Thursday, December 11, 2008

ரஜினி ரசிகனுடன் முதல் நாள் ரஜினி படம் பார்க்க சென்ற அனுபவம்

ஏதோ தீபாவளியோ பொங்கலோ சரியாக ஞாபகம் இல்லை, சித்தி வீட்டிற்கு சென்றிருந்த போது, பாண்டியன் படம் ரிலீஸ் ஆகி இருந்தது, சித்தி மகன் ஒரு ரஜினி ரசிகன் என்று சொல்வதை விட வெறியன் என்று சொல்லலாம்.

கமல்ஹாசன் மாதிரி ரஜினியால நல்லா நடிக்க முடுயுமா என்ற கேள்விக்கு அவன் தரும் பதில் நாய் கூடத்தான் நடிக்கும், ஆனா ரஜினி மாதிரி ஸ்டைல் யாரு பண்ணுவா என்பதுதான் அந்த அளவுக்கு ரஜினி வெறியன்.

காலையில சாப்பிட்டு காலைக்காட்சி பார்க்க இரண்டு கிலோமீட்டர் நடந்தே அந்த தியேட்டரை அடைந்தோம். தியேட்டர் இருந்த தெரு முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம்,ஒரே சத்தம் ரஜினி படம் பார்க்க முதல் நாள் செல்வது இதுதான் முதல்முறை எனக்கு வித்தியாசமாக இருந்தது.இதற்கிடையில் இன்னும் பெட்டி வரலன்னு ஒரே குழப்பம் வேற.

தியேட்டர் கேட்டெல்லாம் பூட்டியே இருக்கு, டிக்கெட் கவுன்டரும் திறக்கவேயில்லை,ரசிகர் மன்றத்துக்கு மட்டும் சிறப்பு காட்சி அப்படின்னு புரளி வேற.திடீர்னு அந்த வழியா தியேட்டர் நிர்வாகம் படப்பெட்டி கொண்டு போறத பாத்தவுடனே ரசிகர்கள் கட்டைச்சுவர் ஏறி தியேட்டருக்குள்ள குதிக்கிராங்க, சுவத்துல கண்ணாடி பதிச்சிருக்கு உடைஞ்ச கண்ணாடிய சரியா உபயோகப்படுத்துறது நம்ம ஊர்லதான்,சுவத்துல ஏற செருப்பு வழுக்குதுன்னு கழட்டி வீசிட்டு ஏறி குதிக்க்கராங்க ,காலில் குத்தி ரத்தம் வருவதெல்லாம் யாரும் கண்டுக்கவேயில்லை.நானும் டிக்கெட் கவுன்டர் திறப்பாங்கன்னு பாக்கிறேன் ,ம்ஹூம் திறக்கவேயில்லை.

திடீர்னு பாத்தா பக்கத்துல நின்னுட்டு இருந்த சித்தி பையன் சுவத்துல ஏறிகிட்டு இருக்கான், நான் ஒருத்தன் அவன் கூட வந்ததேயே கண்டுக்கல, ஏறி உள்ள குதிச்சிட்டான். எனக்கு சுவர் ஏறி குதிக்க பயம்.என்னடா பண்றதுன்னு ஒரே குழப்பம். கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன் டிக்கர் கவுண்டரும் தொறக்கர மாதிரி தெரியல...

வேற வழி திரும்பி வீட்டுக்கு நடந்தேன், போற வழில இன்னோரு தியேட்டர்ல செந்தமிழ்ப்பாட்டுன்னு ஒரு பி.வாசு படம் போட்டிருந்தான் ஈஸீயா டிக்கெட் கெடச்சது. ஆனா பாருங்க ரஜினி படம் பாக்க போயிருந்தா கால்ல கண்ணாடி கிழிச்சிருக்கும், படம் நல்லாருக்கோ இல்லயோ ஓஓஓஓன்னு சத்தம் போட்டு மகிழ்ச்சியா இருந்திருக்கலாம், இங்க அண்ணன் பி.வாசு கட்டி வெச்சு தலையிலே ஆணியே அடிச்சிட்டாரு.

52 comments:

நட்புடன் ஜமால் said...

வந்துட்டேன் ...

நட்புடன் ஜமால் said...

