Monday, August 3, 2009

தொவையல்: அமெரிக்கத்தொவையல்,பார்ப்பனர், தமிழ்.

1. எனெர்ஜி ஸ்டார்.(energy star).
பழைய குண்டு பல்புகள் 60 வாட் 100 வாட் எடுக்கிறது என்று புதிதாக ஐந்து வருட எனெர்ஜி ஸ்டார் பல்புகள் 13 வாட்டில் 60வாட் வெளிச்சம் கொடுக்கும், ஆனால் பல்பு விலை பத்து மடங்கு அதிகம், ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பல்புகள் 6 மாதத்தில் பஸ்பமாயின.
8000 மணிநேரம் எரித்தால் நீங்கள் 56$ சேமிக்கலாம், அதனால் மறக்காமல் லைட்டை எட்டாயிரம் மணிநேரம் இரவு பகலாக எரித்து 56$ மிச்சம் செய்யுங்கள்.

இரண்டாவதாக front loading வாஷிங் மெசின், இதுவும் பழைய மாடலை விட இரண்டிலிருந்து மூன்று மடங்கு விலை அதிகம் ஆனால் 60% சதவீதம் மின்சாரமும், 60% தண்ணீரும் சேமிக்கலாம்.ஆனால் இவற்றின் விலைக்கேற்ற தரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஐந்து வருடமாவது வேண்டும் நீங்கள் அதிகம் செலவு செய்த பணத்தை எடுக்க. இதற்கிடையில் தரம் குறைவாக இருப்பதால் இதற்கு 5 வருட வாரண்டி வாங்கினால் ஒரு $100 ஆகும். இந்தகாசுதான் நீங்கள் ஐந்து வருடத்தில் சேமிக்க முடியும் அதுவும் கடைக்காரர்களுக்கே சென்றுவிடும். மொத்தத்தில் உபயோகிப்பவர்கள் சுற்றுப்புற சூழலை காப்பாற்றினால், பொருளாதார ரீதியான பலன் அடைவது அவர்கள் இல்லை. இதில் மோட்டிவேசன் எங்கிருந்து வரும்.?

2. வீட்டு லோன்
அதாவது நீங்கள் $100000 க்கு கடன் வாங்கினால், அதுக்கான வட்டி 5% , ஆரம்பத்துல லோன் பீஸ் ஒரு ஆயிரம் டாலர் கைலேந்து கட்டணும், வட்டி குறைக்க ஒரு வழி இருக்கு. அதாவது லோன் அமவுண்டான $100000 ல ஒரு பாயிண்ட் அதாவது $1000 லோன் ஆரிஜினேசன் பீஸ் கட்டினா வட்டி 4.75 ஆ குறையும் உங்க மாதத்தவனை கம்மியாகிடும்.

அப்படிங்களா அப்ப 100 பாயிண்டு லோன் ஆரிஜினேசன் பீஸ் கட்டினா வட்டி எவ்வளவு சார்?

அப்போ உங்களுக்கு 0% வட்டில தறோம் அது மட்டுமில்லாம 90% லோன் தள்ளுபடியும் பண்றோம். நீங்க $10000மும் லோன் பீஸ் $1000ம் கட்டினா போதும்.

90% தள்ளுபடி 0% வட்டி நல்லா இருக்கு இந்த டீல் நான் இதையே எடுத்துக்கறேன்.

3.பக்கத்தில் வாழும் தமிழர்கள் ஒரு பத்து குடும்பங்கள் சேர்ந்து, குழந்தைகளுக்கான தமிழ் பாட்டு, நாடகம் நடத்தலாம் என்று என் மகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஏற்பாடு செய்திருந்தார். மூன்று வாரம் ஆடல்,பாடலில் கடினப்பயிற்சி தன் சொந்த முயற்சியில் அவருடைய வீட்டில் ஒரு பைசா காசு வாங்காமல் அனைவரையும் ஒருங்கினைத்து நடத்தினார். என் மகளின் பயிற்சி முழுவதையும் 1000% அற்பணிப்போடு என் மனைவி மட்டுமே செய்தார்(என்னுடைய பங்களிப்பு அவர்களின் உழைப்பை திருடி பதிவாக்குவது மட்டுமே). தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக அமைந்தது. அனைத்துக்குழந்தைகளும் நல்ல தமிழில் பேசினர். பலருக்கு எழுதப்படிக்கவும் தெரியும்.தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சி அளப்பறியது.

சீராரும் வதனமென.... திராவிடநல் திருநாடும் .... என்று பாடியதில்,என்னையும் மற்றொருவரையும் தவிர தமிழின விரோதிகள் ஆரியர்கள் /பார்ப்பனர்கள் என வசைச்சொல் வாங்குபவர்கள்.

ஒன்று மட்டும் புரியவில்லை இவர்கள் தமிழை அவ்வளவு சிரமம் எடுத்து படிக்கிறார்கள். தமிழிலேயே குழந்தைகளோடு வீட்டில் பேசுகிறார்கள், தெரிந்த தமிழர்களை தமிழ் கற்றுக்கொடுக்க சொல்லி ஊக்குவிக்கிறார்கள்.அவர்களிடம் கடின உழைப்பும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்துகொண்டே இருக்கிறது, எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள் தமிழையும் விடாமல் பேசுவார்கள் இவர்கள் தமிழ் விரோதிகள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனக்கும் அவர்களோடு பல கருத்து வேறுபாடுகள் உண்டு அது சுமூக சூழ்நிலையில் களையப்படவேண்டுமே தவிர வெறுப்புணர்ச்சியை தூண்டி அல்ல. அவர்கள் தமிழர் அல்ல என்று வேற்றுமை உருவாக்காமல் அனைத்து தமிழர்களும் உள்ளடக்கிய ஒரு சுமூக சூழ்நிலையை ஏற்படுத்தி அனைத்து அறிவும் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்..சமூகங்களிடையே புரிதலை ஏற்படுத்தி முன்னேற வழி இருந்தால் அதை செய்வோமே.

அவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை பதிவாகப்போடலாம். ஆனால் முதலில் சுய விமர்சனம்.

ஹரிணியின் பாட்டு இங்கே

31 comments:

Unknown said...

முதல் இரண்டு விஷயங்களைப் பற்றி எனக்கு சொல்ல பெரிதாக கருத்துக்களோ இல்லை அனுபவமோ இல்லை. ஆனால் மூன்றாவது விஷயத்திற்கு என்னால் கண்டிப்பாக கருத்து சொல்ல முடியும்.

