முன் குறிப்பு: பழைய பதிவர்கள் அனைவருக்கும் இட்லி வடையை நடத்துவது யார் என்பது தெரியும். ஆனால் புதிய பதிவர்கள்/ வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் ஆவலில் இந்த மீள் பதிவு.
---------------------------------------------------------------------------------
தி.மு.க வை நடத்துபவர் கலைஞர்.
அ.தி.மு.க வை நடத்துபவர் புரட்சித்தலைவி.
ம.தி.மு.க வை நடத்துபவர் வைகோ.
பாமகவை நடத்துபவர் தேர்ந்த மருத்துவர் ராமதாஸ்.
தே.மு.தி.க வை நடத்துபவர் புரட்சிக்கலைஞர்.
குஜமுகவை நடத்துபவர் குடுகுடுப்பை.
அஇநாமகவை நடத்துபர் கார்த்திக்.
சமக வை நடத்துபர்கள் ராதிகாவும் சரத்குமாரும்.
ஆனால் இட்லி வடையை நடத்துபவர்கள்…?
தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும் இந்த கேள்வி இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்த கேள்வி ஏன் எழுந்தது என்றே வியப்பாக உள்ளது.
பொதுவா இட்லி வடைக்கு மாவு அறைக்கிறத அந்த மாவை கொஞ்சம் நடத்தித்தா என்று கிராமத்தில சொல்வாங்க. ஆக மொத்தம் மாவை யார் அறைக்கிறாங்களோ அவங்களே நடத்துகிறார்கள்.
பொதுவா எல்லார் வீட்டிலயும் இப்ப கிரைண்டர்/மிக்ஸி தான் மாவை அறைக்கிறது ஆனாலும் அவை ஓட்டுனர்கள்தான், நடத்துனர் தங்கமணியோ ரங்கமணியோதான்.ஹோட்டல்னா பிச்சுமணி.
நாம இட்லி வடையை நடத்துறது யாருன்னுள்ள கேள்வியோட இருக்கோம் இவன் என்னடா மாவை பத்தி பேசறான் அப்ப்டின்னு கேக்கறீங்க. பொதுவா நாம இட்லி வடைய சாப்பிடும்போது மத்தவங்க பாத்து “நடத்துங்க நடத்துங்க”ன்னு சொல்வாங்கள்ல அதுனால இட்லி வடையை நடத்துறது அதை சாப்புடுற எல்லாரும் தான். இத நான் சொல்லல ஜக்கம்மா சொல்றா.
எல்லாரும் மகிழ்ச்சியா இட்லி வடைய நடத்துங்க மக்களே.
22 comments:
ஐயா நான்தான் மொதல்ல இன்னைக்கும்
ஐய இதுகூட தெரியாதா!!!!!!!!!!!!!! இட்லி கடை நடத்துவது தேவயானி அம்மா.
இத எனக்கு சொன்னது தலைவர் நசரேயன். அவரு ரொம்ப நல்லவரு. கண்டிப்பா வெளக்கம் போடுவாரு.
//பொதுவா எல்லார் வீட்டிலயும் இப்ப கிரைண்டர்/மிக்ஸி தான் மாவை அறைக்கிறது ஆனாலும் அவை ஓட்டுனர்கள்தான், நடத்துனர் தங்கமணியோ ரங்கமணியோதான்.ஹோட்டல்னா பிச்சுமணி.//
இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆமா கடைல ரெடிமேட் இட்லி மாவு வாங்கினா!!!!!!!!!!!! அப்ப அத வாங்குன நாம்தான் இட்லி வடை நடதுபவரா?????????????? வெளக்கம் தேவை
இன்னைக்கு நிம்மதியா தூங்கனும்னு நினைச்சேன். சந்தோஷம்தானே??
:)))
சட்னி சாம்பார் வேண்டும் எனக்கு, இட்லி மட்டும் இருக்கு
// நசரேயன் said...
