Monday, February 1, 2010

கல்லூரி சாலையும் கரண்ட் ரோடும், தி.கு.ஜ.மு.கவும்

பொறியியல் கல்லூரி முதலாமாண்டு படித்தபோது, சிவில் லேப் இருக்கும், சிவில் லேப்பிற்கு சீனியர் ஆசிரியர் ஒரு மலையாளி, அவருக்கு அஸிஸ்டண்ட் மதுரையைச் சேர்ந்த தமிழ்பேசும் பெண். ஒரு நாள் லேப் வகுப்பில் மணி என்ற ஒரு மாணவனைப் பார்த்து, மலையாள ஆசிரியர் உன் பேரு மணியா, மாணியா,? கேரளாவில் மாணி என்று ஒரு முன்னால் அமைச்சர் கூட உண்டு. என்று மாணி மாணி என்று கூவிக்கொண்டிருந்தார். மதுரை டீச்சரும், சார் தமிழ்நாட்டில் மாணின்னெல்லாம் பேர் வைக்கமாட்டாங்க சார். உடனே நம் மலையாளி ஏன் வைக்காது மாணி நல்ல பெயர்தானே என்று நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்தார். முதலாண்டு ஆகையால் லேப்பில் சிரிக்கமுடியாமல் ஹாஸ்டல் சென்று வெகு நேரம் சிரித்தோம்.
-----------------------------------------------------
டேய் வாடா போய் பேஸ்(B for F) வாஸ் பண்ணிட்டு வருவோம்.

பேஸ்(Base) வாஸ் பண்ணனும்னா கக்கூஸ் போகனும், ஃபேஸ்(Face) வாஷ் பண்ணனும்னா வாஷ் பேசின் உள்ள பாத்ரூமுக்கு போகனும், நீ பேஸ்(Base) வாஷ் பண்ண, வாஷ் பேசினுக்கு கூப்புடுற.

டேய் உனக்கு எப்பயும் கிண்டல்தான் நான் பேஸ்(B for F) வாஸ் பண்ணதாண்டா கூப்பிட்டேன். பேஸ்(Base) வாஸ் பண்ண கும்பலா எப்படிடா?

நானும் அதத்தாண்டா சொல்றேன் பேஸ்(Base) வாஷ் பண்ணவெல்லாம் கும்பலா போகமுடியாது, வாஷ் பேசின்லயும் பேஸ்(Base) வாஷ் பண்ணமுடியாது. நீ தனியா கக்கூஸ் போய் பேஸ்(Base) வாஷ் பண்ணிட்டு வாடா?

காலங்கள் கடந்து பேஸ்(Base) வாஷ் பண்ண மறந்து ,துடைக்கப் பழகியபின் மீண்டும் கிடைத்தான் பேஸ் வாஷ் நண்பன்.

”மாப்பிள்ளை பேஸ்புக்((F)Basebook) இல்லாட்டி உன்னைக்கண்டுபிடிச்சிருக்க மாண்டேண்டா.”

--------------------------------------------------

மதிப்பிற்குறிய வானம்பாடிகள் உட்பட பலரும் கு.ஜ.மு.க வில் ஒரு பதவி கேட்டு தினமும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

பின்னூட்டமிட்ட தமிழ் பிளாக்கர்களை நான் மறந்துவிட மாட்டேன், சமீப காலமாக நான் எழுதிக்கொண்டிருக்கும் கொண்டியாரகள்ளிக்கு உங்களது ஆதரவு தொடர்ந்து தேவைப்படும் இந்த நிலையில், என் கடமையை நான் செய்யவேண்டியுள்ளது. அதற்காக புதிதாக திராவிட குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக் கழகம் என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளேன்.

வானம்பாடிகள் அய்யா அவர்களின் தலையிலிருந்தே அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்ற முடிவுக்கும் ஓரளவுக்கு வந்துள்ளேன், அவர் இளைஞரணிக்கு ஏற்றவராகத் தெரியவில்லை, அவரை அகில உலக தி.கு.ஜ.மு.க மாணவரனி தலைவராக பொறுப்பு அளிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. இலக்கிய அணிக்கு முகிலனும், கள்ளக்காதல் அணித்தலைவராக நசரேயன் ஒரு மனதாகத்தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.

