Friday, October 2, 2009

தொவையல் : பரிணாம வளர்ச்சி குழந்தைக்கு எப்படி சொல்லிக்கொடுப்பது?

தொவையல் 1 :

தூங்க செல்லும்முன் கதைகள் சொல்லச்சொல்லி எனது மகள் அவ்வப்போது கேட்பதுண்டு, சமயங்களில் அவை கேள்வி பதிலாகவும் ஆகிவிடும். சமீபத்தில் ஒருநாள் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்று அதிரடியாக ஒரு கேள்வியை கேட்டாள். நானும் டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லி புரியவைக்க ஒருகாலத்தில் ஒரு விதமான குரங்கிலிருந்து மனிதன் உருவாகி இருக்கலாம். அப்படின்னேன்.

அப்படின்னா நான் பிறந்தப்ப குரங்கா பிறந்து அப்புறம் இப்படி ஆயிட்டேனா?

இல்லைப்பா சில மில்லியன் வருடத்துக்கு முன்னாடி நம்முடைய மூதாதையர்கள் குரங்கா இருந்திருக்கலாம், அப்புறம் கொஞ்சமா மாறி பரிணாம வளர்ச்சியில் மனுசனா ஆயிட்டோம்.

அப்படின்னா நீங்க குரங்கா இருந்தீங்களாப்பா ? அப்புறம் மனுசனா மாறீட்டீங்களா?ஆனா குரங்குக்கு வால் இருக்குமே, உங்களுக்கு வால் இருந்துச்சா?

இல்லடா அதெல்லாம் மில்லியன் வருடத்துக்கு முன்னால், மனிதன் கொஞ்சம் கொஞ்சமா குரங்கிலிருந்தோ/ குரங்கு மாதிரி ஒன்றிலிருந்தோ வந்திருக்கலாம் அப்படின்னு டார்வின்னு அறிஞர் சொல்லிருக்கார்.

அப்படின்னா உங்கப்பா குரங்கா இருந்து அப்புறம் மனுசனா வந்திட்டாரா?.அப்புறம் மனுசனா மாறீட்டீங்களா?தாத்தாவுக்கு வால் இருந்துச்சா?


இல்லப்பா கிரேண்ட் கிரேண்ட் ........... தாத்தாவுக்கெல்லாம் கிரேண்ட் கிரேண்ட்.............. தாத்தாவோட மில்லியன் வருட முன்னாடி தாத்தாவுக்கு வால் இருந்திருக்கும், கொஞ்சம் கொஞ்சமா வால் தேய்ந்து நம்ம இப்படி ஆயிட்டோம்.

Its funny to have வால்.

இப்படியே கேள்விகள் தொடர்ந்தது நானும் பேச்சை மாற்றி ஒரு புத்தகத்தை படிச்சு தூங்கவெச்சிட்டேன். பரிணாம வளர்ச்சியை சொல்லிக்கொடுப்பதற்கு பதில் ஆதாம்,ஏவாள் கதை சொல்லிக்கொடுத்து சுலபமா வாயை அடைச்சிருக்கலாம். ஆனாலும் நான் நம்பாத ஒன்றை நான் சொல்லிக்கொடுக்க விரும்பவில்லை, பரிணாம வளர்ச்சி தியரி மூலம், மனிதன் எப்படி உருவானான் என்று ஆராய்ச்சி வாய்ப்பாவது இருக்கிறது, ஆனால் ஆதாம்,ஏவாள் தியரி, ஆதாம்,ஏவாள் யார் என்று கண்டுபிடிக்கலாம் என்ற ஆராய்ச்சியை தவிர மற்ற ரீதியில் சிந்திக்க வாய்ப்பளிக்குமா என்று தெரியவில்லை.

MSN news

தொவையல் 2:

கடந்த இரண்டு ஆண்டுகாளாக சன் டிவி வைத்துக்கொள்ளாமல் இருந்தேன், மகள் இப்போதெல்லாம் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டாள், சன் டிவி இருந்தால் மீண்டும் பேசவைக்கலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் இணைப்பு வாங்கினேன். ஆனால் அவள் சன் டிவியில் பார்த்த ஒரே நிகழ்ச்சி, கந்தசாமியில் ஸ்ரேயா உடையை கிழித்துக்கொண்டு கத்தும் காட்சி, பார்த்துவிட்டு this girl is funny..அப்படின்னு சொல்லிட்டு சன் டிவி வீட்டில் போடவே கூடாது என்று தடை போட்டுவிட்டாள்.

