உங்களுக்கு மீன் பிடிக்குமா இங்கே வாருங்கள்
பஞ்சாயத்துக்குளத்தில்
வந்து நீச்சலடித்தாய்
உண்மையைச் சொல்,
வழிதவறிதானே
மாட்டிக்கொண்டாய்..?
நீ தூண்டிலில் மாட்டிக்கொண்டது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
மீன்காரன் கடக்கும்போது
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!
உன் மண்டையை
நான் மட்டும் தானே கேட்டேன்
உடைந்து போய்
ஊருக்கே உணவாகி விட்டாயே..!
அன்றொருநாள்
உன் வாலின் முள்
என் தொண்டையில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் காசு
டாக்டரின் கையில் சிக்கியது...!
உன் அக்காவின் மரணத்தில்
உன் மரணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!
உனக்கு பிடித்த
மீன் யார் என்றாய்,
விரா மீன் என்றேன்
பயந்து போய்
கடைசியாய் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!
நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மா
நீர் இறைத்த போது
துள்ளிக் குதித்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
நான்
நீர் இறைத்திருந்தால்
துள்ளிக் குதித்திருப்பாயா..?!
உன் குஞ்சுகளை
என் தொல்லை
அதிகமென்று
உத்திராபதி வீட்டுக் குட்டையில்
வளர்த்தாயா
நாங்கள் கூட்டாளிகள்
என்று தெரியாதா
நீ இருக்கும் இடம் நோக்கி
வருகிறோம் தப்பிவிடு..!
மீனே இல்லை என்று நினைத்த குளத்திலும்
அனிச்சையாய் பார்க்கிறேன்
உன் கயல்விழி
காட்டிக்கொடுத்துவிட்டதே...!
குழம்பில் சற்று
துள்ளி துள்ளி குதிப்பாய்
நீ குதிக்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது...!
நிறைகுடமும் கூத்தாடும்
நீ அதனுள் வருகையில்..!
உன்னை சாப்பிட்டுக்
கொண்டே வந்ததில்
எதிரே இருந்த தட்டில்
இடரி விழப்போன இன்னொரு மீனை
பார்த்து எஸ்கேப் என்கிறாய்..!
அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
உண்ண பிடித்த பகுதிகளை
தடவிப் பார்ப்பது
என் வழக்கம் என்றேன்,
"ஆ"எனச் சொல்லி
தண்ணீருக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!
கவுஜ மூலம் நாடோடி இலக்கியன் கவிதைகள்...!: உங்களுக்கு காதல் பிடிக்குமா? அப்போ இங்கே வாங்க....!,
வெவ்வேறு கவுஜயில் வெவ்வேறு மீன்கள் இடம் பிடித்திருக்கும்.இறுதியில் அனைத்தும் உணவாகிவிட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்
39 comments:
//உங்களுக்கு மீன் பிடிக்குமா இங்கே வாருங்கள்
//
பிடிச்சா மட்டும்தான் வரணுமா?
//பஞ்சாயத்துக்குளத்தில்
வந்து நீச்சலடித்தாய்
உண்மையைச் சொல்,
வழிதவறிதானே
மாட்டிக்கொண்டாய்..?
//
பஞ்சாயத்துல இன்னும் குளம் எல்லாம் விட்டு வெச்சு இருக்காங்களா என்ன? வீடு கட்டலையா
//நீ தூண்டிலில் மாட்டிக்கொண்டது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
மீன்காரன் கடக்கும்போது
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!
//
அதுக்கு ஏங்க உங்களை பாக்கறாங்க.
நீ என்னுடைய தூண்டிலில் இப்படி இருந்தா சரியா இருக்குமோ.
தப்பா இருந்தா ஒரு பெரிய சாரி
//உன் மண்டையை
நான் மட்டும் தானே கேட்டேன்
உடைந்து போய்
ஊருக்கே உணவாகி விட்டாயே..!//
மீன் தலை எல்லாம் சாப்பிடுவாங்களா என்ன??????????
(நான் சைவமுங்க அதனாலதான் இந்த முக்கியமான சந்தேகம்)
நல்ல கவுஜை தொகுப்பு :)
என்ன வீட்டுல மீன் கறியா?