பொதுச்செயலாளராக குடுகுடுப்பையாகிய நானே ஜனநாயக ரீதியாக நீடிக்க விருப்பப்படுகிறேன். ஆனால் ஒருவரே இரண்டு பெரும் கட்சிக்கு பொதுச்செயலாளராக இருக்க முடியுமா என சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் சட்ட ஆராய்ச்சியின் முடிவு தெரிந்தபின் மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.

27 comments:

அண்ணாமலையான் said...

ஹா ஹா ஹா நல்ல பேஸ் புக் ஜோக்...

Unknown said...

//முதலாண்டு ஆகையால் லேப்பில் சிரிக்கமுடியாமல் ஹாஸ்டல் சென்று வெகு நேரம் சிரித்தோம்.//

ரசித்தோம்.. :)

//”மாப்பிள்ளை பேஸ்புக்((F)Basebook) இல்லாட்டி உன்னைக்கண்டுபிடிச்சிருக்க மாண்டேண்டா.//

bantastic.. :)

//திராவிட குஜமுக - கட்சி பேரு நல்லா இருக்கு.. 2011ல நம்ம ஆச்சி ச்சீ ஆட்சிதான்..

இலக்கிய அணித்தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்த மாவீரன் குடுகுடுப்பைக்கு நன்றி!..

ஆமா மகளிர் அணிக்கு தலைமை யாரு?

பித்தனின் வாக்கு said...

// ஆமா மகளிர் அணிக்கு தலைமை யாரு? //
என்ன இப்படி கேட்டுப் புட்டிங்க. அய்யா தானைத் தலைவர். வருங்கால உலக ஜனாதிபதி, ஜநா சபையின் நிரந்தர தலைவர் குடுகுடுப்பையார் எனக்குத்தான் தருவார் என்று ஆருடங்கள் கூறுகின்றன. (இந்த ஜஸ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா).
என்னை மகளீர் அணித் தலைவராக நியமிக்கப் போகும் அய்யா குடுகுடுப்பையார் நீடுழி வாழ்க
நன்றி வாழ்க குடுகுடுப்பையார் நாமம்.

Anonymous said...

//பொதுச்செயலாளராக குடுகுடுப்பையாகிய நானே ஜனநாயக ரீதியாக நீடிக்க விருப்பப்படுகிறேன்.//

இதுதான் ஜனநாயகமா. ஆமா யாரு கொ.ப.செ?

vasu balaji said...

ஐ. மாணவரணித் தலைவரா? பதவி ஏற்பு விழா உண்டா:))

கண்ணகி said...

ஹ..ஹா...ஹா...சிரிச்சாச்சு...

சந்தனமுல்லை said...

/இலக்கிய அணிக்கு முகிலனும், கள்ளக்காதல் அணித்தலைவராக நசரேயன் ஒரு மனதாகத்தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.

/

அவ்வ்வ்வ்வ்1 ;-)))))

சந்தனமுல்லை said...

/”மாப்பிள்ளை பேஸ்புக்((F)Basebook) இல்லாட்டி உன்னைக்கண்டுபிடிச்சிருக்க மாண்டேண்டா.”/

LoL!

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு சிறுவர் அணியில ஒரு பதவி.

கலகலப்ரியா said...

=)))))...

Kumky said...

குடுகுடுப்பை...
பொருளாளர் பதவிக்கு ஏதேனும் போட்டி இருக்கிறதா..?

நசரேயன் said...

//சின்ன அம்மிணி said...
//பொதுச்செயலாளராக குடுகுடுப்பையாகிய நானே ஜனநாயக ரீதியாக நீடிக்க விருப்பப்படுகிறேன்.//

இதுதான் ஜனநாயகமா. ஆமா யாரு கொ.ப.செ?

February 1, 2010 10:17 PM//

ஜக்கம்மா தான்

வில்லன் said...

என்ன ஆனா கொண்டியார(ன்)கள்ளி?????? சோளி முடிஞ்சு போச்சா...

வில்லன் said...

//அவருக்கு அஸிஸ்டண்ட் மதுரையைச் சேர்ந்த தமிழ்பேசும் பெண்//

யாரந்த தமிழ் பேசும் பெண் "உங்கள் வெட்டு தங்கமணியா?" விளக்கமாக சொல்லவும்....

வில்லன் said...

//முதலாண்டு ஆகையால் லேப்பில் சிரிக்கமுடியாமல் ஹாஸ்டல் சென்று வெகு நேரம் சிரித்தோம்.//

ஏன் முதலாண்டு சிரித்தால் பல்ல தட்டி எடுதுருவான்களோ???

