அது ஒரு சராசரி விவசாயக்குடும்பம், வீட்டு வாசலில் கத்தரிக்காய்,சுண்டைக்காய், வேப்பமரம் எல்லாம் வளர்த்தார்கள், எல்லாமே ஓரளவிற்கு அந்தந்த காலத்தில் பயன் தந்தபடி இருந்தது, வேப்பமரம் இலையுதிர்காலம் தவிர மற்ற நாட்களில் நிழல் தந்தபடி இருந்தது, அனைத்து காலங்களில் வீட்டில் வசிப்பவர்கள், விருந்தாடிகள்,பக்கத்து வீட்டுக்கு காரர்களுக்கு பல் விளக்கவும் உதவியதால் கல்லாக்கோட்டையான் கடையில் கோல்டேஜ்(கோல்கேட்டின் டூப்ளிகேட்) பேஸ்ட் வியாபாரத்தை குறைத்தது.
இதற்கிடையில் புதுமாதிரி விவசாயங்களில் நம்பிக்கை உள்ள அந்த வீட்டு விவசாயி எங்கேயோ கிடைத்த ஒரு முருங்கை விதையை வாங்கி வந்தார், வழக்கமாக முருங்கைக்கு போத்துதானே வெட்டி நடுவார்கள், இது என்னடா புது மாதிரியாக விதை, அதுக்கு பெயர் ஏதோ செடி முருங்கையாம், விதை விருட்சமாகி நன்றாக வளர்ந்தது, செடி முருங்கை என்ற பெயர் இருந்தாலும் நல்ல மரமாகவே வளர்ந்தது.பூக்கள் பூக்க ஆரம்பித்ததது.
காய்கள் இன்னும் சில நாட்களில் வந்து விடும் என்ற நிலையில் வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த செல்லமாக வளர்க்கும் பசு மாடு கயிரை அறுத்துக்கொண்டு முருங்கை மரத்தின் கீரையை சாப்பிடும் எண்ணத்தில் மரத்தின் ஒரு கிளையை இழுக்க, கால் எப்படியோ முருங்கை மரத்தின் அடிப்பகுதியில் மாட்டிக்கொண்டது, இதனைப்பார்த்த வீட்டுக்கார அம்மா பதட்டத்தில் ஓடி வந்து விழுந்ததில் கீழே விழுந்து முதுகெலும்பில் அடிபட்டது,பசு காலை எடுக்கும் முயற்சியில் முருங்கை மரம் உடைந்து விழுந்தது, பசுவிற்கும் நல்ல அடி இடுப்புபகுதியில் அடிபட்டது .ஒரே விபத்தில் முருங்கையும் பசுவும் நொண்டியாகிப்போனது, வீட்டுக்கார அம்மாவிற்கு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தே நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
நாட்கள் கடந்தது முருங்கை மரம் மீண்டும வளர ஆரம்பித்தது ஒரு மாதிரி நொண்டி மரமாக, ஊராரே பொறாமை படும் அளவுக்கு காய்க்க ஆரம்பித்தது, பசு மாடும் நொண்டியாக இருந்தாலும் கன்றுகள் ஈன்று பால் கொடுக்க ஆரம்பித்தது, வீட்டுக்கார அம்மாவும் முதுகுவலியிலும் அந்த மாட்டில் பால் கறந்து வீட்டு உபயோகத்திற்கு பயன்பட்டது போக மீதியை விற்று மாட்டுக்கு தீவணம் வாங்குவதற்கு பயன்படுத்திக்கொண்டார்.
முருங்கை மரம் நன்றாக காய்ப்பதை பார்த்த வீட்டுக்காரர், மகிழ்ச்சியில் விதைக்காக சில முருக்கைக்காய்களை பரிக்காமல் விட்டுவைத்தார், அதில் வந்த விதைகளை எடுத்துப்போய் தன் வயலில் இருக்கும் போர்வெல் பகுதியில் சிலவற்றை விதைத்து வைத்தார்.போர்வெல்லுக்கு எதிரில் வசித்த சேகரும் சில விதைகளை வாங்கி அவர் வீட்டு தோட்டத்தில் போட்டு வைத்தார்.