இங்கே நாங்கள் வசிக்கும் ஊரில் சுமார் எழுபது எண்பது தமிழ் குடும்பங்கள் இருக்கும். "தமிழ் சங்கம்" என்ற பெயரில் தமிழ் நாட்டில் இருந்து வந்தோர் கூடி ஆங்கிலத்தில் கலந்துரையாடி, சில பல தமிழ் பாட்டுகளுக்கு ஆங்கில நடனம் ஆடி, பெரியவர்கள் தமிழ் பட பாட்டுக்களை பாடி செல்லும் கூட்டங்கள் வருடத்தில் நான்கு முறை நடக்கும் - பொங்கல், புது வருடம், பிக்னிக், தீபாவளி என்ற பெயரில். இந்த கூட்டங்களில், தொடக்கம் முதல் கடைசி வரை ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொது எழுந்து நிற்க கூட மனம் வராது பலருக்கு. நாம் எழுந்து நின்றால் நம்மை கேவலமாக ஒரு பார்வை பார்ப்பார்கள். இதில் தன் சொந்த அப்பாவின் பெயரையே ஆங்கிலப்படுத்தி அழைக்கும் பிள்ளைகளை உச்சி முகரும் அம்மாக்கள் அதிகம் - பாஸ்கரை பஸ்கார் என்றும் ஸ்ரீ ஹரியை ஸ்ரீ ஹாரி என்றும் -

இந்த ஒரு நிகழ்ச்சியில் என் மனைவி சில குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து (எங்களுக்கு அப்போது குழந்தைகள் இல்லாத போதும் கூட) தமிழ் நாட்டு நடனங்கள் ஆன கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, நாட்டுப்புற நடனம் ஆகியவற்றை கற்று கொடுத்து ஆடவும் வைத்தார். அவர்களும் பிரமாதமாக ஆடினர். அதற்கு பயிற்சி கொடுக்கும்போது, பிள்ளைகள் தமிழில் புரிந்து கொண்டால் கூட, ஒரு அம்மா, நீங்க எதுக்கும் ஒரு தடவ தமிழ்லையும் சொல்லிடுங்க. அப்போ தன் பிள்ளைங்களுக்கு இங்கிலீஷ் கத்துக்க முடியும். என்று சொன்ன கொடுமை நடந்தது.

இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு அருமையான தமிழ் பாடலை கர்நாடக சங்கீதம் பயின்ற இரண்டு "தமிழ்" பெண்கள் (பதினைந்து அல்லது பதினாறு வயது) பாடினர் - மதுர வால் மீனளோசினி அம்ம - என்று..

அதே நிகழ்ச்சியில், மாறு வேடப்போட்டியில், அனுமன் போல வேடம் இட்டு வந்தான் ஒரு பொடியன். அவன் இப்போது தன் இந்தியாவில் இருந்து இங்கே வந்திருக்கிறான். அவனுக்கு தமிழ் தவிர ஆங்கிலம் அவ்வளவாக வர வில்லை. அவன் தமிழில் பேசினாலும் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர் விடாமல் ஆங்கிலத்திலேயே அவனிடம் கேள்வி கேட்டார். ஏன் அப்படி கேட்டீர்கள் என்றால், நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தமிழ் தெரியாதாம். அதனால் அப்படி பேசினாராம்.

இந்த கொடுமை தாங்க முடியாமல் நான் அந்த தமிழ் சங்க நிகழ்ச்சிகளுக்கு போவதே இல்லை. யு ட்யுப்பில் மற்ற நகர தமிழ் சங்க நிகழ்ச்சிகளை பார்க்கும் பொது எனக்கு பொறாமையாக இருக்கிறது.

அது சரி(18185106603874041862) said...

//
சீராரும் வதனமென திராவிடநல் திருநாடும் என்று பாடியதில்,என்னையும் மற்றொருவரையும் தவிர தமிழின விரோதிகள் ஆரியர்கள் /பார்ப்பனர்கள் என வசைச்சொல் வாங்குபவர்கள்.
//

இது எனக்கு புரியலை....தமிழின விரோதிகள் என்று சொல்பவர்கள் யார்? ஏன்??

பார்ப்பனர்கள் என்பதால் தமிழின விரோதிகள் என்று சொல்கிறார்களா?? ஆம் எனில் அதற்கு மொழி தாண்டி பல்வேறு காரணங்கள்....விவாதிக்க ஆரம்பித்தால் உங்கள் பதிவின் நோக்கம் திசை மாறிப் போகும்...

வேண்டுமானால், வருங்கால முதல்வரில் ஆரம்பிக்கலாமே :0)))

குடுகுடுப்பை said...

வேண்டுமானால், வருங்கால முதல்வரில் ஆரம்பிக்கலாமே :0)))

August 3, 2009 4:41 PM

ஆரம்பிச்சு விடுங்க ஒரு பதிவ போட்டு நல்ல விவாதங்கள் எதிர்பார்ப்போம்

தாரணி பிரியா said...

உள்ளேன் அய்யா:). நிறைய புரியலை அய்யா :)

பித்தனின் வாக்கு said...

nan thamilan ayyangar enathai sarthavan, brahminarkalum thamilarkal than unmaiyil arriayarkal enbavarkal vada nattil punjab makanathai santharvarkal. freedom kidaitha udan apothu dominate seitha oru communitya dummy seivatharku aka uruvana kodpadu ithu. nankal nallayira thiviya prabantham enum alvarkalin thamil pasuram than vedathamaga padippom, brahminakal vadam ennum samasgirutham karthu othuvathal thamilar allatharkala parkappattanar. mudithal urthu posum mslimkalai thamilar alla enru solli porunkal

சந்தனமுல்லை said...

ஹரிணியோட பாட்டு நல்லாருந்துச்சு!! :-)

அது ஒரு கனாக் காலம் said...

என்னுடைய இந்த அனுபவத்தை தனி பதிவாக தான் போட வேண்டும், இருந்தாலும் இங்கு பின்னோட்டத்தில் வருவதில் தவறொன்றும் இல்லை

நான் சில வருடம் முன்பு ப்ளோரிடா போன பொழுது.. என்னுடன் கூட படித்த, நன்றாக படித்ததனால் , ஸ்காலர்ஷிப் வாங்கி வேறு பள்ளிக்கு போய் படித்து, பின் அமெரிக்காவில் இருக்கிறான் என்று மட்டும் தான் தெரியும், - 9 வது வரை தான் அவனை பார்த்ததுண்டு . ஒரு இரண்டு மணி நேரம் டிரைவ் செய்து போனேன், மியாமியில் இருந்ந்தது அவர்கள் வீடு, நான் போன பொழுது அவர்களின் ஒரே பையன் வீட்டில் இல்லை, நான் அருகில் உள்ள கால்ப் கோர்ஸில், ஒரு கேம் விளையாடிவிட்டு மீண்டும் போனேன்... அந்த பையன் வீட்டில் இருந்தான், அப்பா போலவே மிக நன்றாக படிக்கும் பையன், நல்ல உயரமாக இருந்தான், 9 வது படித்துகொண்டிருந்தான், அவர்கள் கோயம்புத்தூர் பக்கம், என்னுடைய நண்பனின் அப்பா , அம்மா இருவரும் இப்போது இல்லை - காலமாகி விட்டார்கள்.

