நான் சிறிது காலம் ஒன்னுக்கும் உதவாத ஓகாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்த காலம், நானும் என்னோட வேலை பார்த்த சர்தார்ஜி நண்பரும்தான் ஆன்சைட் இன்ஜார்ஜ், பெரும்பாலும் இரவு பதினோரு மணிவரை இருந்து ஆப்ஷோர் டீமிடம் கை கலந்துவிட்டு(அறிவு பறிமாறல்) செல்வோம்.
ஒரு நாள் இரவு ஏழு மணியளவில், ரெஸ்ட் ரூமுக்கு உச்சா அடிக்க சென்றபோது, சர்தார்ஜி எல்லா டாய்லெட்டையும் ஓப்பன் பண்ணி டிஷ்யூ பேப்பர் இல்லைங்கிறத என்னிடம் சொன்னார். ஏன் காஸ்ட் கட்டிங்கா அப்படின்னு கேட்டேன்.அதுக்கு அவரு ஆமாம் காஸ்ட் கட்டிங்தான் ஆனா இந்த கம்பெனி காஸ்ட் கட்டிங் கிடையாது, நம்ம ஊருல உள்ள ஒரு கம்பெனிலேந்து சுமார் இருநூறு பேரு வந்திருக்காங்க அவங்களோட காஸ்ட் கட்டிங், வீட்டிலே டிஷ்யூ பேப்பர் வாங்காம இங்கேயே, மாலை ஆறு மணியளவில எல்லாத்தையும் முடிச்சிட்டுதான் போவாங்க, ஆறு மணிப்பக்கம் இந்தப்பக்கம் வந்தா எல்லா ரூம்லேயும் கால் தெரியும் அப்படின்னார்.அதுக்கப்புறம் சுத்தமா பேப்பர் இருக்காதுன்னார்.
இந்த ஆராய்ச்சியை நினைத்து சிரித்துவிட்டு மீண்டும் எங்கள் இடம் திரும்பியபோது, பெங்களூரில் இருந்து பால்ராஜ் என்பவர் சர்தாருக்கு போன் பண்ணினார்.
பாஸ் அந்த டுக்சான்(Tucson) மெசின் டவுனா இருக்கு, ஆன் பண்ணி விடுங்க....
அது என்ன டுக்சான், அதை அப்படி சொல்லக்கூடாது. டுசான் அப்படின்னு சொல்லனும், முதல்ல உனக்கு அந்த மெசினுக்கு ஏன் டுசான்னு பேர் வந்தது தெரியுமா?
தெரியாது.
சரி நம்ம டீமோட டெஸ்ட் சர்வர் பேர் எல்லாத்தையும் சொல்லு
டுக்சான், மேசா, பீனிக்ஸ், கொலம்பஸ்
இதெல்லாம் நம்ம கிளையண்ட் பிராஞ்ச் இருக்கிற முக்கியமான ஊர். அந்தப்பேரிலதான் நம்ம டெஸ்ட் சர்வர் பேரெல்லாம் இருக்கு, இதுல டுசான், மேசா மற்றும் பீனிக்ஸ் அரிசோனா மாகாணத்துல இருக்கு. கொலம்பஸ் ஓகாயோ மாகாணத்துல இருக்கு, அரிசோனா வெஸ்டல இருக்கு, ஓகாயோ ஈஸ்ட்ல இருக்கு. அரிசோனால Grand canyon இருக்கு, பக்கத்துல லாஸ் வேகாஸ் இருக்கு.ஆனா ஒகாயோவில என்ன விசேசம்னா அமெரிக்காவில உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி போகனும்னா ஓகாயோ தாண்டிதான் டிரைவ் பண்ணி போகனும். 70 மைலுக்கு மேலே ஓட்டினா கண்டிப்பா டிக்கட் கிடைக்கும். சரி இது பத்தி அப்புறம் பேசலாம்.
சரி பாஸ்
ஆமா கொலம்பஸ் பத்தி சொல்ல மறந்துட்டேன், கொலம்பஸ்ன்னு ஒரு ஐரோப்பியர் இந்தியாவுக்கு மளிகை ஜாமான் வாங்க கப்பல் எடுத்துக்கிட்டு புதுவழியா போனார், ஆனால் அவர் இந்தியான்னு நினைத்து அமெரிக்காவில வந்து இறங்கிட்டார், அவர் வந்ததுக்கப்புறம் இங்கே இன்னும் நிறைய ஐரோப்பியர் வந்து, இங்கேயே வாழ்ந்த காட்டு வாசிகள் கையில் இருந்த அம்பை புடிங்கிட்டு சொம்ப கொடுத்துட்டாங்க, அதுனாலதான் இன்னைக்கு நானெல்லாம் இங்கே வந்து வேலை பாக்கிறேன், நீ அங்கேயே இருந்தாலும் இங்கதான் வேலை பாக்குறே என்ன புரியுதா?