போர்வெல்லில் போட்ட முருங்கை ஒன்றும் வளரவில்லை,ஆனால் சேகர் வீட்டு முருங்கைமரம் நன்றாக வளர்ந்தது, ஆனால் காய்க்கவே இல்லை, சேகருக்கு காரணம் புரியவில்லை, நன்றாக காய்க்கும் நொண்டி மரமும் ரோட்டு ஓரம்தான் இருக்கு அதில் எடுத்த விதையில் வளர்ந்த இந்த மரமும் ரோட்டு ஓரம்தான் இருக்கு ரோட்டோர முருங்கை நல்லா காய்க்கும்னு சொல்வாங்களே, ஒருவேளை நொண்டியாக்குனா காய்க்குமோ என்ற குழப்பத்தில் சேகர்.
இதற்கிடையில் நொண்டி மரம் பக்கத்தில் இருந்த கொய்யா மரத்தில் நிறைய கொய்யா காய்த்திருந்தது, அதனைப்பறிக்க நொண்டி மரத்து வீட்டுப்பையன் முருங்கை மரத்தின் மீது ஏறி கொய்யா பறிக்க முயன்றான், கொய்யா பறிக்க அவன் கையை மேலே நீட்டியபோது அந்த மரத்தின் ஊடே சென்று கொண்டிருந்த ஒரு வீட்டின் எலெக்ட்ரிக் வயரில் பட்டு சாக் அடித்து கதறினான் அவன்..........இப்போது முருங்கை மரம் மேலும் ஒருமுறை நொண்டியாகி அவனை காப்பாற்றியது.
சில வருடங்களுக்கு பிறகு அவன் வெளியூர் சென்றான்,வேலை பார்த்தான், தன் வாழ்க்கையில் அவன் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்தது,இந்த சம்பவங்கள் அவனை முடக்கிப்போட்டது, பிடிக்காதவர்கள், ஊரார்கள் எள்ளல் பேசுவார்களே என எண்ணி நொந்து போனான்,மனதால் சோர்ந்து போனான்.
இப்போது ஊர் நோக்கி பல வருடங்களுக்கு அப்புரம் வந்து பார்த்தான் அந்த முருங்கை மரம் இன்னும் காய்த்து பலன் கொடுத்தபடியே இருந்தது, வேப்பமரத்தில் கட்டியிருந்த நொண்டிப்பசுமாடு எட்டாவது கன்றை ஈன்று பால் கொடுத்தபடியே இருந்தது, தேவையில்லாமல் உழைத்தாலும் அவன் அம்மா இடுப்பு வலியை பொருட்படுத்தாது உழைத்தபடிதான் இருந்தாள். ஊனமாக உள்ள இவைகள் எதுவுமே தன்னை ஊனமாக கருதாமல் தத்தம் வேலைகளை செய்தபடி இருந்தது கண்டான், தம் மனதில் உள்ள குழப்பங்கள் தெளிந்தான் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களால் மனதில் ஏற்பட்ட ஊனத்தை தூக்கி எறிந்து விட்டு தனது வெற்றிப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
கதை மாதிரி ஒன்னு எழுதியிருக்கேன், பிடிச்சிருந்தா கருத்து சொல்லுங்க, ஓட்டளியுங்கள்
54 comments:
மீ த பர்ஸ்ட்டு?
அய்! நானேதான் முதல்:)
//கோல்டேஜ்(கோல்கேட்டின் டூப்ளிகேட்) பேஸ்ட் வியாபாரத்தை குறைத்தது.//
புதுப் பேஸ்டா இருக்குதே!(இஃகி!இஃகி! இதுவும் புதுசுதான்:))
//தேவையில்லாமல் உழைத்தாலும் அவன் அம்மா இடுப்பு வலியை பொருட்படுத்தாது உழைத்தபடிதான் இருந்தாள்.//
இவை அம்மாக்களுக்கு மாத்திரமே சாத்தியம்!
கதை மாதிரி ஒன்னு
மாதிரி ஒன்னு
ஒன்னு
:-))))))))))
குடுகுடுப்பை கதை அருமையா சொல்லுறீங்க, இது கதை யல்ல படிக்க வேண்டிய பாடம்
Excellent. Enjoyed it. Thanks.
