Monday, December 8, 2008

கல்லூரி சாலை: மேல்மருவத்தூரில் கல்யாணம், பாண்டிச்சேரியில் குளியல், நெய்வேலியில் சாப்பாடு. பாகம் 1

கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது, நெருங்கிய நண்பனின் அண்ணன் திருமணம்,மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி திருமண மண்டபத்தில் திருமணம், கல்லூரியில் நிறைய நண்பர்களை கொண்ட நல்ல உள்ளம் படைத்த நண்பர் என்பதால் கிட்டத்தட்ட 50 பேர் திருமணத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து வந்திருந்தோம்.

மிக உயர் பதவியில் உள்ளவர் வீட்டு திருமணம் என்பதால் பரிசுப்பொருட்கள் எல்லாம் வந்து இறங்கியவண்ணம் இருந்தது.நாங்க எப்பயுமே வெறுங்கையோட போயி சாப்பிட்டு பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதுதான் வழக்கம். இப்பயும் அதேதான் அவன்கிட்ட ஏற்கனவே நிறைய கல்லா கட்டிதான் இங்க வந்திருந்தோம்.ஆனாலும் பரிசுப்பொருள் ஒன்னுமே கொடுக்கலண்ணா அசிங்கமா போயிடும்னு நண்பன்கிட்ட சொன்னோம், அவனும் அவங்க அப்பாகிட்ட சொல்லி ஒரு அதிகாரிய அழைச்சிட்டு அவரோட டாட்டா சுமோல பக்கத்துல இருக்கிற பெரிய ஊரான மதுராந்தகம் போனோம். அங்க ஒரே ஒரு பேன்சி ஸ்டோர்ல மொத்தமா ஒரு அஞ்சு பரிசுப்போருள்தான் இருந்துச்சு மொத்த மதிப்பு 500 ரூபாய் தேறும்.

50 பேரும் வரிசையா நின்னு அஞ்சு பரிசுப்பொருளையும் சுழற்சி முறையில மேடையில கொடுத்து போட்டோவெல்லாம் எடுத்துக்கிட்டு, மதிய கல்யாண சாப்பாடு,முக்கனிகளோட சிறந்த உணவு, உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அதுனால கொஞ்ச நேரம் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் ஓய்வு.

அவரவர் குழுவாக ஊருக்கோ அல்லது ஹாஸ்டலுக்கோ திரும்பினர்.
எங்கள் குழு ஒரு ஆறு பேர் பாண்டிச்சேரி போகலாம்னு முடிவாச்சு, இதுல நண்பர் நெட்டையனோட ஊர்க்கார நண்பர்கள் இருவர்,நெய்வேலி தாசன், மேலூரான்,கடையத்தான்,விருதுநகரான் மற்றும் நான் அடக்கம்.

பாண்டிச்சேரி போயி இறங்கி, பீச்சாங்கரை பக்கமா சும்மா சுத்தி பாத்துட்டு, மேலுரானின் ஒரே ஆசையை நிறைவேற்ற பாருக்குள்ளே நல்ல பாரா பாத்து களம் இறங்கியாச்சு, மேலூரான் இருக்குமிடத்தில் எப்பயுமே சாக்கிரதையா இருக்கனும்கிற விசயம் நெட்டையனுக்கும் எனக்கும் நல்லா தெரியும் முன் அனுபவம். மேலூரான்,நெய்வேலி தாசன், கடையம் மற்றும் நெட்டையனின் நண்பர்கள் நன்றாக குடித்தார்கள், நெட்டையனும் நானும் வேடிக்கை பார்த்த படி இருந்தோம் மனசுக்குள் ஒரு பயத்தோடு,

நெய்வேலி தாசன் போதை தலைக்கு ஏறியவுடன் பாண்டிச்சேரி நம்ம ஊரு மாப்பிள்ளை ஒன்னும் கவலைப்படாதீங்கன்னு சொல்லிட்டுருக்கும்போதே, மேலூரான் போதையில் டேபிளில் வைத்திருந்த பாட்டில் மற்றும் சைடிஷ் தூக்கிப்போட்டு உடைக்க ஆரம்பித்தான்.இவ்வளவு நடக்கையிலும் கடையத்தான் எனக்கொரு ஆம்லெட் என்று ஆர்டர் கொடுத்தான்.பார் நிர்வாகத்தினர் எங்கள் இருப்பிடத்தை நோக்கி விரைந்தனர்....

தொடரும்...

27 comments:

பழமைபேசி said...

//பார் நிர்வாகத்தினர் எங்கள் இருப்பிடத்தை நோக்கி விரைந்தனர்....//

வந்து நிதானத்தில் இருந்த குடுகுடுப்பையின் சல்லடம்(டவுசர்) உருவப் பட்டதா? காத்திருக்கணும்.... எவ்வளவு நாள்??

தாரணி பிரியா said...

//நாங்க எப்பயுமே வெறுங்கையோட போயி சாப்பிட்டு பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதுதான் வழக்கம்//

அது சரி

ஆயில்யன் said...

டெரரர் பண்ற டைமிங்க்ல தொடரும் போட்டீங்களேப்பா :)

தாரணி பிரியா said...

