தொவையல் 1:
கல்லூரியில் முதல் நாள், அப்பாவும் நானும் சென்றிருந்தோம், பெற்றோர்களுக்கான சிறப்பு பகுதியில் அப்பா உட்கார வைக்கப்பட்டார், புதிதாக சேர்ந்த முதலாண்டு மாணவர்களாகிய நாங்கள் வரிசையாக எங்களுக்கென ஒதுக்கப்பட்ட வகுப்பிற்குள் ஒருவொருவராக உள்ளே சென்றோம். நான் சென்றபோது மூன்று நபர்கள் அங்கே இருந்தனர்.,ஒவ்வொருவரிடமும் நான் குடுகுடுப்பை, தஞ்சாவூர் என அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களிடமும் அதையே விசாரித்தேன்
முதலாமவர் நான் முகமது , ஊர் தூத்துக்குடி அப்படின்னார், அடுத்தவரிடம் சென்றேன் நான் முகமது , ஊர் தூத்துக்குடி அப்படின்னார். அடுத்தவரிடம் கேட்டேன் நான் முஹ்ம்மத் , ஊர் தூத்துடி அப்படின்னார். என்னடா முதல் நாளே நம்மள இப்படி ஓட்டுறாங்களேன்னு ஆடிப்போய் பேந்த பேந்த முழிச்சேன். கொஞ்ச நேரத்திலே இன்னொருத்தர் தெலுங்கு பட ஹீரோ கணக்கா உள்ள நுழைஞ்சார், உங்க பேரு ? நான் குட்டி, ஊர் தஞ்சாவூர் அப்படின்னார். எனக்கு இப்போ கொஞ்சம் தைரியம் வந்துச்சு, தெலுங்கு ஹீரோ பக்கத்தில இருக்கும்போது என்ன பயம் .
ஒரு வழியா நாங்க எல்லாரும் விடுதியில் ஒரே அறையில் அடைக்கப்பட்டோம்.பின்னர் தூத்துடிக்காரங்களோட நானும் சேர்ந்து வில்லனாயிட்டேன், நம்ம தெலுங்கு ஹீரோ குட்டி, ஹிந்தி ஹீரோக்கணக்கா இருக்கிற ஹீரோங்களோட சேர்ந்துக்கிட்டாரு.இன்றைய தேதியில் முதலாம்,இரண்டாம் முகமதுவும்,குட்டியும் நண்பர்களாக துபாயில் இருந்து, இந்த வில்லன் எழுதுவதை படித்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்த மூன்றாவது முஹம்மத், எல்லாரும் முகமதுன்னு சொல்லும்போதே முஹம்மத்துன்னு வித்தியாசமா சொல்லுவான், இப்ப வியாபார காந்தமாயிட்டான். ஆனால் வியாபாரம் கைகூடி வந்து ஒட்டும்போது பல சமயங்களில் காந்தந்தின் துருவத்தை மாற்றிவிடுவான்.
கல்லூரி முதல் நாளில் பெற்றோர்களுக்கும் ஒரு ரெப்ரெஷ்மெண்ட் அப்படின்னு பெரிசா கலர்,கலரா தட்டியெல்லாம் வெச்சு செங்கல்லுக்கு வெள்ளை அடிச்சி கலக்கலா வரவேற்பு கொடுத்திருந்தாங்க. மெஸ்ல ரெப்ரெஷ்மெண்டுன்னு சொல்லி, சரியா கழுவாத தட்டில், வேகாத சோற்றில், புளி(ளு)ரசத்தை ஊத்தினார்கள். எங்கப்பா என்னடா இது கருமாதில போடுற சாப்பாடே நல்லா இருக்குமேடான்னார். அடுத்த நான்கு வருடங்களும் இதே சாப்பாடுதான் எங்கள் வயிற்றை காயவைத்தது. இந்தக்கல்லூரியில் படித்ததன் மிகப்பெரிய பயன், எங்கள் கல்லூரி விடுதி மாணவர்களின் நட்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது போல் எனக்கு தோன்றியது. இதனை சென்னையில் நாங்கள் குழவாக வேலை தேடிய காலத்தில் அனுபவப்பூர்வமாக தெரிந்துகொண்டேன்.இன்றைக்கும் ஒரு புதிய சமூக சேவை முயற்சியில் இறங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.
