கடந்த எட்டு வருடங்களாக நான் மாற்றாத ஒன்று என்னுடைய செல்போன் கம்பெனி. (செல்போனும்தான் மாத்தி 3 வருசம் ஆச்சு , கொஞ்சம் செங்கல் கணக்கா பெரிசா இருக்கு).இபில் ஆட்டோமெட்டிக் பேமண்ட் எல்லா வசதியும் ஏற்படுத்திக்கொடுதிட்டாங்க. இதை ஏற்படுத்திக்கொடுக்கிற மென்கூலிகளானா நாமே பயன்படுத்தலன்னா எப்படி அதனால எல்லாத்தையும் பயன்படுத்தறேன். இல்லாட்டி வீட்டுக்கு 10 பக்கத்து ஒரு பேப்பர் பில்லு வரும் அதுல ஒரு பக்கம் கால் ஹிஸ்டரி 5 பக்கம் tax and fees. மீதம் நாலு பக்கம் இந்த பில்லை புரிந்துகொள்வது எப்படின்னு உதவி(help) விளக்கம் இருக்கும் இதையெல்லாம் தவிர்க்கலாம்.
கடந்த சில வருடங்களாக நானும் அந்தப்பக்கம் லாகின் பண்ணதே இல்லை, திடீர்னு ஒரு சிறிய மாற்றம் செய்ய வேண்டியிருந்தது, அப்படியே ஒரு பில்லை எடுத்து படிச்சேன். அதுல வரி பகுதியில், நான் நான்கு வருடத்திற்கு முன் குடியிருந்த ஊருக்கான tax ஆ மாதம் ஆறு டாலரும், இப்ப இருக்க ஊருக்கு குடியிருக்கிற ஊருக்கு வரியா ஒரு டாலருக்கு குறைவாகவும் வாங்கிட்டு இருக்காங்க.
நான்: ஏன் இப்படி பண்ணீங்க
கஷ்டமர் சர்வீஸ்: I will create a ticket for your Case to find out what is going on. This is your ticket number. blahbalaaaaaaaaaaaaaaaaaa.
கஷ்டமர் சர்வீஸ்: குடுகுடுப்பையாரா?
நான்: ஆமாம்
கஷ்டமர் சர்வீஸ்: சாரி, இது கடந்த நாலு வருசமா நடக்குது, நாங்க இரண்டு வருசத்துக்கு உள்ள வரி 140$ உங்களுக்கு திருப்பிதரோம்.
நான்: ஏன் ரெண்டு வருசம், நாலு வருசத்துக்கும் தானே தரனும்.
கஷ்டமர் சர்வீஸ்: சாரி குகு, எங்க கம்பெனி பாலிஸிபடி ரெண்டுவருசத்துக்கு உள்ள வரி தவறுகள்தான் சரி செய்யமுடியும்.blahaaaaaaaaaaa
நான்: என்னோட பாலிஸிபடி நான் அடுத்த நாலு வருசத்துக்கு பாதி காசுதான் கட்டுவேன் ஆனா நீங்க எனக்கு இப்ப கொடுக்கிற அதே சர்வீஸ தரனும்.
கஷ்டமர் சர்வீஸ்: I understand, we are sorry. blahhhhhhhhhhh.
-----------
ஒரு வாரம் கழித்து அடுத்த பில் வந்துச்சு, இப்பயும் அதே பழைய மாதிரிதான் வரி போட்டிருக்காங்க
நான்: ஏன் திரும்ப இப்படி பண்ணீங்க.
கஷ்டமர் சர்வீஸ்: I will create a ticket for your Case to find out what is going on. This is your ticket number. blahbalaaaaaaaaaaaaaaaaaa.
24 comments:
அங்கியும் அப்பிடியா? :(
Tax அப்படின்னா என்னாங்க?இதுக்குப் பயந்தே பாதி அமெரிக்க பயபுள்ளக சூடா இருந்தாலும் பரவாயில்லை Taning செஞ்ச மாதிரியும் ஆச்சுன்னு கல்ஃப் போறேன்னு சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.