\\வேற வழி திரும்பி வீட்டுக்கு நடந்தேன், போற வழில இன்னோரு தியேட்டர்ல செந்தமிழ்ப்பாட்டுன்னு ஒரு பி.வாசு படம் போட்டிருந்தான் ஈஸீயா டிக்கெட் கெடச்சது. ஆனா பாருங்க ரஜினி படம் பாக்க போயிருந்தா கால்ல கண்ணாடி கிழிச்சிருக்கும், படம் நல்லாருக்கோ இல்லயோ ஓஓஓஓன்னு சத்தம் போட்டு மகிழ்ச்சியா இருந்திருக்கலாம், இங்க அண்ணன் பி.வாசு கட்டி வெச்சு தலையிலே ஆணியே அடிச்சிட்டாரு\\

ஹா ஹா ஹா

ஆனாலும் பாடல்கள் இனிமையா இருந்திருக்குமே.

பழமைபேசி said...

//பதிவர் குடுகுடுப்பை at 4:44 AM //

நாலு மணிகெல்லாம் எழுந்து சுறு சுறுப்பா பதிவு! நல்லா இருங்கண்ணே!! நல்லாவே இருங்க!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உடைஞ்ச கண்ணாடிய சரியா உபயோகப்படுத்துறது நம்ம ஊர்லதான்,//



உண்மை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பாண்டியனும்............



செந்தமிழ்
பாட்டுவும்....................

தமிழ் அமுதன் said...

செந்தமிழ் பாட்டு
''அன்ன பூர்ணா''
தேட்டர்ல பார்த்தீங்களா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நாய் கூடத்தான் நடிக்கும்//


திருப்பிச் சொன்னா.............

குடுகுடுப்பை said...

வாங்க அதிரை ஜமால்
//ஆனாலும் பாடல்கள் இனிமையா இருந்திருக்குமே.//

ஆமாம், ஆனாலும் இப்படியெல்லாம் படம் ரொம்பக்கொடுமைங்க

பழமைபேசி said...

நசரேயன் அவிங்க எங்க காணம் இன்னும்?

கோவி.கண்ணன் said...

கவலைப்படாதிங்க ரஜினி ரசிகர்கள் சேர்ந்து சூடாக்கிடுவாங்க, நம்ம கிரியும், இராமும் எதுக்கு இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் said...

//இங்க அண்ணன் பி.வாசு கட்டி வெச்சு தலையிலே ஆணியே அடிச்சிட்டாரு//

பி.வாசுவின் ரஜினி படம் மன்னம் முதல் நாள் 2 ஆவது ஷோ திருவாரூரில் அம்மையப்பா திரையரங்கில் பார்த்தேன். படம் முழுவதும் ரஜினி ரசிகர்களின் துள்ளல்களைப் பார்க்கனுமே. படம் முடிஞ்சுப்பார்த்தால் தரை முழுவதும் பழைய லாட்டரிசீட்டுகளை கிழித்து வீசிய குவியல் குப்பைகள் காலுக்கு மெத்தையாக இருந்தது.

சரவணகுமரன் said...

:-))

நசரேயன் said...

சொல்லிட்டு பதிவு போடுங்க, குடுகுடுப்பை நடு சாமத்திலே பதிவு போடுறாரு

நசரேயன் said...

/*
கட்டி வெச்சு தலையிலே ஆணியே அடிச்சிட்டாரு.
*/
உண்மைதான்,அவரு ஆணி அடிச்தாலே தான் நீங்க உலக்கை அடிக்கிறீங்க

RAMYA said...

//
திடீர்னு பாத்தா பக்கத்துல நின்னுட்டு இருந்த சித்தி பையன் சுவத்துல ஏறிகிட்டு இருக்கான், நான் ஒருத்தன் அவன் கூட வந்ததேயே கண்டுக்கல, ஏறி உள்ள குதிச்சிட்டான். எனக்கு சுவர் ஏறி குதிக்க பயம்.என்னடா பண்றதுன்னு ஒரே குழப்பம். கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன் டிக்கர் கவுண்டரும் தொறக்கர மாதிரி தெரியல...
//

சுவர் ஏறி குதிக்க அவ்வளவு பயமா?
ஒரே சிரிப்பா இருக்குது
நாங்கெல்லாம் சின்னப்பவே
கொய்யா மரம் எல்லாம்
அனாயசமா ஏறுவோம்
ஹ ஹ ஹ ஹ ஹ

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//பதிவர் குடுகுடுப்பை at 4:44 AM //

நாலு மணிகெல்லாம் எழுந்து சுறு சுறுப்பா பதிவு! நல்லா இருங்கண்ணே!! நல்லாவே இருங்க!!!//

அது செட்யூல பண்ணதுங்கோ.