தொவையல் 2:
இங்கே அமெரிக்காவில் செல்போன்கள் இரண்டு ஆண்டு பிளானுடன் வாங்கும்போது இலவசமாக அல்லது குறைந்த விலையில் கிடைக்கும். இடையில் போன் உடைந்து /தொலைந்து போனால் காசு கொடுத்து வாங்கவேண்டும். அதற்காக ஒரு இன்சூரன்ஸ் பிளான் இருக்கிறது,அதாவது மாதம் 2$ அளவுக்கு கட்டினால், தொலைந்து போனால் புதிய போன் தந்துவிடுவார்கள். எனக்கு தெரிந்து பெரும்பாலும் யாரும் இன்சூரன்ஸ் வைத்துக்கொள்வதில்லை. நான் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் அக்கட பூமியை சார்ந்த ஒருவர் ஐபோனூ வாங்கியிருந்தார் என்னிடம் அதில் உள்ள வசதிகளை டெமோ கொடுத்துக்கொண்டிருந்தார், அதன் விலை 200$ மேலும் மாதம் 30$ டேட்டா பிளானுக்கு கூடுதலாக கட்டவேண்டும், ஆனா ஐபோனுக்கு இன்சூரன்சூ கிடையாதுன்னார். ஏன் என்று கேட்டேன்,அதற்கு அவரு சொன்னது, இங்க யுனிவர்சிட்டில படிக்கிற ஸ்டூடண்ஸூ எல்லாம் போன் வாங்கி, இன்சூரன்சும் வாங்கி ஒரு மாதத்தில தொலைஞ்சு போச்சுன்னு சொல்லி புதுசு வாங்கிடுவாங்களாம், தொலைஞ்சு போன போனு அல்லுடு, மஜக்குடு,ஜொல்லுடுன்னு ரிங்க் டோனா ஆந்திராவில அடிக்கப் போயிருமாம். அது மாதிரி நிறைய நடக்கிறதால ஐபோனுக்கு நோ இன்சூரன்சூ. இப்படி மொள்ளமாறித்தனம் தொடர்ந்து பண்ணினா எதுக்குமே நோ இன்சூரன்சூதான்.
தொவையல் 3:
சில ஆண்டுகளுக்கு முன் சிகாகோ அருகில் உள்ள சாம்பர்க் என்ற ஊரில் வசித்தபோது, வேலை பார்த்தது ஒரு இந்திய மென்பொருள் கம்பெனியில், பெங்களூரிலிருந்து ஆட்கள் வருவதும்,போவதுமாக இருப்பார்கள், கார்ப்பரேட் அபார்ட்மெண்டில் தங்கி இருந்தோம், நான் கார் வாங்கியிருந்த நேரம் அது, புதிதாக வருபவர்களை கடைக்கு அழைத்து செல்வது ஒரு சாதாரணமான நிகழ்வு, அப்படி ஒரு நாள் ஒரு தேசிக்கடைக்கு அக்கட பூமியைச்சேர்ந்த ஒரு நண்பரை அழைத்துச்சென்றேன், கடைக்கார குஜராத்தியிடம் அரிசிப்பையை காண்பித்து புதுசா, பழசா என்றார்,அவர் உடனே நம்ம கடையில் எல்லாமே புதுசுதான் என்றார். யூனோ பழைய அரிசிதான் நல்லா இருக்கும் புது அரிசி ஸ்டிக்கியா இருக்கும் எனக்கு பழைய அரிசிதான் வேணும் வேற கடைக்கு ஓட்டுங்க வண்டிய குடுகுடுப்பைன்னுட்டார்.
கடந்த வாரம் டாலஸில் ஒரு புதிய தேசிக்கடையில் எப்போதும் வாங்கும் லட்சுமி பிராண்ட் இட்லி அரிசி இல்லாததால்,ஸ்வாட் பிராண்டு இட்லி அரிசி வாங்கினேன், அரிசிப்பை பழசாக இருந்தது, இட்லி இந்த முறை ருசிதான் என நினைத்தேன், மாவு அரைச்ச வைத்த அடுத்த நாளே கருப்பு கலரில் பூஞ்சை படிந்துவிட்டது, என்ன செய்வது இந்த மாவில் வார்த்த தோசை ருசி இல்லை அதனால் பத்து தோசைக்கு மேல் சாப்பிட முடியவில்லை.
