Friday, January 2, 2009

பதிவுலகத்திற்கு 2009ம் ஆண்டில் இருந்து புதிய விருது.

பதிவுலகத்திற்கு 2009ம் ஆண்டில் இருந்து புதிய விருது.

வலைப்பதிவு உலகத்தில் தரமான பதிவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி கெளரவம் செய்வது ஒன்றும் புதிதல்ல, ஆனால் 2009 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் இந்த விருது புதிய ஒன்று.இந்த விருது ஒருவர் ஒருவருக்கே அளிக்க முடியும்.

இந்த விருதைப்பெறுபவர் விருதின் படத்தை தன் வலைப்பதிவில் போட்டுக்கொள்ளவேண்டும்,இந்த விருதின் பெயர் நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் "குடுகுடுப்பை விருது". இது பதிவர் குடுகுடுப்பையின் வலைப்பூ பெயரால் வழங்கப்படும்.பரிசோடு மட்டுமன்றி $500 பரிசுத்தொகையும் உண்டு.

இந்த ஆண்டுக்கான இந்த விருதை நான் அளிக்க நினைத்தது என் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பதிவருக்கு,ஆனால் குடும்ப பதிவரசியல் என பேச்சு வந்துவிடும் என்ற காரணத்தினால் மற்றொரு பதிவருக்கு இந்த விருதும் பரிசுப்பணமும் அளிக்கப்படுகிறது.

இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

40 comments:

இராகவன் நைஜிரியா said...

//இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.//

வாழ்த்துக்கள் குடுகுடுப்பையாரே..

இது போல பல விருதுகளை தங்களுக்கு தாங்களே அளித்துக் கொள்ள (கொல்ல) வாழ்த்துகின்றேன்.

முதல் வாழ்த்து சொன்ன எனக்கு எதாவது பரிசு உண்டா?

இராகவன் நைஜிரியா said...

//வலைப்பதிவு உலகத்தில் தரமான பதிவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி கெளரவம் செய்வது ஒன்றும் புதிதல்ல, ஆனால் 2009 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் இந்த விருது புதிய ஒன்று.இந்த விருது ஒருவர் ஒருவருக்கே அளிக்க முடியும்.//

எப்படியாவது உடுக்கை அடிச்சாவது, இந்த விருத வாங்கிடனும்னு நினைச்சு படிச்சேங்க.. கடைசில பார்த்த.. ஒருத்தருக்கு கொடுத்தாங்கப்பா..

நாட்டாண்மை ..ச்சே.. தப்பு தப்பா வருதுப்பா..

வருங்கால முதல்வரே தீர்ப்ப மாத்த சொல்லுங்க...சொல்லுங்க..சொல்லுங்க...

ரவி said...

யோவ் நக்கலு ? தனக்கு தானே கொடுக்கப்போறோம்னு தெரிஞ்சப்புறம் ஆயிரமா கொடுக்கவேண்டியதுதானே

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி said...

யோவ் நக்கலு ? தனக்கு தானே கொடுக்கப்போறோம்னு தெரிஞ்சப்புறம் ஆயிரமா கொடுக்கவேண்டியதுதானே//

பரிசுப்பணம் முக்கியமல்ல, விருதுதான் முக்கியம் என்று கருதுபவன் நான்

குடுகுடுப்பை said...

இராகவன் நைஜிரியா said...

//வலைப்பதிவு உலகத்தில் தரமான பதிவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி கெளரவம் செய்வது ஒன்றும் புதிதல்ல, ஆனால் 2009 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் இந்த விருது புதிய ஒன்று.இந்த விருது ஒருவர் ஒருவருக்கே அளிக்க முடியும்.//

எப்படியாவது உடுக்கை அடிச்சாவது, இந்த விருத வாங்கிடனும்னு நினைச்சு படிச்சேங்க.. கடைசில பார்த்த.. ஒருத்தருக்கு கொடுத்தாங்கப்பா..

நாட்டாண்மை ..ச்சே.. தப்பு தப்பா வருதுப்பா..

