Wednesday, December 17, 2008

சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : பெய்ஜிங் பயணம்

2006 ஆம் ஆண்டு பெய்ஜிங்கிற்கு இரண்டு முறை செல்ல நேரிட்டது, அந்த பயண அனுபவத்தை உங்களிடம் பகிருவதற்காக இந்த பதிவு.

முதல் முறை ஜூலை மாதம் சென்றேன் கிட்டத்தட்ட 4 வாரம் தங்கியிருந்தேன்.டாலஸில் இருந்து டோக்கியோ வழியாக அமெரிக்கனில் பயணம். டோக்கியோ ஏர்போர்ட்டில் காலை ஜப்பானில் காபி எனப்பாடிய படி ஒரு மாலை நேரத்தில் காபியை குடித்துவிட்டு ஏர் நிப்பானில் பெய்ஜிங், சாப்பாடு கொடுத்தார்கள், மீன் பிரியனான நான் சிக்கனா,மீனான்னு கேட்டப்போ, மீன் அப்படின்னு சொல்லிட்டேன்.கொடுத்தார்கள் வேக வைக்காத பச்சை மீனையும் வெத்திலை போன்ற இலையையும், இலை மற்றும் வெறும் சோற்றை சாப்பிட்டுவிட்டுவிட்டு தூங்கிப்போனேன்.

பெய்ஜிங் விமான நிலையம் நிச்சயமாக மிகப்பிரமாண்டமான விமான நிலையம், தரையில் பெட்டியை இழுத்து வரும் போது சில இடங்களில் சீனத்தரம் தென்பட்டது, இறங்கி எனது அரைகுறை ஆங்கிலத்தில் அவர்களுடன் சீனத்தில் பேசி எப்படியோ இம்மிக்ரேசன் தாண்டியாச்சு,

என்னை கூட்டிச்செல்ல வரவேண்டியவர் வெளியில் இருப்பாரா என்ற பயம் வேறு, பெட்டியை தள்ளிக்கொண்டு வர சிகப்பு உடை அணிந்த உதவியாளர் குழு ஒன்று உள்ளது,நானும் ஒருவரை அமர்த்திக்கொண்டேன், kudukuduppai என்று யாராவது தட்டி வைத்த நபர் தெரிகிறாரா எனபதே என் ஒரே நோக்கம், விமான நிலையம் முழுவதும் அமெரிக்கப்படுத்தப்பட்ட கடைகள். நிரம்பி வழிந்த ஸ்டார்பக்ஸ், கேஎப்சி மற்றும் சில ...

வெளியில் வந்தாயிற்று குடுகுடுப்பை தட்டியுடன் ஒரு சீனப்பெண் என்னை வரவேற்றார், என்னுடைய டிராலியை தள்ளிக்கொண்டு வந்த சீனருக்கு 100 யுவான் கொடுத்தேன் அவர் அமெரிக்கா டாலர் எதிர்பார்த்திருப்பார் போல கொஞ்சம் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அவர் சாய்ஜியன் என்றபடியே விடைபெற்றார்.

"யூ இந்துவா" -- நான் இந்து என்று இவருக்கு எப்படி தெரியும் என நினைத்தபடியே யெஸ் என்றேன்.சீனத்தரத்துடன் வந்த காரில் ஏறினேன்.நான் ஹோட்டல் அறையை சேர்ந்த போது இரவு மணி எட்டு, இரவு சாப்பாடு என்ன வேண்டும் என அந்த சீனப்பெண் கேட்டார்.கொடுக்கப்பட்ட மெனுவில் இருந்த சிக்கன் மற்றும் அரிசி சாதம் தேர்வு செய்தேன்.சாப்பாடு எனக்கு பிடித்தது.

சில நாட்களில் புரிந்தது இந்துவா என்றுதான் இந்தியாவை சீனத்தில் சொல்கிறார்கள் என்று.நான் இருந்த இடம் பெய்ஜிங்கின் Changping District, ஏதோ ஒரு புறநகர்ப்பகுதி.பெரிய சாலைகளில் ஆங்கிலத்திலும் பெயர்கள் இருந்தது. மற்றபடி சிறிய சாலைகள் உணவகங்களில் முழுவதும் சீனத்திலேயே எழுதி இருந்தது. நான் பார்த்தவரையில் ஆங்காங்கே ஆங்கிலப் பயிற்சிப்பள்ளிகள் நம்மூரு ஸ்போக்கன் இங்கிலிஷ் மாதிரி இருந்தன.

யுவான் நோட்டில் இருக்கும் மாசேதுங்கை காட்டி யார் இவர் என்று ஒருவரிடம் கேட்டேன். அவருக்கு ஒன்று தெரியவில்லை அல்லது
நான் கேட்டது புரியவில்லை.

படங்களோடு அடுத்த பாகம்.

தொடரும்..

40 comments:

Anonymous said...

முதல் ஓட்டு, முதல் பின்னூட்டம் இரண்டுமே என்னுடையதுதான்...

ஐய்யா.. ரொம்ப சந்தோஷமா இருக்குது...

Anonymous said...

