Sunday, December 14, 2008

பெற்றோருக்கு kindergarten படிக்கும் மகளின் பரிசு.

கடந்த வாரம் என் மகள் படிக்கும் பள்ளியில், குழந்தைகள் பரிசுப்பொருள் வாங்க கிறிஸ்ட்மஸ் பரிசுப்பொருள் கடை ஒன்று வைத்து $10 க்குள் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருக்கு பரிசுப்பொருள் வாங்கும் நிகழ்ச்சி நடத்தினர். என் மகள் கொடுத்த பத்து டாலரில் அப்பாவிற்கு பரிசாக வாங்கிய காபி கப், அம்மாவிற்கு வாங்கிய போட்டோ பிரேம்தான் படத்தில் உள்ளது.தனக்காக வெறும் 25 cents க்கு ஒரு சிறிய மோதிரம் மட்டுமே வாங்கிக்கொண்டாள், பரிசு வாங்கி எங்களிடம் கொடுத்தபோது அவளின் மகிழ்ச்சியையும் எங்களின் மகிழ்ச்சியையும் எழுத்தினால் கொண்டுவரமுடியவில்லை.

என் மகள் எங்களுக்கு அளித்த முதல் பரிசை பதிவாக்கி மகிழ்கிறேன்

42 comments:

பழமைபேசி said...

அந்த நல்ல உள்ளத்திற்கும், பெற்றோருக்கும் வாழ்த்துகள்!

அது சரி(18185106603874041862) said...

//
தனக்காக வெறும் 25 cents க்கு ஒரு சிறிய மோதிரம் மட்டுமே வாங்கிக்கொண்டாள்
//

உங்க பொண்ணு ரொம்ப பிரில்லியன்ட்!

அப்பிடியே கொசுவத்திய ஏத்தி ஒங்க சின்ன வயசில $10 குடுத்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? யோசிச்சி பாருங்க :))

Anonymous said...

பள்ளியில் சொல்லிக்குடுப்பது எப்படி பதிகிறது. எங்களுக்கெல்லாம் இப்படி சொல்லிக்குடுக்கவில்லையே.

துளசி கோபால் said...

நம்ம குழந்தைகள் கொடுக்கும் பரிசுன்னாவே அதுக்கே ஒரு தனி செண்டிமெண்ட் இருக்குங்க. பாதுகாத்து வைச்சுப் போற்றணும். கள்ளமில்லாத மனசு இந்தப் பருவத்துலேதான்.

என் மகள் ( அப்போ நாலு வயசு) ஒரு மதர்ஸ்டேக்கு ஹார்ட் வடிவப் பெட்டியில் ஹார்ட்வடிவ (கேண்டி)மிட்டாய் வச்சது கொடுத்தாள். அப்புரம் அந்தக் கேண்டியைக் கொஞ்சம் கொஞ்சமா உடைச்சும் தின்னுட்டாளுன்னு வையுங்க. ஆனா அந்த டப்பாவை போற்றிப் பாதுகாத்து வச்சுருந்தேன் 17 வருசம்.
வீடு மாறும் சமயம் மூணரை வருசமுன்பு, இவர்தான் தெரியாம (?)எடுத்துக் குப்பையில் வீசிட்டாராம்.

சின்னப் பையன் said...

சூப்பர்...

கபீஷ் said...

:-):-)

சதங்கா (Sathanga) said...

//அந்த நல்ல உள்ளத்திற்கும், பெற்றோருக்கும் வாழ்த்துகள்!//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அந்த பிஞ்சு உள்ளத்திற்கும்..உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் கொடுப்பதன் அருமை தெரிய ஆரம்பிச்சிடுச்சின்னா ...அவளுக்கும் மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சி..

KarthigaVasudevan said...

ஸ்வீட் மெமரிஸ் குடுகுடுப்பையாரே.வாழ்க்கையின் இனிமையான தருணத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு.

நசரேயன் said...