ஆச்சர்யம் என்ன என்றால், அந்த பையனுக்கு தமிழ் பேசத் தெரியாது, ஓரளவுக்கு நாம் பேசினால் புரிந்து கொள்ள முடியும், நம்முடைய உணவு பழக்கமும் அவனுக்கு பிடிக்காது, இட்லி , தோசை, சாதம் சாப்பிட மாட்டான், பாக்கெட்டில் கிடைக்கும், ரெடி உணவை, ஓவனில் சுடவைத்து தனக்கு வேண்டியதை சாப்பிடுவான் ... பேச, பேச அவனின் குழந்தை குணம் நன்றாக தெரிந்தது, அப்பா கூடை பந்து விளையாடினார் என்று நம்பவே இல்லை, அன்று ஜெமினி கணேசன் நடித்த ராம் காட்டினார்கள், அழுது கொண்டே பார்த்தேன் !!!!!!. அது அவனுக்கு வினோதமாக இருந்தது. அந்த சந்திப்பு மனதை பிசைந்து கொண்டே இருந்தது, ... தமிழ் பேசாமல் எப்படி இருக்க முடியும், ... நாளை நாம் என்ன செய்ய வேண்டும் ... ஒரே கேள்வி பதில் தான்..இன்னமும் தொடர்கிறது.

என்னுடைய நண்பன் ஒரு பிராமணன் இல்லை... அதுவே எனக்கு தெரிந்த உறவினர்களின் ( பார்பனர்கள்) குழந்தை, இன்னும் பிறர், அழகாக ஸ்லோகங்கள் சொல்கின்றனர், திருப்பாவை ஒப்பிகின்றனர், தமிழ் பாட்டு நன்றாக பாடுகின்றனர்....

இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டேன், நாம் தான் முனைப்புடன் செயல் பட வேண்டும்...

பி.கு:- திரு சஞ்சய் சுப்ரமணியன் , கர்நாடக பாடகர், சென்னையில் தன் மக்களை தமிழ் வழி பாடம் சொல்லி தருவதாக கேள்வி.

சுந்தர்

Anonymous said...

//ஒன்று மட்டும் புரியவில்லை இவர்கள் தமிழை அவ்வளவு சிரமம் எடுத்து படிக்கிறார்கள். தமிழிலேயே குழந்தைகளோடு வீட்டில் பேசுகிறார்கள், தெரிந்த தமிழர்களை தமிழ் கற்றுக்கொடுக்க சொல்லி ஊக்குவிக்கிறார்கள்.அவர்களிடம் கடின உழைப்பும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்துகொண்டே இருக்கிறது, எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள் தமிழையும் விடாமல் பேசுவார்கள் இவர்கள் தமிழ் விரோதிகள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

அவர்கள் ஆரியர்கள் /பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் !!!. மத்தவர்கள் அவர்களை போல் மாறும் முயற்சிகள் இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களிடம் காணப்படுகிறது.

குடுகுடுப்பை said...

Anonymous said...
//ஒன்று மட்டும் புரியவில்லை இவர்கள் தமிழை அவ்வளவு சிரமம் எடுத்து படிக்கிறார்கள். தமிழிலேயே குழந்தைகளோடு வீட்டில் பேசுகிறார்கள், தெரிந்த தமிழர்களை தமிழ் கற்றுக்கொடுக்க சொல்லி ஊக்குவிக்கிறார்கள்.அவர்களிடம் கடின உழைப்பும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்துகொண்டே இருக்கிறது, எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள் தமிழையும் விடாமல் பேசுவார்கள் இவர்கள் தமிழ் விரோதிகள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

அவர்கள் ஆரியர்கள் /பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் !!!. மத்தவர்கள் அவர்களை போல் மாறும் முயற்சிகள் இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களிடம் காணப்படுகிறது//

இந்த விவாதத்தில் என்ன வலு இருக்கிறது.ஆரியனோ , திராவிடனோ தமிழ் பேசுபவன் அனைவரையும் ஒருங்கினைத்து அறிவு பரிமாறல் நடந்து அனைவரும் முன்னேறும் வழியைப்பாருங்கள்.யாரையே குறை சொல்லிக்கொண்டே இருந்தால் அது வியாதி

வெற்றி-[க்]-கதிரவன் said...

குடுப்ஸ்,,,

நடத்துங்கோ நடத்துங்கோ... ஆனா தமிழ் தாய் வாழ்த்த ஈழ/மலேசிய/சிங்கை/தென்ஆபிரிக்கா தமிழர்களுடன் பாடும் பொழுது எந்த வாழ்த்த பாடுறது.

தமிழ்நாட்டு தமிழ் தாய் வாழ்த்தவா ?

-:) எப்படி கோத்துட்டேன் பாத்திகளா -:))))))

Anonymous said...

1) Energy Star: There is no gain for the consumers ultimately. Its upto us for the whole good. I have planted a maple tree in the backyard recently, religiously segregating the milk cans for recycling, drive corolla to office (35 miles per gallon). Few contributions to our environment to reduce CO2 emission.

2) Brahmins here are equally or more interested in learning Thamizh.

Had a bad experience with a brahmin coterie in a big Indian company. This is debatable.

Anonymous said...

//இந்த விவாதத்தில் என்ன வலு இருக்கிறது.ஆரியனோ , திராவிடனோ தமிழ் பேசுபவன் அனைவரையும் ஒருங்கினைத்து அறிவு பரிமாறல் நடந்து அனைவரும் முன்னேறும் வழியைப்பாருங்கள்.//
அப்படி நடந்தால் சந்தோசம் .

//யாரையே குறை சொல்லிக்கொண்டே இருந்தால் அது வியாதி//
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்று சொல்ல யாரும் இங்கு மகாத்மாக்கள் இல்லை.

நன்றி

Unknown said...