Ravi
அண்ணே இப்போதைக்கு present மட்டும் போட்டுக்கிறேன்..
இன்னும் ரெண்டு நாளைக்கு நான் ரொம்ப பிஸி ( நம்புங்கப்பா)
உருப்புடாதது_அணிமா said...
அண்ணே இப்போதைக்கு present மட்டும் போட்டுக்கிறேன்..
இன்னும் ரெண்டு நாளைக்கு நான் ரொம்ப பிஸி ( நம்புங்கப்பா)//
அடுத்த கதை , நீங்க,ராகவன் நான் மூனு பேரையும் வெச்சு எழுதலாம்னு இருக்கேன்.போயிட்டு வாங்க
ஆஹா,
நான் இந்த ஆட்டைக்கு வரலன்னே..
என்னை விட்டுடுங்க.
நான் பொழச்சி போறேன்..
நான் பாவம் இல்லியா??
////குடுகுடுப்பை said...
அடுத்த கதை , நீங்க,ராகவன் நான் மூனு பேரையும் வெச்சு எழுதலாம்னு இருக்கேன்.போயிட்டு வாங்க////
எதுக்கு இப்படி எல்லாம் கொளுத்தி போடுறீங்க??
என்னை விட்டுடுங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//கதை மாதிரி ஒன்னு எழுதியிருக்கேன், ///
மாதிரி அல்ல..
இது கதையே தான்,,..
நல்ல இருக்குதுன்னே
Very nice!
//
கல்லாக்கோட்டையான் கடையில் கோல்டேஜ்(கோல்கேட்டின் டூப்ளிகேட்) பேஸ்ட் வியாபாரத்தை குறைத்தது.
//
ஓஹோ...உங்க கம்பெனி இப்பிடித் தான் நஷ்டமாச்சா....
//
காய்கள் இன்னும் சில நாட்களில் வந்து விடும் என்ற நிலையில் வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த செல்லமாக வளர்க்கும் பசு மாடு கயிரை அறுத்துக்கொண்டு முருங்கை மரத்தின் கீரையை சாப்பிடும் எண்ணத்தில் மரத்தின் ஒரு கிளையை இழுக்க, கால் எப்படியோ முருங்கை மரத்தின் அடிப்பகுதியில் மாட்டிக்கொண்டது, இதனைப்பார்த்த வீட்டுக்கார அம்மா பதட்டத்தில் ஓடி வந்து விழுந்ததில் கீழே விழுந்து முதுகெலும்பில் அடிபட்டது,பசு காலை எடுக்கும் முயற்சியில் முருங்கை மரம் உடைந்து விழுந்தது, பசுவிற்கும் நல்ல அடி இடுப்புபகுதியில் அடிபட்டது .ஒரே விபத்தில் முருங்கையும் பசுவும் நொண்டியாகிப்போனது, வீட்டுக்கார அம்மாவிற்கு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தே நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
//
:0)))
ஆமா, வீட்டுல முருங்கக்காய் சாம்பாரா?
ஹலோ... நல்ல கதை...
Fables of Kutukutuppai-யா? அசத்துங்க..
கதை மாதிரி இல்ல, நல்லா உருப்படியா எழுதீருக்கீங்க. சூப்பர்
தூள் !
வாவ்!! கதை அருமை (கருத்துக் கதை)....
//நாட்கள் கடந்தது முருங்கை மரம் மீண்டும வளர ஆரம்பித்தது ஒரு மாதிரி நொண்டி மரமாக, ஊராரே பொறாமை படும் அளவுக்கு காய்க்க ஆரம்பித்தது, பசு மாடும் நொண்டியாக இருந்தாலும் கன்றுகள் ஈன்று பால் கொடுக்க ஆரம்பித்தது, வீட்டுக்கார அம்மாவும் முதுகுவலியிலும் அந்த மாட்டில் பால் கறந்து வீட்டு உபயோகத்திற்கு பயன்பட்டது போக மீதியை விற்று மாட்டுக்கு தீவணம் வாங்குவதற்கு பயன்படுத்திக்கொண்டார்.
//
நல்ல சிந்தனை:)
ராஜ நடராஜன் said...
மீ த பர்ஸ்ட்டு/
நீங்கதாங் .. பர்ஸ்ட்டு.அப்படியே வ.மு பக்கம் வாங்க இன்னைக்கு
// குடுகுடுப்பை said...
உருப்புடாதது_அணிமா said...
அண்ணே இப்போதைக்கு present மட்டும் போட்டுக்கிறேன்..
இன்னும் ரெண்டு நாளைக்கு நான் ரொம்ப பிஸி ( நம்புங்கப்பா)//
அடுத்த கதை , நீங்க,ராகவன் நான் மூனு பேரையும் வெச்சு எழுதலாம்னு இருக்கேன்.போயிட்டு வாங்க//
எப்ப வரும்.. எப்ப வரும்..
ஐய்யா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..
உடனே ஆரம்பிக்கப்பு...
// அடுத்த கதை , நீங்க,ராகவன் நான் மூனு பேரையும் வெச்சு எழுதலாம்னு இருக்கேன்.போயிட்டு வாங்க //
மூணுக்கு - இரண்டு சுழி “ன” வா இல்லை மூணு சுழி“ண” வா.
யாரவது இந்த சந்தேகத்த தீர்த்து வையுங்களேன்... மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு...

Me the 25th..
எல்லாருக்கும் என்ன ஆச்சு... எல்லா கடையும் காத்து வாங்குது...
வெளி நாட்டில் இருக்கும் மொக்கை சமூகம் எல்லாம் லீவுல போயிடுச்சா.. இல்ல வேலை ரொம்ப அதிகமாயிடுச்சா..
ஒன்னுமே புரியல உலகத்தில...
//
இப்போது ஊர் நோக்கி பல வருடங்களுக்கு அப்புரம் வந்து பார்த்தான் அந்த முருங்கை மரம் இன்னும் காய்த்து பலன் கொடுத்தபடியே இருந்தது, வேப்பமரத்தில் கட்டியிருந்த நொண்டிப்பசுமாடு எட்டாவது கன்றை ஈன்று பால் கொடுத்தபடியே இருந்தது, தேவையில்லாமல் உழைத்தாலும் அவன் அம்மா இடுப்பு வலியை பொருட்படுத்தாது உழைத்தபடிதான் இருந்தாள். ஊனமாக உள்ள இவைகள் எதுவுமே தன்னை ஊனமாக கருதாமல் தத்தம் வேலைகளை செய்தபடி இருந்தது கண்டான், தம் மனதில் உள்ள குழப்பங்கள் தெளிந்தான் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களால் மனதில் ஏற்பட்ட ஊனத்தை தூக்கி எறிந்து விட்டு தனது வெற்றிப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
//
இது ஒரு நல்ல எடுத்துக்காட்டுள்ள சிந்தனை
ஊனம் என்பது ,,,,,,
ஊனம் என்பது உடலுக்குதானே
அன்றி மனதுக்கு அல்ல
நாம் நினைக்கும் ஒவ்வொரு
எண்ணங்களும் மனது சம்பதபட்டவை
செயல்கள் மட்டும் தான் உடல் செய்கிறது அதனால் ஊனம் என்பதை
மனது வரை கொண்டுபோகாமல் இருந்தால் உன்னை வெல்வோர் யார் உலர் இப்பாரினில்
கோல்டேஜ்(கோல்கேட்டின் டூப்ளிகேட்) பேஸ்ட்
Ones more please
ஒவ்வொரு பூக்களுமே ஸ்டைல்ல கதையா? மவனே
ராஜ நடராஜன் said...
//கோல்டேஜ்(கோல்கேட்டின் டூப்ளிகேட்) பேஸ்ட் வியாபாரத்தை குறைத்தது.//
புதுப் பேஸ்டா இருக்குதே!(இஃகி!இஃகி! இதுவும் புதுசுதான்:))//
இன்னும் குளோன் - அப் அப்படினெல்லாம் இருக்கு.
T.V.Radhakrishnan said...
கதை மாதிரி ஒன்னு
மாதிரி ஒன்னு
ஒன்னு
:-))))))))))
வருகைக்கு நன்றி டிவீயார்
நசரேயன் said...
