இடம்: கல்பாக்கம் அனுமின் நிலையம் கேண்டீன்:
நான் : கொஞ்சம் கூட்டு கூட கொடுப்பா
சர்வர் : எக்ஸ்ட்ரா கூட்டு ஒரு கப் 1 ரூபாய் சார்.
இடம் : வசந்தபவன்,அடையார்
நண்பனும், நானும் இருந்த காச வெச்சு அளவு சாப்பாடு வாங்கி,கூட்டு,பொறியல் மூனு,நாலு தடவை சாப்பிடலாம்னு இங்கே அடையார் வசந்தபவன் போய் சாப்புட்டோம். சாப்பிடும் போது கல்பாக்கத்தில கூட்டுக்கு காசு கேக்கற கதையை நண்பனிடம் சொல்லிட்டு இருந்தேன். எதிரில் இருந்த நபர் என்னது கூட்டுக்கு எக்ஸ்ட்ரா காசான்னாரு. நாங்களும் ஆமாமா தலைய ஆட்டி வெச்சோம்.
பாவம் மனுசன் முதல் தடவை வெச்ச கொஞ்ச கூட்டு பொறியல வெச்சே சாப்பிட்டு போயிட்டார்.
இடம் : ரத்னா கபே, திருவல்லிக்கேணி
வழக்கமா இரண்டு இட்லி வாங்கி நாலு குவளை சாம்பார் குடிக்க போறது. இன்னைக்கு நண்பனும், நானும் இட்லி வாங்கி சாப்பிடறப்போ, எதிரில் ஒருத்தர் வலது கையில வாட்ச் கட்டி இருந்தார். பார்க்கவும் கிட்டதட்ட நடிகர் ரவிச்சந்திரன்(இளமையான) மாதிரி இருந்தார். சரி அப்படியே ஓட்டலாம்னு முடிவு பண்ணி, சார் நீங்க நடிகர் ரவிச்சந்திரன் ரசிகரான்னு கேட்டேன்.
அதுக்கு அவர் ஏன் கேக்கறீங்கன்னு கேட்டார். இல்ல அவரு மாதிரியே வலது கையிலே வாட்ச் கட்டியிருக்கீங்களே அப்படின்னேன்.
அப்ப மனுசன் திட்ட ஆரம்பிச்சார் பாருங்க, உங்கள மாதிரி ஆளுங்க இருக்கிறதுனாலதாண்டா …….. வேண்டாம் விடுங்க. இன்னும் கொஞ்சம் நேரமானா சாம்பார எடுத்து தலையில ஊத்திருவாரு போல இருந்திச்சி, அப்படியே இட்லியையும் பாதில வெச்சுட்டு தப்பிச்சம்டா சாமின்னு பின்னங்கால் பிடறில அடிக்க ஒடி வந்தேன்.
இடம்: தொடக்கப்பள்ளி
தொடக்கப்பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் போது நான்தான் பிரேயர் நடத்துவேன். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட எனக்கு பிடித்த இரண்டு பெண்களை நியமிப்பேன்.பிடிக்காத ஒரு பெண்ணை பள்ளியை கூட்டுறதுக்கு (ஆணாதிக்க வழக்கப்படி , (அது சரி அண்ணே நான் ஒரு சராசரி என்ன விட்டிருங்கோ) ) நியமிப்பேன். அந்த பிடித்த பெண்கள் இரண்டு பேரும் எங்க இருக்காங்கனு தெரியல,பிடிக்காத பெண் இப்போது என் நெருங்கிய உறவினரின் மனைவி.
இடம் : வீடு
ஏன் இந்த பேப்பர்லாம் எரஞ்சி கெடக்கு, இந்த cd வேனுமா, வேண்டாட்டி குப்பையில போட்டா என்னா? காபி குடிச்ச கப்ப இப்படிதான் வெப்பாங்களா………………………………………………………………………………………………………………………………………
இதுக்கு பேருதான் பின்விளைவா?
இந்த பதிவிற்கு பின்விளைவு?
32 comments:
பின் விளைவுகள் இன்னும் நிறைய பாக்கி இருக்கும்னு நினைக்கிறேன்...
என்ன செய்வது ஆணாகப்பிறந்தால் இதெல்லாம் சகஜமய்யா...
முதல் போனி நான்தான்
பிறர்க்கு முற்பகலில் செய்தது தமக்கு பிற்பகலில் தானே விளையும் என்பது அய்யன் வள்ளுவர் உரை
வடகரை அண்ணாச்சி மற்றும் பரிசல்காரன் எழுதும் 'அவியல்' பாணியில் நல்லா இருக்கு
:-))))))))))))
//……………………………………………………………………………………………………………………//
இதுக்கு என்ன அர்த்தம்?