//படங்களோடு அடுத்த பாகம்.

தொடரும்.. //

விரைவில் எதிர்பார்க்கின்றோம்....

நசரேயன் said...

"யூ இந்துவா" இல்ல நான் குடுகுடுப்பை ன்னு சொல்ல வேண்டியதானே

நசரேயன் said...

/*
சிக்கன் மற்றும் அரிசி சாதம் தேர்வு செய்தேன்.சாப்பாடு எனக்கு பிடித்தது.
*/
அதை நீங்க சொல்லவே வேண்டாம், நீங்க எவ்வளவு பெரிய சாப்பாட்டு ராமன் ன்னு ஊருக்கே தெரியுமே

புதுகை.அப்துல்லா said...

மீ தேர்டு

புதுகை.அப்துல்லா said...

அதுவும் இல்லையா :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// இந்துவா" இல்ல நான் குடுகுடுப்பை ன்னு சொல்ல வேண்டியதானே//

repeateyyy

பழமைபேசி said...

//வெளியில் வந்தாயிற்று குடுகுடுப்பை தட்டியுடன் ஒரு சீனப்பெண் என்னை வரவேற்றார்//

போயி நின்னு, உடுக்கைய அடிச்சீங்ளா இல்லியா?

Anonymous said...

what do you mean by சீனத்தரத்துடன்????

கபீஷ் said...

//அவருக்கு ஒன்று தெரியவில்லை அல்லது
நான் கேட்டது புரியவில்லை.
//
அல்லது உங்களுக்கு கேட்க தெரிந்திருக்கவில்லை :-):-)

கபீஷ் said...

////இராகவன், நைஜிரியா said...
//படங்களோடு அடுத்த பாகம்.

தொடரும்.. //

விரைவில் எதிர்பார்க்கின்றோம்....
////

நானும்...........

Anonymous said...

சீனத்தை வென்ற அண்ணன் குடுகுடுப்பை வாழ்க

Anonymous said...

”நீ ஹாவ்” “சிசி” எல்லாம் சொல்ல கத்துகிட்டீங்களா..

அவங்க ஆங்கிலத்தை புரிஞ்சு, பதில் சொல்றதுக்குள்ள மண்டை காஞ்சுபோயிடும்...

எல்லாம் ஒரு 5 வருஷம் அங்கு வேலை செஞ்ச அனுபவம்தான்...

ராஜரத்தினம் said...

அது இந்துவா அல்ல.இந்துழ்ரன் மா? என்று கேட்டிருப்பார்கள். எனக்கு சீனாவும், அதன் மக்களும் ரொம்ப, ரொம்ப பிடிக்கும்.

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
”நீ ஹாவ்” “சிசி” எல்லாம் சொல்ல கத்துகிட்டீங்களா..
//

நி சுவோ ஷமா?

குடுகுடுப்பை said...

இராகவன், நைஜிரியா said...

முதல் ஓட்டு, முதல் பின்னூட்டம் இரண்டுமே என்னுடையதுதான்...

ஐய்யா.. ரொம்ப சந்தோஷமா இருக்குது...
//

வாங்கண்ணே வாங்க. தொடர் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*
சிக்கன் மற்றும் அரிசி சாதம் தேர்வு செய்தேன்.சாப்பாடு எனக்கு பிடித்தது.
*/
அதை நீங்க சொல்லவே வேண்டாம், நீங்க எவ்வளவு பெரிய சாப்பாட்டு ராமன் ன்னு ஊருக்கே தெரியுமே

//

சொல்லாட்டி அடுத்த பதிவு எழுத முடியாது. நிறைய சாப்பாட்டு விசயம் இருக்கு

சந்தனமுல்லை said...

// சின்ன அம்மிணி said...

சீனத்தை வென்ற அண்ணன் குடுகுடுப்பை வாழ்க/

ரிப்பீட்டு!!

//சில நாட்களில் புரிந்தது இந்துவா என்றுதான் இந்தியாவை சீனத்தில் சொல்கிறார்கள் என்று.///

:-))

யூவானின் (சுவாங்) நோட்டு உங்களுக்கு எப்படி கிடைத்தது??

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
அப்துல்லா
டிவீயார்

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//வெளியில் வந்தாயிற்று குடுகுடுப்பை தட்டியுடன் ஒரு சீனப்பெண் என்னை வரவேற்றார்//

போயி நின்னு, உடுக்கைய அடிச்சீங்ளா இல்லியா?//

புது இடம் அதுனால மொழி புரியாதுன்னு அடிக்கல

குடுகுடுப்பை said...

வாங்க Anonymous said...

what do you mean by சீனத்தரத்துடன்????//

இது உலகமறிந்த விசயமாச்சே

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

//அவருக்கு ஒன்று தெரியவில்லை அல்லது
நான் கேட்டது புரியவில்லை.
//
அல்லது உங்களுக்கு கேட்க தெரிந்திருக்கவில்லை :-):-)//

நீங்கள் சொல்வதுதான் சரியான வார்த்தை

குடுகுடுப்பை said...