இங்கு நான் அது சரி அவர்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன். பார்ப்பார்கள் தமிழின விரோதி என்று யாரும் சொல்வதில். திராவிட-ஆரிய சண்டை வேறு, தமிழ் மொழிக்கான சண்டை வேறு.. திராவிடன் ஆரியன் என்று வரும்போது எதிர் எதிர் அணியில் இருந்து பேசுபவர்கள் தமிழ் என்று வரும்போது ஓரணியில் சேர்வதை கண்கூடாக கண்டவன் நான். இது எப்படி என்றால், பாபர் மசூதி இடித்தது தவறா சரியா என்று பேசும்போது எதிர் எதிர் அணியில் இருப்பவர்கள், கார்கில் சண்டையில் இந்தியாவுக்கு சார்பாக பேசுவது போல. எப்படி இந்த கார்கில் விசயத்திலும் சில விஷமிகள் எதிர் அணியை சப்போர்ட் செய்கிறார்களோ, அது முதல் சண்டைக்கும் பொருந்தும்.

மற்றபடி, புலம் பெயர்ந்தோரில் பிராமணர் அல்லாதோர் தமிழை வளர்ப்பதை விட பிராமணர் வளர்க்கிறார்கள். என்னுடைய முதல் பின்னூட்டத்தில் நான் சொன்னவர்களில் பிராமணர் பிராமணர் அல்லாதோர் எல்லாருமே அடக்கம்.

மற்றபடி என் நண்பர் ஒருவர் ஒரு வித்தியாசமான கவனிப்பை என்னுடன் பகிர்ந்து கொண்டார். வெளி நாடு வாழ் தமிழர்கள், பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி தராததற்கு அவர்களின் தாழ்வு மனப்பான்மையே காரணம் என்றும் பிராமணர்களுக்கு பொதுவாகவே தாழ்வு மனப்பான்மை குறைவாக இருப்பதால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார். ஒரு விதத்தில் இது சரியோ என்று படுகிறது. நம்மில் எத்தனை பேர் வேட்டி கட்டிக்கொண்டு வால்-மார்ட்க்கோ ஜெ.சி.பென்னிக்கோ போவோம்? இல்லை பெண்கள் தன் புடவை கட்டிக்கொண்டு செல்கிறார்களா? இதற்கு என்ன காரணம்? அமெரிக்கன் கிண்டல் செய்வான் என்று பயந்து தானே? எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்கு மதியம் இந்திய உணவு கட்டி கொடுக்கிறோம்? சண்ட்விட்சும் பர்கரும் தானே கட்டி கொடுக்கிறோம்? இதற்கு என்ன காரணம்? பிள்ளைகளுக்கு அது தான் பிடிக்கும் என்ற சப்பை கட்டு இங்கே வேண்டாம். மற்ற குழந்தைகள் இவர்களை பார்த்து கிண்டல் செய்ய கூடாது என்பதால் தானே? வெளி நாட்டவர் இந்தியா வந்தால் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு சட்டை இல்லாமல் வெளியே சுற்றுவதில்லையா? ஏன் நமக்கு மட்டும் மற்றவர் என்ன நினைப்பரோ என்ற பயம்? நமக்கு முதலில் இந்த பயம் போனால் தான் நம் பிள்ளைகள் பயப்படாமல் தமிழில் பேசவும், நம் உணவு வகைகளை வெளியே தைரியமாக சாப்பிடவும் செய்வார்கள்.

குறிப்பு: நான் பிராமணன் இல்லை.

Anonymous said...

//வெளி நாடு வாழ் தமிழர்கள், பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி தராததற்கு அவர்களின் தாழ்வு மனப்பான்மையே காரணம்///.

தினேஷ் உங்கள் நண்பரின் கருத்து சிந்திக்க மற்றும் விவாதிக்க வேண்டியதயே. என்னுடைய நண்பர் சொன்னார் அமெரிக்காவில் வாழும் பெரும்பாலன் கிறீஸ்தவ மற்றும் இஸ்லாமிய தமிழ் அன்பர்களின் குழந்தை இந்த தமிழ் பள்ளிகளுக்கு செல்வதிலையமே. தமிழ் என்ற பண்பாட்டு உணர்வை விட இங்கு மதம் என்ற உணர்வை மேல்லோங்கி நிற்கிறது என்டர். கவனிதிர்களா.

குடுகுடுப்பை & தினேஷ் .

நன்றி.

குறிப்பு: நானும் பிராமணன் இல்லை.:))

குடுகுடுப்பை said...

Anonymous said...

//இந்த விவாதத்தில் என்ன வலு இருக்கிறது.ஆரியனோ , திராவிடனோ தமிழ் பேசுபவன் அனைவரையும் ஒருங்கினைத்து அறிவு பரிமாறல் நடந்து அனைவரும் முன்னேறும் வழியைப்பாருங்கள்.//
அப்படி நடந்தால் சந்தோசம் .

//யாரையே குறை சொல்லிக்கொண்டே இருந்தால் அது வியாதி//
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்று சொல்ல யாரும் இங்கு மகாத்மாக்கள் இல்லை.

நன்றி
//

அடுத்தவன் பற்றிய கவலை நமக்கேன். நம்மை சரி செய்துகொள்வோம்.நாம் மகாத்மாவாக முயற்சிப்போம்.

வால்பையன் said...

லோன் மேட்டர் தான் செமக்காமெடி!

ரவி said...

டெஸ்ட்

ரவி said...

சரி இதுல டெஸ்ட் பண்ணலாம்

அது சரி(18185106603874041862) said...

ரெடி...ஸ்டார்ட்...மீஜிக்....

தலைவரே, வருங்கால முதல்வர்ல இந்த டாபிக்கை ஆரம்பிச்சிருங்களேன்...நானே ஆரம்பிச்சிருவேன்...ஆனா, பொதுச் செயலாளர் இருக்கும் போது தொண்டன் பேசக் கூடாது....

அதுவுமில்லாம நீங்க எதுனா சொன்னா தான உங்களை எதிர்த்து ஒழிகன்னு கோஷம் போட முடியும்....இப்பிடி எதுவுமே சொல்லாம இருந்தா எப்பிடி கட்சி நடத்துறது???

உங்களுக்கு இந்த வீக் என்ட் வரை டைம்....நீங்க எழுதல, நானே எழுதிடுவேன் :0)))

குடுகுடுப்பை said...

கருத்து பறிமாற்றத்துக்கு நன்றி

Sanjai Gandhi said...

கண்ண கட்டுது.. :)

Anonymous said...

//அவர்கள் ஆரியர்கள் /பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் !!!. மத்தவர்கள் அவர்களை போல் மாறும் முயற்சிகள் இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களிடம் காணப்படுகிறது.
//

Very true.

Anonymous said...

