காலினை தீ சுடினும் ...
ரயிலில் ஏறி எங்கோ போய் விட்டு
நினைவினில் விழித்தெழுகையில்
தீராத் தேடல்
காணாமல் போன செருப்பு
திகைப்பு மீண்டெழுந்து
காலினை தீ சுடினும்
தொடர்ந்து நடை
யாரோவான கண்ணம்மாவின் கண்கள்
கண்டது குளிர்ந்தது அகம்
கனவுலகம் சென்று மிதந்து
கண்ணம்மாவின் கண்ணில் முத்தமிட்டு
உதட்டுக்கு வருகையில்
கண்ணம்மாவில் கணவன்
கட்டணக் கழிவறையிலிருந்து வெளியேறி
டேய் பேமானி என் பொண்டாட்டிய
ஏண்டா பாக்கிற
கனவுகள் கண்ணம்மாவின் உதட்டில்
கணவனின் ஈரச்செருப்பு
கண்ணத்தில் பட்டவுடன்
காணாமல் போன செருப்பு
ஞாபகம் தானாய் விழித்தெழும் நனவுகள்
8 comments:
:-)) என்ன கொடும குடுகுடுப்பையார் இது...
சந்தனமுல்லை said...
:-)) என்ன கொடும குடுகுடுப்பையார் இது...
February 26, 2010 1:38 AM//
சும்மா ஒரு லெக்சரூ.
இப்பத்தான்யா அங்க போயி பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன். அதுக்குள்ள எதிர்கவுஜ ரெடியா?? :))
ம்கும். இவ்ளோ நாளா காணோம். வந்த ஜோரில க.கா. அணி, எளக்கிய அணி ரெண்டு பேர் இலாகால பூந்தாச்சா:))
அவ்வ்...
:(
ஆமாம் உருப்படியா ஏதாச்சும் எழுதினா அப்ப வந்து எதுவும் கருத்து சொல்லிடாதிங்க.இப்டி எதிர் கவிதை..எதிருக்கு எதிர் கவிதைன்னு போட்டுட்டு இருங்க.கட்சி ஏகபோகமா வளருது போல இருக்கே!
//KarthigaVasudevan said...
:(
ஆமாம் உருப்படியா ஏதாச்சும் எழுதினா அப்ப வந்து எதுவும் கருத்து சொல்லிடாதிங்க.இப்டி எதிர் கவிதை..எதிருக்கு எதிர் கவிதைன்னு போட்டுட்டு இருங்க.கட்சி ஏகபோகமா //
யோவ் இதெல்லாம் தேவையா உமக்கு
ஒரு முத்தம் கொடுக்கக்கூட உரிமையில்லையா?? சோ...பேட்..
Post a Comment