தொடர்பதிவுகள் ஒரு நேரத்தில் , ஒரே மாதிரியான பதிவுகளாக வந்து சுவையற்றதாக ஆகிவிடுவதாக நினைத்ததால் , நான் இவைகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டேன்.முகிலன் என்னுடைய புகழ் பாடி பதிவெழுதியபின் யாரும் அழைக்காமல் இந்தப்பதிவை எழுத தோன்றியது.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
குடுகுடுப்பை
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை.
இல்லை, குடுகுடுப்பை என்று பெயர் வைக்க சொல்லி ஜக்கம்மா சொன்னதால் வைத்துக்கொண்டேன், இந்தப்பெயரில் தமிழ் ஓவியாவிற்கு இட ஒதுக்கீடு சம்பந்தமான ஒரு பதிவில் பின்னூட்டமிட்டேன், அதற்கு அவர் "குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் உள்ளது " என்று சொந்தமாக பதில் அளித்திருந்தார், மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த ஒரு கவிஞரை விமர்சிக்கும் எண்ணத்தில் நுழைந்தது,
"நான் எழுதியது கவிதை"
என்று நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை"
என்று எழுதி நானே கவுஜர் ஆகிப்போனேன்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எழுத ஆரம்பித்த ஆரம்ப காலத்தில், நிறைய பதிவுகளில் பின்னூட்டமிட்டேன், கோவி.கண்ணன் பெயரையெல்லாம் பயன்படுத்தி விளம்பரம் தேடினேன், தூக்கம் விழித்து பின்னூட்டங்களுக்கு நன்றி சொன்னேன், என் இயல்புக்கு மாறானதாக தோன்றியது, கொஞ்சம் கொஞ்சமாக விலகி இப்போது எப்போதாவது எழுதுகிறேன். பல பதிவுகளை ரீடரில் படிக்கிறேன் ஆனால் பின்னூட்டம் இட நேரம்/ சூழ்நிலை இல்லை, தற்போது விரும்பி படித்துக்கொண்டிருப்பது துளசிதளத்தின் தாய்லாந்து பயணக்கட்டுரைகள்.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
என் பதிவுகள் பெரும்பாலும் அனுபவம் சார்ந்தவையே, எல்லா அனுபவத்தையும் பதிவுக்காக யோசிக்கத் தோன்றியதால் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டேன். பதிவர் சந்தனமுல்லை, தீஷு போன்று குழந்தையின் வளர்ச்சியை எழுத நினைத்தேன், ஆனால் அந்தத்திறமை என்னிடம் இல்லை என்பதை அறிந்துகொண்டேன்.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவின் மூலம் எனக்கு மாதம் ஆயிரம் டாலர் கிடைக்கிறது, அதனை எனக்கான சாராயம் மற்றும் ஊறுகாய் செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
கு.ஜ.மு.க என்ற ஓர் உறுப்பினர் கட்சி மற்றும் வருங்கால முதல்வர். இரண்டுமே தமிழ்தான் ஆனா நிறைய எழுத்துப்பிழைகளோடு இருக்கும்.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கருத்து திணித்தல் செய்யும் நிறைய பதிவுகளுக்கு எதிர்வினையாற்ற ஆசைப்படுவதுண்டு, ஆனால் ஆற்றுவதில்லை.இந்த மாதிரி 10 கேள்விகள் உருவாக்குபவர்களைப் பார்த்து ஏன் இப்படி? என்று ஒரு கேள்வி கேட்க ஆசை.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
அமெரிக்காவில் வசிக்கும் உலகநாதன் என்பவர்,என்னுடைய மொக்கைகள் பிடிக்கும் என்று பாராட்டினார். மற்றபடி பின்னூட்டங்கள் மூலம் பாராட்டியர்வகளே அதிகம்.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
பொதுச்செயலாளர் ,குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக்கழகம்.
.
5 comments:
//6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவின் மூலம் எனக்கு மாதம் ஆயிரம் டாலர் கிடைக்கிறது, அதனை எனக்கான சாராயம் மற்றும் ஊறுகாய் செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.//
:) டாஸ்மாக்கை மூடப் போறாங்களாம், காசுள்ள போதே வாங்கி அடுக்கி வைத்துக் கொள்ளூங்கள்
தலைவரே! பதிலெல்லாம் நீங்க சொன்னதா? ஜக்கம்மா சொன்னதா?
/எனக்கு மாதம் ஆயிரம் டாலர் கிடைக்கிறது, அதனை எனக்கான சாராயம் மற்றும் ஊறுகாய் செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்./
போச்சுறா! சட்டம் இதுக்கொரு வழக்கு போடுவாரே:))
:)) சூப்பர்
நல்ல இடுகை.
very nice sir. I like u by s.christy
Post a Comment