Looks like there are no takers for his first point (Global Warming!!) but almost all the replies are on "Aryans / Parpanars" !!

I understand this is a senstive topic and people enjoy reading and writing this. Here in USA, what i observe is that a "Brahmin" as an individual befriends and behaves nicely with you. But as a group or coterie, they talk in their own slang (seriously no problem with that) and most of the time ignore others.

On your first point (energy efficient Vs incentives), i would rather see it from holistic point of view rather than short term benefits. Buying energy efficient cars (Prius), increasing the temperature in the thermostat to 78 degree F are some of the minimum initiatives.

Venkat

சிவா said...

ஆண் சாதி பெண் சாதி என இரண்டு மட்டும்தான் இருக்கிறது எனச்சொல்லும் நாத்திகன் பார்ப்பன சாதி என ஒன்றுள்ளது என மூன்றாவது சாதியை ஏன் உருவாக்குகிறான்?. பிற்படுத்தப்பட்டோர் என அரசு சலுகையைத்தந்து, படித்து( 40 மதிப்பெண் வாங்கினாலும் மற்றவர்களின் 80 மதிப்பெண்ணுக்கு சமம் )பொருளாதாரத்தில் மற்றவர்களைவிடவும் முன்னேறிய பிறகும் நாங்கள் பிற்படுத்தப்பட்டோர்(சாதி) என தம்மக்களுக்கும் அரசு சலுகைகளை அளித்து வாழும் இவர்கள் ஈனப்பிறவிகளே. ஆனால் இந்த மேலும் கீழும் அல்லாத (சாதி)வர்களின் கூத்து தான் மிகவும் கடினமான ஒன்று. எல்லாவற்றிர்க்கும் பணம் கட்டித்தான் ஆகவேண்டிய நிலைமை. இப்பொழுதெல்லாம் மேல் சாதியினர் ஓர் இடத்தில் வேலைக்குச்சென்றால் அவர் இனத்தாருக்கு முடிந்த அளவு உதவிகள் புரிகிறார்கள்.ஆனால் இந்த இடைப்பட்ட ஜென்மம் ஏதும் செய்வதில்லை. சுலோகங்கள் சொல்வதில் உள்ள பயன் நமது நினைவாற்றலை அது அதிகப்படுத்தும். நாத்திகன் எதை சொல்லிக்கொடுப்பான். அன்றைய சாதி/ இன்றைய சாதி; ப்ராமணன் (மத குருக்கள்),கொத்தனார்-சிவில் இன்ஜினியர். ஆசாரி- உட் கிராப்ட் டொக்னீசியன். கொல்லன்- மெக்கானிக்கல் இன்ஜினியர், வைத்தியர் - டாக்டர், செட்டியார்-இன்றும் பிஸினஸ்மேன், அன்றைய கணக்குப்பிள்ளை இப்பொழுது ஆடிட்டர்.(இதுல நிறைய மேல் சாதியினர்), இப்படியே பட்டியலிடலாம். இதை ஏன் கூறுகிறேன் என்றால் தந்தை டாக்டரா மகனும் டாக்டர், தந்தை இன்ஜினியரா மகனும் அதே. டாக்டர் மாப்பிள்ளைக்கு டாக்டர்தான் மறுமகள், இன்ஜினீயர் மாப்பிள்ளைக்கு இன்ஜினியர் மருமகள், அப்பா துபாய்ல கொத்தனாரா இருக்காரு மகனும் அங்கேயே இருக்கான். துபாய்ல கூட வேலை பார்க்கும் இன்னொரு கொத்தனாரின் மகள் மருமகளாகிறாள். இப்படியே நாம் இன்னும் சாதியை மறக்கவில்லை. இதைவிட கொடுமை 50 பேர் கொண்ட படித்தவர்களின் கூட்டத்தில் எல்லா டாக்டர்களும் ஒன்றாகிவிடுவதும் எல்லா இன்ஜினீயர்கள் ஒன்றாய் கூட்டமாக உட்கார்ந்து பேசுவதும் எங்கும் காணலாம்.
2.ஆலய வழிபாட்டின் உண்மையான பயன் என்ன? அது நமக்கு என்ன தருகிறது என எண்ணிப்பார்க்க வேண்டும். அன்றைய கால கட்டத்தில் ஆலயத்திற்கு செல்பவர்கள் தங்களின் அன்றாட அலைச்சினால் உண்டாகும் மன பாரத்தை இறக்கிவைக்க அந்த இடம் ஏதுவாக இருந்தது. ஆலயத்தில் உணவளிக்கப்பட்டது. ஒரு social network உருவாக ஏதுவாக இருந்தது. பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்கும் ஒரு exchange ஆகவும் இருந்திருக்கிறது. இன்றுள்ள techno expo க்கள் அந்த கால திருவிழாக்கள் என்பதை நாம் சுத்தமாக மறந்துவிட்டோம். நம் வேதங்களும் புராணங்களும் வடித்த விஞ்ஞான விதிகளுக்கு அளவே இல்லை. இப்படித்தான் வாழவேண்டும் என அந்த கால கட்டத்திற்கேற்ப வழிமுறைகளை விதித்துள்ளது வியக்கத்தக்கது. உணவிற்கு முன் கை கால்களை சுத்தம் செய்யவேண்டுமென்பதும், வெளியூருக்கு பயணம் செய்யும்போது கையுடன் கொண்டுவந்த உணவை இயன்றவரை குளக்கரையில் உண்ணவேண்டும் அதிலும் முதலில் மீன்களுக்கு உணவளிக்கவண்டும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது . மீன்களுக்கு உணவளித்து இறைவனை பிரார்த்திக்கவேண்டுமாம். உணவு food poison ஆகியுள்ளதா என்பதை எளிதில் கண்டறியும் முறை. இன்னும் பல விடயங்கள் உள்ளது. தியானம் செய்வதால் concentration அதிகரிக்கிறது என்பது பரவலாக ஒத்துக்கொள்ளப்படும் உண்மை. கஷ்டப்பட்டு French கற்றுக்கொள்கிறோம் ஆனால் இந்திய தேசிய மொழியான இந்தியை கற்பதில்லை. மொழி வெறி கண்ணை மறைக்கிறது. கண்ணில் விளக்கெண்ணய் ஊற்றி ஆங்கில காவியங்களை கற்கிரோம் ஆனால் சமஸ்கிருதத்தில் உள்ள நம் முன்னோர்கள் எழுதிய வேதங்கள் படிப்பதில்லை. we still depend on consultants to tell what is wrong with us அதைப்போல வெள்ளைக்காரன் நம் வேதங்களை படித்து டாக்டர் பட்டம் வாங்கி அவன் ஆங்கிலத்தில் எழுதும் புத்தகங்களை அனியாய விலைக்கு வாங்கிப்படிக்கும் இந்தியர்கள் வாழ்க

அரசூரான் said...