புரியுது பாஸ், அப்படியே அந்த டுக்சான் மெசின ஆன் பண்ணுங்க பாஸ்
இவ்வளவு நேரம் சொல்லியும் நீ இன்னும் டுக்சான்னு சொல்றே, அது டுசான், ஏய் குடுகுடுப்பை அந்த டுசான் மெசின ஆன் பண்ணு. எப்படி ஆன் பண்ணனும்னு தெரியுமா? இல்லை நான் விளக்கமா சொல்லட்டுமா?
இல்லை கொண்டையரே , நான் ஆன் பண்ணி பால்ராஜ் பண்ணவேண்டிய வேலையும் முடிஞ்சிருச்சி, பீஸா வந்திருச்சி சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம் வாங்க..
22 comments:
அண்ணே நீங்க பெரிய விஞ்ஞானிண்ணே :)
எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே நீங்க பெரிய விஞ்ஞானிண்ணே :)
நன்றிண்ணே
விஞ்ஞானி குடுகுடுப்பை.
//இங்கேயே வாழ்ந்த காட்டு வாசிகள் கையில் இருந்த அம்பை புடிங்கிட்டு சொம்ப கொடுத்துட்டாங்க//
நமக்கு எதுக்குணா வம்பு
//
அவர் வந்ததுக்கப்புறம் இங்கே இன்னும் நிறைய ஐரோப்பியர் வந்து, இங்கேயே வாழ்ந்த காட்டு வாசிகள் கையில் இருந்த அம்பை புடிங்கிட்டு சொம்ப கொடுத்துட்டாங்க
//
அம்பை புடுங்கிட்டு சொம்பை குடுத்துட்டாங்களா? :0))))))))))))))))))
//
நம்ம ஊருல உள்ள ஒரு கம்பெனிலேந்து சுமார் இருநூறு பேரு வந்திருக்காங்க அவங்களோட காஸ்ட் கட்டிங், வீட்டிலே டிஷ்யூ பேப்பர் வாங்காம இங்கேயே, மாலை ஆறு மணியளவில எல்லாத்தையும் முடிச்சிட்டுதான் போவாங்க, ஆறு மணிப்பக்கம் இந்தப்பக்கம் வந்தா எல்லா ரூம்லேயும் கால் தெரியும் அப்படின்னார்.அதுக்கப்புறம் சுத்தமா பேப்பர் இருக்காதுன்னார்.
இந்த ஆராய்ச்சியை நினைத்து சிரித்துவிட்டு மீண்டும் எங்கள் இடம் திரும்பியபோது,
//
எதுனா யுனிவர்சிட்டிக்கு அனுப்பினா வருங்கால முதல்வர் டாக்டர் குடுகுடுப்பையார்ன்னு போஸ்டர் அடிக்கலாமில்ல??
நேத்தி பதிவில ஒரு கமெண்ட்ல பார்த்தேன்...
//
கும்க்கி said...
இதென்ன அண்ணாசாலை புகாரி மாதிரியல்லவா இருக்கிறது...?
டுகுடுகுப்பை...ஜக்கம்மக்கா யாரு..?
September 15, 2009 9:27 AM
//
இந்த டுகுடுகுப்பைங்கிற பேரு ரொம்ப நல்லாருக்கு....:0))))
//அதுனாலதான் இன்னைக்கு நானெல்லாம் இங்கே வந்து வேலை பாக்கிறேன், //
நீங்க அங்க போய் வேலை பாக்கறதுக்கு கொலம்பஸ் தான் காரணமா, அந்தூர்காரங்க கையில கொலம்பஸ் இன்னும் மாட்டலியா :)
//ஆமா கொலம்பஸ் பத்தி சொல்ல மறந்துட்டேன், கொலம்பஸ்ன்னு ஒரு ஐரோப்பியர் இந்தியாவுக்கு மளிகை ஜாமான் வாங்க கப்பல் எடுத்துக்கிட்டு புதுவழியா போனார், ஆனால் அவர் இந்தியான்னு நினைத்து அமெரிக்காவில வந்து இறங்கிட்டார், அவர் வந்ததுக்கப்புறம் இங்கே இன்னும் நிறைய ஐரோப்பியர் வந்து, இங்கேயே வாழ்ந்த காட்டு வாசிகள் கையில் இருந்த அம்பை புடிங்கிட்டு சொம்ப கொடுத்துட்டாங்க, அதுனாலதான் இன்னைக்கு நானெல்லாம் இங்கே வந்து வேலை பாக்கிறேன்,//
கொலம்பஸ் தான் அமெரிக்க பழங்குடியினரிடம் உடலுறவு கொண்டு, அவர்கள் மூலம் தொற்றிய பாலியல் நோய்களை, அதன் பிறகு ஐரோப்பியர்களுக்கு இறக்கு மதி செய்து அதன் பிறகு உலகம் முழுவது பரவியதாக சொல்கிறார்கள். இது நெசமா ?