அட நீங்க வேற எங்க ஆபிசுல இருக்க ஹெல்ப் டெஸ்க்ல என்னட இம்புட்டு டிக்கெட் வருது, என்னான்னு பாருன்னு சொல்லி எனக்கு அடிசனல் வேலை குடுத்தாய்ங்க, அப்பதான் பார்த்தேன் எங்க ஹெல்ப் டெஸ்க் ஆட்களும் இதே வேலையத்தான் செஞ்சுகிட்டு இருக்காய்ங்க. என்ன போன் வந்தாலும் உடனே டிக்கெட் போட்ருவாய்ங்க. இவனுங்கள் கொண்டு போயி கோயம்பேடு ஆம்ணி பஸ் ஸ்டாண்ட்ல நிப்பாட்டுன்னா அந்த பக்கம் மார்கெட்டுக்கு காய்கறி வாங்கப் போறவனுங்களக் கூட பஸ்ல ஏத்தி டிக்கெட் போட்ருவாய்ங்க.
ராஜ நடராஜன் said...
Tax அப்படின்னா என்னாங்க?இதுக்குப் பயந்தே பாதி அமெரிக்க பயபுள்ளக சூடா இருந்தாலும் பரவாயில்லை Taning செஞ்ச மாதிரியும் ஆச்சுன்னு கல்ஃப் போறேன்னு சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.
//
இது நல்ல இடமா இருக்கே.
எல்லா ஊர்லயும் இப்படித்தான் ஆட்டைய போடறாங்களா?
உள்ளேன் படிச்சுட்டு வாரேன்!!
அது சரி அங்கேயும் இதே கூத்து தானா ??
இருக்கின்றன பிரச்னையை அப்படியே படம் பிடிச்சி காட்டி இருக்கீங்க.
உண்மை சுடுது, சம்பந்தப் பட்டவங்களுக்கு சுடுமா??
பில் எல்லாம் உடனே செக் பண்ணுங்க அண்ணாச்சி.
அடுத்தது, நீங்க முதல சொன்ன கம்ப்ளைன்ட் :- கடந்த ரெண்டு வருடமா (சரி 4) வரி தப்புன்னு. அத சரி படுத்தினோம். அடுத்த கம்ப்ளைன்ட் இந்த மாசம் மறுபடியும் தப்புன்னு. அதேயும் சரி படுத்துவோம். ஆனா நீங்க எப்ப தான் சரியா டிக்கெட் போட சொல்லுவீங்கன்னு தெரியல.
Mahesh said...
அங்கியும் அப்பிடியா? :(
//
அங்கேயும் அப்படியா?
Blogger ச்சின்னப் பையன் said...
:-)))//
நன்றி சின்னப்பையன்
ஜோசப் பால்ராஜ் said...
அட நீங்க வேற எங்க ஆபிசுல இருக்க ஹெல்ப் டெஸ்க்ல என்னட இம்புட்டு டிக்கெட் வருது, என்னான்னு பாருன்னு சொல்லி எனக்கு அடிசனல் வேலை குடுத்தாய்ங்க, அப்பதான் பார்த்தேன் எங்க ஹெல்ப் டெஸ்க் ஆட்களும் இதே வேலையத்தான் செஞ்சுகிட்டு இருக்காய்ங்க. என்ன போன் வந்தாலும் உடனே டிக்கெட் போட்ருவாய்ங்க. இவனுங்கள் கொண்டு போயி கோயம்பேடு ஆம்ணி பஸ் ஸ்டாண்ட்ல நிப்பாட்டுன்னா அந்த பக்கம் மார்கெட்டுக்கு காய்கறி வாங்கப் போறவனுங்களக் கூட பஸ்ல ஏத்தி டிக்கெட் போட்ருவாய்ங்க.//
நிஜமாவே கோயம்பேட்டுல டிக்கெட் போடுறவனை இங்க டிக்கட் போட விட்ட என்ன ஆகும். கொஞ்சம் அரை டிக்கெட்டெல்லாம் போட்டுருவாங்களோ
slamming....
jackiesekar said...
