என் வயிற்றுப்போக்குக்கு காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே.
திடீரென வயிற்றுப்போக்கு, யோசித்தேன், கடையில் வாங்கிய இஸ்ரேல் தக்காளிதான் காரணமாக இருக்கமுடியும் என்பது வெள்ளிடை மலையாகத்தெரிந்தது, குடிக்க கூட தண்ணீர் இல்லாத இந்த பாலைவன நாடான இஸ்ரேலில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய அனுமதித்த சோலைவன நாடான அமெரிக்க ஏகாதிபத்தியமும் இதற்குக்காரணம் என்பது சொல்லியும் தெரியவேண்டுமா?
பிகு: குண்டு மிளகாய் நண்டு குழம்பிற்கும்/ வாலை மீன் குழம்பிற்கும் இஸ்ரேல் தக்காளி சேர்த்துக்கொண்டேன்.
பிகு2: பழையன கழிதலும் , புதியன புகுதலும் தமிழர் பண்பாடு ஆகையால், இன்று குவால் பறவைக்கறி சாப்பிட்டேன்.
9 comments:
நானும் எத்தினி நாளைக்குதான், நானும் ஒரு கிராதகன், நானும் ஒரு கிராதகன்னு கூவுறதோ தெரியலை......
அண்ணே நீங்க குடுகுடுப்பையாரை யா சொன்னீங்க ?
தல நம்ம இடுகையில ஒரு கமெண்ட் விட்டுட்டுப் போனீங்களே அதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க. இஸ்ரேல் காரணமா இல்லையான்னு நான் சொல்றேன்.
பழமைபேசி said...
/நானும் எத்தினி நாளைக்குதான், நானும் ஒரு கிராதகன், நானும் ஒரு கிராதகன்னு கூவுறதோ தெரியலை....../
அவங்களா ஜீப்புல ஏத்துற வரைக்கும்
நசரேயன் said...
/அண்ணே நீங்க குடுகுடுப்பையாரை யா சொன்னீங்க ?//
ம்கும். இல்லாம உங்களப் போய் சொல்றாங்களா? ஆசையப்பாரு.
நண்டும் மீனும் எந்த நாட்டுக் கடல் தலைவரே:)) ரெட் ஸீ?:))
நின்றுச்சா ...
// நட்புடன் ஜமால் said...
நின்றுச்சா ...//
:)))
இப்ப நல்லா இருக்கீங்க தானே?!
|| இன்று குவால் பறவைக்கறி சாப்பிட்டேன்||
குவால் பறவைக்கு இஸ்ரேல் தக்காளி புடிக்காதா :o)...
Post a Comment