பிரச்சினை இல்லாத பிரச்சினை எதுவும் உலகில் இருப்பதாக என் சிறு புத்திக்கு தெரியவில்லை, எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும் என்று யாரோ எதற்காகவோ எப்போது உளறிக்கொட்டியது இப்போது ஏனோ எனக்கு ஞாபகம் வந்ததால் தூங்க முயன்ற நான் தூக்கம் வராமல் விழித்து என் தூக்கப்பிரச்சினைக்கு உடனடித்தீர்வாக விழித்திருந்து ஏதாவது செய் என்று எண்ணியதால் இந்த தீர்வு பற்றிய ஆராய்சியினை என்னுடைய பிளாக்கில் ஒரு இடைக்காலத்தீர்வாக பதிந்து வைக்கிறேன்.
எந்தவொரு தீர்வும் முடிவான/முழுமையான தீர்வல்ல என்பது என் மனதில் உதித்த முழுமையடையாத தீர்வு, தீர்வுகள் காலப்போக்கில் மாறிக்கொண்டேயிருக்கும், அந்தத்தீர்வுகள் எப்படி இருக்கும் என்று நாம் கணிக்கமுடியுமா என்பது என்னைவிட என் வாரிசுகள் புத்திசாலிகள் என்று ஒத்துக்கொள்ளும் நான் அநததீர்வுகளும் மேம்படுத்தப்பட்டதாகவே இருக்கும் எனக்கருதுகிறேன்.
மொத்தத்தில் இந்தப்பிரச்சினைக்கு இதுதான் முடிவான / முழுமையான தீர்வு எனும் கூறும் இசங்களோ, மதங்களோ முடிவான தீர்வுகளாக இருக்கமுடியாது என்பதுதான் மனதில் உதித்த முழுமையில்லாத இன்றைய தீர்வு.
11 comments:
அப்படின்னா நீங்க என்னதான் தீர்வு தரீங்க ..?!!
மு.பி ந - வாதிகள் எங்கேப்பா ...
//மொத்தத்தில் இந்தப்பிரச்சினைக்கு இதுதான் முடிவான / முழுமையான தீர்வு எனும் கூறும் இசங்களோ, மதங்களோ முடிவான தீர்வுகளாக இருக்கமுடியாது//
எல்லா பதிவுலையும் , ஒரு மெசேஜ்...... வாழ்க கு.ஜ.மு.க பொது செயலாளர்
ஜரி
ஆக, மெய்யில் ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிரை விடுப்பதே நிரந்தரத் தீர்வு எனச் சொல்ல வருகிறீர்களா தலைவரே??
ங்கொய்யால.... தற்கொலை முயற்சி வழக்குன்னு பிரச்சினை வரும்... போய்யா.... நீரும்... உமது தீர்வும்!!!
பர்ஸ்டு தடவிய வந்துருக்கேன்.. இப்படியா ஒரு வரவேற்பு..?
அப்பறம் வரலாமா வேணாமா..?
யாதெனின்?:))
Madhavan said...
பர்ஸ்டு தடவிய வந்துருக்கேன்.. இப்படியா ஒரு வரவேற்பு..?
அப்பறம் வரலாமா வேணாமா..?
//
நம்ம கடை இப்படித்தான்
நட்புடன் ஜமால் said...
மு.பி ந - வாதிகள் எங்கேப்பா ...
//
நானேதான்
சிந்திக்க சொல்லும் பதிவு ! பகிர்வுக்கு நன்றி
30ம் தேதி போட வேண்டிய தலைப்பு!
Post a Comment