ஆமா உங்க டாடி பதிவுலக சூப்பர் ஸ்டார் தான்

தமிழ் அமுதன் said...

மகளே ஒரு பரிசுதான்!
அந்த பரிசே ஒரு பரிசு
வழங்கும் போது மேலும்
சிறப்புதான்!
நன்றி! மகிழ்ச்சியை பகிர்ந்து
கொண்டமைக்கு!
வாழ்த்துக்கள்! உங்கள்
மகளுக்கு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் நெகிழ்ச்சியுடனான மகிழ்ச்சி நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

அழகான பரிசுப்பொருட்கள்

தனக்காக வெறும் 25 cents க்கு ஒரு சிறிய மோதிரம் மட்டுமே வாங்கிக்கொண்டாள்,
சின்ன வயசு, பெரிய மனசு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

துளசி கோபால் said...
நம்ம குழந்தைகள் கொடுக்கும் பரிசுன்னாவே அதுக்கே ஒரு தனி செண்டிமெண்ட் இருக்குங்க. பாதுகாத்து வைச்சுப் போற்றணும். கள்ளமில்லாத மனசு இந்தப் பருவத்துலேதான்.

என் மகள் ( அப்போ நாலு வயசு) ஒரு மதர்ஸ்டேக்கு ஹார்ட் வடிவப் பெட்டியில் ஹார்ட்வடிவ (கேண்டி)மிட்டாய் வச்சது கொடுத்தாள். அப்புரம் அந்தக் கேண்டியைக் கொஞ்சம் கொஞ்சமா உடைச்சும் தின்னுட்டாளுன்னு வையுங்க. ஆனா அந்த டப்பாவை போற்றிப் பாதுகாத்து வச்சுருந்தேன் 17 வருசம்.
வீடு மாறும் சமயம் மூணரை வருசமுன்பு, இவர்தான் தெரியாம (?)எடுத்துக் குப்பையில் வீசிட்டாராம்.//

இங்கே கூட ஒரு மெசேஜ் வச்சு கதை சொல்லியிருக்கீங்க மேடம்.

ராஜ நடராஜன் said...

Lovely!

குடுகுடுப்பை said...

வருகைக்கும் வாழ்த்துக்கும்
பழமைபேசி

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி

//
தனக்காக வெறும் 25 cents க்கு ஒரு சிறிய மோதிரம் மட்டுமே வாங்கிக்கொண்டாள்
//

உங்க பொண்ணு ரொம்ப பிரில்லியன்ட்!

அப்பிடியே கொசுவத்திய ஏத்தி ஒங்க சின்ன வயசில $10 குடுத்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? யோசிச்சி பாருங்க :))//

சின்னமா இருக்கும்போதே அப்பா கணக்கில கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாச்சு

குடுகுடுப்பை said...

வ்ருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

// பள்ளியில் சொல்லிக்குடுப்பது எப்படி பதிகிறது. எங்களுக்கெல்லாம் இப்படி சொல்லிக்குடுக்கவில்லையே.//

நமக்கு பரிசலிக்கும் கலாச்சாரம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.இந்த விசயத்துல நல்லா சொல்லித்த்ராங்க.

குடுகுடுப்பை said...

துளசி கோபால் said...

நம்ம குழந்தைகள் கொடுக்கும் பரிசுன்னாவே அதுக்கே ஒரு தனி செண்டிமெண்ட் இருக்குங்க. பாதுகாத்து வைச்சுப் போற்றணும். கள்ளமில்லாத மனசு இந்தப் பருவத்துலேதான்.

