Friday, May 28, 2010

முத்திரை.

முத்திரை.

ஒரு நிலையான நிலைப்பாடு
இல்லாத வழிபாட்டு முறை
கொண்ட கடவுள் கடவுளள்ள
கள்ளம் கொண்ட உள்ளம்
தாண்டி தீண்டினால் வெல்லமல்ல
காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட
நான் ஒன்னும் வீணாப்போன சைக்கிளல்ல
கைக்கிளை என்ற தமிழ் சொல்லுக்கு
அருஞ்சொற்பொருள் தெரிந்த பண்டிதனல்ல
பட்டினி கிடந்து தொப்பை குறைக்கும்
பழக்கமும் எனக்கல்ல என் குடும்பத்துக்கே அல்ல
வீணாய்போனது கருவாடு மட்டுமல்ல
குடிக்காமல் போன கள்ளும்தான் என்பது
எனக்கல்ல ஊருக்கே தெரியும்,
கள்ளுக்கு பல் உவமையல்ல
ஜில்லுக்கு சொல்லும் உவமையல்ல
இது புரியாத கவிதையுமல்ல
புரிந்த கவிதையுமல்ல
வார இறுதியில் போரடித்த முப்பது
நிமிடத்தின் முத்திரை.

3 comments:

அது சரி(18185106603874041862) said...

சூப்பரப்பு...:)))

இதை படிக்கும் போது கருணாஸ் ஹீரோவா நடிக்கிற படத்துக்கு ஓப்பனிங் சாங்கா வச்சிக்கலாம்னு தோணுது :))

vasu balaji said...

தினம் 30 நிமிடம் போரடிக்காதா தல:))

Unknown said...

எங்க சிங்கத்துக்கு என்னவோ ஆயிருச்சீ...