சட்னி சாம்பார் வேண்டும் எனக்கு, இட்லி மட்டும் இருக்கு//
யோவ் அந்த தேவயானி அம்மா இட்லி கடைய பத்தி ஒரு பதிவு இல்ல வெளக்கம் போடலாம்ல.
// "இட்லி வடையை நடத்துவது யார்?" //
நடத்துராங்களா... பிச்சுகிட்டு ஓடுதுன்னு இல்ல சொல்லனும்.
// "இட்லி வடையை நடத்துவது யார்?" //
சத்தியமா நான் இல்லீங்க...
// தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும் இந்த கேள்வி இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்த கேள்வி ஏன் எழுந்தது என்றே வியப்பாக உள்ளது. //
அதானே ஏன் எழுந்தது?
என்னா வில்லத்தனம்
Blogger வில்லன் said...
// நசரேயன் said...
சட்னி சாம்பார் வேண்டும் எனக்கு, இட்லி மட்டும் இருக்கு//
யோவ் அந்த தேவயானி அம்மா இட்லி கடைய பத்தி ஒரு பதிவு இல்ல வெளக்கம் போடலாம்ல.//
what is the story
எனக்கு இந்தக் கிசுகிசுக்கள் எதுவுமே புரியவில்லை.அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைக்கிறேன் குடுகுடுப்பையாரே..
//இத நான் சொல்லல ஜக்கம்மா சொல்றா. //
யாருங்க அது ஜக்கம்மா...?
நானும் நல்லா ஏமாந்துட்டேன்..
எங்க நமக்குத் தெரியாத விஷயம்.. குடுகுடுப்பைக்குத் தெரிஞ்சிருச்சோன்னு நினைச்சேன்..
என்ன ஒரு வில்லத்தனம்..?!
குடுகுடுப்பை..! நானும் ஏதோ பெரிய ரகசியம் சொல்லுறீங்கள் என்று ஓடி வந்தால் இப்பிடிக் கவிழ்த்துப் போட்டீங்களே???
சத்தியமா நான் இல்லீங்கோ??
கடைசியா நம்ம தலைல மாவாட்டிட்டீங்களே? ஹிஹி!
எல்லாரும் ஒரு மாதிரியாத்தான் திரியிறீங்க! நடத்துங்க... நடத்துங்க...
குடுகுடுப்பையை இப்படி ஆக்கியது யார்!
இராகவன் நைஜிரியா said...
// "இட்லி வடையை நடத்துவது யார்?" //
நடத்துராங்களா... பிச்சுகிட்டு ஓடுதுன்னு இல்ல சொல்லனும்.
//
காரச்சட்னியா?
ஷண்முகப்ரியன் said...
எனக்கு இந்தக் கிசுகிசுக்கள் எதுவுமே புரியவில்லை.அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைக்கிறேன் குடுகுடுப்பையாரே..//
எழுதுன எனக்கே புரியல, இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க சார்
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நானும் நல்லா ஏமாந்துட்டேன்..
எங்க நமக்குத் தெரியாத விஷயம்.. குடுகுடுப்பைக்குத் தெரிஞ்சிருச்சோன்னு நினைச்சேன்..
என்ன ஒரு வில்லத்தனம்..?!//
இட்லி வடை சாப்பிடச்சொன்னா வில்லத்தனமா?
// "இட்லி வடையை நடத்துவது யார்?" //
அட என்னப்பா கொழப்பம். அந்த வலைப்பதிவ நடத்துறது எழுதுறது எல்லாமே அடியேன் தான் (அப்படி இருக்க எனக்கு ரொம்ப ஆசை. கவலபடாதிங்க ஒருநாள் அந்த வலைப்பதிவு என்பெருக்கு மாறியே தீரும்!!!!). .... அப்புறம் என்ன. நல்லா பின்னுட்டம் போடுங்க சரியா......
Post a Comment