என் மகள் ( அப்போ நாலு வயசு) ஒரு மதர்ஸ்டேக்கு ஹார்ட் வடிவப் பெட்டியில் ஹார்ட்வடிவ (கேண்டி)மிட்டாய் வச்சது கொடுத்தாள். அப்புரம் அந்தக் கேண்டியைக் கொஞ்சம் கொஞ்சமா உடைச்சும் தின்னுட்டாளுன்னு வையுங்க. ஆனா அந்த டப்பாவை போற்றிப் பாதுகாத்து வச்சுருந்தேன் 17 வருசம்.
வீடு மாறும் சமயம் மூணரை வருசமுன்பு, இவர்தான் தெரியாம (?)எடுத்துக் குப்பையில் வீசிட்டாராம்.//

வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி டீச்சர்

நான் கூட ஆபிஸ் எடுத்துட்டு வரலாம்னு இருந்தேன், உங்க கருத்துக்கு அப்புரம் பத்திரப்படுத்துறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

குடுகுடுப்பை said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
கபீஷ்
சதங்கா (Sathanga)
T.V.Radhakrishnan
முத்துலெட்சுமி-கயல்விழி

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி மிஸஸ்.டவுட்
// ஸ்வீட் மெமரிஸ் குடுகுடுப்பையாரே.வாழ்க்கையின் இனிமையான தருணத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு.//
ஆமாங்க ரொம்ப மகிழ்ச்சியாக்குன விசயந்தான் இது

குடுகுடுப்பை said...

வாஙக் நசரேயன்
// ஆமா உங்க டாடி பதிவுலக சூப்பர் ஸ்டார் தான்//

அது என்றைக்கும் ஜேகேயார்தான்.

குடுகுடுப்பை said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
//உங்களின் நெகிழ்ச்சியுடனான மகிழ்ச்சி நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

அழகான பரிசுப்பொருட்கள்

தனக்காக வெறும் 25 cents க்கு ஒரு சிறிய மோதிரம் மட்டுமே வாங்கிக்கொண்டாள்,
சின்ன வயசு, பெரிய மனசு.//

ஆமாங்க என்ன மாதிரியே:)

குடுகுடுப்பை said...

நன்றி ராஜ நடராஜன்

RAMYA said...

அட நான் இந்த பதிவை பார்க்கவில்லையே, Sorry, லேட் கம்மர்.
உங்க மகளின் பரிசு பொருட்களை பார்த்தவுடன்
என் கண்கள் பனித்தன
என்ன ஒரு பெற்றோர் பாசம்
என் மனம் நெகிழ்ந்தது

இப்படி ஒரு அன்பு மகளை
பெற்றெடுத்த அந்த தாயிக்கு
என் முதல் வணக்கம்
இப்படி ஒரு மகள் கிடைக்க
நீங்கள் இருவரும் ரொம்பவும்

சந்தனமுல்லை said...

செம!! சான்ஸே இல்லை..அன்பும் வாழ்த்துக்களும்..பாப்பாவிற்கு!

http://urupudaathathu.blogspot.com/ said...

present sir

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

present sir

//

ரொம்ப பிஸியா, பதிவையும் காணோம் பின்னூட்டத்தையும் காணோம்

குடுகுடுப்பை said...

நன்றி சந்தனமுல்லை

// செம!! சான்ஸே இல்லை..அன்பும் வாழ்த்துக்களும்..பாப்பாவிற்கு//

உங்க பதிவ பாத்துதான் நான் ஹரிணி பற்றிய விசயங்களை பதிவாக்கலாம் முடிவு செய்தேன், இன்னும் வரும்

குடுகுடுப்பை said...

RAMYA said...

அட நான் இந்த பதிவை பார்க்கவில்லையே, Sorry, லேட் கம்மர்.
உங்க மகளின் பரிசு பொருட்களை பார்த்தவுடன்
என் கண்கள் பனித்தன
என்ன ஒரு பெற்றோர் பாசம்
என் மனம் நெகிழ்ந்தது

இப்படி ஒரு அன்பு மகளை
பெற்றெடுத்த அந்த தாயிக்கு
என் முதல் வணக்கம்
இப்படி ஒரு மகள் கிடைக்க
நீங்கள் இருவரும் ரொம்பவும்//

நன்றி ரம்யா

துளசி கோபால் said...

