Friday, December 5, 2008

சின்ன கணக்கப்பிள்ளையின் தீர்ப்பு.

கிராமக் கூட்டம் அனைவரும் வந்து நம்ம ஊருக்கு என்ன தேவைன்னு சொல்லுங்க, துனைத்தலைவர் கேட்டவுடன், ஒட்டு மொத்த மக்களும் பெரும்பாலும் பக்கத்து ஊர்ல பாருங்க சுடுகாட்டுக்கு ரோடு போட்டிருக்காங்க நம்ம ஊரு சுடுகாட்டுக்கு ரோடே கிடையாது, யாரும் செத்தா வயக்காட்டு வழியா தண்ணிலதான் தூக்கிட்டு போகவேண்டியதா இருக்கு.

துனைதலைவரும் ஆமாம் நீங்க சொல்ரதும் சரிதான், இதே பஞ்சாயத்துல உள்ள பெரிய ஊருக்கெல்லாம் சுடுகாட்டுக்கு ரோடு இருக்கு நமக்குதான் இல்லை.இதுக்கு ஒரு கண்டுபிடிக்கனும். தலைவருகிட்ட சொல்லி இந்த வருசம் நம்மூருக்கான பட்ஜெட்ல ரோடு போட சொல்லிருவோம்.

அந்த சமயம் பாத்து மாமானார் வீட்டோட வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிற சின்ன கணக்கப்பிள்ளை வந்தாரு, உடனெ துனைத்தலைவரு சுடுகாட்டுக்கு ரோடு போடப்போர விசயத்தை பெருமையா சொன்னாரு.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட சின்னக்கணக்கப்பிள்ளை , சரி நம்ம ஊருல மொத்தம் எத்தனை பேரு , 200 பேரு இருப்போமா, அதுல ஒரு 50 பேரு படிக்கிற குழந்தைங்க ஒரு பள்ளிக்கூடம் கேக்கலாமே.

இல்ல பள்ளிக்கூடம் அடுத்த மாவட்டத்து ஊரா இருந்தாலும் 100 அடில இருக்கே?

சரி நியாயந்தான் பள்ளிக்கூடம் வேண்டாம். குடிக்க தண்ணிக்கு என்ன பண்றீங்க?

பக்கத்துல உள்ள கேணிகள்ல எடுத்துக்கரோம், இல்லாட்டி அந்த ஊருல குடிநீர் குழாய்ல எடுத்துக்கரோம். அவங்களும் பெருந்தன்மையா குடுக்குராங்க.

சரி இப்போ தினமும் அடுத்த ஊரு பெருந்தன்மைல தண்ணி தினமும் தேவையான தண்ணிய எடுக்கறீங்க,அவங்களோட தேவைகள் அதிகரிச்சா ஒருநாள் கொடுக்க மாட்டாங்க, தண்ணீல உரிமை உள்ளவனுக்கு அடுத்த மாநிலத்து காரன் சட்டம் போட்டு கொடுக்க சொன்னா கூட கொடுக்க மாட்டேங்கிரான், உங்களுக்கு அந்த தண்ணில உரிமையே இல்ல கொடுக்க மாட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க,இப்ப உள்ள பணத்தை வெச்சு ஒரு தண்ணீர் தொட்டி கட்டி குழாய் மூலம் சுகாதாராம தண்ணீர் தினமும் குடிக்கலாமே?அத விட்டுப்புட்டு இருக்கர 200 பேருல அஞ்சு வருசத்துக்கு ஒருத்தன் தான் சாவுரான் அத தூக்கிட்டு போரதுக்கு ரோடு கேக்கரீங்க. பணத்தை எப்படி சரியா பயன்படுத்தனும்னு தெரிய வேண்டாம?

இப்பயும் கூட சிலர் நீங்க வேற ஊருக்கு போயிட்டீங்க உங்களுக்கு எங்க சிரமம் புரியாது? சும்மா வம்பு இழுத்து உடாதீங்க அப்படின்னு திட்டவும் சின்ன கணக்கப்பிள்ளை உங்களையெல்லாம் திருத்த முடியாதுன்னு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.

27 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல

பழமைபேசி said...

சமூக சிந்தனை! வரவேற்பும், வாழ்த்துகளும்!!

உங்களுக்கு "ர", "ற்" பிரச்சினை போல இருக்கு!!! இஃகி!ஃகி!!

நசரேயன் said...

பல நுண் அரசியல் அடங்கிய பதிவு,ரெம்பவே நல்லா இருக்கு

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...
உங்களுக்கு "ர", "ற்" பிரச்சினை போல இருக்கு!!! இஃகி!ஃகி!!
//
உண்மைதான்,சரி செய்கிறேன். நன்றி பழமையாரே.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல சிந்தனை.


அந்த பாத்திரத்தை ஏன் வீஇட்டோடு மாப்பிள்ளையாக்கினீர்கள்

நசரேயன் said...

/*
நல்ல சிந்தனை.


அந்த பாத்திரத்தை ஏன் வீஇட்டோடு மாப்பிள்ளையாக்கினீர்கள்
*/
அது வேறும் யாரும் இல்லை அவரே தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

கபீஷ் said...