வர வர ரொம்ப நல்லா எழுத ஆரம்பிச்சுட்டீங்க... இது நல்லால்ல... ஆமாம்...
நான் அவனேதான் :-))
வருகைக்கு நன்றி
சுடர்மணி
//பின் விளைவுகள் இன்னும் நிறைய பாக்கி இருக்கும்னு நினைக்கிறேன்...
என்ன செய்வது ஆணாகப்பிறந்தால் இதெல்லாம் சகஜமய்யா...//
ரொம்ப நன்றிங்க
வருகைக்கு நன்றி நசரேயன்
//பிறர்க்கு முற்பகலில் செய்தது தமக்கு பிற்பகலில் தானே விளையும் என்பது அய்யன் வள்ளுவர் உரை//
அந்த மாதிரி பெரிய பாவம்லாம் ஒன்னும் பண்ணலீங்க
வருகைக்கு நன்றி கோவியாரே
//வடகரை அண்ணாச்சி மற்றும் பரிசல்காரன் எழுதும் 'அவியல்' பாணியில் நல்லா இருக்கு//
அப்போ பொங்கள்னு பேரு வெச்சுருவோம்
வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan
வருகைக்கு நன்றி
//……………………………………………………………………………………………………………………//
இதுக்கு என்ன அர்த்தம்?//
100 பக்கம் எழுதுனா படிக்க முடியாதுங்களே
வர வர ரொம்ப நல்லா எழுத ஆரம்பிச்சுட்டீங்க... இது நல்லால்ல... ஆமாம்...
எடக்கு ரொம்ப அதிகமா போச்சி
வழக்கமா என்னை உற்சாகப்படுத்து பின்னியெடுக்கும் அது சரியை இன்று காணும். அவரை வன்மையாக கண்டிக்கிறேன்
சமீபத்திய பின் விளைவு:
நாம: கவலைப்படாதீங்க..... நான் வேலை செய்யுற பாங்க் ஆஃப் அமெரிக்கா நல்ல வலுவா இருக்கு. தாராளமா டிபாசிட் வெச்சுக்கலாம்.
நண்பர்: நம்ப ஊர்ல எல்லாம், சீட்டு கம்பெனிய மூடிட்ட அப்புறம், அங்க வேலை செய்யுறவங்களைத்தான் பின்னிப் பெடல் எடுப்பாங்க....
நாம: ???!!!???
வருகைக்கு நன்றி பழமைபேசி
சமீபத்திய பின் விளைவு:
//
நாம: கவலைப்படாதீங்க..... நான் வேலை செய்யுற பாங்க் ஆஃப் அமெரிக்கா நல்ல வலுவா இருக்கு. தாராளமா டிபாசிட் வெச்சுக்கலாம்.
நண்பர்: நம்ப ஊர்ல எல்லாம், சீட்டு கம்பெனிய மூடிட்ட அப்புறம், அங்க வேலை செய்யுறவங்களைத்தான் பின்னிப் பெடல் எடுப்பாங்க....
நாம: ???!!!???
//
நான் பேங்க்ல வேல செய்யல, ஆனா பண்ம் போட்டிருக்கேன், எதுனா ஆச்சு முத அடி உங்களுக்குதான்:-)
அர்த்த ராத்திரில குடுகுடுப்பை சத்தம் கேட்டா மூடிப் படுத்துக்கணும்னு சின்னப் பிள்ளையா இருக்கும் போது சொல்லி இருக்காங்க. அதை மறந்து இப்போ வந்ததுக்கு மிரள வச்சிட்டீங்க. விடிஞ்சப்புறம் தான் மந்திரிக்கணும்.
சுவையான பதிவு.
செய்த மொத்தத்திற்கும் பின் விளைவாக
மொத்துறதுர்க்குத்தான்
வீட்ல தங்கமணி இருங்காங்க.
அது வேற ஒன்னும் இல்ல
அந்த பிடிக்காத ஒருத்தர் விட்ட சாபம்தான்.
ரத்னா கஃபே - அட இவ்வளவு தூரம் வந்து ஓடுன ஆள நீங்க
சொல்லவே இல்ல.
அது சரி இன்னமும் வரவில்லை. கண்டனங்களை வழி மொழிகின்றேன்.
வருகைக்கு நன்றி ரத்னேஸ்
பயப்படாம வாங்க
வருகைக்கு நன்றி
AMIRDHAVARSHINI AMMA
//
செய்த மொத்தத்திற்கும் பின் விளைவாக
மொத்துறதுர்க்குத்தான்
வீட்ல தங்கமணி இருங்காங்க.//
ரொம்ப நன்றிங்க
//அது வேற ஒன்னும் இல்ல
அந்த பிடிக்காத ஒருத்தர் விட்ட சாபம்தான்.