14 comments:
10 தோசையா. சாமீய்ய்ய்
பத்து தோசை சாப்பிடுவீங்களா, வாழ்க, ஜக்கம்மா பேரை காப்பாத்தீட்டீங்க.
இட்லி அரிசியெல்லாம் கிடைக்காட்டி முத்துசம்பா போட்டுப்பாருங்க.
ஊர்ல தோசை பஞ்சம் ஏற்பட்டுறுச்சாம்
பார்த்து அப்பே!
சாப்பாட்டுக்கு Khazana பொன்னி பச்சரிசி வாங்கிப் பாருங்கள். எனக்கு
செட்ட்டான அரிசி இதுதான்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
:-)உங்க 'ப்ரெண்ட்ஸ்' கதை நல்லாருக்கு!!
நல்லா இல்லாத அரிசியிலேயே 10 தோசையா....அவ்வ்வ்வ்! :-))
அக்கட தேசத்து அல்லுடு எல்லாம் அமெரிக்காவுக்குன்னே பிறந்தவர்கள். பார்த்து சூதனமா பழகுங்க மாப்பு, இல்லாட்டி அல்லுடு அடிச்சிடும் ஆப்பு.
கணக்குல வீக்குன்னு சொன்னீங்களே, சாப்பிடும் போது சரியா எண்ணுனீங்களா? தோசை 10-ஆ இல்லா 10+அ ரவுண்டா சொன்னீங்களா?
பத்து தோசைக்கு மேல் சாப்பிட முடியவில்லை.//
ஆமா ரொம்ப கம்மியா இருக்கு!
என்ன செய்வது இந்த மாவில் வார்த்த தோசை ருசி இல்லை அதனால் பத்து தோசைக்கு மேல் சாப்பிட முடியவில்லை. //
:-)):-)):-))
மாவு அரைச்ச வைத்த அடுத்த நாளே கருப்பு கலரில் பூஞ்சை படிந்துவிட்டது, என்ன செய்வது இந்த மாவில் வார்த்த தோசை ருசி இல்லை அதனால் பத்து தோசைக்கு மேல் சாப்பிட முடியவில்லை. //
:)))))))))))
மாவு அரைச்சது யார்னு சொல்லவேயில்லையே.
//இன்றைக்கும் ஒரு புதிய சமூக சேவை முயற்சியில் இறங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.//
வாழ்த்துகள்
//தொலைஞ்சு போன போனு அல்லுடு, மஜக்குடு,ஜொல்லுடுன்னு ரிங்க் டோனா ஆந்திராவில அடிக்கப் போயிருமாம்.//
கொய்யால, நம்மூருக்காரங்களை அடிச்சிக்க ஆளே இல்லை.. :)
//என்ன செய்வது இந்த மாவில் வார்த்த தோசை ருசி இல்லை அதனால் பத்து தோசைக்கு மேல் சாப்பிட முடியவில்லை.//
ஏன் நாட்ல உணவு பஞ்சம் வராது? :)
அது மட்டுமா தல..
வால்-மார்ட்ல 90 day return policy எ எப்பிடி யூஸ் பண்றாங்க தெரியுமா? ஷார்ட் டெர்ம் ஆன்சைட் வரவன் குக்கர், மிக்சி எல்லாம் வால்மார்ட்ல வாங்கி யூஸ் பண்ணிட்டு திரும்ப போகும் போது திருப்பி குடுத்துட்டு காசை வாங்கிட்டு போயிடுரானுக. அக்கட பிரதேசத்துக்காரனுக்கேல்லாம் இதுக்கு தனிய கிளாஸ் எடுத்து அனுப்புரானுகளோ என்னவோ?
//..போகும் போது திருப்பி குடுத்துட்டு காசை வாங்கிட்டு போயிடுரானுக. ..//
என்னா பிளானிங்..!!
//சரியா கழுவாத தட்டில், வேகாத சோற்றில், புளி(ளு)ரசத்தை ஊத்தினார்கள். எங்கப்பா என்னடா இது கருமாதில போடுற சாப்பாடே நல்லா இருக்குமேடான்னார். //
:-)
பாப்பாவுக்கு வச்ச குட்டி தோசைய எல்லாத்தையும் திருடி தின்னுபுட்டு இங்க வந்து பத்து தின்னேன் எட்டு தின்னேன்னு பேச்ச பாரு...
பேச்ச கொற பேச்ச கொற....................
Post a Comment