Friday, August 14, 2009

ஏன் கூலி?

நான் பதிவராகி எழுதிய முதல் பதிவு, சென்ற ஆண்டு இதே நாளில் எழுதப்பட்ட பதிவு. ஒரு ஆண்டு நிறைவை ஒட்டி அதே பதிவை மீள்பதிவு செய்கிறேன்.இந்த ஒரு ஆண்டு காலத்தில் நூறுக்கும் மேற்பட்ட வாசகர்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கமும் இடித்துரைத்தலும் என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

நன்றி

குடுகுடுப்பை.



--------------
உலக மக்கள் தொகையில் சரிபாதி உள்ள இந்தியா ,சீனா மற்றும் சில ஆசிய நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் (நான் உட்பட) யாருக்காக உழைக்கிறோம் ,வெகு சிறிதளவே மக்கள் தொகை கொண்ட மேலை நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்படும், ஒரு சில முறை உபயோகித்து தூக்கி எரியும் பொருட்களை உருவாக்கியோ அல்லது மேலை நாட்டு நிறுவனம் உருவாக்கும் மென்பொருள் ஒன்றில் ஒரு கூலியாக பங்கெடுத்து நம் உழைப்பை விற்று மிதமான சுக வாழ்க்கை வாழ்கிறோம்.

எனக்குள் பல கேள்விகள், நமது அதிக மக்கள் சக்தியை ஒரு சிறிய பகுதி மக்களுக்கு உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏன்?

நம்முடைய கல்வி முறை ஏறக்குறைய மேலை நாட்டினற்கு எப்படி வேலை செய்வது என்பதை சார்ந்தே உள்ளது(அல்லது நமது மன நிலை அப்படி உள்ளதா?) நமது ஆங்கில அடிமைத்தனமா? அப்படியும் தோன்றவில்லை.

பெரும்பாலான சீன பொருளாதாரம் மேலை நாடுகள் உபயோகிக்கும் ஆடம்பர / அத்தியாவசிய பொருடகள் சார்ந்தே உள்ளது.

இதுதான் கடவுள் நமக்கு இட்ட விதியா? சுமார 250 கோடி மக்கள் தொகை உள்ள நாம் , இந்த 250 கோடி மக்களுக்கும் உழைத்து உழைத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியாதா?

உலகமயமாக்களில் நமது பங்கு நமது உழைப்பை மட்டும் விற்பது தனா?
இதற்கெல்லாம் தீர்வு என்ன?

பி.கு : என் முதல் பதிவு. நான் சொல்ல நினைத்த கருத்தை எழுதி இருக்கிறேன்.ஒத்த / மாறுபட்ட கருத்துள்ள பதிவர்கள், ஒரு நல்ல பதிவை தர வேண்டுகிறேன்.

16 comments:

சரண் said...

பதிவுலகத்திற்கு நல்வரவு.

நம்ம நாட்டுல திறமைக்கு எங்கே மதிப்பு கொடுக்கிறார்கள்? நிறய திறமையாளர்கள் போட்டியும், பொறாமையும், லஞ்சமும் செய்த கொடுமைகள் தாங்காமலேதான் வேறு நாடுகளுக்கு செல்ல விரும்புகிறர்கள். மேலும் நம்ம நாட்டில் நம் கண்டுபிடிப்புக்களுக்கும், நம்மாட்களுக்கும் எந்த மரியாதயும் அவ்வளவு எளிதா கிடைப்பதில்ல.. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதெல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் மாறி வருகிறது. இன்னும் போக வேண்டிய இடம் ரொம்ப தூரம்.

(Please remove the word verification for comments.. its annoying)

சின்னப் பையன் said...

பதிவுலகத்திற்கு நல்வரவு!!!

Sundar சுந்தர் said...

முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள் குடுகுடுப்பை!

என்ன செம கனமான கேள்வியை கேட்டுருக்கீங்க. இதற்கு நேரடியான சுலபமான பதில் எதுவும் இல்லை. இதை பற்றி நாம எப்படி பீல் பண்றோம், இது தப்பா, சரியா போன்ற விவாதங்கள் இல்லாமல் யோசித்து ஆராய்ந்தால் விடை புரிபடற மாதிரி தெரியும்.