நீங்க எந்த மீனுக்கு தூண்டில் போடுறீங்க
தாரணி பிரியா said...
//நீ தூண்டிலில் மாட்டிக்கொண்டது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
மீன்காரன் கடக்கும்போது
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!
//
அதுக்கு ஏங்க உங்களை பாக்கறாங்க.
நீ என்னுடைய தூண்டிலில் இப்படி இருந்தா சரியா இருக்குமோ.
தப்பா இருந்தா ஒரு பெரிய சாரி//
கவுஜ ரீமேக் அதுனால கருத்து(?)ப்பிழை நெறயா இருக்கும் மன்னிச்சு விட்டிருங்க அடுத்த வாட்டி சொந்தமா எழுத முயற்சி பண்ணுறேன்
//
அன்றொருநாள்
உன் வாலின் முள்
என் தொண்டையில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் காசு
டாக்டரின் கையில் சிக்கியது...!
//
இது நல்லாருக்கு :0))
//
நிறைகுடமும் கூத்தாடும்
நீ அதனுள் வருகையில்..!
//
இது.....கலக்கல்!!!
ஒரு ச்சின்ன கொழப்பம்...
கவிதை நீங்க எழுதுனதா இல்லை நீங்க கொடுத்திருக்க லிங்கில் இருக்கிறதா?
//
அன்றொருநாள்
உன் வாலின் முள்
என் தொண்டையில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் காசு
டாக்டரின் கையில் சிக்கியது...!
//
ஒரே “சிக்கலா” இருந்தாலும் அருமை
//நசரேயன் said...
நீங்க எந்த மீனுக்கு தூண்டில் போடுறீங்க
//
அவுரு இன்னும் தூண்டில் போடுறாரா? அவிங்க வீட்ல படிப்பாங்கன்னு நினைக்குறேன்... படிப்பாங்கன்னு நம்புவோம்...
சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் ஐயப்பாட்டைத் தீர்த்து வைத்த பாட்டு !!!!
ஹி ஹி சும்ம்ம்ம்ம்ம்மா..... நல்லாயிருக்கு.. வந்த்துக்கள் !!!
நல்ல மீன் வறுவல் ரெசிப்பி இருக்கும், ப்ரிட்ஜில் இருக்கும் சாலமன் பிஷ்ஷை காலி செய்யலாம் என்று வந்தால்....
கவுஜ போட்டு சாச்ச்ச்ச்புட்ட்டீங்களே மச்சான்
தாரணி பிரியா இங்கேஎ பின்னூட்ட கயமை செய்கிறார்
///மீன் தலை எல்லாம் சாப்பிடுவாங்களா என்ன??????????///
மீன் தலைக்கு தனி ஓட்டலே இருக்கு சிங்கப்ப்பூருல
:-)))
கவிதைகள் நல்லாருந்தது..மீன் மாதிரியே!
அதைவிட
//வெவ்வேறு கவுஜயில் வெவ்வேறு மீன்கள் இடம் பிடித்திருக்கும்.இறுதியில் அனைத்தும் உணவாகிவிட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்
//
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்!
கவுஜ நல்லாத்தானிருக்கு...ஆனா ஒரே கவுச்சை வாடை! தலை, மண்டை, வாய், வால் முள் என்று!
//உங்களுக்கு மீன் பிடிக்குமா//
மீனுக்குத்தான் என் தூண்டலைப் பிடிக்கும்:)தூண்டிலை மெல்ல மீனா இழுப்பா பாருங்கா....இதற்கு மேல் மீன் பிடிக்கிறவங்களோட கற்பனைக்கு!
//மீன் தலை எல்லாம் சாப்பிடுவாங்களா என்ன??????????//
தாரணிப்பிரியா மெய்யாலுமே சைவம் என்றால் தலையே சுவை.
அது சரி said...
ஒரு ச்சின்ன கொழப்பம்...
கவிதை நீங்க எழுதுனதா இல்லை நீங்க கொடுத்திருக்க லிங்கில் இருக்கிறதா?
