மு:கு : இது என்னுடைய 25 வது பதிவு. 99 சதவீதம் மொக்கைகளையே கொடுத்த நான் என் பதிவில் உருப்படியான ஒன்றாக நினைப்பது ஒரே பதிவுதான். அந்த பதிவை எழுத மட்டுமே நான் வலைப்பூ ஆரம்பித்தேன்.
அப்பதிவை மேலும் பலர் படிக்கவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்
இப்பதிவு பயனுள்ளது என நினைத்தால் பின்னூட்டம் இடுங்கள், இதன் மூலம் மேலும் பலரை இப்பதிவு சென்றடையும்.
நன்றி
மீண்டும் நடக்க பழகினான்
அமெரிக்கா வரும் ஆர்வத்தில் சென்னையிலிருந்து சிகரெட் வாங்க மறந்த நடேசனும் அவனது நண்பனும் அலுவலகம் அருகில் உள்ள 7/11 க்கு சென்று சென்னையில் கொடுக்கபட்ட $50 ஐ கொடுத்து சிகரெட் வாங்கினார்கள்.
கொடுதத சில்லரையை எண்ணிப் பார்த்த நண்பனிடம் நடேசன் கேட்டான்,
உனக்கு அமெரிக்க சில்லரை காசுகளை எண்ணத் தெரியுமா?
இல்லடா கடைகாரன் நமக்கு தெரியாதுன்னு நெனச்சுட கூடாதில்லயா அதான் அப்படி….
சிரித்துவிட்டு சிகரெட் புகைத்து விட்டு அலுவலகத்துக்கு சென்ற நடேசன் தனது மேசையில் வைக்கபட்டிருந்த தனக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை எடுத்து வைத்துக்கொண்டான்.
ஒரு சில வாரம் ஓடியிருக்கும், திடீரென நடேசனின் முதுகு வலி பெரிதாக வலிக்க ஆரம்பித்தது, ஏற்கனவே தனது தண்டுவட பிரச்சினை பற்றி அறிந்ததால். மருத்துவரிடம் செல்லவேண்டாம் என முடிவெடுத்து நண்பர்களின் உதவியோடு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தான்.ஆனால் வலி விடுவதாக இல்லை.
அவனது நண்பர்கள் 911 க்கு அழைத்து emergency க்கு ambulance மூலம் சென்று, அங்கு முதல் பெயர், கடைசிப்பெயர் எல்லாம் சொல்லிவிட்டு எனக்கு தண்டுவடத்தில் L4-L5 ல் பிரச்சினை , நடேசனின் கூற்றை ஏற்று சில வலி நிவாரணிகள் கொடுத்து எலும்பியல் மருத்துவரிடம் கான்பிக்க அறிவுரை கூறினர்.நடேசன் அமெரிக்க மருத்துவ வசதிகள் கண்டு பிரமித்து
போனான்.
15 வயதில் இருந்து வரும் இந்த முதுகு வலிக்கு, அமெரிக்காவில் நல்ல மருத்துவம் செய்ய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை அவன்.
நடேசனின் அலுவலக நண்பர் ஒருவர் தனது எலும்பியல் மருத்துவரை பரிசீலனை செய்தார். மருத்துவரும் நடேசனின் கூற்றை ஏற்று சில மாத்திரை மற்றும் MRI எடுக்குமாறு பரிந்த்துரை செய்தார். Copay $10 ஐ எடுத்து டாக்டரிடம் நீட்டினான்.
டாக்டர் ஒரு மாதிரியாக பார்த்து “Please give it in the front desk” என்று சொன்னார்.
பிரபல மருந்து கடையில் டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிகொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தான். மொத்தம் ஒரு வாரம் சாப்பிடவேண்டும்.முதல் நாள் 7 மாத்திரைகள் அடுத்தடுத்து 6,5,4,3,2,1 என சாப்பிடவேண்டும்.
