமதமான) வாழ்த்துகள்!!!

//

நீங்களும் குஜமுகல சேந்து கட்சிய உடைச்சிரலாம்னு பாக்கறீங்க.

August 10, 2009 6:39 PM
//

கோழி பிரியாணியும், குவாட்டரும் கேட்டதுக்காக என்னை கட்சிலருந்து நீக்கறது உங்களுக்கே அநியாயாம படலை??

குடுகுடுப்பை said...

அது சரி சொன்னது
கோழி பிரியாணியும், குவாட்டரும் கேட்டதுக்காக என்னை கட்சிலருந்து //

டாலஸுக்கு வாங்க நீங்க, சாப்பாடு தண்ணி விசயத்தில எந்தக்குறையும் வக்காம பண்ணிருவோம். என்ன மீன் வறுவல் மட்டும் உங்களூக்குன்னு சொல்லி நானே சாப்பிட்டிருவேன் , கொஞ்சம் சூதானமா இருந்துக்கனும் நீங்க.

மோகன் கந்தசாமி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா!

நீங்கள் குறிப்பிடுவது போல் பெரும்பாலான பள்ளிகளில் மனனம் செய்து தேர்வெழுதும் முறை ஊக்கப்படுத்தப் படுகிறது. நாம் படித்த காலங்களைவிட இப்போது அதிகமாக இருக்கிறது.

நான் பதினோராம் வகுப்பிற்காக ஒரு பள்ளிவிட்டு வேறொரு பள்ளி சென்று சேர்ந்த போது முதன்முறையாக மனன வழி தேர்வு முறைபற்றி அறிந்தேன். ஒரு இடைத்தேர்வில் இயற்பியல் வேதியல் பாடத்தில் நடைபெற்ற பரீட்சை விடைத்தாளை ஆசிரியர் திருத்திய பிறகு என் கையில் கொடுக்கும் போது சுக்கு நூறாக கிழித்து கொடுத்தார். 'புத்தகத்தில் இருப்பதில் ஒரு வரி கூட உன் விடைகளில் இல்லை, சொந்தக்கதையை டைரியில் எழுதலாம், பரீட்சையில் எழுதக்கூடாது' என்றார். குவாண்டம் தியரியை வேண்டிய மட்டும் அறிந்து கொள்ள கல்லூரி அண்ணன்களிடம் புத்தகங்கள் வாங்கி விலாவரியாக படித்து விட்டு, பரீட்சை எழுதி ஆசிரியரின் பாராட்டுக்காக காத்திருந்த எனக்கு பெருத்த ஏமாற்றமே விஞ்சியது.

இப்படிப்பட்ட ஜென்மத்திடம் நான் கற்றுக்கொள்ளப்போவது ஏதுமில்லை என்று முடிவு செய்து மறுநாளே விடுதியின் சுவர் ஏறி குதித்து வீடு சேர்ந்தேன். பிறகு வசதிகள் குறைந்த எனது பழைய பள்ளியிலேயே மீண்டும் சேர்ந்து தப்பித்துகொண்டேன்.

Jackiesekar said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தோழர்...மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்

anujanya said...

நல்ல பதிவு. சுவாரஸ்யமாகவும் அதைச் சொல்லி இருக்கீங்க.

நட்சத்திர வாரத்திற்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

manjoorraja said...

அன்பு நண்பருக்கு நட்சத்திர வாழ்த்துகள்

குடுகுடுப்பை said...

நன்றி மோகன்
ஜாக்கி
அனுஜன்யா
மஞ்சூர் ராசா

கோவி.கண்ணன் said...

//
"அம்மா நான் சுரைக்காய் வெட்டி வெச்சிட்டேன், நம்ம ஊரு பள்ளிக்கூடத்தில படிச்ச குடுகுடுப்பை மச்சான் பிளாக் எழுதுறார், தமிழ்மண நட்சத்திரம் ஆகிருக்கார், பக்கத்து வீட்டு மலர் வீட்டு கம்பியூட்டர்ல போயி படிச்சிட்டு வறேன்"//

அப்படி கூவின அந்த அக்காதா ஜக்கமா வா ?
:)

வாழ்த்துகள் !

Unknown said...

நம்ம அப்துல் கலாம் சார் ஜனாதிபதி ஆனப்போ சுஜாதா கற்றதும் பெற்றதும்ல இப்பிடி எழுதினாரு - நான் கடைசி பெஞ்சில் உக்கார்ந்து ஜன்னல் வழியே வெளியில் தெரியும் காக்காவைப் பார்த்து கவிதை எழுத முயற்சி செய்து கொண்டு இருக்கும்போது, உன் பெஞ்சில் உக்காந்து ஒழுங்காக படித்தவர்கள் எல்லாம் இன்று ஜனாதிபதி ஆகி விட்டார்கள்" அது மாதிரி நம்ம குடுகுடுப்பை அண்ணாத்த பள்ளிக் கல்வியின் இப்போதைய நிலைமைய சொல்ற மாதிரி தான் தமிழ் மண நட்சத்திரம் ஆனத சொல்லிட்டு போய்ட்டாரு.. :)

கடைசியில உங்கள சுஜாதா மாதிரின்னு சொன்னதுக்கே நீங்க எனக்கு தனியா ஒரு பதிவு போடணும் ஆமா..

ஷண்முகப்ரியன் said...

உங்களை நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்துக்கு நன்றி சார்.
நமது கல்வித் திட்டத்தின் பயன் இன்மையையும்,பொறுப்பின்மையையும் நன்கு விளக்கி இருக்கிறீர்கள்.