Thursday, September 11, 2008

நாட்டாமை கேட்ட தீர்ப்பு -குறுங்கதை

1984 ம் வருடத்தில் ஒரு நாள், 80 வயதான நாட்டாமை கணேசன் வழக்கம் போல பாலத்து சீனி பிள்ளை டீக்கடையில் வழக்கமாக சாப்பிடும் போண்டா மற்றும் டீ சாப்பிட்டு, கைத்தடியின் உதவியுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.


கணேசன் நாட்டாமை வீட்டில் வேலை பார்க்கும் மாயாவு, நாட்டாமையின் மகனின் சைக்கிளில் வயலுக்கு தேவையான உர மூட்டையை ஏற்றிக்கொண்டு நடவு ஆள் வருவதற்கு முன் அடி உரம் போடும் அவசரத்தில் வேகமாக சைக்கிளை மிதித்தார்.

முன்னால் செல்லும் பெரியவர் நாட்டாமை என்பதை கவனிக்காமல், சைக்கிள் பெல்லை அடித்தார் வழி விடக்கோரி.


வழிவிட்ட படியே திரும்பி பார்த்த நாட்டாமை, கீழ்சாதிக்கார மாயாவு தனக்கு பெல் அடித்து வழி கேட்டதை தாங்காது அதிர்ச்சியடைந்தவர், கோபத்துடன் டேய் கீழ்சாதிக்காரப்பயளே யாரப்பாத்து கினிகினின்னு மணி அடிக்கறே, அதுவும் என் மவன் சைக்கிள வெச்சே. அடிக்கவும் தன் கைத்தடியை ஓங்கினார்.

மாயாவு உடனே அய்யா சாமி நீங்கன்னு தெரியாம மணி அடிச்சுப்புட்டேன், என்ன மன்னிச்சிருங்க, சின்னய்யா சீக்கிரம் உரம் வாங்கியாரச் சொன்னாரு அந்த அவசரத்தில கவனிக்கல என்ன மன்னிச்ருங்கய்யா

அடுத்த நாள் நாட்டாமை கணேசனுக்கு படுக்கையை விட்டு எழமுடியவில்லை, முதுமை தன் வேலையை செய்தது, நாட்டாமையின் மகன் பக்கத்து ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் செய்யும் டாக்டர் சந்திரசேகரனை வீட்டுக்கு வரவழைத்து வர மாயாவை அனுப்பினார்.

டாக்டர் சந்திரசேகரன் வீட்டுக்கு வந்து, என்ன நாட்டாமை அய்யா என்பது காதில் விழுந்த கணத்தில், டாக்டரய்யா என்ன காப்பாத்துங்கய்யா என்று கதறினார் நாட்டாமை அந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த டாக்டரிடம்

பி.கு: இந்த பதிவுதான். என்னை இந்த கதையை எழுத தூண்டியது.

1984ம் ஆண்டு 80 வயதை கடந்த ஒரு முதியவரின் சாதி உணர்வு தன் உயிர் காக்கப்படவேண்டும் என்ற நிலையில் மறந்து போனது.

2008 ல் வாழும் நாம் மாறுபட்ட ஒரு உலகில் வாழ்கிறோம், தயவு செய்து சாதி என்கிற அடையாளத்தை காட்டி ஒருவனின் வழிபாட்டு உரிமையை பறிக்காதீர்கள். குறைந்த பட்சம் சாதி அடையாளத்தை திருமணத்திற்குள் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இந்திய சமூகம் உலகத்திற்கு நிறைய நன்மைகளை வழங்கியுள்ளது.சாதிகளற்ற இந்திய சமூகம் உலகத்திற்கு மேலும் நனமைகளை செய்யமுடியும். இல்லையென்றால் இந்தியர்கள் நாம் நம் அடையாளத்தை தொலைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

11 comments:

A Blog for Edutainment said...

Supernga

குடுகுடுப்பை said...

வாங்க தமிழ் குறும்படம்

நன்றிங்க.

