Sunday, June 6, 2010

டீக்கடையில் வாழ்பவை

வெட்டிப் பேச்சுக்கேற்ப..
கூட்டம் சேரும்..
முச்சந்திகள்..

தேனீரில் சேர்க்கப்பட்ட..
செயற்கை வண்ணம்..
ருசிப்பதாக..
உறிஞ்சிக் கொண்டிருக்கும்..
அல்லக்கை கொழுந்துகள்..

பணம் தருவதாகச் சொல்லி..
வடை எண்பதை எடுத்து..
கடனை கடையில் வைத்து..
வெட்டிப்பேச்சை சிரமேற்கொண்டு..
தினம் பேசித் திரியும்..
இணையத்தின் சாதகத்தால்..

இட ஒதுக்கீடுகள் பல..
உடையவனை அடைய முடியாமல்..
தாத்தன் அப்பா அம்மா
நான் என் வாரிசு என் வாரிசின்...
பேரன் வரை அடைவது..
சமுதாயச் சிறப்பென்றும்..
தன் சாதியில் முதல் முறை பயனாளிக்கு
தகுதி போதாதென்றும் ..

இன்னும் பற்பல கணக்கு..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
உயர்சாதியை காட்டி..
உயர்கல்வியில் தனக்கு..
ஒரு சீட்டு எனும்..
உயரிய நோக்குடன்.. !


6 comments:

BIGLE ! பிகில் said...

//உயர்சாதியை காட்டி//

உயர்சாதின்னா?

குடுகுடுப்பை said...

BIGLE ! பிகில் said...
//உயர்சாதியை காட்டி//

உயர்சாதின்னா?

//

தெரிந்ததுதானே

vasu balaji said...

தல! எதிர்கவுஜ சூப்பர்ப்.

கலகலப்ரியா said...

அட.. இந்தக் கவுஜ எனக்குப் புடிச்சிருக்கு... தலைப்பு சூப்பரு... எப்பூடி இப்பூடி...

பழமைபேசி said...

ஆகா....வந்து பாருங்க எங்க அண்ணன் என்ன சொல்றார்னு!!

ஜோதிஜி said...

ரொம்ப அற்புதம்