குடுகுடுப்பை said...

வாங்க SUREஷ்

உடைஞ்ச கண்ணாடிய சரியா உபயோகப்படுத்துறது நம்ம ஊர்லதான்,//



உண்மை//

வேற எங்கேயும் நான் பாத்ததில்லை

குடுகுடுப்பை said...

SUREஷ் said...

பாண்டியனும்............



செந்தமிழ்
பாட்டுவும்....................

//

என்ன பண்றது, சில நேரங்களில் அப்படி ஆகிவிடுகிறது

குடுகுடுப்பை said...

ஜீவன் said...

செந்தமிழ் பாட்டு
''அன்ன பூர்ணா''
தேட்டர்ல பார்த்தீங்களா?

//

அதேதான்,முதகாட்சி,உங்களுக்கும் ஆணி அடிச்சாரா வாசு

T.V.ராதாகிருஷ்ணன் said...

///போற வழில இன்னோரு தியேட்டர்ல செந்தமிழ்ப்பாட்டுன்னு ஒரு பி.வாசு படம் போட்டிருந்தான் //

தமிழ்த் திரையுலகில் பி.வாசு ன்னு ஒரு இயக்குநர் இருக்கார் தெரியும்...உங்களுக்கு தெரிஞ்சு வேற பி.வாசு இருக்கிறாரா?

ரவி said...

கடைசி பஞ்ச் கலக்கல்...வாய்விட்டு சிரிக்க வெச்சுட்டீங்க குடுகுடுப்பை !!!

குடுகுடுப்பை said...

வாங்க கோவி.கண்ணன்

// கவலைப்படாதிங்க ரஜினி ரசிகர்கள் சேர்ந்து சூடாக்கிடுவாங்க, நம்ம கிரியும், இராமும் எதுக்கு இருக்கிறார்கள்.//

சூடான இடுகைக்கு வந்துருச்சு,ஆனாலும் கடைசி இடத்திலேயே இருக்கு.தமிழிஸ் வழியா நிறைய பேரு வராங்க

குடுகுடுப்பை said...

கோவி.கண்ணன் said...

//இங்க அண்ணன் பி.வாசு கட்டி வெச்சு தலையிலே ஆணியே அடிச்சிட்டாரு//

பி.வாசுவின் ரஜினி படம் மன்னம் முதல் நாள் 2 ஆவது ஷோ திருவாரூரில் அம்மையப்பா திரையரங்கில் பார்த்தேன். படம் முழுவதும் ரஜினி ரசிகர்களின் துள்ளல்களைப் பார்க்கனுமே. படம் முடிஞ்சுப்பார்த்தால் தரை முழுவதும் பழைய லாட்டரிசீட்டுகளை கிழித்து வீசிய குவியல் குப்பைகள் காலுக்கு மெத்தையாக இருந்தது.//

இந்த பி.வாசு படத்துக்கு எனக்கு தலைக்கு ஒரு மெத்தை இருந்திருந்தா நல்லா இருந்து இருக்கும்:):)

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி சரவணகுமரன்

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

சொல்லிட்டு பதிவு போடுங்க, குடுகுடுப்பை நடு சாமத்திலே பதிவு போடுறாரு//
குடுகுடுப்பையோட வேலையே நடுசாமத்திலதானே

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
திடீர்னு பாத்தா பக்கத்துல நின்னுட்டு இருந்த சித்தி பையன் சுவத்துல ஏறிகிட்டு இருக்கான், நான் ஒருத்தன் அவன் கூட வந்ததேயே கண்டுக்கல, ஏறி உள்ள குதிச்சிட்டான். எனக்கு சுவர் ஏறி குதிக்க பயம்.என்னடா பண்றதுன்னு ஒரே குழப்பம். கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன் டிக்கர் கவுண்டரும் தொறக்கர மாதிரி தெரியல...
//