குடுகுடுப்பை கதை அருமையா சொல்லுறீங்க, இது கதை யல்ல படிக்க வேண்டிய பாடம்//
ஹீரோவே இல்லாம கத சொல்லும் முயற்சி
Anonymous Anonymous said...
Excellent. Enjoyed it. Thanks.
Ravi
///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவி
உருப்புடாதது_அணிமா said...
////குடுகுடுப்பை said...
அடுத்த கதை , நீங்க,ராகவன் நான் மூனு பேரையும் வெச்சு எழுதலாம்னு இருக்கேன்.போயிட்டு வாங்க////
எதுக்கு இப்படி எல்லாம் கொளுத்தி போடுறீங்க??
என்னை விட்டுடுங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
விட மாட்டோம்ல ஆனா, யோசிச்சு வெச்சிருக்கிறது ரொம்ப சீரியஸான பதிவு.கொஞ்சம் தடுமாற்றம் இருக்கு போடனுமா வேண்டாமான்னு
உருப்புடாதது_அணிமா said...
//கதை மாதிரி ஒன்னு எழுதியிருக்கேன், ///
மாதிரி அல்ல..
இது கதையே தான்,,..
நல்ல இருக்குதுன்னே//
நன்றி
அது சரி said...
Very nice!
நன்றி
//குடுகுடுப்பை said...
ராஜ நடராஜன் said...
//கோல்டேஜ்(கோல்கேட்டின் டூப்ளிகேட்) பேஸ்ட் வியாபாரத்தை குறைத்தது.//
புதுப் பேஸ்டா இருக்குதே!(இஃகி!இஃகி! இதுவும் புதுசுதான்:))//
//
இஃகி!இஃகி!
அது சரி said...
//
கல்லாக்கோட்டையான் கடையில் கோல்டேஜ்(கோல்கேட்டின் டூப்ளிகேட்) பேஸ்ட் வியாபாரத்தை குறைத்தது.
//
ஓஹோ...உங்க கம்பெனி இப்பிடித் தான் நஷ்டமாச்சா...//
நாங்கெல்லாம் பல்லு வெளக்கவே காசில்லாத கோஷ்டி, செங்கல் வெச்சுதான் வெளக்குறோம், இதுல கம்பேனி வேறயா?:)
நசரேயன் said...
ஆமா, வீட்டுல முருங்கக்காய் சாம்பாரா?//
சிக்கன் மற்றும் மீன் வருவல்.
Mahesh said...
ஹலோ... நல்ல கதை...
Fables of Kutukutuppai-யா? அசத்துங்க..//
நன்றி மகேஷ்
சின்ன அம்மிணி said...
கதை மாதிரி இல்ல, நல்லா உருப்படியா எழுதீருக்கீங்க. சூப்பர்//
நன்றி சின்ன அம்மினி, உங்க ஊரு கதை ஒன்னு வ.மு ல எழுதியிருக்கேன் படிங்க
மோகன் கந்தசாமி said...
தூள் !//
நன்றி மோகன்
PoornimaSaran said...
வாவ்!! கதை அருமை (கருத்துக் கதை)....
நன்றி பூர்ணிமாசரன்
இராகவன், நைஜிரியா said...
// குடுகுடுப்பை said...
உருப்புடாதது_அணிமா said...
அண்ணே இப்போதைக்கு present மட்டும் போட்டுக்கிறேன்..
இன்னும் ரெண்டு நாளைக்கு நான் ரொம்ப பிஸி ( நம்புங்கப்பா)//
அடுத்த கதை , நீங்க,ராகவன் நான் மூனு பேரையும் வெச்சு எழுதலாம்னு இருக்கேன்.போயிட்டு வாங்க//
எப்ப வரும்.. எப்ப வரும்..
ஐய்யா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..
உடனே ஆரம்பிக்கப்பு...//
யோசிச்சிட்டே இருக்கேன் ஆனா கொஞ்சம் கருத்துக்காவியம்.
இராகவன், நைஜிரியா said...
// அடுத்த கதை , நீங்க,ராகவன் நான் மூனு பேரையும் வெச்சு எழுதலாம்னு இருக்கேன்.போயிட்டு வாங்க //
மூணுக்கு - இரண்டு சுழி “ன” வா இல்லை மூணு சுழி“ண” வா.