ஃபோட்டோ ஃப்ரேமில் குழந்தை படத்தை வச்சு ஆஃபீஸ் ரூமில் நம்ம டெஸ்கில் வச்சுக்கலாம். காஃபி மக்தான் இங்கே அங்கேன்னு போய் மாறியோ இல்லை உடையவோ ச்சான்ஸ் அதிகம். அதனால் மக் ஷோகேஸில் வச்சுக்கணும்:-)

மகள் மூணாப்பு படிக்கும் போது வரைஞ்ச (A3 size) ஒரு ட்ராயிங்கை நல்ல ஃப்ரேமாப் போட்டு கோபாலோட ஆஃபீஸ்லே அவரோட அறையில் மாட்டி வச்சுருக்கு.

மாடர்ன் ஆர்ட்ன்னு சொல்லலாம். அதுக்கு நான் கொடுத்த தலைப்பு ஆயில் ஸ்பில் இன் சதர்ன் ஸீ. இல்லைன்னா ஸ்டார்மி ஸ்கைஸ்.

எல்லாரும் பாராட்டுனாங்களாம், படத்தை.

ரிட்டயர் ஆகும்போது மறக்காம எடுத்துக்கிட்டு வந்துறணும்:-))))

நினைவுகள்தான் பொக்கிஷம்

நினைவுகள்தான் பொக்கிஷம்//

ஆமாம் டீச்சர்,விரைவில் ஹரிணியின் சில ஓவியங்கள்

ஆறாம்பூதம் said...

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றுணர்ந்து இச்சிறு வயதிலேயே அவர்களுக்கு பரிசளித்த அந்த பிஞ்சு உள்ளத்திற்கு எனது வாழ்த்துகள் !

குடுகுடுப்பை said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஆறாம்பூதம்

/அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றுணர்ந்து இச்சிறு வயதிலேயே அவர்களுக்கு பரிசளித்த அந்த பிஞ்சு உள்ளத்திற்கு எனது வாழ்த்துகள் !/

அமுதா said...

So sweet.

Mahesh said...

என் சார்புல குட்டிப் பொண்ணுக்கு வாழ்த்துகளைச் சொல்லிடுங்க !!

குடுகுடுப்பை said...

நன்றி
அமுதா
மகேஷ்

ஆளவந்தான் said...

//பரிசு வாங்கி எங்களிடம் கொடுத்தபோது அவளின் மகிழ்ச்சியையும் எங்களின் மகிழ்ச்சியையும் எழுத்தினால் கொண்டுவரமுடியவில்லை.//

உணர முடிகிறது. வாழ்த்துக்கள்

சகாதேவன் said...

விழாக் காலங்களில் வீட்டில் எல்லோருக்கும் பரிசு வழங்கும் எண்ணத்தை பிஞ்ச் உள்ளங்களின் மனதில் உண்டாக்கிய பள்ளிக்கு முதலில் என் பாராட்டுக்கள். குழந்தை தேர்ந்தெடுத்த பொறுத்தமான பரிசுப் பொருட்கள் அருமை.
குட்டிக்கு என் வாழ்த்துக்கள்.
சகாதேவன்

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஆளவந்தான்
சகாதேவன்

நாநா said...

சூப்பரப்பு. எம் பொண்ணு இதே மாதிரி போயி அவளோட தம்பிக்கு மட்டும் ஏதேதோ வாங்கி வந்தா. எங்களுக்கு எங்கேன்னு கேட்டப்ப நீங்க தான் சம்பாதிக்கிறீங்கள்ள. மால்ல போயி வாங்கிக்கலாம். நான் ஸ்கூலுக்கு போறேன். தம்பி தான் பாவம் வீட்டுலேயே இருக்கான்னு ஒரு லாஜிக் சொல்லி புல்லரிக்க வச்சிட்டா