சுவர் ஏறி குதிக்க அவ்வளவு பயமா?
ஒரே சிரிப்பா இருக்குது
நாங்கெல்லாம் சின்னப்பவே
கொய்யா மரம் எல்லாம்
அனாயசமா ஏறுவோம்
ஹ ஹ ஹ ஹ ஹ//

நாங்கெல்லாம் தென்னைமரமே ஏறுனவுங்க ஆனா,கண்ணாடி அடிச்ச சுவரெல்லாம் முடியாதுப்பா

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
சூடான இடுகைக்கு வந்துருச்சு,ஆனாலும் கடைசி இடத்திலேயே இருக்கு.தமிழிஸ் வழியா நிறைய பேரு வராங்க
//

அண்ணனோட ஆசை நிறைவேறிடுச்சே!!! அஃகஃகா!!

ராஜ நடராஜன் said...

//சுவத்துல கண்ணாடி பதிச்சிருக்கு உடைஞ்ச கண்ணாடிய சரியா உபயோகப்படுத்துறது நம்ம ஊர்லதான்//

பழைய சட்டியில புதுக் கஞ்சி.

ராஜ நடராஜன் said...

//அண்ணன் பி.வாசு கட்டி வெச்சு தலையிலே ஆணியே அடிச்சிட்டாரு//

சிரித்தேன்.

கோவி.கண்ணன் said...

உங்கள் ஆசைப்படி சூடான இடுகைக்குள் நுழைஞ்சிடுச்சு !

வாழ்த்துகள் !

அமிர்தவர்ஷினி அம்மா said...

பேசாம காலையே கிழிச்சிட்டு இருந்திருக்கலாம்

தேவையா இது

ஹைய்யோ அதுல சுகன்யாவோட ஆக்டிங்க், சிரிக்கிறாங்களா இல்ல அழறாங்களான்னே தெரியாது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுவர் ஏறி குதிக்க பயம்.

இதுக்குமா பயப்படுவீங்க.

ஹைய்யோ ஹைய்யோ
நம்ம ரம்யா மேடம் கொய்யா மரமெல்லாம் ஏறுவாங்களாம்மா.

குடுகுடுப்பை said...

வாங்க T.V.Radhakrishnan said...

///போற வழில இன்னோரு தியேட்டர்ல செந்தமிழ்ப்பாட்டுன்னு ஒரு பி.வாசு படம் போட்டிருந்தான் //

தமிழ்த் திரையுலகில் பி.வாசு ன்னு ஒரு இயக்குநர் இருக்கார் தெரியும்...உங்களுக்கு தெரிஞ்சு வேற பி.வாசு இருக்கிறாரா?//

அவரு பல திறமை உள்ளவருங்க. ஒரு சந்திரமுகி மாதிரி அவரு

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி said...

கடைசி பஞ்ச் கலக்கல்...வாய்விட்டு சிரிக்க வெச்சுட்டீங்க குடுகுடுப்பை !!!

நன்றி ரவி.

குடுகுடுப்பை said...

வாங்க ராஜ நடராஜன்

//சுவத்துல கண்ணாடி பதிச்சிருக்கு உடைஞ்ச கண்ணாடிய சரியா உபயோகப்படுத்துறது நம்ம ஊர்லதான்//

பழைய சட்டியில புதுக் கஞ்சி.

//
தனித்துவத்தை கண்டுபிடிக்க முயற்சி பண்றேன்

குடுகுடுப்பை said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா

பேசாம காலையே கிழிச்சிட்டு இருந்திருக்கலாம்

தேவையா இது

ஹைய்யோ அதுல சுகன்யாவோட ஆக்டிங்க், சிரிக்கிறாங்களா இல்ல அழறாங்களான்னே தெரியாது.//

பக்கத்து சீடல ஒருத்தரு அழுதாரு அது ஜீவனா இருக்குமோ?

அது சரி(18185106603874041862) said...

//
தியேட்டர் இருந்த தெரு முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம்
//

பின்ன? தலீவரு படம்னா சும்மாவா??

//
ஒரே சத்தம் ரஜினி படம் பார்க்க முதல் நாள் செல்வது இதுதான் முதல்முறை எனக்கு வித்தியாசமாக இருந்தது
//

வாழ்க்கையில‌ பாதி நாள‌ வீணாக்கிட்டீரு!

