ஒரு நகைச்சுவை கால்சட்டை கதை, அமெரிக்காவின் சில கால்சட்டை கம்பெனிகள் தங்கள் கால்சட்டை கம்பெனிகள் மூடவேண்டிய நிலையில் இருப்பதாக உதவி கேட்கும்போது கொடுத்த கற்பனையான விளக்கங்கள்
அ.அதிகாரி: வாங்க எல்லாரும் என்னா எல்லாரும் வந்திருக்கீங்க என்ன விசயம்?
கா.கம்பெனி அதிகாரி: பொருளாதாரம் மந்தமா இருக்கிறதுனால கால்சட்டை வியாபாரம் குறைஞ்சு போச்சு, அதுனால கம்பெனி நடத்த அரசாங்க உதவி வேணும் அப்பதான் கம்பெனியவும்,அங்கன வேலை பாக்கிரவங்களையும் காப்பாத்த முடியும். உதவி கேட்டு வந்திருக்கோம் எசமான்.நாங்க மூடிட்டா எங்க கம்பெனி வெலைக்காரங்க, எங்க கால்சட்டை விக்கிற கடைகளும் மூடனும் மொத்தமா ஒரு அஞ்சு லட்சம் பேரு எதிர்காலம் எசமான்.
அ.அதிகாரி: அது சரி நிறைய பேரு வேலை போயிரும் காப்பாத்திதான் ஆகனும்.நீங்க ஏன் உங்க கால்சட்டையோட வராம உயர்தர கோட் சூட்டெல்லாம் போட்டிட்டு வந்திருக்கீங்க?அதுவும் தனி விமானத்துல?
கா.கம்பெனி அதிகாரி: அடுத்த முறை நாங்க எங்க சொந்த கால்சட்டைய போட்டுட்டு வரோம் எசமான்.
அ.அதிகாரி: சரி நீங்க தயாரிக்கிற கால் சட்டையெல்லாம் அதிக சோப் எடுக்குதாம், வாசிங் மெசின்ல போட்டா ரொம்ப கரண்ட் ஆகுதாம் ஆனா ஜப்பான் காரன் கம்பெனி கால்சட்டையெல்லாம் குறைந்த நேரத்திலயே குறைந்த சோப்பிலேயே தொவக்க முடியுதாம் ஏன் அப்பிடி?
கா.கம்பெனி அதிகாரி: அது வந்து, எங்க கால்சட்டையெல்லாம் கொஞ்சம் சொகுசு கால்சட்டை அதுனால...
அ.அதிகாரி: என்ன சொகுசு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க?
கா.கம்பெனி அதிகாரி:எங்க கால்சடைல பாத்தீங்கண்ணா வலிக்காம இருக்க நிறைய பஞ்சு வெச்சிருப்போம்.அப்பரம் கால் சட்டைல காப்பி வைக்க ஹோல்டர், புடிச்சிக்க ஹோல்டர் எல்லாம் ரொம்ப தரமா /சொகுசா பண்ணிருக்கோம், சன் ஓட்டை /மூன் ஓட்டையெல்லாம் பீச்சங்கரைய பாத்தோன அதுவா தொறந்துக்கும்.ஜப்பான் கால்சட்டை அப்படி இல்லை.
அ.அதிகாரி: ஒகே,ஆனா மக்கள் ஜப்பான் கால்சட்டை நல்லா தரமா இருக்குன்னு சொல்றாங்க.ஜப்பான் மற்ற வெளிநாட்டுக்காரங்களுக்கு போட்டியா என்ன மாதிரி மாடல்கள் அறிமுகப்படுத்துனீங்க?
கா.கம்பெனி அதிகாரி: நாங்க எட்டு பாக்கெட் வெச்ச சட்டி கால்சட்டை அறிமுகப்படுத்தினோம்,கால்சட்டைய வேகமா மாட்டறதுக்கு தகுந்த மாதிரி V8 -super fast elastic வெச்சோம், இதுனால வேகமா கழட்டி மாட்டலாம்.
