மு:கு : இது ஒரு மீள்பதிவு
முன்னொரு நாள் சோழ நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் கதையின் நாயகன் தொடக்கப்பள்ளியில் இருந்து உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்த மகிழ்ச்சியில் மணியாபியம் விளையாடிக்கொண்டிருந்தான்.
ஆபியம் தந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை, தவறி விழுந்ததில் முன் பல் அடிப்பட்டு நொறுங்கியது,கடுமையான வலி.
அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நாயகனின்(நான்) தந்தையிடம் சக மாணவர்கள் கூட்டிச்சென்றனர். அவரும் தன்னுடைய பாசத்தை என் கன்னத்தில் ஒரு அறை விட்டு காண்பித்து பல் டாக்டரிடம் அழைத்துசென்றார். பல் பாதியானாலும் அப்போதைக்கு பிரச்சினை சரியானது..
சில வருடங்களுக்கு முன் சென்னையில் அப்பா கொடுத்துக்கொண்டே இருந்த பணத்தை வைத்து வேலை தேடிக்கொண்டேஏஏஏஏஏஏஏ ருந்தபோது, அந்தப்பல் வலிக்க ஆரம்பிச்சது.
வாடகை, டீ, தங்க வடிப்பான்,மற்றும் ஓரிரு வேலை உணவுக்கே சிங்கி அடிக்கும் நிலையில் இலவச பல் சிகிச்சை எங்காவது கிடைக்குமான்னு தேடினேன்.
நண்பர் VHS ல பார்க்கலாம்னு சொன்னான். VHS போன் பண்ணி கேட்டப்ப, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ராகாஸ் டெண்டல் காலேஜ் போகச்சொன்னங்க.
நானும் என் நண்பனும் அடுத்த நாள் அங்கே.
ராகாஸ் டெண்டல் காலேஜ், இரண்டாமாண்டு அல்லது மூன்றாமாண்டு மாணவர்கள் என்னுடைய பல்லை செக் பண்ண தயார் நிலையில் குறடு மற்றும் கிடுக்கிகளோடு.
அழகிய பல் வரிசை கொண்ட ஒரு அழகிய பல்லவி என்னை "ஆ" சொல்லுங்க , "ஈ " சொல்லுங்கன்னார். நானும் ஆஆஆஆஆ, ஹிஹிஹிஹி சொன்னேன்.
வரிசையாக பல வருங்கால பல்லவர்கள்/ பல்லவிகள் ஆ, ஈ சொல்லசொல்லினர்.என்னமோ குறிப்பு எடுத்துக்கொண்டனர்.
லேட்டரல் <எனக்கு சரியா தெரியல> அப்செஸ்,
< எனக்கு சரியா தெரியல> அப்செஸ்,
மற்றும் சில அப்செஸ்களை டயாக்னோசிஸ் ஆ சொன்னாங்க.
கடைசியா பாடம் எடுக்கிற பல்லவ பேரரசர் வந்தார். ஆ,ஈ சொல்ல சொன்னார். மாணவப் பல்லவர்கள் சொல்லாத ஒரு அப்செஸை டயாக்னோசிஸா சொன்னார்.
என்னைத்தவிர அனைவரும் ஹிஹிஹிஹி,
நண்பர் அனைத்தையும் நோட்டம் விட்டபடியே இருந்தான்.
கொஞ்சம் pus வெச்சிருக்கு, ரூட் கெனால் சர்ஜரி பண்ணிதான் சரி பண்ணனும்னு சொன்னார். தரமணி VHS ல இருக்கிற ராகாஸ் டெண்டல் காலேஜ் MDS மாணவர்கள் அறுவை சிகிச்சை செய்வார்கள் என அங்கே செல்ல பரிந்துரைத்தார்.
சரின்னு சொல்லிட்டு வெளில வந்தோம், நாயர் கடையில் கொஞ்சம் சக்கரை வெந்நீர் குடிச்சிட்டு , தங்க வடிப்பான் பஞ்சு கையை சுட்டதும், கீழே போட்டுவிட்டு நண்பன்.
“டேய் learn dentistry in 24 hours, dentistry for dummies” மாதிரி புத்தகம் எல்லாம் ஒன்னும் இல்லையாடான்னு கேட்டான்.கத்துகிட்டு நாமலே சர்ஜரி பண்ணிடலாம்னான்.
இவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது நல்லபாம்பு,நட்டுவாக்கலிகளுக்கு சர்ஜரி பண்ணிய முன் அனுபவம் உள்ளவர். இவரின் சர்ஜரி நிறைய பேரின் உயிரை காப்பாற்றியிருக்கிறது சர்ஜரி செய்துகொண்டவர்கள் இறந்து போனதால்.நல்லவேளை அப்படி எல்லாம் புத்தகம் இல்லை.
அடுத்த நாள் தரமணி VHS ல இருக்கிற ராகாஸ் டெண்டல் காலேஜ் போனோம், MDS படிக்கிற பல்லவர் பார்த்துட்டு, ரூட் கெனால் சர்ஜரி பண்ணிடலாம், நீங்க ரூ-30 பீஸ் VHS க்கு கட்டிருங்கன்னு சொன்னார். நல்லபடியா மிகவும் சிரத்தையுடன் ரூட் கெனால் சர்ஜரியும் பண்ணினார்.
அவரை நம்பியதற்கு எனக்கு நன்றி சொன்னார்.நானும் சைகையில் நன்றியைதெரிவித்துக்கொண்டு விடை பெற்றேன்.
வீங்கிய வாயுடன் ஒரு வாரம், முப்பதே ரூபாய் செலவில் என்னுடைய பல்வலியும் சரியானது, இந்த வாரத்தில் கிட்டதட்ட நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் செலவும் குறைந்தது. நான் செய்ய நினைத்த வேலையில் முன் அனுபவம் எனக்கு இல்லாமல் இருந்தாலும் யாராவது என்னை நம்பி வேலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இதன் மூலம் பிறந்தது.
அந்த அழகிய பல்லவியை மீண்டும் பார்த்தா ஹிஹிஹி சொல்லலாம்னுஆசையாதான் இருக்கு. ஆனால் குந்தவை நாச்சியார் மீண்டும் MDS பல்லவர பார்க்க வேண்டி வரும்கிறார்.
பி,கு : (<எனக்கு சரியா தெரியல> = பல்லவர்களும்/பல்லவிகளும் ஏதோ மருத்துவபேரு சொன்னாங்க எனக்கு மறந்து போச்சு)
இது ஒரு மீள்பதிவு
35 comments:
:-) ipdi oru alagaana vazhi irukaa :-))
வருகைக்கு நன்றி யாத்ரீகன்,
:-) ipdi oru alagaana vazhi irukaa :-))
அழகான "வலி" இருக்குங்க
அது என்ன மணியாபியம்?? கிரிக்கெட்டா?
குந்தவை நாச்சியாரா? அப்ப நீங்க தான் வந்தியத்தேவனா? நான் உங்க பேரு குடுகுடுப்பைன்ல நெனச்சிகிட்டிருந்தேன்!
அதெல்லாம் விடுங்க, அந்த அழகிய பல்லவிய பாத்தா நரசிம்ம வர்மன் கேட்டதா சொல்லுங்க :0)
வாங்க முரண் தொடையார்
அது என்ன மணியாபியம்?? கிரிக்கெட்டா?
ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.
அந்த பல்லவி லண்டன் பக்கமா எங்கியோ பல் கட்டற பொழப்பு நடத்த வந்துச்சாம். யாரோ ஆண்டர்சன் ஒருத்தர் கூட இப்ப சுத்திகினுருக்காம்.
நரசிம்ம வர்மன் பத்தி ஆண்டர்சன் ஏற்கனவே சொல்லிட்டாராம்.
குந்தவை நாச்சியாரா? அப்ப நீங்க தான் வந்தியத்தேவனா? நான் உங்க பேரு குடுகுடுப்பைன்ல நெனச்சிகிட்டிருந்தேன்!
வந்தியத்தேவனுமில்ல, தொந்தியத்தேவனுமில்ல்ங்க சும்மா ஒரு சோழர், பல்லவர் பில்டப்புஙோ.
ரொம்ப நலலருக்குங்க உங்க பதிவு!!
ஆபியம்-னா என்ன? அப்புறம் தங்க வடிப்பான்?
சொன்னவிதம் சுவாரசியம்!!
அழகான விவரிப்பு. புதிய தமிழ் வார்த்தைகள். கலக்கலான பதிவு. பாராட்டுக்கள்.
வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி
சந்தனமுல்லை,ரத்னேஷ்
அடிக்கடி வாங்க
ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.