//
உங்க ரங்கமணி யாரு சாபம் விட்டதுன்னு கேளுங்க
தோசைல ஏன் ஓட்டைக விழுகுது? சுடுவதால்ன்னு ஒரு பதிவப் போடலாம். எதனாச்சும் போடுங்க அண்ணே!
//தோசைல ஏன் ஓட்டைக விழுகுது? சுடுவதால்ன்னு ஒரு பதிவப் போடலாம். எதனாச்சும் போடுங்க அண்ணே!
//
இட்லி வடை தோசையெல்லாம் சாப்புடறதோட நம்ம வேல முடிஞ்சது
என்ன ஆள விடுங்கோ
rangkamaNikku yaarumee saabam vidalai
avaree theedikkoNdadhu dhaan.
vidhi.... valiyadhu.
ரங்கமணிக்கு யாருமே சாபம் விடலை
அவரே தேடிக்கொண்டது தான்.
விதி.... வலியது.
(என்ன கொடுமை சார். தமிழ்ல டைப் பண்ணிட்டு,
அப்புறம் தமிங்லீஷை "paste" பண்றது.)
ellam romba nalla irunthathu... neenga solluvathai paarthal... triplicane-la iruntha mathiri irukku...andra mess-la ethavathu anupavam runthirukkumay...athaiyum podunga..
வாங்க அனானி
ellam romba nalla irunthathu... neenga solluvathai paarthal... triplicane-la iruntha mathiri irukku...andra mess-la ethavathu anupavam runthirukkumay...athaiyum podunga..
/ஆந்திரா மெஸ்ல சாப்பிட்டபுறம் தூங்கதான் முடியும்/
ஆகா.
என்னமோ நடக்குது உலகத்தில. :)
தங்கள் பதிவில் ஒரு சிறு விளக்கம் வேண்டும். கல்பாக்கம் அனுமின் நிலைய கேண்டீன் என்றால் அனுமின் நிலையத்துக்குள் உள்ளதா அல்லது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பெனவலண்ட் கேண்டீனா? அனுமின் நிலையத்திற்குள் உள்ளது ஊழியர்கள் சாப்பிடுவது அங்கு மொத்த சாப்பாடே ஆறு ரூபாய்தான். பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது அனுமின் நிலைய கேண்டீன் அல்ல அது ஜி ஸ் ஓ( ஜென்ரல் சர்விஸ் ஆர்கனைஸேசன்) ஒப்பந்தத்தில் இயங்கும் தனியார் கடை.
அதுக்கு பக்கத்தில் உள்ள பேருந்து தொழிலாளர்கள் மெஸ்ஸில் கலர்ந்த சாதங்கள் நல்லா இருக்கும். நன்றி.
பின் விளைவுகளை இப்ப யோசிச்சு பயன் இல்லை, கல்யானத்திற்கு முன் யோசிக்க வேண்டியவை.
பித்தனின் வாக்கு said...
தங்கள் பதிவில் ஒரு சிறு விளக்கம் வேண்டும். கல்பாக்கம் அனுமின் நிலைய கேண்டீன் என்றால் அனுமின் நிலையத்துக்குள் உள்ளதா அல்லது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பெனவலண்ட் கேண்டீனா? அனுமின் நிலையத்திற்குள் உள்ளது ஊழியர்கள் சாப்பிடுவது அங்கு மொத்த சாப்பாடே ஆறு ரூபாய்தான். பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது அனுமின் நிலைய கேண்டீன் அல்ல அது ஜி ஸ் ஓ( ஜென்ரல் சர்விஸ் ஆர்கனைஸேசன்) ஒப்பந்தத்தில் இயங்கும் தனியார் கடை.
அதுக்கு பக்கத்தில் உள்ள பேருந்து தொழிலாளர்கள் மெஸ்ஸில் கலர்ந்த சாதங்கள் நல்லா இருக்கும். நன்றி.
//
IGCAR கேண்டீன் தாங்க, நான் வேலை பாத்தப்போ எட்டு ரூபாய் சாப்பாடு.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - அய்யனின் வாக்காக இருக்கலாம். கல்யாணம் ஆனபின், முற்பகல் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் பிற்பகல் விளையும்...
முகிலன் said...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - அய்யனின் வாக்காக இருக்கலாம். கல்யாணம் ஆனபின், முற்பகல் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் பிற்பகல் விளையும்...
அய்யா முகிலனாரே,
முற்பகல் செய்தது........கல்யாணம் தானே, அதுதான் பிற்பகல் விளையுது.
தொடக்கப்பள்ளியின் விளைவு தான் வீடோ :)
Post a Comment