இந்தியாவில் இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு பிரபல சென்னை மருத்துவர் சொன்னது ஞாபகம் வந்தது. இந்த மாத்திரை அறுவை சிகிச்சை இல்லாமல் அல்லது தள்ளிப்போட செய்தால் நல்லது என நினைத்தான்.
முதுகு வலி முழுவதுமாக மறைந்த மாதிரி இருந்தது.MRI results வந்தது, L4-L5 ல் சிறிய பிரச்சினை உள்ளது, வலி இன்னமும் இருக்கிறதா எனக் கேட்டார் டாக்டர். இல்லை என்றான் நடேசன். வலி மீண்டும் வந்தால் இதே மாத்திரையை 2 or 3 dose எடுக்கலாம் என்றார்.
காலம் வேகமாக ஓடியது, திருமணம் நடந்து மனைவி இப்போது நிறைமாத கர்ப்பினி. திடீரென ஒருநாள் மீண்டும் அதே வலி. Emergency room. வலது பக்க இடுப்பு மிகவும் வலிக்கிறது என்றான். வலிக்கும் இடத்தை பார்த்தால் kidney stone ஆக இருக்கும் என்றார்.
இல்லை இல்லை எனக்கு L4-L5 இல் பிரச்சினை என்றான் நடேசன்.ஆமோதித்த டாக்டர்கள் சில வலி நிவாரணிகள் கொடுத்து எலும்பியல் டாக்டரை பார்க்க அறிவுரை செய்தனர்.
மீண்டும் அதே எலும்பியல் டாக்டர் அதே மாத்திரை.வாரம் கடந்தது
ஆனால் இம்முறை வலி நிற்கவில்லை, மாறாக அவனுடைய அனைத்து joint லும் வலி வந்தது. மீண்டும் அதே டாக்டர், இது முதுகு வலி அல்ல என கூறி வேறு மருத்துவரை அனுகும்படி கூறினார்.
PCP said it could be Poly arthritis. அவர் சில மாத்திரைகள் கொடுத்தார். ஆனால் வலி விடுவதாக இல்லை.அன்றிரவே மீண்டும் Emergency room. இம்முறை எதற்கும் kidney stone test செய்து விடுங்கள் என்றான்.
“You have a big kidney stone on your right kidney. It needs to be cleared using lithotripsy”. – Emergency Doctor.
கல் உடைக்க தேதி குறிக்கப்பட்டது.கூடவே அலைந்ததால் மனைவிக்கு அதே நாள் பிரசவ நாள். அழகான பெண் குழந்தை. அனைத்து பிர்ச்சினைகலும் ஒரு வழியாக முடிந்து குடும்பமே மகிழ்ச்சியை அனுபவத்தது.
ஒரு வருடம் ஓடியது, நடேசனுக்கு இம்முறை இட்து புற Hip joint ல் வலி வந்தது. இம்முறை PCP யின் அறிவுரைப்படி மற்றொரு எலும்பியல் டாக்டரை அனுகினான். அவரிடம் கடந்த இரு வருடங்கலாக நடந்ததை கூறினான் இரண்டு முறை Steroid medicine எடுததது உட்பட.
MRI எடுக்குமாறு பரிந்த்துரை செய்தார், MRI முடிவுகள் வந்த பிறகு என்ன மருத்துவம் செய்யலாம் என கூறினார்.
டாக்டர் அலைபேசியில் அழைத்தார். “Your both hips are affected by a condition called ‘AVASCULAR NECROSIS’ your left hip affected the most”. ஒன்றும் புரியவில்லை நடேசனுக்கு.
இது தானாகவும் வரலாம், Steroid medicine பக்க விளைவாலும் வரலாம், அதிக பட்ச alcohol உபயோகத்தாலும் வரலாம் என்றார்.
இதற்கான மருத்துவத்தை கூறிய போது அவன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தான்.
“You are not old enough to have HIP REPLACEMENT”. 15 வருடம் வரும் உங்களுடைய வாழ்க்கையில் இரண்டு அலலது மூன்று முறை HIP REPLACEMENT தேவைப்படும் என்றார்.
