இல்லாத நடிகையின் பொல்லாத நாயை. வாங்கி அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் அதனை நம்பி முதலீடு செய்தவர்களின் கோமணம் கிழிந்தது தெரிந்ததே.இப்போது அந்த கிழிந்த கோமணத்தை எப்படி சரி செய்வது, இன்னும் கிழியாமல் உள்ள கோமணத்தை எப்படி பாதுகாப்பது போன்றவற்றிகு அமைக்கப்பட்ட சிறப்பு கோமணக் காப்பு கமிட்டி கூடி வாய்ப்புகளை ஆலோசனை செய்கிறது.
அமெரிக்க அதிகாரி,ஐரோப்பிய அதிகாரி, மற்றும் பலர்.
அ.அதிகாரி: இன்றைய நிலைமையில அமெரிக்காவின் கிழிந்த கோமணம் சரி செய்யப்பட்டால் தான் உலகப்பொருளாதாரம் சரி செய்ய முடியும். இது பற்றிய உங்களுடைய யோசனைகளை கூறவும்.
ஐ,அதிகாரி: 700B பெயில் அவுட் மூலியமா நாறிப்போன கோமணத்தையெல்லாம் வாங்கிர ஐடியா என்ன ஆச்சு.
அ.அதிகாரி: நாறிப்போன கோமணம்னு சொல்றது கொஞ்சம் விரசமா இருக்கு, டாக்ஸிக் அசெட்னு அழகா ஆங்கிலத்தில சொல்லலாம். அந்த பிளான் இப்போதைக்கு பலன் தராது. வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.
ஐ.அதிகாரி: டாலர் மதிப்பு கூடிடிச்சே அத வெச்சி இப்ப பெட்ரோல் விலை குறைச்சலா விக்கிறப்பவே வாங்கி டாக்ஸிக் அசெட்ட சுத்தப்படுத்தலேமே.
அ.அதிகாரி: சுத்தப்படுத்த பெட்ரோல் வாங்கினா டிமாண்ட் அதிகமாகி, விலை கூடிடும், அதோட இப்போதைக்கு ஒரு காலன்ல 20 கோமணம்தான் சுத்தம் செய்யமுடியும்,அதுனால ஆல்டர்னேட் பியூயலுக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கோம்.
அ.அதிகாரி 2: முடியாது ஆலடர்னேட் பியூயலுக்கு சோளத்தை எடுத்துக்கிட்டா சாப்பாடு விலை கூடி போயிடும் ,அந்த பிளானும் வேணாம்.
அ.அதிகாரி : சரி பேசாம கிழிந்த கோமணத்த தைக்கிறதுக்கி இந்தியாவிலேந்து நூலும்,சைனாவிலேந்து ஊசியும் வாங்கறதுக்கு கோமண உரிமையாளர்களுக்கே இரண்டு டாலர் கொடுக்கலாம், அத மெயிண்டெய்ன் பண்ற மென்பொருள், கால் செண்டர் வேலைய இந்தியாவில சில கம்பெனிக்கு கொடுத்திட்டு காசு மிச்சம் பண்ணலாம்
அ.அதிகாரி 2: இல்ல டொமஸ்டிக்ல வேல உருவாக்கனும் அதுனால, இங்கயேதான் எல்லாம் பண்ணனும்.ஊசி,நூலெல்லாம் இங்கியே தயார் பண்ணலாம். அவுட்சோர்சிங்லாம் கட் பண்ணிரலாம்.
ஐ.அதிகாரி & அ.அதிகாரி: அப்படி பண்ணா அது கோமணத்தோட வெலய விட ஜாஸ்தியாகுமே என்ன பண்றது.
அ.அதிகாரி 2: ஆனா வேலைய உருவாக்கனுமே. என்ன பண்றது.? you know what ,i dont know
அ.அதிகாரி: அது மட்டும் இல்ல நூல ஏத்திட்டு போற கட்டை வண்டி கம்பெனியெல்லாம் கடைச்சாவி கழண்டு போச்சு,எங்களுக்கும் காசு கொடுங்கன்னு கேக்கிறாங்க. எனக்கென்னமோ இந்த முதலாளித்துவத்துல இதுக்கு விடை இருக்கிற மாதிரி தெரியல.
ஐ.அதிகாரி: பேசாம முதலாளித்துவம் இல்லாத மத்தவங்கெல்லாம் எப்படி கோமணம் கிழியாம பாதுகாக்கிறாங்கன்னு அவங்க ஐடியாவையும் கேப்போம்.
அ.அதிகாரி : நல்ல யோசனை, பேசமா டோண்டுவுக்கு இந்த வாரம் கேள்விய அனுப்பிச்சிரலாமா?
அ.அதிகாரி2 : வேண்டாம் அவருக்கு முதலாளித்துவத்தை தவிர வேற ஒண்ணும் தெரியாது.
அனைவரும் மாற்றுப்பொருளாதார நிபுணரை சந்திக்க அங்கே செல்கின்றனர்.
அ.அதிகாரி: நீங்க எப்படி கோமணம் கிழியாம பாத்துக்கறீங்க?
மா.நிபுணர்: இந்தா இப்படித்தான் என்று தன் மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி கை காட்டுகிறார்.அங்கே அம்மணமாக ஒரு பெரிய கூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வருங்கால முதல்வரில் வந்த இடுகை மீண்டும் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடும் நிலையில் மீள்பதிவாக இங்கே.
7 comments:
//அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடும் நிலையில்//
நம்பிட்டோம்!!!
யோசனை சொல்ல ஜக்கமா அணியிலிருந்து ஒரு ஆள அனுப்ப வேண்டியதுதான?
ஜக்கம்மா சொல்றா...
கந்தையானாலும் கசக்கிக் கட்டு
கூழானாலும் குளித்துக் குடி
அமெரிக்க கோவணம் கிழிந்தாலும் ஸ்டைலா இருக்குல்ல....அவ்வ்வ்
பழமைபேசி said...
//அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடும் நிலையில்//
நம்பிட்டோம்!!!
//
நல்ல நிலைமையிலாண்ணே இருக்கு.
கோவணம் கிழிஞ்சிருச்சுன்னு சொல்லிட்டு எல்லாரும் என்னதான் பண்றாங்க..?
:))) எப்படீய்யா இப்படீயெல்லாம்... சுத்தமா செலவே இல்லாம பண்ணீட்டீரு ;)
கடைசி பஞ்ச் சூப்பர்.
யானை வரும் பின்னே மணியோசை கேட்க்கும் முன்னே....
Post a Comment