//
லின்க்ல கவிதை இருக்கிறது, அத ரீமேக் பண்ணி பேரரசு பாணி கவுஜ இது
மொதல்லே தாமதமா வந்ததிற்கு
மன்னிக்கவும்,
சரி இப்போ கவிதை
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க
ஆமா உங்களுக்கு மீனுன்னா
ரொம்ப பிடிக்குமா?????
என்னாங்க குடுகுடு
உங்க ப்லாக் ஒரே
மீன் வாடையா இருக்கு
கவிதை நல்லா எழுதி இருக்கீங்க
எப்பெடி இப்படி மீனை பத்தி
கவிதை???
//
லின்க்ல கவிதை இருக்கிறது, அத ரீமேக் பண்ணி பேரரசு பாணி கவுஜ இது
//
இதெல்லாம் வேறேயா
ஒரே குழப்பமா இருக்குப்பா
ok, me 25th
தரணி: மீன் வால்ல முள்ளு அதிகமா இருக்கும்...
கணிப்பொறி மேல் உவ்வே செய்யாமல் தவிர்க்கவும்
ரீமேக் கவிதை ரொம்ப சூப்பர்
நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள்
சூப்பர்!
என்ன கொடுமை ச்சே கவிதை இது?
மீன் இதுவரைக்கும் பிடித்த உணவு
இனிமே அது டவுட்டுதான்.
மீன் தலை எல்லாம் சாப்பிடுவாங்களா என்ன??????????
ம், கொல்கத்தாவில் புதுமாப்பிள்ளைகளுக்கு தரும் விருந்தின் முக்கிய அயிட்டமே இதுதானாம்.
அதுவும் கண்களோடு.
சொல்லக் கேள்விப்பட்டது.
இப்பதான் அந்த லின்க் படிச்சேன், நெசமாவெ ............
இப்ப இந்த மீன் கவிதை சாரி கவுஜ புரியுது.
வாபஸ் வாங்கிக்கிறேன், முன்னுக்கு முன் கூறிய முன்னூட்டத்தை, (முன்னாடியே போட்டுட்டா முன்னூட்டம் தானே)
ஏன் இப்படி தலையில அடிச்சிக்கிறீங்க.
:-))
அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
என்ன குடுகுடுப்பையாரே
நேத்து வச்ச மீன் குழம்பும், மீன் வருவலும் இந்த குளத்துல புடுச்சது தானா ?
நேத்து வெச்ச மீன் குழம்பு இழுக்குது மறுபடியும் வந்தேன்:)
ஓட்டு பொறுக்கி said...
என்ன குடுகுடுப்பையாரே
நேத்து வச்ச மீன் குழம்பும், மீன் வருவலும் இந்த குளத்துல புடுச்சது தானா ?/
அது வியட்நாம் கடைல வாங்கினது.பிடிச்சது சைனாவிலயாம்.
ராஜ நடராஜன் said...
நேத்து வெச்ச மீன் குழம்பு இழுக்குது மறுபடியும் வந்தேன்:)//
மீன் இழுக்கத்தானே செய்யும்
நேற்று தான் அண்ணா போட்ட அந்த ஒரிஜினல் கவிதைகள்ல கும்மினேன்.. என்ன அட்ரஸ் குடுத்து இங்க அனுப்பினார்... இங்க பார்த்தா அவரின் கவிதை அழகான கருவாடாய் ச்சே சாரி எதிர் கவுஜயாய்.. ;))))) சூப்பர் அண்ணா கலக்கிட்டீங்க.. :))))))
ஸ்ரீமதி said...
நேற்று தான் அண்ணா போட்ட அந்த ஒரிஜினல் கவிதைகள்ல கும்மினேன்.. என்ன அட்ரஸ் குடுத்து இங்க அனுப்பினார்... இங்க பார்த்தா அவரின் கவிதை அழகான கருவாடாய் ச்சே சாரி எதிர் கவுஜயாய்.. ;))))) சூப்பர் அண்ணா கலக்கிட்டீங்க.. :))))))//
நன்றி சிரிமதி. அடுத்த முறை உங்க கவிதைய கவுஜ ஆக்கிருவோம்
Post a Comment