வில்லன் said...

//காலங்கள் கடந்து பேஸ்(Base) வாஷ் பண்ண மறந்து ,துடைக்கப் பழகியபின் மீண்டும் கிடைத்தான் பேஸ் வாஷ் நண்பன்.
”மாப்பிள்ளை பேஸ்புக்((F)Basebook) இல்லாட்டி உன்னைக்கண்டுபிடிச்சிருக்க மாண்டேண்டா.”//

அப்ப உங்க வீட்டுக்கு வந்தா "திசு" (tissue) பேப்பர் கொடுக்காம புக் (BOOK) தான்
கொடுபியலோ பேஸ் (BASE) வாஷ் பண்ண???????? அட கருமமே!!!!!!!!!

வில்லன் said...

//திராவிட குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக் கழகம் என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளேன்//

மறந்துறாம என்ன பொருளாளர சேத்துக்குங்க..... வசூலாற கொஞ்சநஞ்ச பணத்தையும் ஆட்டைய போட வசதியா இருக்கும்.... என்னை பொருளாளர போட்டா..... வசூலாகிற பணத்தில் உங்கள் பங்கு ("கமிசன் என்று சொல்வது நல்லா இல்ல அதனால ஊக்கதொகை என வைத்துக்கொள்வோம்") கண்டிப்பாக கொடுக்கப்படும்....

அப்ப ஆரியர்களுக்கு (வடநாட்டு தமிழர்களுக்கு) என.....தனியா "கச்சி" ஆரம்பிக்க போறிங்களா?....

வில்லன் said...

//வானம்பாடிகள் அய்யா அவர்களின் தலையிலிருந்தே அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்ற முடிவுக்கும் ஓரளவுக்கு வந்துள்ளேன், அவர் இளைஞரணிக்கு ஏற்றவராகத் தெரியவில்லை, அவரை அகில உலக தி.கு.ஜ.மு.க மாணவரனி தலைவராக பொறுப்பு அளிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. இலக்கிய அணிக்கு முகிலனும், கள்ளக்காதல் அணித்தலைவராக நசரேயன் ஒரு மனதாகத்தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.



பொதுச்செயலாளராக குடுகுடுப்பையாகிய நானே ஜனநாயக ரீதியாக நீடிக்க விருப்பப்படுகிறேன். ஆனால் ஒருவரே இரண்டு பெரும் கட்சிக்கு பொதுச்செயலாளராக இருக்க முடியுமா என சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் சட்ட ஆராய்ச்சியின் முடிவு தெரிந்தபின் மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.//

அப்ப நாங்க.....என்ன உங்களுக்கு கைதட்ட கைத்தடியா????? முடியாது!!!!! எனக்கு பொருளாளர் பதவி வரல வூடு புகுந்து தாக்குவேன்.... கொலை விழும்.....அங்கிள் வைக்கோ சொன்னாப்புல கட்சில ரத்த ஆறு ஓடும்....

வில்லன் said...

//முகிலன் said...
ஆமா மகளிர் அணிக்கு தலைமை யாரு?//

என்ன இது!!!!! சின்ன புள்ள தனமா இருக்கு.... அதான் (மகளிர் அணி) கள்ளக்காதல் அணித்தலைவராக நசரேயன போட்டாசுல்லா.... அப்புறம் என்ன கேள்வி இது??????.... எல்லா போஸ்டும் போட்டாச்சு இனி ஒன்னும் காலியா இல்ல.... வெவஸ்தையே இல்லாம எல்லாரும் பதவி கேட்டா எப்படி...எல்லாருக்கும் பதவி கொடுத்துட்டா யாரு சொம்பு அடிப்பா?? அடிப்படை தொண்டனா கட்சி பணியாற்றுவா??????

வில்லன் said...

//கும்க்கி said...


குடுகுடுப்பை...
பொருளாளர் பதவிக்கு ஏதேனும் போட்டி இருக்கிறதா..?//
சாரி..... அதெல்லாம் வெளில ஓபன் பண்ணுறதே இல்ல...... ஏற்கனவே அத எனக்கு குடுத்தாச்சு...... வேனும்ன தொண்டனா கட்சில சேந்துக்குங்க..... வேற ஒரு பதவியும் இல்ல......

வில்லன் said...