யாரவது இந்த சந்தேகத்த தீர்த்து வையுங்களேன்... மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு...//
மூன்றின் மருகல், பழமையார கேப்போம்
Blogger RAMYA said...
//
இப்போது ஊர் நோக்கி பல வருடங்களுக்கு அப்புரம் வந்து பார்த்தான் அந்த முருங்கை மரம் இன்னும் காய்த்து பலன் கொடுத்தபடியே இருந்தது, வேப்பமரத்தில் கட்டியிருந்த நொண்டிப்பசுமாடு எட்டாவது கன்றை ஈன்று பால் கொடுத்தபடியே இருந்தது, தேவையில்லாமல் உழைத்தாலும் அவன் அம்மா இடுப்பு வலியை பொருட்படுத்தாது உழைத்தபடிதான் இருந்தாள். ஊனமாக உள்ள இவைகள் எதுவுமே தன்னை ஊனமாக கருதாமல் தத்தம் வேலைகளை செய்தபடி இருந்தது கண்டான், தம் மனதில் உள்ள குழப்பங்கள் தெளிந்தான் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களால் மனதில் ஏற்பட்ட ஊனத்தை தூக்கி எறிந்து விட்டு தனது வெற்றிப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
//
இது ஒரு நல்ல எடுத்துக்காட்டுள்ள சிந்தனை
ஊனம் என்பது ,,,,,,
ஊனம் என்பது உடலுக்குதானே
அன்றி மனதுக்கு அல்ல
நாம் நினைக்கும் ஒவ்வொரு
எண்ணங்களும் மனது சம்பதபட்டவை
செயல்கள் மட்டும் தான் உடல் செய்கிறது அதனால் ஊனம் என்பதை
மனது வரை கொண்டுபோகாமல் இருந்தால் உன்னை வெல்வோர் யார் உலர் இப்பாரினில்//
நன்றி ரம்யா
நாநா said...
ஒவ்வொரு பூக்களுமே ஸ்டைல்ல கதையா? மவனே//
ஆமாம் அப்படிதான் இருக்கு.
வித்யாசமா ஆனா படிக்கச் சுவாரசியமா இருந்தது..சரி..ஏதோ திருப்பம் வரப் போகுதுன்னு படிச்சுக்கிட்டே வந்தேன்..ஒருவேளை பின்னவீனத்துவமோ? :-)
நல்லா இருக்கு.. நான் என்ன நினைச்சேன்னா.. ஒருவேளை புதுமாதிரி அரிசியில் விதை நெல் வராதுன்னு சொல்லிக்கிறாங்களே அது மாதிரி இதுவும் ஒரு முருங்கை மரத்தை பத்திய செய்தியோன்னு ... நிஜம் மாதிரியே இருந்ததால நல்ல கதைன்னு தானே சொல்லனும்..
//குடுகுடுப்பை said...
இராகவன், நைஜிரியா said...
// அடுத்த கதை , நீங்க,ராகவன் நான் மூனு பேரையும் வெச்சு எழுதலாம்னு இருக்கேன்.போயிட்டு வாங்க //
மூணுக்கு - இரண்டு சுழி “ன” வா இல்லை மூணு சுழி“ண” வா.
யாரவது இந்த சந்தேகத்த தீர்த்து வையுங்களேன்... மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு...//
//
மூன்று மூனாகலாம். அதெப்படி மூணாகும்? இஃகிஃகி!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சந்தனமுல்லை
கயல்விழி முத்துலெட்சுமி
பிடிச்சிருந்தா கருத்து சொல்லுங்க, //
சரி
கருத்து கருத்து கருத்து
அமிர்தவர்ஷினி அம்மா said...
பிடிச்சிருந்தா கருத்து சொல்லுங்க, //
சரி
கருத்து கருத்து கருத்து
//
நன்றி நன்றி நன்றி
அருமை.
நடப்பது நடந்துக்கிட்டே இருக்கும்.
ஒரு பஞ்ச் வச்சு முடுசீங்க. கிராமீய வாடை குறையாம,...
Post a Comment