சுருக்கமா சொல்லனும்னா, கிராமத்தில இருக்கவங்க எதுக்கு நகரத்தில இருக்கவங்களுக்கு எடு பிடி வேலை செய்ய போகணும் போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுங்க. உங்க கேள்விக்கு பாதி பதில் கிடைச்சிடும்.

முழு ஆராய்ச்சின்னு பார்த்திங்கன்னா, பல கோணங்களிலும் பார்க்கணும்ன்னு எனக்கு தோனுது.
முதல் கோணம் - ஒவ்வொரு நாடும், தனக்குள்ள சிறப்புகளை, பயன் படுத்தி முன்னேற துடிக்கிறது.
இந்த புக் முடிஞ்சா கொஞ்சம் தேடி படிக்க பாருங்க .. கொஞ்சம் விடை கிடைக்கும்...
(The Competitive Advantage of Nations by Michael E. Porter )
மீதி...பெரியபதிவா போடற அளவுக்கு கொஞ்ச கொஞ்சமா யோசிக்கணும் - வரலாறு, உலக அரசியல், business dynamics, game theories என்று. Phd கிடைக்கும் ;)

Anonymous said...

இதுக்கு ஏன் வெளினாடு போகனும்.

இந்தியாவெலேயே 20% முதலாளிகளுக்காக 80% பேர் உழைக்கிறோமே. இது நியதி.

உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

கயல்விழி said...

வாழ்த்துக்கள் குடுகுடுப்பை :)

குடுகுடுப்பை said...

வாருங்கள் சூர்யா, சின்ன பையன், சுந்தர், வடகரை , கயல்விழி
உங்களில் யாரவது ஏன் கூலியை நல்ல முறையில் எழுதுங்களேன்.

நன்றி.

Mahesh said...

வாங்க வாங்க நாங்களும் புதுசுதான்..... வாழ்த்துக்கள் !!!! நெறய எழுதுங்க..... ஆனா பாத்து எழுதுங்க..... இல்லன்னா "குடுகுடுப்ப காரனுக்கு ஒரு பயங்கர கடிதம்"னு நான் ஒரு பதிவு போட வேண்டியிருக்கும் .... :D

Anonymous said...

கூலிக்கு வேலை பார்ப்பதிலோ இல்லை உழைப்பதிலோ என்ன தப்பு குடுகுடுப்ப?

குடுகுடுப்பை said...

வாங்க அனானி,

//கூலிக்கு வேலை பார்ப்பதிலோ இல்லை உழைப்பதிலோ என்ன தப்பு குடுகுடுப்ப?//

தப்பில்லை, பல்பொடி தயாரிக்கும் கூலி,செங்கல்லில் பல் விளக்கும் நிலை மாறவேண்டும் அல்லவா.

சந்தனமுல்லை said...

ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்!! :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துக்கள் குடுகுடுப்பை ஜ.மு.க தலைவரே!

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//சுமார 250 கோடி மக்கள் தொகை உள்ள நாம் , இந்த 250 கோடி மக்களுக்கும் உழைத்து உழைத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியாதா?//

சுமார் 30% அரசாங்க அதிகாரிகள்!
வேலை செய்வதில்லை
35% படித்து கொண்டிருக்கிறார்கள்!
இனிமே தான் எல்லாம்!
20% குழந்தைகள்
அவர்களால ஒன்றும் செய்ய முடியாது!
4.5999% ஜெயிலில் இருக்கிறார்கள்!
10% வேலை தேடி கொண்டிருக்கிறார்கள்!

மூதி இருப்பது நீங்களும் நானும்!

நீங்கள் பதிவெழுதுறிங்க!
நான் பின்னூட்டம் போடுறேன்!

எங்கிருந்து நாடு முன்னேறும்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்

வெற்றி-[க்]-கதிரவன் said...

சந்தோசம், மகிழ்ச்சி....

குடுகுடுப்பை said...

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி