Wednesday, August 19, 2009

முனியங்கோயில் மந்தை

என்னுடைய கிராமத்தின் அருகில் இருக்கும் ஒரு பெரிய கிராமத்தில், மாசி மகத்தன்று முனியங்கோயிலில் நடக்கும் ஜல்லிக்கட்டு திருவிழா அனுபவம் பற்றி மூன்றே கதாபாத்திரங்களை வைத்து மந்தை நிகழ்வுகள் உரையாடல் வழியாக.

கதாபாத்திரங்கள்: முனியங்கோயில் நண்பர், புதுக்கோட்டை லங்கர் கடைக்காரர் மற்றும் நான்.

முனியங்கோயில் மந்தை நடக்குமிடம் என் ஊரிலிருந்து, ஒரு கிலோமீட்டர் தூரமே, வயல்வழியாக நடந்து முனியங்கோயிலுக்கு மாலை மூன்று மணியளவில் சென்றடைந்தேன். மந்தையில் ஜல்லிக்கட்டு ஆரம்பம் ஆகும் நிலையில் இருந்தது.
-------------------------------------------------------------------

வாடா மாப்பிளை, மந்தைக்கு மாடு அடக்க வந்தியளா?

இதெல்லாம் ஒரு மந்தை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாதிரி மாட்டத் தொழுவில விட்டு அடக்கினா அது வீரம், நீங்க கோயில் மாட்டுக்கழுத்துல கயிர கட்டிவிட்டு பிடிக்காதவன் ஊர் மாடு வந்தா கயித்தை இழுத்து மாட்ட மடக்கிருவீங்க, இந்தக்காளை மாட்ட பாக்க நாங்க ஒன்னும் வரலை , உங்க ஊரு கிடாரிகக்கண்ணுகளெல்லாம் இன்னைக்கு குளிச்சிட்டு, பூவும் பொட்டுமா வருவாளுக எதாவது தேறுதான்னு பாக்கலாம்னுதான் வந்தோம்.

நாங்க மட்டும் என்னா காளை மாடு அடக்கவா மந்தை நடத்துறோம், உங்களை மாதிரி இளிச்சவாயங்க யாராவது வந்து எங்கூரு புள்ளைகளை கணக்கு பண்ணுவீங்கன்னு தெரியும், மாட்டுறவனுக்கு இன்னைக்கு ராத்திரியே கல்யாணந்தான். சரி எவ்ளோ காசு வெச்சிருக்க எடு , சூதாட்டத்திலே ஒரு ரவுண்டு போய் ஜெயிச்சிட்டு வருவோம்.

டேய் உங்கூரு மந்தைக்கு வந்திருக்கேன் நீதாண்டா எனக்கு செலவு பண்ணனும்.சூதாட்டம் விளையாட என்கிட்ட காசு கேக்கிற வெட்கமா இல்லை.

என்ன மாப்பிளை எங்கூரு பள்ளிக்கூடத்திலதான் நீ பத்து வருசம் படிச்ச இன்னும் எங்களைப்பத்தி தெரியாம இருக்க, பச்சைத்தண்ணியும் சத்துணவையும் தவிர எதையும் எங்ககிட்ட நீ ஓசில தேத்தமுடியாது மாப்பிளை. பள்ளிக்கூடத்துக்கு டொனேசனே நாங்க வெளியூர்காரங்க தலைய தடவித்தான் வாங்குவோம், நன்கொடை நோட்டிஸ்போர்ட்ல சுத்துப்பட்டு கிராமத்தான் பேரா இருக்கும் எங்க பேரு இருக்கவே இருக்காது.

அது தெரியும், ஆனா அதுக்குன்னு திருவிழாவுக்கு வந்தவங்கிட்டயே காசு கேக்கறது அநியாயம்டா, சரி இந்தா பத்து ரூபாய்தான் இருக்கு.
---------------------

சூதாட்டம் நடக்கும் இடம்.

என்ன கொட்டை உருட்டறவரே எந்த ஊரு நீங்க?

நான் புதுக்கோட்டைங்க.

என்னா புதுக்கோட்டையா அங்கேயும் திருவிழா சீசன்தானே அங்கே கொட்டை உருட்டாம இங்க வந்து இருக்கீங்க.

அது ஒன்னுமில்லீங்க தம்பி ,புதுக்கோட்டை மாவட்டத்தில சூதாட்டம் சரியா போகாது, அங்க வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரும் குறவன் குறத்தி டான்ஸ் பாக்க போயிருவாங்க,கையில வெச்சிருக்கிற அஞ்சு, பத்தையும் குறத்தி ஜாக்கெட்ல குத்திட்டு வந்துருவாங்க, அதே தஞ்சாவூர் மாவட்டத்திலன்னா அப்பன், மவன் வித்தியாசம் இல்லாம சூதாட்டம்,சீட்டு விளையாட்டுன்னு காசு புரளும் நாமளும் கொஞ்சம் காசு பாக்கலாம் தம்பி.

ஓ அப்படியா, சரி பத்து ரூபாய் கிளாவர்ல போடறேன்.

வை சார் வை சார் வை, பத்து வெச்சா இருபது, டவுளுக்கு முப்பது.

டேய் கிளாவர் அடிக்கலடா , இருந்த பத்து ரூபாயும் போச்சு, நான் கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு ஊரப்பாக்கப்போறேண்டா.

இருடா, இவங்கிட்ட அந்தப்பத்து ரூபாயை எப்படி திருப்பி வாங்கிறேன்னு பாரு

<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
<கெட்டவார்த்தை> என் பணம் பத்து ரூபாய் போச்சுடா

தம்பி நல்லா இருப்பீங்க இந்தாங்க உங்க பத்து ரூபாய் என் பொழப்ப கெடுக்காதீங்க, தயவு செய்து வேற இடத்துக்கு போயிருங்க..இங்க வந்ததுக்கு நத்தம் சாந்தி ஜாக்கெட்ல பத்து ரூபாய குத்திட்டு நான் எங்கூர் திருவிழாவிலேயே இருந்திருக்கலாம்.
--------------------------


இந்தாடா உன் பத்து ரூபாய், எங்கூரு புள்ளையள பாக்கத்தானே வந்த, போயி யாருக்காவது பூந்தி வாங்கி குடு.

உன் தங்கச்சிக்குதான் பூந்தி வாங்கி கொடுக்கலாம்னு இருந்தேன், அவ ஏற்கனவே பூந்தி சாப்பிட்டுகிட்டு இருக்கா. நான் இப்படியே குறுக்குப்பாதையிலே போய் பத்து ரூபாய்க்கு ஒரு மூட்டைய தூக்கிட்டு, பள்ளிக்கூடத்துல படுத்து தூங்கவேண்டியதுதான் இன்னைக்கு.

மூட்டைக்குறிப்பு: பட்டை சாராயம் பாக்கெட் பத்து ரூபாய், எங்க ஊர்ல அதை மூட்டைன்னு குழூவுக்குறில சொல்வாங்க

22 comments:

நட்புடன் ஜமால் said...

பச்சைத்தண்ணியும் சத்துணவையும் தவிர எதையும் எங்ககிட்ட நீ ஓசில தேத்தமுடியாது மாப்பிளை]]


ஹா ஹ ஹா

வால்பையன் said...

//உன் தங்கச்சிக்குதான் பூந்தி வாங்கி கொடுக்கலாம்னு இருந்தேன், அவ ஏற்கனவே பூந்தி சாப்பிட்டுகிட்டு இருக்கா. //

உள்குத்துலயும், ஒரு உள்குத்தா?!

கலக்குங்க!

நட்புடன் ஜமால் said...

இருடா, இவங்கிட்ட அந்தப்பத்து ரூபாயை எப்படி திருப்பி வாங்கிறேன்னு பாரு

என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
என் பணம் பத்து ரூபாய் போச்சுடா
]]


ஹா ஹா ஹ

ரொம்ப நல்லவனா இருப்பீங்க போல் இருக்கே

ILA (a) இளா said...

பணத்தை வாங்குற விதம் நல்லா இருக்கே.

RAMYA said...

//
டேய் உங்கூரு மந்தைக்கு வந்திருக்கேன் நீதாண்டா எனக்கு செலவு பண்ணனும்.சூதாட்டம் விளையாட என்கிட்ட காசு கேக்கிற வெட்கமா இல்லை.
//

அதானே சரியான கேள்வி தான் உங்க நண்பர் கேட்டு இருக்காரு :)

RAMYA said...

பணம் கிடைச்சுதா கு.கு ??

ரவி said...

இன்னும் இன்னும்...

பத்தாது பத்தாது !!!

யாத்ரீகன் said...

:-)))))))))))))))

Unknown said...

பத்து ரூவாக்கு மூட்ட தூக்குறதுன்னா என்னா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்?

குடுகுடுப்பை said...

முகிலன் said...

பத்து ரூவாக்கு மூட்ட தூக்குறதுன்னா என்னா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்?
//

பட்டை சாராயம் பாக்கெட் பத்து ரூபாய், எங்க ஊர்ல அதை மூட்டைன்னு குழூவுக்குறில சொல்வாங்க

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி said...

இன்னும் இன்னும்...

பத்தாது பத்தாது !!!
//
பத்து ரூபாய்தான் இருக்கு, இன்னும் இரண்டும் மூட்டை கடன் சொல்லி அடிப்பமா?

Sanjai Gandhi said...

அங்கனயும் அது 10 ரூவாத் தானா? :))

Unknown said...

:)))))

//SanjaiGandhi said...
அங்கனயும் அது 10 ரூவாத் தானா? :))//

அடப்பாவி அண்ணா... :O

தினேஷ் said...

திருவிழானா சரக்கோட முடியும் அது போல மூட்டையோட முடிச்சுபுட்டிய..

உன் தங்கச்சிக்குதான் பூந்தி வாங்கி கொடுக்கலாம்னு இருந்தேன், அவ ஏற்கனவே பூந்தி சாப்பிட்டுகிட்டு இருக்கா


ஹி ஹி ஹி .. நல்ல வேளை பூந்தி சாப்பிட்டா வாந்தி எடுக்காம.

சந்தனமுல்லை said...

avvvvvvvv

:-))

☼ வெயிலான் said...

வேற ஏதோ ஒரு பதிவோட நீட்சி மாதிரி இருக்கே....

ஆனா, நல்லாருக்கு.

ரெட்மகி said...

உங்க ஊரு கிடாரிகக்கண்ணுகளெல்லாம் இன்னைக்கு குளிச்சிட்டு, பூவும் பொட்டுமா வருவாளுக எதாவது தேறுதான்னு பாக்கலாம்னுதான் வந்தோம்.

//

பொண்ணுங்கள உங்கள் ஊருல கிடாரீனா சொல்லுவாக ..

Unknown said...

நன்றிண்ணே. எங்க ஊருல பொண்ணுங்கள எல்லாம் ஜாரின்னு தான் சொல்லுவோம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பூந்தி க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா,,,,

குடுகுடுப்பை said...

ரெட்மகி said...

உங்க ஊரு கிடாரிகக்கண்ணுகளெல்லாம் இன்னைக்கு குளிச்சிட்டு, பூவும் பொட்டுமா வருவாளுக எதாவது தேறுதான்னு பாக்கலாம்னுதான் வந்தோம்.

//

பொண்ணுங்கள உங்கள் ஊருல கிடாரீனா சொல்லுவாக ..

//

இல்லை, இது ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் ஆகையால் அதைச்சார்ந்த ஒரு கிண்டலே

குடுகுடுப்பை said...

சூரியன் said...

திருவிழானா சரக்கோட முடியும் அது போல மூட்டையோட முடிச்சுபுட்டிய..

உன் தங்கச்சிக்குதான் பூந்தி வாங்கி கொடுக்கலாம்னு இருந்தேன், அவ ஏற்கனவே பூந்தி சாப்பிட்டுகிட்டு இருக்கா


ஹி ஹி ஹி .. நல்ல வேளை பூந்தி சாப்பிட்டா வாந்தி எடுக்காம.
//

அந்த பூந்திய சாப்பிட்டாலும் வாந்திதான் வரும்.

அது சரி(18185106603874041862) said...

தலைவர்னா தலைவர் தான்....லங்கர் கட்டைக்காரன் கிட்டயே காசை திருப்பி வாங்கிட்டீங்களே....ஒங்க தெறம யாருக்கு வரும்....அதான் நீங்க தலைவர்...:0))