இங்கிலாந்து ஆராய்ச்சி, துக்ளக் பதில்,பப்புவின் கேள்வி,பெண் தூதுவர்.
கே: பெண்களால் ரகசியத்தை காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளதே ?
பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹா பாரதத்தில் இது மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருகிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது ஆரய்ச்சியின் முடிவு. இதை ஏற்காதவன் மூட நம்பிக்கையில் உழல்பவன்.
அப்படியா ? பெண்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் ? (மஞ்சள் இட்லிவடை )
சித்திரக்கூடத்தில் பப்புவும் அவங்கம்மாவும்.
அவ்வப்போது ஆன்லைனில் கேம்ஸ் விளையாட பப்புவை அனுமதிப்பதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தவள், "ஆச்சி, நான் பாயா கேர்லா" என்றாள்! அவ்விளையாட்டின் இடையில் 'oh boy' என்று வரும், விளையாட்டை பற்றி விளக்கும்போதோ அல்லது ஊக்குவிக்கும் போதோ அப்படிச் சொல்வதை கேட்டபின் அவளுக்கு வந்த சந்தேகமே அது!!
'நீ கேர்ல்'தான் - என்று சொன்னதும், 'ஏன் என்னை ஓ பாய் ன்னு சொல்லுது" என்றுக் கேட்டாள்.
Its time to change!!
இந்த இரண்டையும் படிக்கும்போது எனக்கு தோன்றியது, ரகசியம் காக்கத்தெரியாத பெண்களில் ஒருவரை ஏன் இறைவன் இதுவரை தூதுவராக்கவில்லை. அப்படி இறைவன் மனிதனுக்கு அனுப்பிய செய்தியை பெண்கள் மூலம் அனுப்பியிருந்தால் எந்த ரகசியமும் இல்லாமல் சரியாக அனைவரிடமும் சேர்த்திருப்பார்களோ?
அப்படி அனைவரிடமும் சேர்த்திருந்தால் 'oh boy' என்று கேம் விளையாட்டின் மூளையாக இருந்தவர் ஒரு பெண்ணாக இருந்து 'oh girl' என்று வடிவமைத்திருக்கலாமோ?
இறைவன் வரும் காலங்களில் ஒரு பெண் தூதுவரை அனுப்புவாரா?
பி:கு: நான் ஆணாதிக்கவாதியும் அல்ல பெண்ணுரிமை வாதியுமல்ல, ஒரு நல்ல சுயநலவாதி. நான் என் குடும்பம் என்று இருப்பவன், அதில் பெண்களும் அடக்கம்.
14 comments:
ங்கொய்யால டிஸ்கி செம வெயிட்டு
நான் ஆணாதிக்கவாதியும் அல்ல பெண்ணுரிமை வாதியுமல்ல, ஒரு நல்ல சுயநலவாதி. நான் என் குடும்பம் என்று இருப்பவன், அதில் பெண்களும் அடக்கம். //
இது அருமை,சார்.
// நான் ஆணாதிக்கவாதியும் அல்ல பெண்ணுரிமை வாதியுமல்ல, ஒரு நல்ல சுயநலவாதி. நான் என் குடும்பம் என்று இருப்பவன், அதில் பெண்களும் அடக்கம். //
இந்த கடைசி வரிகள்தான் எனக்கு மிகவும் பிடித்துரிக்கின்றது. ஏன் என்றால் சாராசரி மனிதர்கள் எல்லாரும் இந்த வகையில் தான் அடங்கும். எனக்கு என்னமே ஒரு தமிழ்னாட்டு தலைவர்தான் ஞாபகத்துக்கு வருது.
நீங்க வருங்கால முதல்வர் அப்பிடிங்கறதை நிருபிக்கின்றீர்கள். நன்றி.
வழக்கம்போல டிஸ்கி சூப்பர்.
ஆமா இந்த துக்ளக் எல்லாம் எங்க படிக்கிறீங்க?
பெண்களை எந்த மதமும் மதித்ததில்லையே!