//எம்.எம்.அப்துல்லா said...


எனக்கு சிறுவர் அணியில ஒரு பதவி.//
சிறுவர் அணிக்கு முப்பது வயசாவது ஆகிருக்கணும்.........சின்ன புளைங்களுக்கு கட்சில பதவி இல்ல.......... ஒன்லி சொம்படிக்க கை தட்ட மட்டுமே உரிமை உண்டு....

அது சரி(18185106603874041862) said...

//
சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் சட்ட ஆராய்ச்சியின் முடிவு தெரிந்தபின் மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.
//

என்னது சட்ட அணியா?? பைசா தேறாத இந்த பதவிய‌ வச்சி என்னய்யா பண்றது?? கிழிஞ்ச சட்டை கூட வாங்க முடியாதே??

தெரியும்யா...நாலு நாளு கட்சி ஆஃபீஸ் பக்கம் வராம இருந்தா இப்பிடி உப்புக்கு சப்பாணியா ஒரு பதவிய குடுத்து கட்சிக்கு ஒழைக்கிறவங்களை ஓரம் கட்றது தான உம்ம வழக்கம்..

கொடுத்தா கொறஞ்ச பட்சம் துணை பொதுச் செயலாளர் பதவி குடுங்க...இல்லாட்டி போஸ்டர் ஒட்றது, வரவேற்பு கமிட்டி, பேச்சாளர், கைதட்டுபவர் பதவிங்களோட இந்த பதவியையும் நீரே வச்சிக்கும்...அப்பவாவது பதவி வெறி அடங்குதான்னு பார்ப்போம்...

அது சரி(18185106603874041862) said...

//
பொதுச்செயலாளராக குடுகுடுப்பையாகிய நானே ஜனநாயக ரீதியாக நீடிக்க விருப்பப்படுகிறேன். ஆனால் ஒருவரே இரண்டு பெரும் கட்சிக்கு பொதுச்செயலாளராக இருக்க முடியுமா என சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் சட்ட ஆராய்ச்சியின் முடிவு தெரிந்தபின் மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.
//

அது என்ன ரெண்டு கட்சி?? இன்னைக்கு தேதிக்கு நீர் எந்த கட்சிக்கும் பொதுச் செயலாளர் இல்ல...அப்புறம் எப்படி மத்தவங்களுக்கு நீங்க பதவி போடுறீங்க??

ஆகஸ்டு 10, 2009ல நடந்த கலிஃபோர்னியா மாநாட்டுல உங்களையும் ஜக்கம்மாவையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலருந்தே நீக்கியாச்சி...கட்சி பேரையும் குப்பத்து ஜனங்கள் முன்னேற்ற கழகம்னு மாத்தியாச்சு...கட்சியில பதவி தர்றேன்ன்னு அடுத்தவங்கள்ட்ட காசு வாங்கி குமிக்கிறதை நிறுத்துங்க...அப்புறம் நாய் பத்திர ஊழலோட பதவி ஏமாற்று வழக்கும் பாயும்!

வேணும்னா உங்க கட்சிக்கு போ.குஜமுகன்னு பேரு வச்சிக்குங்க...போலி குஜமுக!

பழமைபேசி said...

பாலாண்ணனும் உள்ள வந்தாச்சா? சரி! அந்த வருங்கால முதல்வர்??

குடுகுடுப்பை said...

அது சரி
Gender: Male
Astrological Sign: Taurus
Industry: Law
Occupation: சீஃப் அட்வகேட், Devil's Inc.
Location: Newport : South Wales : United Kingdom
About Me இவருக்கு தகுதி அடிப்படையிலேயே இந்தப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

வில்லன் said...

// அது சரி said...
வரிசல் அறிந்து தான் பரிசல் :0)))...இதுவே சோழ நாட்டானை சந்திக்க போயிருந்த வேற பரிசலோட போயிருப்பார்...//

குளம் குட்டை ஆறு இல்லாத ஊருல பரிசல் வழங்கி என்ன பிரயோஜனம்....... நல்ல வேல பரிசலோட வராம போன்று அணாச்சி குடுகுடுப்பை இல்ல "கதை" கந்தலாகி போயிருக்கும்....அத கொண்டுபோய் குப்பைல வைக்க நெறைய செலவாகிருக்கும்......

எல் கே said...

puthusa kacchila serntha enna pathavi taruvenga. sonna sertahta patthi yosipen