அ.அதிகாரி: ஒரு மனுசன் போடுற கால்சட்டைக்கு அதுவும் உள் கால்சட்டைக்கு எதுக்கு எட்டு பாக்கெட் ,அதுக்கு ஏன் V8 -super fast elastic.பாக்கெட்ல வெக்கவே ஒன்னும் இல்லாதப்ப ஏன் இவ்ளோ பாக்கெட், இதுனால சோப் செலவு துவைக்கிற கரண்ட் செலவு கூடிப்போச்சு.மாத்தி யோசிங்க?
கா.கம்பெனி அதிகாரி: இல்ல எசமான் கடன் ஈஸியா கெடச்சா மக்கள் அடிக்கடி கால்சட்டை வாங்குவாங்க, அதுலயும் எட்டு பாக்கெட் கால்சட்டையெல்லாம் அப்படிதான் வித்தோம், ஒருத்தரு மட்டும் மாசம் பத்து கால்சட்டை வாங்குர அளவுக்கு வியாபாரம் இருந்துச்சு,இப்ப கடன் கெடக்காததுனால வியாபாரம் படுத்து போச்சி.
அ.அதிகாரி: ஒரு மனுசனுக்கு மாசம் பத்து கால்சட்டை ஏன்? நீங்க சொல்றத பாத்தா கடனை கொடுத்து தேவையே இல்லாத கால்சட்டைங்கள அவங்ககிட்ட வித்திருக்கீங்க.இது ரியல் எஸ்டேட் பபுள் மாதிரி இது கால்சட்டை பபுள் ஆ இருக்கும் போல.
கா.கம்பெனி அதிகாரி: இல்ல எசமான் நம்ம கால்சட்டை சீக்கிரம் கிழிஞ்சி போயுரும் அதுனால புதுசு புதுசா வாங்கிதான் ஆகனும்.நம்ம குவாலிட்டில பிக்ஸ் பிக்மா பயன்படுத்துறோம்.கரெக்டா டைமுக்கு கிழிஞ்சிரும்.
அ.அதிகாரி: என்னாது சின்ன புள்ளத்தனமா இருக்கு ஜப்பான் கால்சட்டை வருசக்கணக்கில வருதுங்கிறான் நீங்க என்னடான்னா தேவையில்லாத எட்டு பாக்கெட் V8 -super fast elastic கால்சட்டைய சீக்கிரம் கிழியற மாதிரி செஞ்சு கடன கொடுத்து வாங்க சொல்றது தப்பு மாதிரி இருக்கே,நீங்க என்னா பண்ணுங்க போயி நல்ல துணில சீக்கிரம் கிழியாம இருக்கிர மாதிரி நல்ல நூல்,துவைக்க அதிகம் சோப்பு ஆகாத மாதிரியும் நல்ல தரமா கால்சட்டை தயார் பண்ணுனாதான் உங்களுக்கு உதவி
கா.கம்பெனி அதிகாரி: அடிக்கடி கிளிஞ்சாதனே எசமான் வியாபாரம் பெருகும்,பொருளாதாரம் வளரும்.நீங்க புரியாம பேசரீங்க எசமான், இது 5 லட்சம் பேரோட வேலை அடங்கிருக்கு.
தொழிற்சங்க பிரதிநிதி : கால்சட்டை செஞ்சாலும் செய்யாட்டியும் எங்களுக்கு சம்பளம் வேணும்.இல்லாட்டி போராட்டம் வெடிக்கும்.
அ.அதிகாரி: யப்பா என்ன ஆள விடுங்க,எங்க தாத்தா எனக்கு மிச்சம் வெச்சிட்டு போன லங்கோடு யாருக்குங்கிற உயில தேட போகனும் நான் வறேன்.
40 comments:
ஐயா நான்தான் மொதல்ல.
===========================
புதிய அமெரிக்க கால்சட்டையா அல்லது கார் கம்பெனியா?