எல்லா ஊர்லயும் இப்படித்தான் ஆட்டைய போடறாங்களா?//
அரபு நாடுகளில் வரி கிடையாது, அதுக்கு பதிலா நாட்டில் உள்ள பெட் ரோலியம் முழுவதுமா ஆட்டைய போட்டுப்பாங்க.
RAMYA said...
அது சரி அங்கேயும் இதே கூத்து தானா ??
இருக்கின்றன பிரச்னையை அப்படியே படம் பிடிச்சி காட்டி இருக்கீங்க.
உண்மை சுடுது, சம்பந்தப் பட்டவங்களுக்கு சுடுமா??//
என்னாது சின்னப்புள்ளத்தனமா இருக்கு
ஆட்டோ பெயிமேன்ட் போட்ட உங்களுக்கு ஆட்டோ வேணா கிடைக்கும்
மென்கூலிகளானா//
இது அருமையான வார்த்தைப் பிரயோகம் குடுகுடுப்பை சார்.
:-))
ஷண்முகப்ரியன் said...
மென்கூலிகளானா//
இது அருமையான வார்த்தைப் பிரயோகம் குடுகுடுப்பை சார்.//
நான் என்னுடைய முதல் பதிவில் இருந்து உபயோகிக்கிறேன் என நினைக்கிறேன். மிக்க நன்றி அய்யா. அப்புரம் என்ன சார்னு கூப்பிடறது வேண்டாமே அய்யா.
:-))))
இது எல்லா பக்கமும் நடக்குறது தான்.
பிரிபெய்டு தான் வச்சிருக்கேன் மாசம் 900 ரூபாய்க்கு ரீ ஜார்ஜ் பண்றேன். எனக்கும் அடிக்கடி அல்வா கொடுக்குறானுங்க!
வால்பையன் said...
இது எல்லா பக்கமும் நடக்குறது தான்.
பிரிபெய்டு தான் வச்சிருக்கேன் மாசம் 900 ரூபாய்க்கு ரீ ஜார்ஜ் பண்றேன். எனக்கும் அடிக்கடி அல்வா கொடுக்குறானுங்க!//
நாலு வருசமா கொடுத்துட்டு இருக்காங்க தெரியாம போச்சு
கடைசில பிரெச்சனை முடிவுக்கு வந்திச்சா இல்லையா. மொதல்ல கேட்ட மாதிரி பத்தி பில் கட்ட வேண்டியதுதான அடுத்த அஞ்சி வருசத்துக்கு. ஏன் திரும்ப திரும்ப பிரச்சனைய கெலபிட்டு
// ஜோசப் பால்ராஜ் said...
அட நீங்க வேற எங்க ஆபிசுல இருக்க ஹெல்ப் டெஸ்க்ல என்னட இம்புட்டு டிக்கெட் வருது, என்னான்னு பாருன்னு சொல்லி எனக்கு அடிசனல் வேலை குடுத்தாய்ங்க, அப்பதான் பார்த்தேன் எங்க ஹெல்ப் டெஸ்க் ஆட்களும் இதே வேலையத்தான் செஞ்சுகிட்டு இருக்காய்ங்க. என்ன போன் வந்தாலும் உடனே டிக்கெட் போட்ருவாய்ங்க. இவனுங்கள் கொண்டு போயி கோயம்பேடு ஆம்ணி பஸ் ஸ்டாண்ட்ல நிப்பாட்டுன்னா அந்த பக்கம் மார்கெட்டுக்கு காய்கறி வாங்கப் போறவனுங்களக் கூட பஸ்ல ஏத்தி டிக்கெட் போட்ருவாய்ங்க.//
எல்லா கம்பனியும் இதேதான் பண்ணுது. எல்லாரையும் கோயம்பேடு அனுபிட்டா ஒரே சண்டை ஆயிரும்
அதுக்குதான் அவங்களுக்கு பேரு ”கஷ்டம”ர் சர்வீஸ்னு வெச்சிருக்காங்க போல.
Post a Comment