தங்கவடிப்பான்=கோல்ட் பில்ட்டர்
ஆபியம்..
மனியாபியம்...
இஷ்ட்டாபியம்..
குட்டிச் சாத்தான் மண்ணைத் தின்றான்...
தற... தற... *த்துல உதை!
கரீட்டா குடுகுடுப்பையாரே!
நான் நீங்க சொல்ற பல்லவன் இல்ல.
நான் வேற ;-)
எனக்கும் இந்த மாதிரி பல்லவர்களிடம் மாட்டிய அனுபவம் உண்டு.
ஒரு அல்லது இரண்டு வரி விட்டுட்டேன்னு நெனைக்குறேன்!
ஆபியம்...
மனியாபியம்...
இஷ்ட்டாபியம்...
குரங்காபியம்... (அல்லது வேறு ஒரு ஆபியம் அல்லது இந்த வரியே கிடையாது)
நகரத்தின் எல்லைக் கோடு...
குட்டிச் சாத்தான் மண்ணைத் தின்றான்...
தற... தற... *த்துல உதை!
கரீட்டா குடுகுடுப்பையாரே!
கருப்பையாண்ணே
எங்க ஊர்ல இப்படி
ஆபியம்
இஸ்டாபியம்
ல்க்டுதட்பரிசு
லாம்லாத்பரிசு
சோடா கலர்
உடைச்சி தாரேன் குடிச்சுக்க
அப்படியே போகும்....
குனிஞ்சுருக்கவன் இன்னும் குனிஞ்சா தாண்டுறவன் பல்லு நல்லா உடையும்
வாங்க இளைய பல்லவன்
அடிக்கடி வாங்க
/*அழகிய பல்லவியை மீண்டும் பார்த்தா ஹிஹிஹி சொல்லலாம்னுஆசையாதான் */
ஏன் பொக்கை வாய்க்கு பல் கட்டவா?
பல்லவர் பல்லவின்னு சொல்லுங்க!
எல்லாம் பிரம்மை என்று உங்களுக்கு தோன்றுகிறதா..........
நீங்கள் தேவதைகளுக்கு நடுவில் நிற்பதாகப் பொருள்
//அழகிய பல் வரிசை கொண்ட ஒரு அழகிய பல்லவி என்னை "ஆ" சொல்லுங்க , "ஈ " சொல்லுங்கன்னார். நானும் ஆஆஆஆஆ, ஹிஹிஹிஹி சொன்னேன்.
//
ஆ,ஈ இந்தப் பல்லவிகிட்டத்தான் கத்துகிட்டீங்களா?இன்னுங் கொஞ்ச தூரம் தரமணிக்குள்ள சுத்தியிருந்தீங்கன்னா இன்னொரு பல்லவி விட்டு உ,ஊ சொல்லிக் கொடுத்திருக்குமே:)
(இஃகி!இஃகி கத்துக்கிடனுமின்னா பழமையண்ணன் இருக்கவே இருக்கார்!)
//ஆனால் குந்தவை நாச்சியார் மீண்டும் MDS பல்லவர பார்க்க வேண்டி வரும்கிறார்.
//
அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க :-):-)
மீள் பதிவுன்னா நீங்க மூத்த பதிவர்ன்னு ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கறீங்களா?
கபீஷ் said...
மீள் பதிவுன்னா நீங்க மூத்த பதிவர்ன்னு ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கறீங்களா?//
//
நான் எழுத ஆரம்பிச்சு 5 மாதந்தான் ஆகுது. இப்ப எழுத விசயம் இல்ல அதான் இப்படி.மத்தபடி நான் ரொம்ப யூத் பதிவருங்கோ
பதிவு செகண்ட் ரன்லயும் நல்லாப்போகுது போல இருக்கு
:-)))))
ஹி ஹி மூத்த பதிவர்னு ஒத்துக்க எவ்ளோ பயம் குகுக்கு!!!!
(ச்சும்மா லுலுலாயி.... :-):-) )
நசரேயன் said...
/*அழகிய பல்லவியை மீண்டும் பார்த்தா ஹிஹிஹி சொல்லலாம்னுஆசையாதான் */
ஏன் பொக்கை வாய்க்கு பல் கட்டவா?
//
உங்க லொள்ளு தாங்க முடியலப்பா.
நல்லா இருக்கு
//ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.//
இதுக்கு நாங்க பச்சை குதிரைன்னு ப்நேர் வச்சிருந்தோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பழமைபேசி said...