//
உடைஞ்ச கண்ணாடிய சரியா உபயோகப்படுத்துறது நம்ம ஊர்லதான்
//

ஒடைஞ்ச‌ பாட்டில‌ காமிச்சி மெர‌ட்டி டிக்கெட் வாங்கிற‌து தான் எங்க‌ளுக்கெல்லாம் ப‌ழ‌க்க‌ம்.. திருப்ப‌தி சாமிக்கே ல‌ட்டா எங்க‌ளுக்கே க‌ண்ணாடியா?

//
பி.வாசு படம் போட்டிருந்தான் ஈஸீயா டிக்கெட் கெடச்சது
//

பீ.வாசு ப‌ட‌ம்னா ஈஸி என்ன‌, ஓஸிலேயே டிக்கெட் கெடைக்கும்!

//
இங்க அண்ணன் பி.வாசு கட்டி வெச்சு தலையிலே ஆணியே அடிச்சிட்டாரு.
//

தேடிப்பிடிச்சி த‌லைய‌ குடுத்துட்டு இது என்ன‌ பொல‌ம்ப‌ல்ஸ்?

ந‌ட‌ந்த‌து ந‌ட‌ந்து போச்சி...அத‌ விடுங்க‌..இனிமேலாவது த‌லீவ‌ரு ப‌ட‌ம்னா முந்தின‌ நாளு ம‌திய‌மே சாப்பாடு க‌ட்டிக்கினு தியேட்ட‌ரு போயிருங்க‌..

அது சரி(18185106603874041862) said...

செந்தமிழ் பாட்டு??

அது ஒரு நொந்தமிழ் பாட்டுன்னு யாரோ சொன்ன நியாபகம். ஒரு வேள படத்து புரடியூசரோ?

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
சுவர் ஏறி குதிக்க பயம்.

இதுக்குமா பயப்படுவீங்க.

ஹைய்யோ ஹைய்யோ
நம்ம ரம்யா மேடம் கொய்யா மரமெல்லாம் ஏறுவாங்களாம்மா.

//

பாதாமரம், புளியமரம், சுவரு
இவை எல்லாம் எனக்கு
படிக்கும் வாசஸ்தலம்
நல்லா வேகமா ஏறிடிவேன்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா

பேசாம காலையே கிழிச்சிட்டு இருந்திருக்கலாம்

தேவையா இது

ஹைய்யோ அதுல சுகன்யாவோட ஆக்டிங்க், சிரிக்கிறாங்களா இல்ல அழறாங்களான்னே தெரியாது.//

பக்கத்து சீடல ஒருத்தரு அழுதாரு அது ஜீவனா இருக்குமோ?

//

ஜீவன் சிவனேன்னு இருக்காரு
அவரை என் வம்புக்கு இழுக்கிறீங்க
ஜீவன் எப்போதும் ஜீவனுள்ள
சிரிப்புக்கு சொந்தகாருங்கோ

RAMYA said...

Ramya Count Starts
41

RAMYA said...

42

RAMYA said...

43

RAMYA said...

44

RAMYA said...

45

RAMYA said...

46

RAMYA said...

47

RAMYA said...

48

RAMYA said...

49

RAMYA said...

ஹையா me the 50th

RAMYA said...

Now i am going to start music with Mr.Athirai Jamal's Music Group

1. Visil
huuuuuuuuuuuuuuuuiiiiiiiiiiiiiii

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு.................
அவ்வளவுதான் பாட்டு

RAMYA said...

//
வேற வழி திரும்பி வீட்டுக்கு நடந்தேன், போற வழில இன்னோரு தியேட்டர்ல செந்தமிழ்ப்பாட்டுன்னு ஒரு பி.வாசு படம் போட்டிருந்தான் ஈஸீயா டிக்கெட் கெடச்சது. ஆனா பாருங்க ரஜினி படம் பாக்க போயிருந்தா கால்ல கண்ணாடி கிழிச்சிருக்கும், படம் நல்லாருக்கோ இல்லயோ ஓஓஓஓன்னு சத்தம் போட்டு மகிழ்ச்சியா இருந்திருக்கலாம், இங்க அண்ணன் பி.வாசு கட்டி வெச்சு தலையிலே ஆணியே அடிச்சிட்டாரு. //

தலைலே அந்த ஆணி இன்னும் இருக்கா?
இருந்தா நசரயேன் கிட்டே சொல்லி ஏதாவது
செய்யலாமுனுதான்............