அது சரி said...

ரெண்டாயிரம் வருஷமா திருந்தாதவங்களா இனிமே திருந்த போறாங்க? அட போங்கண்ணா, எனக்கு நம்பிக்கையில்ல!

//
இந்திய சமூகம் உலகத்திற்கு நிறைய நன்மைகளை வழங்கியுள்ளது.சாதிகளற்ற இந்திய சமூகம் உலகத்திற்கு மேலும் நனமைகளை செய்யமுடியும். இல்லையென்றால் இந்தியர்கள் நாம் நம் அடையாளத்தை தொலைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
//

நானும் ரொம்ப நாளா நெறைய பேர்கிட்ட கேட்டுப்பாக்கிறேன், ஒருத்தரும் ஒழுங்க சொல்ல மாட்டேங்கிறாங்க!

அது, அந்த இந்திய அடையாளம்னா என்னங்னா??

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி,

ஒரு கட்டுக்குள் அடங்காத தன்மை.உலகை ஆள நினைக்கும் அரசியல் எல்லாம் அவரவர் பாதையை சொல்லும்.ஆனால் இதில் அடங்காது தன்னைத்தானே புதுப்பிதுக்கொள்வது என வைத்துக்கொள்ளுங்கள்.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
வருகைக்கு நன்றி,

ஒரு கட்டுக்குள் அடங்காத தன்மை.உலகை ஆள நினைக்கும் அரசியல் எல்லாம் அவரவர் பாதையை சொல்லும்.ஆனால் இதில் அடங்காது தன்னைத்தானே புதுப்பிதுக்கொள்வது என வைத்துக்கொள்ளுங்கள்.

//

ஒண்ணுமே புரிய‌லையே... இப்பிடி பின் ந‌வீன‌த்துவ‌ வெள‌க்க‌மெல்லாம் குடுத்தா ந‌ம்ப‌ளுக்கு புரியாதுங்க‌ த‌ல‌. கொஞ்ச‌ம் ந‌ம்ம‌ பாஷையில‌ சொல்லுங்க‌ :0)

குடுகுடுப்பை said...

ஆமா படிச்சி பார்த்தேன் எனக்கும் புரியல
சாதி பேரை சொல்லி வழிபாட்டு உரிமையை பறிக்காதீங்கறது செய்தி. மத்தத இப்பக்கி விட்டுருவோம்.

துளசி கோபால் said...

சாதிச் சனியனை விடாமப் புடிச்சுக்கிட்டு இருப்பது யாரு?

எல்லாம் இந்த அரசியல் வியாதிகள்தானே?

செல்வ கருப்பையா said...

//குடுகுடுப்பை: ஆமா படிச்சி பார்த்தேன் எனக்கும் புரியல//
அடப் பாவிகளா, எத்தன பேர் இப்பிடிக் கெளம்பிருக்கீங்க?

மற்றபடி, உங்கள் மையக் கருத்துடன் உடன்படுகின்றேன்.

செல்வ கருப்பையா said...

//அது சரி: அது, அந்த இந்திய அடையாளம்னா என்னங்னா??//
ஒரு வேலை காலுல முட்டையும் கையில ஆறும் போட்டுப் பாக்கணுமோ?

குடுகுடுப்பை said...

வாங்க செல்வ.கருப்பையா

//ஒரு வேலை காலுல முட்டையும் கையில ஆறும் போட்டுப் பாக்கணுமோ?//
:-)


நம்ம கிட்ட முட்டாள்தனங்களுக்கு பதிலா அந்நிய முட்டாள்தனங்களை இறக்குமதி செய்யாமல் இருப்பது அப்படின்னு வெச்சுக்கலாமா.

குடுகுடுப்பை said...

வாங்க துளசி கோபால்

அரசியல் மட்டுமல்ல நாமும் தான் காரணம் என நினைக்கிறேன். சுய பரிசோதனை மிக அவசியம் என நினைக்கிறேன்,