படிச்சி பாத்தா கார் கம்பெனி போலல்ல தெரியுது.
குடுகுடுப்பை உமக்கு ரொம்ப நக்கல்வே.
நான்தான் இரண்டாவதும்
========================
லங்கோடுக்கு கூட உயிலா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்ம ஊருல கேட்டா வேட்டிய கிழிச்சி 10 பேருக்கு கொடுக்க போறோம்.
எங்கள் உணர்வுகளை ஏற்று மீண்டும் பதிவை அப்படியே போட்ட குடுகுடுப்பையாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
ஐயா நான்தான் மூணாவதும் நாலாவதும் கூட.
கிளிஞ்சுது லம்பாடி லுங்கி !!
எல்லா அமெரிக்கர்களும் இனிமே நம்ம பட்டாபட்டிக்கு மாறிடுவாங்களோ !!!
கலக்கல் அலசல் குடுகுடுப்பை..
கலக்கல்
அ.மு.செய்யது said...
கலக்கல் அலசல் குடுகுடுப்பை.//
நன்றி
எல்லா அமெரிக்கர்களும் இனிமே நம்ம பட்டாபட்டிக்கு மாறிடுவாங்களோ !!!//
கண்டிப்பாக இல்லை அனைவருக்கும் சம உரிமை, அடிமையாய் வந்த ஒரு இனத்தை அதிபராக்கி அழகு பார்க்கும் இவர்கள் விமர்சனத்தை ஏற்று,தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேறுவார்கள்.
//கா.கம்பெனி அதிகாரி: அடிக்கடி கிளிஞ்சாதனே எசமான் வியாபாரம் பெருகும்,பொருளாதாரம் வளரும்.நீங்க புரியாம பேசரீங்க எசமான், இது 5 லட்சம் பேரோட வேலை அடங்கிருக்கு.
யோசிக்க வேண்டிய விஷயம் தான்!
தொழிற்சங்க பிரதிநிதி : கால்சட்டை செஞ்சாலும் செய்யாட்டியும் எங்களுக்கு சம்பளம் வேணும்.இல்லாட்டி போராட்டம் வெடிக்கும்.
இது சரியான மிரட்டல் தான்.
அ.அதிகாரி: யப்பா என்ன ஆள விடுங்க,எங்க தாத்தா எனக்கு மிச்சம் வெச்சிட்டு போன லங்கோடு யாருக்குங்கிற உயில தேட போகனும் நான் வறேன்.//
அட...இன்னாது இது?கலக்கறீங்க கலர் கலரா!பேசாம நயாண்டி தர்பார்னு வச்சிருக்கலாம் ப்ளாக் டைட்டில் !?
//சன் ஓட்டை /மூன் ஓட்டையெல்லாம் பீச்சங்கரைய பாத்தோன அதுவா தொறந்துக்கும்.ஜப்பான் கால்சட்டை அப்படி இல்லை.//
ஹா...ஹா...ஹா...
ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை...
நல்லாருக்கே! எப்பிடி யோசிக்கிறீங்க இப்பிடீல்லாம்? அதுவம் காற்சட்டய எப்பிடி யோசிச்சீங்க? நிஜமாவே கடைசி வரி புரியல! லங்கொடுன்னா என்னங்க? தொடர்ந்து சுவையா எழுதி சிரிக்க வைங்க!
தணிக்கை குழு மட்டுறுத்தல் பண்ணி இருக்கு போல தெரியுது
அண்ணே எனக்கு ஒரு டவுசர் வாங்கி கொடுங்க
//
நம்ம குவாலிட்டில பிக்ஸ் பிக்மா பயன்படுத்துறோம்.கரெக்டா டைமுக்கு கிழிஞ்சிரும்.
//
இப்படி சொல்லித்தான் பொட்டி தட்டுற கம்பெனி எல்லாம் காசு பாக்காங்க
கால்சட்டை பெயர்க்காரணம் கொஞ்சம் விளக்குங்குகளேன்.தெரியலையின்னா பழமைவாதி அகராதியப் புரட்டிட்டு பதில் சொல்லுங்க.நான் அதுக்குள்ள பதிவுக்குள்ளே போயிட்டு வந்துடறேன்.
//தொழிற்சங்க பிரதிநிதி : கால்சட்டை செஞ்சாலும் செய்யாட்டியும் எங்களுக்கு சம்பளம் வேணும்.இல்லாட்டி போராட்டம் வெடிக்கும்.//
சிவப்பு எழுத்து வண்ண நிறம் சரியான சமயோசிதம்:)
ஜீன்ஸ் பேண்டெல்லாம் முன்னெல்லாம் கழுவாமலேதான் சுத்திகிட்டி திரிந்தது.பல வித சோப் வந்தப்பறம்தான் ஜீன்ஸோட மவுசே போயிடுச்சு:)
//கால்சட்டை கம்பெனிகள் மூடவேண்டிய நிலையில் இருப்பதாக உதவி கேட்கும்போது கொடுத்த கற்பனையான விளக்கங்கள்//
:-)))) உங்க ரவுசுக்கு எல்லையே இல்லாம போச்சே!!
//கால் சட்டைல காப்பி வைக்க ஹோல்டர், புடிச்சிக்க ஹோல்டர் எல்லாம் ரொம்ப தரமா /சொகுசா பண்ணிருக்கோம், சன் ஓட்டை /மூன் ஓட்டையெல்லாம் //
ஐய்யோ ஐய்யோ!! பாவங்க விட்டுடுங்க
//இது ரியல் எஸ்டேட் பபுள் மாதிரி இது கால்சட்டை பபுள் ஆ இருக்கும் போல//
lol!! ஐய்யோ ஆளை விடுங்க..இபப்டி ஹைலைட் பண்னனும்னா, முழு போஸ்டையும்தான் நான் பண்ணனும்!! ஹ்ம்ம்..:-)) hillarious!
கிளிஞ்சுது லம்பாடி லுங்கி !!
வில்லன் said...
ஐயா நான்தான் மொதல்ல.
===========================
புதிய அமெரிக்க கால்சட்டையா அல்லது கார் கம்பெனியா?
படிச்சி பாத்தா கார் கம்பெனி போலல்ல தெரியுது.
குடுகுடுப்பை உமக்கு ரொம்ப நக்கல்வே.
//
நான் எங்க நக்கல் பண்ணிருக்கேன்வே
நல்லா சிரிப்பா இருந்தது.
Mahesh said...
கிளிஞ்சுது லம்பாடி லுங்கி !!
//
இதுக்கு என்ன பொருள்.நானும் சொல்லிருக்கேன் எனக்கு அர்த்தம் உடனே தெரியனும்.
வருகைக்கு நன்றி
செய்யது
டிவீயார்
மிஸஸ்.டவுட்
புதியவன் said...
//சன் ஓட்டை /மூன் ஓட்டையெல்லாம் பீச்சங்கரைய பாத்தோன அதுவா தொறந்துக்கும்.ஜப்பான் கால்சட்டை அப்படி இல்லை.//
ஹா...ஹா...ஹா...
ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை...//
நன்றிங்க கடைசியா போட்ட ஒட்டு அது..
புல்லட் பாண்டி said...
நல்லாருக்கே! எப்பிடி யோசிக்கிறீங்க இப்பிடீல்லாம்? அதுவம் காற்சட்டய எப்பிடி யோசிச்சீங்க? நிஜமாவே கடைசி வரி புரியல! லங்கொடுன்னா என்னங்க? தொடர்ந்து சுவையா எழுதி சிரிக்க வைங்க!//
நன்றி புல்லட் பாண்டி
லங்கோடுன்னா கோமணம்
ராஜ நடராஜன் said...
கால்சட்டை பெயர்க்காரணம் கொஞ்சம் விளக்குங்குகளேன்.தெரியலையின்னா பழமைவாதி அகராதியப் புரட்டிட்டு பதில் சொல்லுங்க.நான் அதுக்குள்ள பதிவுக்குள்ளே போயிட்டு வந்துடறேன்.//
ஜட்டின்னு எழுதலாம்னு இருந்தேன்,ஆனா தமிழ்மணம் ஏத்துக்குமான்னு தெரியல அதான்
"கிளிஞ்சுது லம்பாடி லுங்கி !!"
ஐயா பழமைபேசி உங்களுக்கு அடுத்த பதிவு தலைப்பு ரெடி.
இல்ல நம்ம தாத்தா கிட்ட கேட்டு வெளக்கம் போட்டுருங்க.
நல்லா இருக்கு :0))
இருக்கற நிலவரத்துல ஜப்பான் டவுசரா இருந்தாலும் சரி, அமெரிக்க டவுசரா இருந்தாலும் சரி, கிழிஞ்சி கந்தர கோலமா தொங்குது...இனிமே எதுனா ஸ்டீல்ல தான் டவுசர் தைக்கணும் போலருக்கு :0))
இங்க நெசமாலுமே சல்லடங் கிழியுது.... குளிருடா சாமீ!
சந்தனமுல்லை said...
//இது ரியல் எஸ்டேட் பபுள் மாதிரி இது கால்சட்டை பபுள் ஆ இருக்கும் போல//
lol!! ஐய்யோ ஆளை விடுங்க..இபப்டி ஹைலைட் பண்னனும்னா, முழு போஸ்டையும்தான் நான் பண்ணனும்!! ஹ்ம்ம்..:-)) hillarious!
//
நன்றி சந்தனமுல்லை
ச்சின்னப் பையன் said...
கிளிஞ்சுது லம்பாடி லுங்கி !!//
நன்றி ச்சின்னப்பையன்
//சரி நீங்க தயாரிக்கிற கால் சட்டையெல்லாம் அதிக சோப் எடுக்குதாம்//
துவைக்காம திரும்பதிரும்ப போடறமாதிரி ஒரு உடை கண்டுபிடிக்க சொல்லணும்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அது சரி
பழமை பேசி
நசரேயன்
ஜான் பெனிடிக்ட்
சின்ன அம்மினி
//
கா.கம்பெனி அதிகாரி: பொருளாதாரம் மந்தமா இருக்கிறதுனால கால்சட்டை வியாபாரம் குறைஞ்சு போச்சு,
//
அந்த வியாபாரமும் அவ்வளவுதானா ???
//
அ.அதிகாரி: அது சரி நிறைய பேரு வேலை போயிரும் காப்பாத்திதான் ஆகனும்.நீங்க ஏன் உங்க கால்சட்டையோட வராம உயர்தர கோட் சூட்டெல்லாம் போட்டிட்டு வந்திருக்கீங்க?அதுவும் தனி விமானத்துல?
//
புத்திசாலியான கேள்வி, ம்ம்ம்ம்
கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா
போட்டு தாக்கறீங்க. நல்ல கற்பனை
ஹஹஹாஹஹஹா
//
கா.கம்பெனி அதிகாரி: அடுத்த முறை நாங்க எங்க சொந்த கால்சட்டைய போட்டுட்டு வரோம் எசமான்.
//
ரொம்ப வெவரமான அதிகாரிதான்..
//
தொழிற்சங்க பிரதிநிதி : கால்சட்டை செஞ்சாலும் செய்யாட்டியும் எங்களுக்கு சம்பளம் வேணும்.இல்லாட்டி போராட்டம் வெடிக்கும்.
//
ஆமா சொல்லிப்பிட்டேன்.
RAMYA said...
//
கா.கம்பெனி அதிகாரி: பொருளாதாரம் மந்தமா இருக்கிறதுனால கால்சட்டை வியாபாரம் குறைஞ்சு போச்சு,
//
அந்த வியாபாரமும் அவ்வளவுதானா ???
நீண்ட நாளுக்கு பின் வறீங்க நன்றி
Post a Comment