//50 பேரும் வரிசையா நின்னு அஞ்சு பரிசுப்பொருளையும் சுழற்சி முறையில மேடையில கொடுத்து போட்டோவெல்லாம் எடுத்துக்கிட்டு, //

இது நல்ல ஐடியாவா இருக்குங்க. ஆனா எதுக்கு அஞ்சு வாங்கணும் ரெண்டு போதுமே அப்படின்னும் தோணுது. இதுக்கு பேர் சிக்கனம் சிக்கனம் மட்டுமே.

கபீஷ் said...

//.நாங்க எப்பயுமே வெறுங்கையோட போயி சாப்பிட்டு பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதுதான் வழக்கம்//

நல்ல பழக்கம்!!

//ஆனாலும் பரிசுப்பொருள் ஒன்னுமே கொடுக்கலண்ணா அசிங்கமா போயிடும்னு நண்பன்கிட்ட சொன்னோம்//

இது ரொம்ப கெட்ட பழக்கமாச்சே!

ILA (a) இளா said...

//பார் நிர்வாகத்தினர் எங்கள் இருப்பிடத்தை நோக்கி விரைந்தனர்....//
ஒரு ஆம்லேட்டுக்கேவா? ஆரம்பிக்கவே இல்லே, தொடரும் போட்டா எப்படிங்க? சரி , சரி, அடுத்தப்பதிவ சீக்கிரமே போடுங்க..

நசரேயன் said...

/*நாங்க எப்பயுமே வெறுங்கையோட போயி சாப்பிட்டு பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதுதான் வழக்கம்*/
என்னை மாதிரிதானா?

நசரேயன் said...

அடுத்த பாகத்திலே குடுகுடுப்பைக்கு உலக்கை அடியா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா...ஒரு மர்மத்தொடர் போல இருக்கு....இப்படி ஒரு கட்டத்திலே தொடரும் போட்டா எப்படி?
தமிழ்வாணன் தோற்றார் போங்கள்.

அது சரி(18185106603874041862) said...

உங்க தலைப்பில ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு...

பாண்டிச்சேரியில குளியல்னு தலைப்பு...ஆனா குடியல் பத்தி தான் எழுதியிருக்கீங்க...

"பாண்டிச்சேரியில் குடியல்"னு மாத்திருங்க :))

Anonymous said...

//நெட்டையனும் நானும் வேடிக்கை பார்த்த படி இருந்தோம் மனசுக்குள் ஒரு பயத்தோடு, //

வாழ்க்கையில் அப்போதிலிருந்து பயம்தானா?

Anonymous said...

500 ரூபாய்க்கு அப்படி என்ன பரிசுப்பொறுள் குடுத்தீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நாங்க எப்பயுமே வெறுங்கையோட போயி சாப்பிட்டு பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதுதான் வழக்கம்.//


நாமல்லாம் மாஸ்ல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பாண்டிச்சேரி போகலாம்னு முடிவாச்சு,//


நாம கலாச்சாரத்தக் காப்பாத்தணும் பாஸ்

துளசி கோபால் said...

அரைப்பக்கத்துக்கு ஒரு தொடரும் போட்டா எப்படி ஜக்கம்மா?
சட்ன்னு சொல்லு ஜக்கம்மா

சந்தனமுல்லை said...

ம்ம்..அப்புறம்?

ராஜ நடராஜன் said...

திகிலோட படிச்சிட்டுருக்கும் போது தொடரும் போட்டுட்டூங்களே:(

இந்த மாதிரி விசயங்களுக்கெல்லாம் பதிவு எப்படி போடறதுன்னு "சீக்கிரம் சொல்லு ஜக்கம்மா" டீச்சர் பதிவுகளைப் படிக்கவும்:)

தமிழ் அமுதன் said...

தொடரும் போட்டாச்சு!

அடுத்து எங்க, ஆஸ்பத்திரில இருந்து

ஆரம்பமா ?

Joe said...

//நெட்டையனும் நானும் வேடிக்கை பார்த்த படி இருந்தோம் மனசுக்குள் ஒரு பயத்தோடு, //

படிக்கிற புள்ளைக தண்ணியடிக்காமே இருந்திருக்குக, நல்ல விஷயம்!

தேவன் மாயம் said...

பாருக்குள்ளே நல்ல பாரு.....புது அர்த்தம்!! இதுவரை யொசிக்கவில்லையே!
நல்லா இருக்கு!!!!

CA Venkatesh Krishnan said...

பாண்டிச்சேரின்னாலே தண்ணிதானே.

அந்த ஊரைப் பற்றி ஒரு சுவாரசியத் தகவல்.

ஒரு நாளைக்கு மூன்று வேளை குழாயில் குடிநீர் வழங்கும் ஒரே ஊர் எனக்குத் தெரிந்து பாண்டிச்சேரிதான்.

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் நன்றி.
இறுதி பாகம் விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத திருப்பங்களுடன்

Anonymous said...

//நாங்க எப்பயுமே வெறுங்கையோட போயி சாப்பிட்டு பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதுதான் வழக்கம்//

வாழ்கைல கடைசி வரை கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கம்.

http://urupudaathathu.blogspot.com/ said...

அதிர்ச்சியுடன் அடுத்த பதிவுக்கு வைடிங்..

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒ,,, நான் தான் 25ஆ

http://urupudaathathu.blogspot.com/ said...

நீங்களும் சொந்த கதை , சோக கதை எழுத ஆரம்பிச்சிட்டீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி அப்பாலிக்கா வரேன்