வாங்க சின்ன அம்மிணி

சீனத்தை வென்ற அண்ணன் குடுகுடுப்பை வாழ்க//

காமெடிக்கு ஒரு அளவே இல்லையா

குடுகுடுப்பை said...

வாங்க Raja

// அது இந்துவா அல்ல.இந்துழ்ரன் மா? என்று கேட்டிருப்பார்கள். எனக்கு சீனாவும், அதன் மக்களும் ரொம்ப, ரொம்ப பிடிக்கும்.//

இருக்குமா இருக்கும்,சீன மொழி வித்தியாசமான சத்தம்தான்

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

// சின்ன அம்மிணி said...

சீனத்தை வென்ற அண்ணன் குடுகுடுப்பை வாழ்க/

ரிப்பீட்டு!!

//சில நாட்களில் புரிந்தது இந்துவா என்றுதான் இந்தியாவை சீனத்தில் சொல்கிறார்கள் என்று.///

:-))

யூவானின் (சுவாங்) நோட்டு உங்களுக்கு எப்படி கிடைத்தது??

வாங்க சந்தனமுல்லை, பப்புகிட்டே இருந்து ரொம்ப குறும்பு கத்துக்கிட்டீங்க போலருக்கு

Pulliraaja said...

சீனத்து விடலை வாத்து கெடைச்சுதோ! நல்லா இருக்குமாம்.

RAMYA said...

/*
சிக்கன் மற்றும் அரிசி சாதம் தேர்வு செய்தேன்.சாப்பாடு எனக்கு பிடித்தது.
*/

அங்கேயும் பொய் சாப்பாடு தானா நல்லவேளை 20 இட்லி ஐ கொண்டா அப்படின்னு சொல்லாம இருந்தீங்களே
சீனா தப்பிச்சுது

RAMYA said...

படங்களோடு அடுத்த பாகம்
விரைவில் எதிர் பார்க்கிறோம்

RAMYA said...

//

நசரேயன் said...
"யூ இந்துவா" இல்ல நான் குடுகுடுப்பை ன்னு சொல்ல வேண்டியதானே

//

அப்படி சொல்லி இருந்தா
குடுகுடுப்பை கையில் என்னென்ன
இருக்கவேண்டுமோ அவ்வளவும்
இருந்தான் தான் நம்புவாங்க

RAMYA said...

//
பழமைபேசி said...
//வெளியில் வந்தாயிற்று குடுகுடுப்பை தட்டியுடன் ஒரு சீனப்பெண் என்னை வரவேற்றார்//

போயி நின்னு, உடுக்கைய அடிச்சீங்ளா இல்லியா?

//

அப்படி உடுக்கை அடிச்சதனாலே
தான் தப்பிச்சாரு
இல்லீன்னா ...............

RAMYA said...

//
புதுகை.அப்துல்லா said...
மீ தேர்டு

//

புதுகை அண்ணா நீங்க ஜஸ்ட் மிஸ்.......

RAMYA said...

//
புதுகை.அப்துல்லா said...
அதுவும் இல்லையா :))

//

இல்லையே
அடுத்த முறை நீங்க தான் எல்லாம்

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
முதல் ஓட்டு, முதல் பின்னூட்டம் இரண்டுமே என்னுடையதுதான்...

ஐய்யா.. ரொம்ப சந்தோஷமா இருக்குது...

//

அண்ணன் ரொம்ப சந்தோஷ படறாரு
அவருக்கு ஒரு சோடா ப்ளீஸ்

RAMYA said...

//
Pulliraaja said...
சீனத்து விடலை வாத்து கெடைச்சுதோ! நல்லா இருக்குமாம்
//

புள்ளி ராஜ கேட்டது கிடைச்சுதா...

RAMYA said...

35

S.R.Rajasekaran said...

\\\என்னை கூட்டிச்செல்ல வரவேண்டியவர் வெளியில் இருப்பாரா\\\


உங்கள பாத்த உடனே ஊர விட்டே ஓடி போயிருப்பார்

குடுகுடுப்பை said...

Pulliraaja said...

சீனத்து விடலை வாத்து கெடைச்சுதோ! நல்லா இருக்குமாம்.//

படத்தோட வருது.

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
பழமைபேசி said...
//வெளியில் வந்தாயிற்று குடுகுடுப்பை தட்டியுடன் ஒரு சீனப்பெண் என்னை வரவேற்றார்//

போயி நின்னு, உடுக்கைய அடிச்சீங்ளா இல்லியா?

//

அப்படி உடுக்கை அடிச்சதனாலே
தான் தப்பிச்சாரு
இல்லீன்னா .........

ரொம்ப நன்றிங்க பின்னூட்டங்களுக்கு

குடுகுடுப்பை said...

S.R.ராஜசேகரன் said...

\\\என்னை கூட்டிச்செல்ல வரவேண்டியவர் வெளியில் இருப்பாரா\\\


உங்கள பாத்த உடனே ஊர விட்டே ஓடி போயிருப்பார்//

அய்யா வடக்கூராரே அடிக்கடி வாங்க உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

நாநா said...

நல்ல ஸ்பெசல் படமா எதாவது போடுடா