அண்ணாத்தே...அமெரிக்க தொகையல் சூப்பரு... இப்போ அதைத்தான் நான் நக்கி சாப்பிட்டுகிட்டு இருக்கேன்... அமெரிக்க வியாபார உத்தி உலகத்துல வேருயொவருக்கு வராது... இந்தா இது பிஃரி, சும்மா எடுத்துக்கோம்பான் பின்னாடி பீஸ புடுங்கிடுவான்...

அரசூரான் said...

நேரம் கிடைச்சா படிச்சி பாருங்க...
அமெரிக்காவில் அடக்க விலை
http://arasooraan.blogspot.com/2008/02/blog-post_8962.html

அது சரி(18185106603874041862) said...

//
ஆண் சாதி பெண் சாதி என இரண்டு மட்டும்தான் இருக்கிறது எனச்சொல்லும் நாத்திகன் பார்ப்பன சாதி என ஒன்றுள்ளது என மூன்றாவது சாதியை ஏன் உருவாக்குகிறான்?.
//

முதலில், நாத்திகவாதத்திற்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை...சாதி என்பது இந்தியாவின் பிரச்சினை...ஆனால் கடவுள் மறுப்பு என்பது உலகம் தழுவிய விஷயம்...

பார்ப்பன சாதியை உருவாக்கியதும், கட்டிக்காப்பதும் நாத்திகர்கள் அல்ல...தாங்கள் பிரமனின் தலையில் இருந்து பிறந்ததாக இன்னமும் நம்பும் சில பார்ப்பனர்கள் தான்!

//
பிற்படுத்தப்பட்டோர் என அரசு சலுகையைத்தந்து, படித்து( 40 மதிப்பெண் வாங்கினாலும் மற்றவர்களின் 80 மதிப்பெண்ணுக்கு சமம் )பொருளாதாரத்தில் மற்றவர்களைவிடவும் முன்னேறிய பிறகும் நாங்கள் பிற்படுத்தப்பட்டோர்(சாதி) என தம்மக்களுக்கும் அரசு சலுகைகளை அளித்து வாழும் இவர்கள் ஈனப்பிறவிகளே.
//

40 மார்க் வாங்கினால் 80க்கு சமமா?? கொஞ்சம் ரிசல்ட்டுகளையும், கட் ஆஃப் மதிப்பெண்களையும் பார்த்துவிட்டு பேசுவது நல்லது....
பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற ஒரு நிலையை உருவாக்கியது யார்?? பிற்படுத்தியது யார்?? சூத்திரம் வேதம் படித்தால் அவனை ஒதுக்கி வை என்றது யார்??

//
இப்பொழுதெல்லாம் மேல் சாதியினர் ஓர் இடத்தில் வேலைக்குச்சென்றால் அவர் இனத்தாருக்கு முடிந்த அளவு உதவிகள் புரிகிறார்கள்.ஆனால் இந்த இடைப்பட்ட ஜென்மம் ஏதும் செய்வதில்லை.
//

ஆக, தன் இனத்தாருக்கே உதவி செய்யும் ஈன ஜென்மன் என்று நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்பது புரிகிறது!

//
சுலோகங்கள் சொல்வதில் உள்ள பயன் நமது நினைவாற்றலை அது அதிகப்படுத்தும். நாத்திகன் எதை சொல்லிக்கொடுப்பான்.
//

நாத்திகன் எதையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள் என்று சொல்லிக் கொடுப்பான்...அப்பன் சொன்னான், தாத்தன் சொன்னான், வேதத்தில் அப்படித்தானே சொல்லிருக்கு என்று பேசாமல் எதையும் கேள்வி கேள் என்று சொல்லிக் கொடுப்பான்...மேலேயிருந்து ஆப்பிள் விழுந்தால் ஈசன் அம்மைக்கு கொடுத்த ஆப்பிள் தவறி பூமிக்கு வந்துவிட்டது...அதை தேடி முருகன் வந்தார் அவர் பின்னே அவ்வையார் வந்தார் என்று கதை சொல்லாமல், ஆப்பிள் ஏன் மேலே போகாமல் கீழே விழுந்தது என்று யோசி என்று சொல்லிக் கொடுப்பான்!

//
அன்றைய சாதி/ இன்றைய சாதி; ப்ராமணன் (மத குருக்கள்),கொத்தனார்-சிவில் இன்ஜினியர். ஆசாரி- உட் கிராப்ட் டொக்னீசியன். கொல்லன்- மெக்கானிக்கல் இன்ஜினியர், வைத்தியர் - டாக்டர், செட்டியார்-இன்றும் பிஸினஸ்மேன், அன்றைய கணக்குப்பிள்ளை இப்பொழுது ஆடிட்டர்.(இதுல நிறைய மேல் சாதியினர்), இப்படியே பட்டியலிடலாம். இதை ஏன் கூறுகிறேன் என்றால் தந்தை டாக்டரா மகனும் டாக்டர், தந்தை இன்ஜினியரா மகனும் அதே. டாக்டர் மாப்பிள்ளைக்கு டாக்டர்தான் மறுமகள், இன்ஜினீயர் மாப்பிள்ளைக்கு இன்ஜினியர் மருமகள், அப்பா துபாய்ல கொத்தனாரா இருக்காரு மகனும் அங்கேயே இருக்கான். துபாய்ல கூட வேலை பார்க்கும் இன்னொரு கொத்தனாரின் மகள் மருமகளாகிறாள். இப்படியே நாம் இன்னும் சாதியை மறக்கவில்லை. இதைவிட கொடுமை 50 பேர் கொண்ட படித்தவர்களின் கூட்டத்தில் எல்லா டாக்டர்களும் ஒன்றாகிவிடுவதும் எல்லா இன்ஜினீயர்கள் ஒன்றாய் கூட்டமாக உட்கார்ந்து பேசுவதும் எங்கும் காணலாம்.
//

வெண்டைக்காயை விளக்கெண்ணையில் வதக்கி.....சாதிக்கு சப்பை கட்டுவது என்று வந்த பிறகு கொஞ்சம் திறமையாக கட்டியிருக்கலாம்...

டாக்டர் மகன் என்சியரிங் படித்தால் அவனும் எஞ்சினியர் ஆகலாம்....ஆனால் சூத்திரன் மகன் வேதம் படித்தால் அவனை பார்ப்பனர் என்று ஏற்றுக் கொள்வார்களா???