நானா? இல்லையே.... :)
மஹா பாரதத்தில் அஞ்சி பேரு சேந்து ஒருத்திய கட்டிகிட்டாங்க, ஏன் இன்னும் அது நடக்கல ஒரு வேல அதுவும் நடக்குமோ... ???
சூழ்ச்சில ஒருத்தன தோக்கடிச்சிட்டு சூழ்ச்சிபன்னினவன கடவுலாக்கிபுட்டனுக
இப்ப யாரவது சூழ்ச்சி செய்தா குற்றவாளியாக்குறாங்க அது தவறு சட்டத்த மாத்தனும், அவங்களையும் கடவுலாக்கணும். -:))))
ஜக்கம்மா பெண்தானே!
பொதுசெயலாலர் பின்குறிப்பில் அசத்திட்டீங்க.
//
பி:கு: நான் ஆணாதிக்கவாதியும் அல்ல பெண்ணுரிமை வாதியுமல்ல, ஒரு நல்ல சுயநலவாதி. நான் என் குடும்பம் என்று இருப்பவன், அதில் பெண்களும் அடக்கம்.
//
அது சரி எல்லாம் எழுதிட்டு இது வேறேயா:)
நீங்க புது விதாமா யோசிச்சு சொல்லி இருக்கீங்க!
நீங்கள் நினைப்பது போல் நடந்திருந்தால் 'oh girl' இதுவும் சாத்தியமே !!
//
இறைவன் வரும் காலங்களில் ஒரு பெண் தூதுவரை அனுப்புவாரா?
//
இறைவன் பதிவெல்லாம் படிக்கிறதுல்ல...ஒரு எழுவத்தஞ்சி காசு போஸ்ட் கார்டு அனுப்புங்க...பதில் சொன்னாலும் சொல்வாரு :0))
டிஸ்கி சூப்பரு. :)
//பி:கு: நான் ஆணாதிக்கவாதியும் அல்ல பெண்ணுரிமை வாதியுமல்ல, ஒரு நல்ல சுயநலவாதி. நான் என் குடும்பம் என்று இருப்பவன், அதில் பெண்களும் அடக்கம்.//
செம மேட்டர்மா..
// மஹா பாரதத்தில் அஞ்சி பேரு சேந்து ஒருத்திய கட்டிகிட்டாங்க, ஏன் இன்னும் அது நடக்கல ஒரு வேல அதுவும் நடக்குமோ... ??? //
சூழ்ச்சில ஒருத்தன தோக்கடிச்சிட்டு சூழ்ச்சிபன்னினவன கடவுலாக்கிபுட்டனுக
இப்ப யாரவது சூழ்ச்சி செய்தா குற்றவாளியாக்குறாங்க அது தவறு சட்டத்த மாத்தனும், அவங்களையும் கடவுலாக்கணும். -:)))) //
ஞானப் பித்தன் அவர்களே, ஒருவேளை இல்ல இப்பக்கூட ?வேலூர் பக்கத்தில் ஒரு பிரிவினரின் வழக்கம் இதுதான். குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர்தான் மனைவி. இது பற்றி விஜய் டீ வியில் கூட காட்டினார்கள். மூவரை மனந்த பெண் சொன்னார். குடுபத்திற்காக அவர்கள் உழைக்கின்றார்கள், அவர்களுக்காக நான் இருக்கின்றேன். இதில் என்ன தப்பு என்று கேள்வியும் கேட்டார்.
சூழ்ச்சியில் ஒருவனை தோக்கடிக்கவில்லை. சகுனியும் துரியேதனும் செய்த சூழ்ச்சிக்குத்தான் பதில் சூழ்ச்சியில் தோக்கடித்தனர்.
இன்று இருக்கும் பல பகுத்தறிவு கடவுள்கள் கூட காங்கிரஸை பெய்யும் புரட்டும் சொல்லி சூழ்ச்சியில்தான் வீழ்த்தினர்.
நாத்திகம் என்று சும்மா டயலாக் விடாதீர்கள், நாங்கள் சொன்னால் நாறிவிடும்.
ஆகா!!
Post a Comment