மருத்துவத்தின் முதல் பகுதியாக you can walk with crutches, it may heal the necrosis by removing the weight from the hip joint, it will allow the body tries to resume blood supply to the bone and heal by itself. But your left hip is affected too much already, lets hope for the best.
குழந்தை நடக்க பழகியது , நடேசன் crutches வைத்து நடக்க பழகினான் எப்படியாவது HIP REPLACEMENT இல்லாமல் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்.
பி.கு :
நடேசன் மருத்துவரிடம் தனக்கு இருந்த முதுகு வலியை வலியுருத்தி சொல்லியிராவிட்டால் kidney stone கண்டுபிடிக்கப்ட்டிருக்கும், Steroid medicine இரண்டாவது முறை தவிர்க்கப்பட்டிருக்கும்.
இந்தியாவில் Steroid adulteration செய்கிற போலி சித்த மருத்துவர்களிடம்
எச்சரிக்கையாக இருக்கவும்.
20 களில் உள்ள ஒருவரின் முதுகு வலிக்கு, இது போன்ற மருந்து கொடுக்கலாமா?
எந்த நாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், நாம் என்ன மருந்து சாப்பிடுகிறோம் என்பதில் கவனம். குறிப்பாக உயிர் காக்கும் மருந்தான
Steroids.
பதிவர் டாக்டர் புருனோ அவர்கள் மேலும் பல அறிவுரைகள் கூற அழைக்கிறேன்.
Disclaimer: இது கவனக்குறைவை களைய ஒரு எச்சரிக்கை, யாரையும் குறை கூற அல்ல.
28 comments:
உங்கள் நண்பரின் நிலை வருத்தம் அளிக்கிறது. உங்களின் எச்சரிக்கைக் குறிப்பும் பலருக்கு பயனாக இருக்கும்.
25 தாவது பதிவுக்கு வாழ்த்துகள் !
நீங்க சொன்ன மாதிரி பின்னூட்டம் போட்டாச்சு :))
25வது பதிவுக்கு நல்வாழ்த்துகள் !
குடுகுடுப்பை ஐயா,
நல்ல ஆழமான சிந்தனையுடன் எழுதி உள்ளிர்கள். இதை படிப்பவர்கள் நிச்சயம் விழித்து கொள்வார்கள்.
உங்களது கட்டுரை பயணம் எண்ணமுடியாத அளவுக்கு கடற்கரை மணல் போலே வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்
நிஜமாகவே தரமான பதிவு. 25க்கு வாழ்த்துகள்.!
பயனுள்ள பதிவு.. நன்றி..
25ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள்..
நீங்க பகிர்ந்ததுகிட்ட விபரத்துக்கு நன்றி சொல்லவேண்டியது முதன்மை! அப்புறம் இது மாதிரி பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!!
25க்கு வாழ்த்துக்கள். அதில் ஒரு உபயோகமான பதிவு போட்டதற்கு பாராட்டுக்கள்.
25-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! நல்ல பதிவு. ஏரியாவுல பெரிய தலைங்க நடமாட்டமெல்லாம் தெரியுது. பெரிய ஆளாயிட்டீங்க போல இருக்கு?
சிங்கிள் சிங்கிளா அடிச்சி திராவிட் மாதிரி இருவத்தஞ்சி அடிச்சாச்சி. இனிமே கியர் மாத்த வேண்டியது தான? தோணி மாதிரி சிக்சும் ஃபோருமா தூக்குங்க!
இருவத்தஞ்சிக்கு வாழ்த்து!
( நீங்க எழுதுனதுல முக்கியமானதுன்னு நான் நெனைக்கிறது நீங்க தென் தமிழ்னாடு பத்தி எழுதுனது, அதைக்கூட மறு ரிலீஸ் பண்ணலாமே!)
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி - இது 25-வது பதிவா இல்ல 26-ஆ?