அய்யங்கார் கலெக்டர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய கலெக்டரை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா???

//

அது சரி(18185106603874041862) said...

2.ஆலய வழிபாட்டின் உண்மையான பயன் என்ன? அது நமக்கு என்ன தருகிறது என எண்ணிப்பார்க்க வேண்டும். அன்றைய கால கட்டத்தில் ஆலயத்திற்கு செல்பவர்கள் தங்களின் அன்றாட அலைச்சினால் உண்டாகும் மன பாரத்தை இறக்கிவைக்க அந்த இடம் ஏதுவாக இருந்தது. ஆலயத்தில் உணவளிக்கப்பட்டது. ஒரு social network உருவாக ஏதுவாக இருந்தது.
//

அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களும் (பல ஊர்களில் பெண்களும்) மேலுடை அணியாமல் இருந்ததாக சொல்கிறார்கள்...அதே போல எல்லா இடங்களுக்கும் மாட்டு வண்டியிலும் பெரும் பணக்காரர்கள் மட்டுமே குதிரை வண்டியிலும் பயணம் செய்திருக்கிறார்கள்.....
ஆனால் இன்றைக்கும் மாட்டு வண்டியில் தான் போக வேண்டும் என்று சொல்பவர்களை குறித்து என்ன சொல்வது???

//
பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்கும் ஒரு exchange ஆகவும் இருந்திருக்கிறது. இன்றுள்ள techno expo க்கள் அந்த கால திருவிழாக்கள் என்பதை நாம் சுத்தமாக மறந்துவிட்டோம்.
//

கோயில்கள் கம்யூனிட்டி சென்டராக மாறுவது குறித்து பிரச்சினை இல்லை....ஆனால் பாம்பு பால் குடிக்கிறது, பிள்ளையார் வடை சாப்பிட்டார், சட்னில உப்பு பத்தலைன்னு கோவிச்சுண்டார் போன்ற திருட்டு தனங்களே பிரச்சினையை கிளப்புகிறது...

//
நம் வேதங்களும் புராணங்களும் வடித்த விஞ்ஞான விதிகளுக்கு அளவே இல்லை. இப்படித்தான் வாழவேண்டும் என அந்த கால கட்டத்திற்கேற்ப வழிமுறைகளை விதித்துள்ளது வியக்கத்தக்கது.
//

"அந்த காலகட்டத்திற்கேற்ப"!!! பிரச்சினை இது தான்... வேதங்களின் விதிமுறைகள் அந்த காலகட்டத்திற்கே....இன்றைக்கு அல்ல!

//
உணவிற்கு முன் கை கால்களை சுத்தம் செய்யவேண்டுமென்பதும், வெளியூருக்கு பயணம் செய்யும்போது கையுடன் கொண்டுவந்த உணவை இயன்றவரை குளக்கரையில் உண்ணவேண்டும் அதிலும் முதலில் மீன்களுக்கு உணவளிக்கவண்டும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது . மீன்களுக்கு உணவளித்து இறைவனை பிரார்த்திக்கவேண்டுமாம்.
//

மீன்களுக்கு உணவளிப்பதில் பிரச்சினை இல்லை....அதில் இறைவன் எங்கு வந்தான்???

//கஷ்டப்பட்டு French கற்றுக்கொள்கிறோம் ஆனால் இந்திய தேசிய மொழியான இந்தியை கற்பதில்லை.//

இந்தி தான் தேசிய மொழி என்றால், மற்ற மொழி பேசுபவர்களின் தேசியம் எது??? அவர்கள் இந்தியர்களா இல்லையா?? அப்படியானால் இந்திய அரசு ஏன் அந்த மாநிலங்களில் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது??

//
மொழி வெறி கண்ணை மறைக்கிறது. கண்ணில் விளக்கெண்ணய் ஊற்றி ஆங்கில காவியங்களை கற்கிரோம் ஆனால் சமஸ்கிருதத்தில் உள்ள நம் முன்னோர்கள் எழுதிய வேதங்கள் படிப்பதில்லை.
//

ஆங்கிலம் படித்தால் வேலை தேடவாவது உதவும்....சமஸ்கிருதம் படித்து என்ன செய்வது??? அர்ச்சகர் வேலைக்கு போகலாம் என்றாலும் அங்கும் ஒரு குறிப்பிட்ட ஜாதி மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது....

//
we still depend on consultants to tell what is wrong with us அதைப்போல வெள்ளைக்காரன் நம் வேதங்களை படித்து டாக்டர் பட்டம் வாங்கி அவன் ஆங்கிலத்தில் எழுதும் புத்தகங்களை அனியாய விலைக்கு வாங்கிப்படிக்கும் இந்தியர்கள் வாழ்க
//

நீங்கள் சொல்லும் சமஸ்கிருதம், வேதம், இந்தி என்ற எந்த கண்றாவியையும் படிக்காமலேயே அமெரிக்கர்களும், பிரஞ்ச் காரர்களும், இங்கிலீஷ்காரர்களும் மிக நல்ல நிலைமையிலேயே இருக்கிறார்கள்!

சிவா said...

பார்ப்பன சாதியை உருவாக்கியதும், கட்டிக்காப்பதும் நாத்திகர்கள் அல்ல...தாங்கள் பிரமனின் தலையில் இருந்து பிறந்ததாக இன்னமும் நம்பும் சில பார்ப்பனர்கள் தான்!

//Refusal is the best way to fight as Gandhi did so refuse there is a cast
தாங்கள் பிரமனின் தலையில் இருந்து பிறந்ததாக இன்னமும் நம்பும் சில பார்ப்பனர்கள் தான்! Take the most not least//

//40 மார்க் வாங்கினால் 80க்கு சமமா?? கொஞ்சம் ரிசல்ட்டுகளையும், கட் ஆஃப் மதிப்பெண்களையும் பார்த்துவிட்டு பேசுவது நல்லது....//

தமிழ்நாட்டு கட் ஆஃப் மட்டும் பார்க்காதீங்க வேற எல்லா இடத்திலையும் பாருங்க. என் கருத்து பொருளாதார ரீதியில் முற்பட்டோர் – பிற்பட்டோர் என்று இருக்க வேண்டுமே தவிற சாதி அடிப்படையில் இல்லை. சாதிக்காக கொடுக்கப்படும் சலுகையை இங்கே பாருங்கள்
http://www.gujaratadmission.com/admission_analysis.php
http://www.indiaedu.com/admissions/calcutta-university-admission/rani-birla-girls-college.html
http://mba.sulekha.com/mp/blogdisplay.aspx?titleurl=/2009/01/cat-2008-results-declard-result-analysis-cut.htm&profileid=mbablogs
//
அய்யங்கார் கலெக்டர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய கலெக்டரை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா???

