Tuesday, September 2, 2008

பதிவர் ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்

தினப்பதிவர் நகைச்சுவை நாகப்பாம்பு ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்

நான் தினமும் ஒரு மென்பொருள் ரிலீஸ் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறது கொஞ்சம் அதிகமா தெரியலயா?

தினசரி குறைந்தது 50 மென்பொருளாவது டெஸ்ட் செய்து, அதுக்கு bug report கொடுப்பேன்னு வேற சொல்றார்.

கி.பி 2030 ல தான் உபயோகப்பட போற மென்பொருளை இன்னைக்கு ரிலீஸ் பன்னா எப்படி?

இந்த மென்பொருளை இன்னைக்கு முடிக்க முடியுமான்னு meeting ல கேட்டா , conference table க்கு முதுகை காண்பித்து , என் பின்னால் 10 பேரு இருக்கும்போது ஏன் முடியாது? அப்படிங்கறார்.

பூச்சாஸ் என்கிற தன்னுடைய code library,மற்றும் தான் அங்கம் வகிக்கும் vavas ங் கிற ஒப்பன் சோர்ஸ் மட்டும் தான் இனிமே உபயோகப்படுத்தனும் சொல்றாரு? இது வெளங்குமா?

browser client மட்டும் தான் இனிமே இருக்கனும்னு அறிவுரை வேற சொல்றார்.

ச்சின்னப்பையன் முதல் program:

பொதுமக்கள் அமைப்பு வணக்கம்தங்கமணி{

பொதுமக்கள் நிலைப்பான் சும்மா முதன்மை(எழுத்து [] தகவல்கள்){

முயற்சி{

அமைப்பான்.வெளியே.அச்சடி(" வணக்கம் தங்கமணி");

}பிடி(எதிர்பாராதது எ){

அமைப்பான்.தவறு.அச்சடி(" தவறுக்கு நான் காரணம் இல்லை தங்கமணி");

}

}

}

க: > பொருளாக்கு வணக்கம்தங்கமணி.ஜாவா

தவறு : பொதுமக்கள் அடையாளச்சொல் அல்ல.


புலம்பல் : அய்யயோ பொதுமக்கள் இல்லையா அப்புறம்!

பொது அமைப்பு வணக்கம்தங்கமணி{

பொது நிலைப்பான் சும்மா முதன்மை(எழுத்து [] தகவல்கள்){

முயற்சி{

அமைப்பான்.வெளியே.அச்சடி(" வணக்கம் தங்கமணி");

}பிடி(எதிர்பாராதது எ){

அமைப்பான்.தவறு.அச்சடி(" தவறுக்கு நான் காரணம் இல்லை தங்கமணி" + எ );

}

}

}
க: > பொருளாக்கு வணக்கம்தங்கமணி.ஜாவா

சரியாக ஆக்கப்பட்டது.

மகிழ்ச்சியா வீட்டுக்கு போனவுடன் தங்கமணியிடம்

"என் கோடு, உன் கோடு, யுனிகோடு தனி கோடு" பன்ச் டயலாக் விடுறார் பதிலுக்கு தங்கமணியும் பன்ச்..






12 comments:

மங்களூர் சிவா said...

ஹா ஹா

அவர் சின்ன தம்பி இல்லை ச்சின்னபையன்

:))))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி, தப்பு நடந்து போச்சு......என்ன பண்ணலாம்

மங்களூர் சிவா said...

பரவால்ல ஃப்ரீயா விடுங்க
:))))))))))

வால்பையன் said...

அவரு சொன்னாலும் சொல்லாங்காட்டியும் ஆணி தான் புடிங்கிட்டு இருக்கார்!
இதுல ஆனால் என்ன ஆனால்,
அவரோட டெம்ப்லேட்ட திருடிட்டு என்ன விளையாட்டு சின்னபுள்ள தனமா

குடுகுடுப்பை said...

வாங்க வால்பையன்
சும்மா அவரு கைய எடுத்து அவரு கண்ணையே குத்தலாம்னு, அண்ணன்கிட்ட அனுமதி வாங்கிட்டேன், ஆனா அவரு கைய நானாத்தான் ....

விஜய் ஆனந்த் said...

:-))))...

புதுகை.அப்துல்லா said...

அண்ணன் ச்சின்னப்பையனைப் பற்றி பதிவிட்ட குடுகுடுப்பையார் வாழ்க!

சின்னப் பையன் said...

:-))))))

சின்னப் பையன் said...

நல்லா இருக்குது... காலங்கார்த்தாலே என்ன சிரிக்க வெச்சிட்டீங்க......:-))))

நாநா said...

குடுகுடுப்பை எனக்கு ஒண்ணுமே புரியல எனக்கு.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி விஜய் ஆனந்த்,புதுகை,நாயகன்

நாயகனுக்கு வீட்ல எப்படி போகுது, இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து நல்லா பண்ணியிருக்கலாம் அப்படின்னு தோனுது

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி நானா

இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து நல்லா பண்ணியிருக்கலாம்

இத முதலில் பாருங்கள்

http://vavaasangam.blogspot.com/
http://boochandi.blogspot.com/