வருங்கால முதல்வரே தீர்ப்ப மாத்த சொல்லுங்க...சொல்லுங்க..சொல்லுங்க...//

தீர்ப்பு,தீர்ப்புதான் மேலிடம் ஆபிஸ்லேந்து வந்தவுடன் ஒரு வாட்டி கேட்டுப்பாக்கிறேன்

அது சரி(18185106603874041862) said...

விருதெல்லாம் வாங்கிட்டீரு....பார்ட்டி எப்பவோய்??? டெக்ஸாசில நல்ல ஹோட்டலா பாத்து புக் பண்ணி வையும்...அடுத்த ஃபிளைட்ட புடிச்சி கெளம்பி வர்றேன்....

நசரேயன் said...

விருது வாங்கின கையோடு ஒரு விருந்து வச்சா நல்லா இருக்கும்

துளசி கோபால் said...

புதுவருசத்துக்கான முதல் லொள்ளுவுக்கு வாழ்த்து(க்)கள்.

குடும்பத்தை மிஞ்சி எதுவும் இல்லைன்னு இவ்வளவு சிம்பிளா சொன்னதுக்கு மகிழ்ச்சி:-)

cheena (சீனா) said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் - ஐநூறு டாலர் - எப்படிச் செலவழிக்கலாம் - எங்களுக்கெல்லாம் விருந்து படைக்கலாமே

பழமைபேசி said...

பதிவுலகத்துக்குன்னு சொல்லி இருக்கீய?! ABC Stores gift card ஒன்னு வேணும்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

தீர்ப்ப மாத்த சொல்லுங்க...

வருண் said...

***இந்த ஆண்டுக்கான இந்த விருதை நான் அளிக்க நினைத்தது என் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பதிவருக்கு,ஆனால் குடும்ப பதிவரசியல் என பேச்சு வந்துவிடும் என்ற காரணத்தினால் மற்றொரு பதிவருக்கு இந்த விருதும் பரிசுப்பணமும் அளிக்கப்படுகிறது.

இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். ***

வாழ்த்துக்கள் குடுகுடுப்பை! :)

ஹாப்பி நியு இயர்! :)

http://urupudaathathu.blogspot.com/ said...

விருத நீங்களே வைச்சிக்கோங்க..
அந்த பணமுடிப்ப மட்டும் எனக்கு அனுப்புங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒவ்வொரு வருடமும் இந்த விருதை தாங்களே ரிணீவ் செய்து கொள்ளவும் ..

தமிழ் அமுதன் said...

''குடுகுடுப்பை விருது'' வழங்கும் குடுகுடுப்பையாருக்கும்!

''குடுகுடுப்பை விருது'' வாங்கும் குடுகுடுப்பையாருக்கும்!

வாழ்த்துக்கள்!

Mahesh said...

பதிவர் விருது உங்களுக்கே... போனாப் போகுது... அப்பறம் நீங்க அழுதா சமாதானம் பண்றது கஷ்டம்...

சிறந்த் பின்னூட்டர் விருது யாருக்கு? அதுவும் உங்களுக்கேவா?

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
பதிவர் விருது உங்களுக்கே... போனாப் போகுது... அப்பறம் நீங்க அழுதா சமாதானம் பண்றது கஷ்டம்...

சிறந்த் பின்னூட்டர் விருது யாருக்கு? அதுவும் உங்களுக்கேவா? //

அது எனக்கு மட்டும்தான்... யாரும் அதுல போட்டிக்கு வரக்கூடாது.. ஆமாம் சொல்லிபுட்டேன்

அ.மு.செய்யது said...

//இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். //

Finishing Sari illiyae ppa !!

குடுகுடுப்பை said...

அது சரி said...

விருதெல்லாம் வாங்கிட்டீரு....பார்ட்டி எப்பவோய்??? டெக்ஸாசில நல்ல ஹோட்டலா பாத்து புக் பண்ணி வையும்...அடுத்த ஃபிளைட்ட புடிச்சி கெளம்பி வர்றேன்....//

சீக்கிரமா வாங்க (டிராபி)உடுக்கை மட்டும்தான் எனக்கு,பணத்தை மேலிடம் பாத்துக்கிறேன் சொல்லிட்டு இருக்காங்க

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

விருது வாங்கின கையோடு ஒரு விருந்து வச்சா நல்லா இருக்கும்..//

நீங்க வெக்கப்போற பாராட்டு விழாவில தாராளமா கலந்துக்கிறேன்

குடுகுடுப்பை said...