நாம் இன்னும் ஏன் சாதி அல்லது ஒரு கூட்டத்தை கூட்டுகிறோம் என்பது என் கேள்வி இன்னும் (தொழில் சார்ந்த சாதி அமைப்பை |இது என் புறிதல்| ) ஏன் உடைப்பதில்லை? திரும்பவும் ஆட்டுக்கூட்டம் மாட்டுக்கூட்டம் ஆகிறோமே ஏன்? இந்த நிலை தான் மாறவேண்டும் என்பது என் கருத்து.//

//அதே போல எல்லா இடங்களுக்கும் மாட்டு வண்டியிலும் பெரும் //பணக்காரர்கள் மட்டுமே குதிரை வண்டியிலும் பயணம் செய்திருக்கிறார்கள்//

ஏங்க இன்னைக்கு மட்டும் என்ன குறைஞ்சா போயிருக்கு? பணக்காரன் அன்னைக்கும் அப்படித்தான் இன்னைக்கும் அப்படித்தான். ஏழை எந்த சாதியானாலும் அவனவன் தகுதிக்கு தகுந்தார்ப்போல் வசதி வாய்ப்புக்களை பெருக்கிக்கொள்கிறான். //

//ஆனால் பாம்பு பால் குடிக்கிறது//


--இதை நம்புகின்றவர்களை நினைத்தால் கொடுமையாகத்தான் இருக்கிறது.
இந்த மாதிரி மூட நம்பிக்கையை கிளப்புகின்றவர்களை அடித்தாலொழிய திருந்த மாட்டார்கள். பெரும்பாலாக பாப்பான் பாம்பு புத்துல பால ஊத்தி நான் பாக்கலைங்க மத்த ஜாதி சனங்கதான் ஊத்துறாங்க ; நம்மதான் அறிவுக்கண் திறக்கணும்//

//மீன்களுக்கு உணவளிப்பதில் பிரச்சினை இல்லை....அதில் இறைவன் எங்கு வந்தான்???

//சாப்பாட்டில் பிரச்சினை இருப்பின் அதை கண்டறிய.சாப்பிட்ட உடனே மீன் சாகாது, கால தாமதம் அளிப்பதற்கே இது. மீனுக்கு சாப்பாடு போட்டு 5 நிமிடம் சும்மா உக்காருன்னா நாம உக்காருவோமா? //

//ஆங்கிலம் படித்தால் வேலை தேடவாவது உதவும்....சமஸ்கிருதம் படித்து என்ன செய்வது??? அர்ச்சகர் வேலைக்கு போகலாம் என்றாலும் அங்கும் ஒரு குறிப்பிட்ட ஜாதி மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது....

--ஆங்கில காவியங்களை கற்கிரோம்-- என்றுதான் எழுதியிருக்கிறேன் வேதங்களைப்பற்றி ரீல் விடாத நபர்களிடம் பேசிப்பாருங்கள். முதலில் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதின் உட்கருத்து புறிந்து கேட்டுப்பாருங்கள்.( அப்படி பேசுபவர்கள மிக சொற்பம் என்பதுதான் நிஜம்)

//நீங்கள் சொல்லும் சமஸ்கிருதம், வேதம், இந்தி என்ற எந்த கண்றாவியையும் படிக்காமலேயே அமெரிக்கர்களும், பிரஞ்ச் காரர்களும், இங்கிலீஷ்காரர்களும் மிக நல்ல நிலைமையிலேயே இருக்கிறார்கள்!//

அதைவிட மக்கள் தொகையில் அதிகம் உள்ள நாட்டில்தான் நாமும் இருக்கிறோம். என் வாக்கியம்- கருத்து நாம் இன்னமும் வெள்ளைக்காரனை நம்பி இருக்கிறோம் என்பதுதான். வேதம் படிப்பது படிக்க வேண்டியது பார்பனர்தான் மற்றவருக்கு அல்ல என நான் நினைப்பதில்லை. அதில் என்ன எழுதியிருக்கிறது அதன் கருத்து என்ன?, இக்காலத்திற்கு பொருந்துமா இல்லையா, ஏன்?, அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் என்ன வித்தியாசம் என ஆராயந்து பார்த்து அக்கருத்துக்களை ஏற்கவோ இல்லை மறுக்கவோ வேண்டுமென்பதே என் புறிதல்.

சாதி என்பதை ஒரு பொருட்டாக நான் இது வரை கருதியதில்லை. ஆனால் எங்கு பார்த்தாலும் இதை பெரிது படுத்தி காட்டிக்கொண்டிருக்கிறோம். (மேலே நான் குறிப்பிட்ட தொழில் சார் கூட்டங்களையும் சேர்த்து தான் சொல்லுகிறேன்). இந்த நிலை மாறவேண்டுமெனில் அதை புறக்கணிக்க வேண்டும். அது நம்மிடம் தான் உள்ளது மற்றபடி நம் முன்னோர்கள் செய்தது எல்லாம் தவறு எனக்கூறுவது சரியல்ல என்பதுதான் என் கருத்து. அவற்றில் உள்ள குறைகளை நீக்கி நிறைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். கல்வியறிவு இதற்கு துணைபோகும். கற்றும் அறிவுக் குருடனாயிருந்தால் என்ன பயன்?

Anonymous said...

பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :

1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.

2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.

3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.

இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:

1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.

2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.

3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் "உண்மைத் தமிழர்கள்" என அழைப்பது.

முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.

1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?

2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.

3) தமிழ் பள்ளிகளை மூடுவது.

4) தமிழ் பேசும் சமூகத்தினரை "அவர்கள் தமிழே கிடையாது" என வஞ்சகப்பேச்சு பரவுதல்.

5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.

6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.

7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.

இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.

Anonymous said...

தமிழ் இனத்தை வெறுக்கு வஞ்சகமானத் தமிழ் பெயர் கொண்ட வலைப்பதிவுகள் :

1)தமிழச்சி
2)தமிழ் ஓவியா
3)விடாது கருப்பு
4)TamilCircle.net
5)போர்முரசு
6)Tamil.net
மற்றும் பல...

தமிழ்நாட்டில் தமிழ் மொழி அழிவிற்கும் இந்தி நபர்கள் இட ஒதுக்கீடிற்கு காரணம் யார் என்றால் மேல் குறிப்பிட்டுள்ள மடையங்கள் போன்று நிறைய பெயர் உள்ளார்கள்.