முகிலனின் பிதற்றல்கள்.
கு.ஜ.மு.க பொதுச்செயலாலர் கைது என்று முகிலன் நேற்று பிதற்றியிருந்தார். கைதுக்கு, நான் புதிய செல்போன் வாங்கியதை காரணமாக சொல்லியிருந்தார். அது அப்பட்டமான பொய் என்பதை நான் இப்போது உபயோகிக்கும் இந்த செல்போனின் படமே விளக்கும்.
பி.கு: இந்த செல்போனை காப்பீடு செய்ய ஆசைப்படுகிறேன். உங்களுக்குத்தெரிந்த காப்பீட்டுக்கம்பெனிகள் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும்.
11 comments:
எதிர் பதிவு அங்கே
இந்த செல்போன் காப்பீடு செய்வது ரொம்ப சுலபம். மாதம் இருபது டாலர் எனக்கு அனுப்புங்கள். உங்கள் செல்போன் வேலை செய்வதை நிறுத்தி விட்டாலோ, கீழே விழுந்து உடைந்து விட்டாலோ, அல்லது தண்ணீரில் விழுந்து விட்டாலோ செல்போனுக்கான பணம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். திருடு போனால் செல்போனுக்கான பணத்துடன் (எடுத்துக்கொண்டு போனவன் விட்ட) சாப விமோசனம் செய்ய இன்னொரு இருபது டாலர் சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.
இலவசக்காப்பீடு அப்படின்னு ஒருவரி சேத்திருக்கனும் மறந்திட்டேன்
இதனால் அனைத்து பதிவர்களுக்கு தெரிவிப்பது என்ன என்றால், மேற்படி கைபேசியை காப்பீடு செய்ய முன்னனி நிறுவனங்கள் மறுத்து விட்டதால் வருத்தம் அடைந்த குடுகுடுப்பையார் அந்த கைபேசியை எனக்கு பரிசாக தரவுள்ளார். மேற்பட பரிசு வழங்கும் நிகழ்வில் அனைத்து பதிர்வர்களும் கலந்து சிறப்பிக்க வேண்டுகின்றேன். இடம் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
பித்தனை நினைச்சா பாவமா இருக்கு..
இதை சும்மா கொடுத்தாலே எவனும் வாங்க மாட்டானே!
எதற்கு காப்பீடு!?
1900 la vaangina mobilaa ?
நீங்க ஏற்கனவே ஒரு காப்பீட்டு கம்பெனி வச்சிருந்ததா பேச்சு அடிபட்டுச்சே
அப்போ அது இல்லையா??
சரி அந்த போன் வேலை செய்யுமா??
அனுப்பி வையுங்க நான் பார்த்துட்டு திருப்பி தந்துடறேன் :-)
காப்பீடு பத்தி அப்புறமா யோசிக்கலாம் :)
என்னையா இது 1990 ல வாங்குன செல் போன் போல இருக்கு. இந்த கம்பெனிய மூடி ரொம்ப நாள் ஆகுது. எதுக்கெல்லாம் காப்பிடு செய்ய முடியாது.
கீழ்க்கண்ட விவரங்கள் தந்தால் என்ன காப்பிடு தொகை என மதிப்பெடு செய்யப்படும்.
1. செல்போன் வாங்கிய ஆண்டு.
2. செல்போன் தயாரித்த ஆண்டு
3. தயாரித்த கம்பெனி இப்பவும் இருந்தால். இல்லையேல் மூடிய ஆண்டு தெரியப்படுத்தவும்.
4. உபயோகித்த நாட்கள், மணித்துளிகள்.
மேற்கண்ட விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அனுப்பவும். உடனடியாக எங்கள் கம்பெனி விற்பனை பிரதிநிதி உங்களை காண்டக்ட் பண்ணுவார்.
என்கிட்ட இருந்து ஆட்டையைப் போட்டுட்டு நல்ல புள்ள மாதிரி காப்பீடு கேக்குறீரா?? வெளங்கும்....
ச்சே... சின்ன செல்போனை வச்சு பதிவு-எதிர்பதிவுன்னு பட்டைய கெளப்பி.... கைது - போராட்டம்னு பீதியக் கெளப்பி.... என்னை இப்படி நல்லா உயரமாக் கொண்டு போயி.. கீழே பொத்துன்னு போட்டுட்டீங்க - நீங்க 2 பேரும்!
Post a Comment