நீண்ட நாளாக பாதாம் அல்வா செய்யவேண்டும் என்ற ஆசை நேற்று நிறைவேறியது, ஏதோ ஒரு தளத்தில் படித்த பாதாம் அல்வா செய்முறை நான் செய்த முறையில் இங்கே
தேவையானவை
2 கப் பாதாம் பருப்பு
2 கப் நெய்
2 கப் சக்கரை
2 கப் பால்(காய்ச்சிய)
சிறிது குங்குமப்பூ
முதலில் பாதாம் பருப்பை சிறிது நேரம் வேக வைத்து , தோலினை நீக்கிடவேண்டும், தோல் நீக்கிய பாதாம் பருப்புடன் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். கிட்டத்தட்ட இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவேண்டும்.
அடி பெருத்த கடாயில் அரை கப் நெய் ஊற்றி, நெய் சூடானவுடன் பாதாம் + பால் மாவையும் சேர்ந்து இளஞ்சூட்டில் அரை மணி நேரம் அடி பிடிக்காமல் கிண்டிக்கொண்டே வேகவைக்கவேண்டும்.பின்னர் மீதமுள்ள ஒன்னரை கப் நெய் மற்றும் இரண்டு கப் சக்கரை போட்டு அடிபிடிக்காமல் கிண்டவேண்டும், கொப்பளிக்க ஆரம்பித்தவுடன் இறக்கி நெய் தடவப்பட்ட தட்டில் ஊற்றவேண்டும். சிறிது குங்குமம்பூவை வைத்து மேக்கப் போடவேண்டும்.
முக்கியமாக நெய்யின் அளவு குறைக்கவே கூடாது அல்வா சரியாக வராது.
செய்து முடித்தபின் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்தால் விரும்பி உண்பர்.நமது உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் நாம் பாதாமில் இருந்து நீக்கப்பட்ட தோலை எடுத்து உண்டால் நார்ச்சத்து கிடைக்கும். வீட்டில் இருந்த நெய் சக்கரையை வைத்து பாதாம் அல்வா செய்து உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு பாதாமின் தோலை மட்டும் நாம் உண்பதால் நமது ஆரோக்கியமும் கூடும், கொழுப்பு சக்கரை பொருள்களும் வீட்டில் குறைந்து ஆரோக்கியம் பேண வழிகாட்டும்.
4 comments:
ஓ. இதுக்கு பேருதான் அல்வா குடுக்கறதா தலைவரே:)).
அடுத்து பலாப்பழ அல்வா செய்முறைக்காகக் காத்திருக்கிறேன்.
அன்னாசிப்பழ அல்வாவுக்கும் ரெசிப்பி போடுங்க :-))))
இப்படி பதிவிலேயே பாதாம் அல்வா சாப்பிட்டுக்க வேண்டியதுதானா?
Post a Comment