துளசி கோபால் said...

புதுவருசத்துக்கான முதல் லொள்ளுவுக்கு வாழ்த்து(க்)கள்.

குடும்பத்தை மிஞ்சி எதுவும் இல்லைன்னு இவ்வளவு சிம்பிளா சொன்னதுக்கு மகிழ்ச்சி:-)//

நன்றி டீச்சர். தன்னை மிஞ்சி எதுவும் இல்லை டீச்சர்.:)))))))

குடுகுடுப்பை said...

cheena (சீனா) said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் - ஐநூறு டாலர் - எப்படிச் செலவழிக்கலாம் - எங்களுக்கெல்லாம் விருந்து படைக்கலாமே//

வருகைக்கு நன்றி சீனா அய்யா.
கண்டிப்பா நான் மதுரை வரும்போது உங்களுக்கு ஒரு டொரினோ பார்ட்டி வைக்கிறேன் தருமி சார் செலவுல

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

பதிவுலகத்துக்குன்னு சொல்லி இருக்கீய?! ABC Stores gift card ஒன்னு வேணும்!//

உங்களுக்கு இல்லாததா, உங்க தங்கமணிகிட்ட கேட்டு உடனே வாங்கிக்கங்க

குடுகுடுப்பை said...

T.V.Radhakrishnan said...

தீர்ப்ப மாத்த சொல்லுங்க..//

$500 எனக்கில்லை, எனக்கு உடுக்கை மட்டும்தானாம்

குடுகுடுப்பை said...

வருண் said...

***இந்த ஆண்டுக்கான இந்த விருதை நான் அளிக்க நினைத்தது என் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பதிவருக்கு,ஆனால் குடும்ப பதிவரசியல் என பேச்சு வந்துவிடும் என்ற காரணத்தினால் மற்றொரு பதிவருக்கு இந்த விருதும் பரிசுப்பணமும் அளிக்கப்படுகிறது.

இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். ***

வாழ்த்துக்கள் குடுகுடுப்பை! :)

ஹாப்பி நியு இயர்! :)//

நன்றி வருண்

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

விருத நீங்களே வைச்சிக்கோங்க..
அந்த பணமுடிப்ப மட்டும் எனக்கு அனுப்புங்க//

பணமுடிப்பு நான் நைஜீரியா வரும்போது எடுத்துட்டு வரேன், ஆட்டத்த போட்டுருவோம்

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

ஒவ்வொரு வருடமும் இந்த விருதை தாங்களே ரிணீவ் செய்து கொள்ளவும் ..//

காலத்தின் கட்டாயம் அப்படி இருந்தால் நாம் என்ன செய்யமுடியும்

குடுகுடுப்பை said...

ஜீவன் said...

''குடுகுடுப்பை விருது'' வழங்கும் குடுகுடுப்பையாருக்கும்!

''குடுகுடுப்பை விருது'' வாங்கும் குடுகுடுப்பையாருக்கும்!

வாழ்த்துக்கள்!//

நல்லா நக்கல் பண்றிங்க ஓய்

குடுகுடுப்பை said...

Mahesh said...

பதிவர் விருது உங்களுக்கே... போனாப் போகுது... அப்பறம் நீங்க அழுதா சமாதானம் பண்றது கஷ்டம்...

சிறந்த் பின்னூட்டர் விருது யாருக்கு? அதுவும் உங்களுக்கேவா?//


அது இன்னும் முடிவு செய்யல அப்படி ஒரு விருது யோசனையே வரலை இன்னும், காலம் பதில் சொல்லும்

குடுகுடுப்பை said...

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
பதிவர் விருது உங்களுக்கே... போனாப் போகுது... அப்பறம் நீங்க அழுதா சமாதானம் பண்றது கஷ்டம்...