மதிக்காத மாமனாரோட இருக்க வேண்டாம்னுதான் இப்ப இருக்கற ஊருக்கு போயிட்டீங்களா, குடுகுடுப்ஸ்
:-):-):-):-)

கபீஷ் said...

மதிக்காத மாமனாரோட இருக்க வேண்டாம்னுதான் இப்ப இருக்கற ஊருக்கு போயிட்டீங்களா, குடுகுடுப்ஸ்
:-):-):-):-)

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

மதிக்காத மாமனாரோட இருக்க வேண்டாம்னுதான் இப்ப இருக்கற ஊருக்கு போயிட்டீங்களா, குடுகுடுப்ஸ்
:-):-):-):-)//

சின்ன கணக்கப்பிள்ளை உண்மையான ஆள்தான்,ஆனா நான் இல்லங்க எப்படியெல்லாம் யோசிக்கறீங்க........

குடுகுடுப்பை said...

SUREஷ் said...

நல்ல சிந்தனை.


அந்த பாத்திரத்தை ஏன் வீஇட்டோடு மாப்பிள்ளையாக்கினீர்கள்//

உண்மையாவே அப்படி ஒருத்தரு இருக்காரு அந்த சுடுகாட்டு விசயம் அவரு சொன்ன காமெடி,அத வெச்சு பிண்ணின கதைதான் இது.

RAMYA said...

நல்ல சமுதாய சிந்தனை உங்களுக்கு, அப்போ வீட்டோட மாப்பிள்ளையா? சொல்லவே இல்லை? இருககட்டும், இருககட்டும்.

RAMYA said...

நீங்க ரொம்ப அறிவாளிங்க, தேவையான சிந்தனை தேவையான நேரத்தில் வருது.
வாழ்த்துக்கள்.

RAMYA said...

நீங்க நிச்சயம் நாளைய முதல்வர்தானுங்கோ

RAMYA said...

எப்படித்தான் இந்த நசரேயன் முந்திகிறாரோ தெரியவில்லை. நசரேயன் எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லி கொடுங்களேன்.

நசரேயன் said...

/*
எப்படித்தான் இந்த நசரேயன் முந்திகிறாரோ தெரியவில்லை. நசரேயன் எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லி கொடுங்களேன்.
*/
ஆணியே பிடுங்காம இதே சோலியா இருக்கணும்

rapp said...

உங்க பேர் சின்னகணக்குப்பிள்ளையா:):):) இதென்ன நான்தான் பில்டப் பானுமதின்னா, இங்கயும் (சமூக சீர்திருத்தவாதி கணக்கா)சவுண்டு ஜாஸ்தியா இருக்கு:):):)

RAMYA said...

//
நசரேயன் said...
/*
எப்படித்தான் இந்த நசரேயன் முந்திகிறாரோ தெரியவில்லை. நசரேயன் எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லி கொடுங்களேன்.
*/
ஆணியே பிடுங்காம இதே சோலியா இருக்கணும்
//

அப்படியா ஐடியா கொடுத்ததிற்கு மிக்க நன்றி, இனிமே ஆணிய பிடுங்க மாட்டேன்லே

புதியவன் said...

//இப்ப உள்ள பணத்தை வெச்சு ஒரு தண்ணீர் தொட்டி கட்டி குழாய் மூலம் சுகாதாராம தண்ணீர் தினமும் குடிக்கலாமே?அத விட்டுப்புட்டு இருக்கர 200 பேருல அஞ்சு வருசத்துக்கு ஒருத்தன் தான் சாவுரான் அத தூக்கிட்டு போரதுக்கு ரோடு கேக்கரீங்க. பணத்தை எப்படி சரியா பயன்படுத்தனும்னு தெரிய வேண்டாம?//

சமூக சிந்தனையுள்ள பதிவு.

Dr. சாரதி said...

நல்லா இருக்கு.....

தமிழ் அமுதன் said...

வீட்டோட மாப்பிள்ளையா

இருந்தா நல்ல, நல்ல யோசனையா

வருமோ ?

அது சரி said...

//
சின்ன கணக்கப்பிள்ளை உங்களையெல்லாம் திருத்த முடியாதுன்னு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்
//

அன்னிக்கி கோவிச்சிக்கினு ஊர விட்டு கெளம்பின கணக்குபுள்ள இப்ப அமெரிக்காவுல இருக்கறதா கேள்வி...ஆமா, இப்ப பதிவெல்லாம் கூட எழுதறாராம்...:))

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் நன்றி

Poornima Saravana kumar said...

//உங்களையெல்லாம் திருத்த முடியாதுன்னு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். //

வாஸ்தவமான பேச்சு

துளசி கோபால் said...

வீட்டோட மாப்பிள்ளை சொன்னெதெல்லாம் சரிதான்:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப உன்னிப்பா படிச்சா நெறைய கருத்துக்களை தொடலாம்.

நல்ல பதிவு.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
பூர்ணிமா சரண்
துளசி கோபால்
அமிர்தவர்ஷினி அம்மா