பல்லவர் பல்லவின்னு சொல்லுங்க!//
பழையவர் பழையவின்னு சொன்னா நல்லாவா இருக்கு
SUREஷ் said...
எல்லாம் பிரம்மை என்று உங்களுக்கு தோன்றுகிறதா..........
நீங்கள் தேவதைகளுக்கு நடுவில் நிற்பதாகப் பொருள்//
அப்படி எப்பயும் தோனலியே.
ராஜ நடராஜன் said...
//அழகிய பல் வரிசை கொண்ட ஒரு அழகிய பல்லவி என்னை "ஆ" சொல்லுங்க , "ஈ " சொல்லுங்கன்னார். நானும் ஆஆஆஆஆ, ஹிஹிஹிஹி சொன்னேன்.
//
ஆ,ஈ இந்தப் பல்லவிகிட்டத்தான் கத்துகிட்டீங்களா?இன்னுங் கொஞ்ச தூரம் தரமணிக்குள்ள சுத்தியிருந்தீங்கன்னா இன்னொரு பல்லவி விட்டு உ,ஊ சொல்லிக் கொடுத்திருக்குமே:)
(இஃகி!இஃகி கத்துக்கிடனுமின்னா பழமையண்ணன் இருக்கவே இருக்கார்!)//
ஊஊ ஆகிடக்கூடாதுல்ல, நம்மள போயி யாருங்க அடிப்பா.
வாங்க T.V.Radhakrishnan
பதிவு செகண்ட் ரன்லயும் நல்லாப்போகுது போல இருக்கு
:-)))))//
//
13 கமெண்ட் பழசு, பாதிக்கு மேல என்னோடது, பெரிசா ஒன்னும் கூட்டம் இல்ல அய்யா
சின்ன அம்மிணி said...
நல்லா இருக்கு
நன்றி சின்ன அம்மிணி
dondu(#11168674346665545885) said...
//ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.//
இதுக்கு நாங்க பச்சை குதிரைன்னு ப்நேர் வச்சிருந்தோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி டோண்டு சார்
நாங்கெல்லாம் மாடர்ன் சார்.
//குடுகுடுப்பை said...
dondu(#11168674346665545885) said...
//ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.//
இதுக்கு நாங்க பச்சை குதிரைன்னு ப்நேர் வச்சிருந்தோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி டோண்டு சார்
நாங்கெல்லாம் மாடர்ன் சார்.
//
ஓ, அப்பிடியா? அப்ப, அந்த ஒருத்தர் மேல இல்லாம, சும்மாவே தாண்டலாமே?
பழமைபேசி said...
//குடுகுடுப்பை said...
dondu(#11168674346665545885) said...
//ஆபியம்=மணியாபியம்=ஒருத்தர் முதுகை குனிய வெச்சி, அடுத்தவர் அவர் முதுகுல கைவெச்சு தாண்டுறது.//
இதுக்கு நாங்க பச்சை குதிரைன்னு ப்நேர் வச்சிருந்தோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி டோண்டு சார்
நாங்கெல்லாம் மாடர்ன் சார்.
//
ஓ, அப்பிடியா? அப்ப, அந்த ஒருத்தர் மேல இல்லாம, சும்மாவே தாண்டலாமே?//
உங்க காலத்துல அப்படிதானா?
பல்லு வலில கூட பல்லவிகள லுக்கு விட்ட நீ ஜொள்ளவண்டா
பள்ளி பருவத்தில் பல் உடைஞ்சு ரொம்ப வருஷம் கழிச்சு
டாக்டர் பார்த்து இருக்கீங்க , அது உங்க தப்பு
பல் நரம்பு -பல்ப் பகுதி சிதைஞ்சு அழுகி போயிருக்கும் ,
அதனால வேர் வைத்தியம் , அதை தொடர்ந்து பல்லின் மேல் பகுதியில் இருக்கும் அழுகல் அல்லது சீல் கட்டியை நீக்க Apisectomy என்னும் சிறு அறுவை சிகிச்சை செஞ்சு இருப்பாங்க , உதடு ஒரு நளினமான உறுப்பு எளிதில் வீக்கம் அடையும் , அதனால் உங்கள் நோய் குறி அதிகமா தோற்றம் குடுத்து இருக்கலாம்.
பார்க்க http://www.dentalsurgeon.co.nz/dental/topics/sgap.htm
Post a Comment