//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி - இது 25-வது பதிவா இல்ல 26-ஆ?//
ஆமா ஓய் நேத்து கோவியார வம்புக்கு இழுத்த பதிவை மறந்திட்டேன்.அது ஒரு அனிச்சை செயலா நடந்து போச்சு
இது மீள்பதிவு அப்படீங்கறதுனால 25 தான்னு சமாளிப்பீங்கன்னு நெனைச்சேன்.
//
செல்வ கருப்பையா said...
இது மீள்பதிவு அப்படீங்கறதுனால 25 தான்னு சமாளிப்பீங்கன்னு நெனைச்சேன்.
//
என்னவோய் அக்கிரமம் பண்றீரு. ஒரு மனுசன் இருவத்தஞ்சி வரைக்கும் எண்றப்ப ஒண்ணு ரெண்டு கொறையும் தான். இதுக்காக கால்குலேட்டரை எடுத்து வந்து கணக்கு போட்டு காட்றதெல்லாம் சரியில்ல, ஆமா சொல்லிப்புட்டேன். :0)
மனுசன் இருவதுக்கு மேல எண்ணப்படாதுன்னுனு தான கடவுள் கையில பத்து, கால்ல பத்துன்னு இருவது வெரலுக்கு மேல கொடுக்கல? அத மீறி எண்ண நெனச்சா, ஆண்டவனே தண்டிச்சிட்டான்.
ஆத்தா.. எல்லாருக்கும் நல்ல புத்திய கொடும்மா. இனிமே யாரும் இருவதுக்கு மேல எண்ணப்படாது! ஒனக்கு கூழ் ஊத்தறேன்!
கால் சதத்துக்கு வாழ்த்து(க்)கள்.
ஒரு விழிப்புணர்வு தரும் பதிவு.
முந்தியே படிச்சுட்டேன். ஆனா.... இப்பவும் படிச்சேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
கோவி.கண்ணன்,
புதுகை.அப்துல்லா,
நசரேயன்,
தாமிரா,
Sen,
பழமைபேசி,
வெண்பூ,
செல்வ கருப்பையா,
அது சரி மற்றும்
துளசி டீச்சர்.
//ஏரியாவுல பெரிய தலைங்க நடமாட்டமெல்லாம் தெரியுது. பெரிய ஆளாயிட்டீங்க போல இருக்கு?\\
நீங்க தான் நெதம் வர்றீங்களே கருப்பையா அண்ணே
( நீங்க எழுதுனதுல முக்கியமானதுன்னு நான் நெனைக்கிறது நீங்க தென் தமிழ்னாடு பத்தி எழுதுனது, அதைக்கூட மறு ரிலீஸ் பண்ணலாமே!)
இரண்டாம் பாகம் போடலாம்னு இருக்கேன்.
குடுகுடுப்பையார் அவர்களே...
25வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
50
100
1000
10000
அட தொடரட்டும் உங்கள் சீரிய பணி...
வாழ்த்துக்கள்...
நல்ல விழிப்புணர்வுப் பதிவு. உங்கள் நண்பரின் கால் நிலைக்கு அனுதாபங்கள்.
உங்கள் கால் சதத்துக்கு வாழ்த்துக்கள்.
தரமான பதிவு. 25-வது பதிவுக்கு வாழ்த்துகள் குடுகுடுப்பை.
25லேயே ரிப்பீட்டுன்னாலும் பயனுள்ளதுதான்.
ஸ்டெடியா அடிச்சி ஆட வாழ்த்துக்கள்.
நண்பரின் தற்போதைய நிலை என்ன?
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்),
VIKNESHWARAN,
RATHNESH,
கடையம் ஆனந்த்,
இளைய பல்லவன்.
நண்பர் தற்போதும் ஊன்றுகோள் உதவியுடன் தான் நடக்கிறார். ஒரு நாள் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்
இது போல பதிவுகள் எழுத வாழ்த்துகள்
//இது போல பதிவுகள் எழுத வாழ்த்துகள்//
நன்றி ஆயப்பாடியான்
நல்ல விழிப்புணர்வு பதிவு..
Post a Comment