கோவி.கண்ணன் said...

கண்டிப்பா பொய்யா இருக்கும். அது என்ன காட்டுவாசி மனிதர்கள் கூட செக்ஸ் வெச்சிக்கிட்டா நோய் வரும்னு ஒரு கட்டமைப்பு. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நோயே இல்லையா என்ன ?
நல்லாருக்கு
//இங்கேயே வாழ்ந்த காட்டு வாசிகள் கையில் இருந்த அம்பை புடிங்கிட்டு சொம்ப கொடுத்துட்டாங்க//
எதாவது ஒன்ன புடுங்கினா இன்னென்னு கொடுத்து தான ஆகனும்.
டுக்சான்னுக்கு நல்ல விளக்கம், இப்பிடி சொல்லி கொடுத்தால்தான் என்னை மாதிரி புத்திசாலிக்கெல்லாம் நல்லபுரியும்
//நான் சிறிது காலம் ஒன்னுக்கும் உதவாத ஓகாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்த காலம், //
ஒன்னுக்கும் ஒதவாதது எது? ஓஹாயோ மாகாணமா? இல்லை கொலம்பஸ் நகரமா? இல்லை நீங்க வேலை பாத்த கம்பெனியா?
//ஒகாயோவில என்ன விசேசம்னா அமெரிக்காவில உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி போகனும்னா ஓகாயோ தாண்டிதான் டிரைவ் பண்ணி போகனும்.//
இது அமெரிக்காவில் இல்லாத நண்பர்களுக்கு தவறான தகவலைக் கொடுக்கும் செயல். நியூயார்க் நகரில் வசிக்கும் நான் ஓஹாயோ மாகாணத்தின் வழியாக நயாகரா செல்ல வேண்டிய தேவை இல்லை..ஆனால் ஓஹாயோ மாநிலத்தில் வசிப்பவர்கள் நயாகரா செல்ல வேண்டுமானால், நியூ யார்க் மாகாணம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
முகிலன் said...

பரவாயில்லை ஓகாயோ வந்து திரும்பி போங்க வருமானம் வேண்டாமா ஒகாயோவுக்கு.
Add-தமிழ் விட்ஜெட் பட்டன்
உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்
:)))) back to formaaa?!!
//கொண்டையரே//
இது சூப்பர்
மருதநாயகம் said...
//இங்கேயே வாழ்ந்த காட்டு வாசிகள் கையில் இருந்த அம்பை புடிங்கிட்டு சொம்ப கொடுத்துட்டாங்க//
நமக்கு எதுக்குணா வம்பு
//
இதுல என்ன வம்பு இருக்கு, சுய எள்ளல், விமர்சனம் தானே, இதையெல்லாம் பண்ணாட்டி முன்னேறமுடியாது.
அது சரி said...
//
நம்ம ஊருல உள்ள ஒரு கம்பெனிலேந்து சுமார் இருநூறு பேரு வந்திருக்காங்க அவங்களோட காஸ்ட் கட்டிங், வீட்டிலே டிஷ்யூ பேப்பர் வாங்காம இங்கேயே, மாலை ஆறு மணியளவில எல்லாத்தையும் முடிச்சிட்டுதான் போவாங்க, ஆறு மணிப்பக்கம் இந்தப்பக்கம் வந்தா எல்லா ரூம்லேயும் கால் தெரியும் அப்படின்னார்.அதுக்கப்புறம் சுத்தமா பேப்பர் இருக்காதுன்னார்.
இந்த ஆராய்ச்சியை நினைத்து சிரித்துவிட்டு மீண்டும் எங்கள் இடம் திரும்பியபோது,
//
எதுனா யுனிவர்சிட்டிக்கு அனுப்பினா வருங்கால முதல்வர் டாக்டர் குடுகுடுப்பையார்ன்னு போஸ்டர் அடிக்கலாமில்ல??
//
இன்னொருத்தர் ஆராய்ச்சிக்கு எனக்கு டாக்டர் பட்டமா? வேண்டாம் எனக்காக நிறைய பல்கலைக்கழகங்கள் எனது வலைச்சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் சும்மாவே குடுக்க காத்திருக்காங்க
நன்றி டிவீயார்
நன்றி சின்ன அம்மினி
நன்றி சண்முகம்
நன்றி பித்தான்
நன்றி முல்லை
நன்றி கதிர் ஈரோடு
//இவ்வளவு நேரம் சொல்லியும் நீ இன்னும் டுக்சான்னு சொல்றே, அது டுசான், ஏய் குடுகுடுப்பை அந்த டுசான் மெசின ஆன் பண்ணு. எப்படி ஆன் பண்ணனும்னு தெரியுமா? இல்லை நான் விளக்கமா சொல்லட்டுமா?//
வெளக்கம் கேடுருந்தா அதையும் ஒரு பதிவா போடுருக்க்கலாம்ள.
Post a Comment