சிறந்த் பின்னூட்டர் விருது யாருக்கு? அதுவும் உங்களுக்கேவா? //

அது எனக்கு மட்டும்தான்... யாரும் அதுல போட்டிக்கு வரக்கூடாது.. ஆமாம் சொல்லிபுட்டேன்//
கொடுத்துட்டா போச்சு, உங்களுக்கு ஒரு கிராம் பின்னூட்டம் போட்டுருவோம்

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

//இந்த விருதை பெறுபவர் பதிவர் குடுகுடுப்பை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். //

Finishing Sari illiyae ppa !!
//

பொல்லாப்பு வரக்கூடாதில்லையா

இராகவன் நைஜிரியா said...

// குடுகுடுப்பை said...
உருப்புடாதது_அணிமா said...

விருத நீங்களே வைச்சிக்கோங்க..
அந்த பணமுடிப்ப மட்டும் எனக்கு அனுப்புங்க//

பணமுடிப்பு நான் நைஜீரியா வரும்போது எடுத்துட்டு வரேன், ஆட்டத்த போட்டுருவோம் //

எப்போ வரீங்க, எப்படி வரீங்க..

சீக்கிரம் சொல்லுங்க... ஏற்பாடு எல்லாம் செய்யணுமில்ல..

RAMYA said...

படு பாவிங்களா நான் கூட விருது
எனக்கின்னு அந்த $500 க்கு கணக்கு
போட்டு வச்சா பாவி மக்கா
இப்படி என் ஆசையிலே
மண்ணை வாரி
போட்டது நியாயமா?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// குடுகுடுப்பை said...
உருப்புடாதது_அணிமா said...

விருத நீங்களே வைச்சிக்கோங்க..
அந்த பணமுடிப்ப மட்டும் எனக்கு அனுப்புங்க//

பணமுடிப்பு நான் நைஜீரியா வரும்போது எடுத்துட்டு வரேன், ஆட்டத்த போட்டுருவோம் //

எப்போ வரீங்க, எப்படி வரீங்க..

சீக்கிரம் சொல்லுங்க... ஏற்பாடு எல்லாம் செய்யணுமில்ல..
//

ஒரு கூட்டமே அலையுது போல

RAMYA said...

//
நசரேயன் said...
விருது வாங்கின கையோடு ஒரு விருந்து வச்சா நல்லா இருக்கும்
//

இதுலே உள்குத்து ஒன்னும் இல்லையே

RAMYA said...

சரி விருது வாங்கிய குடுகுடுப்பையாருக்கு
என் உளம் கனிந்த
வாழ்த்துக்கள்

எங்கே விருது கொடுத்தவங்க
படத்தை காணோம்
படம் போட்டுக்க
மறந்துட்டியளா???

புதுகை.அப்துல்லா said...

நீங்க யாரோட வாரிசுன்னு இப்ப தெரிஞ்சு போச்சு :)

Anonymous said...

// நசரேயன் said...
விருது வாங்கின கையோடு ஒரு விருந்து வச்சா நல்லா இருக்கும்//

பார்சல் பண்ணி அனுப்பிவச்சிருகார். அடுத்த தபால்ல 5 பைசா மிட்டாய் இந்தியால இருந்து வருது. இந்தியன் போஸ்ட் கொஞ்சம் லேட் ஆகும். எப்படியும் 2010குள்ள வந்துரும். பொறுமையா இருங்க.

Anonymous said...

ராசா ஒரு 500 ரூபாய் இங்க அனுபிருங்க. எத்தன மொற வந்துபோரிக இந்த பக்கம். ஒரு நேரமும் காசு குடுக்க மாட்டகியலே.

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா..., ”கல்தோன்றா, மண் தோன்றா காலத்தே...” இப்படீன்னு ஒரு வஜனத்தை நம்மவர்கள் சொல்லி கேட்டு இருப்பீர்கள்.. அது மாதிரி.. முன்னமே நீங்க இருக்க.. நான் இப்படி ஆடி இருக்கக்கூடாது தான். கலக்குங்க தோழரே.. வாழ்த்துக்கள்!

:))