டோரா மட்டும்தான் ஓடுகிறது இப்போது. சன் டிவி பார்த்து கோலங்கள் , மேகலா, ராதிகாவின் சீரியலுக்கெல்லாம் விமர்சனம் எழுதி பதிவின் எண்ணிக்கையை கூட்டி, கோலங்கள் மாதிரி ஒரு ஆறு ஆண்டுகள் தரமா பதிவுகள் தரவேண்டும் என்ற என் எண்ணம் ஈடேறவில்லை.

17 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஆதாம்,ஏவாள் கதை சொல்லிக்கொடுத்து சுலபமா வாயை அடைச்சிருக்கலாம்//

மாத்தி யோசித்துப் பாருங்கள்

கண்டிப்பாக நம்பி விடுவீர்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//this girl is funny..//


ஷ்ரேயா பாஸ்

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

வேறு வழியில்லை நண்பா. நம் பிள்ளைகளுக்கு உண்மையைத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அறிவியல் அல்லாமல் வேதக்கதைகளையும், புராணப் புளுகுகளையும் சொல்லிக்கொடுப்பது, நாமே நம் பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம். அதைச் செய்யவில்லையேன்றால் வரும் காலத்தில் அவர்கள் முன்னே வெட்கித் தலைகுனிய வேண்டிஇருக்கும். அடுத்த தலைமுறையாவது கிறுக்கு ,காட்டுமிராண்டிப் பயல்கள் என்றப் பெயர் வாங்காமல் இருக்கட்டும்.

Thekkikattan|தெகா said...

:)) interesting illa, kudukuduppai...


anyway, I too have disconnected sun tv இப்போ அதனைவிட நிறைய சானல்கள் கிடைக்கிற மாதிரி ஒரு வழி கிடைச்சிப் போச்சு... அத மின்னஞ்சல் வழியா தாரேன், சும்மா பயப்பிடாம மின்னஞ்சுங்கோ இங்கே thekkikattan at gmail dot com

நசரேயன் said...

//
டோரா மட்டும்தான் ஓடுகிறது இப்போது.//

டோரா தொல்லை தாங்க முடியலை

சந்தனமுல்லை said...

ஆகா!!

/
அப்படின்னா உங்கப்பா குரங்கா இருந்து அப்புறம் மனுசனா வந்திட்டாரா?.அப்புறம் மனுசனா மாறீட்டீங்களா?தாத்தாவுக்கு வால் இருந்துச்சா?/


:-)))) கலக்கல் கேள்விகளா இருக்கே!! இங்கே உங்க தங்கமணி சொன்னதையும் சேர்த்து சொல்லுங்க!! :))

சந்தனமுல்லை said...

/his girl is funny..அப்படின்னு சொல்லிட்டு சன் டிவி வீட்டில் போடவே கூடாது என்று தடை போட்டுவிட்டாள்./

சூப்பர்!!!

/கோலங்கள் மாதிரி ஒரு ஆறு ஆண்டுகள் தரமா பதிவுகள் தரவேண்டும் என்ற என் எண்ணம் ஈடேறவில்லை./

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

Anonymous said...

:)

கவிக்கிழவன் said...

நீங்கள் ஒரு சிறந்த அப்பா
உங்கள் பிளைகளுக்கு உண்மையை தெளிவா குட்டி குட்டி
கதைகள் சொலுங்கள் . கதைகள் முலம் பிள்ளைகளின் அறிவை வளர்க்கலாம். கதை கேட்பது பிளைகளுக்கு மிகவும் விருப்பமான விடயம்

Unknown said...

நீங்க வைரஸ்ல இருந்து ஆரம்பிச்சிருக்கலாமோன்னு தோணுது??

எனிவே, இன்னும் கொஞ்சம் வருடம் இருக்கு இப்பிடி கேள்வியெல்லாம் சந்திக்க. இப்போ இருந்தே தயாராகிக்கிறேன்.

அது சரி(18185106603874041862) said...

//
கந்தசாமியில் ஸ்ரேயா உடையை கிழித்துக்கொண்டு கத்தும் காட்சி, பார்த்துவிட்டு this girl is funny..அப்படின்னு சொல்லிட்டு சன் டிவி வீட்டில் போடவே கூடாது என்று தடை போட்டுவிட்டாள்.
//

அட...கண்டிப்பா கந்தசாமி பார்க்கணும் போலருக்கே ;0)))

வால்பையன் said...

தொவையல் சூப்பர் தல!

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

//this girl is funny//

:)

ILA (a) இளா said...

//சன் டிவி பார்த்து கோலங்கள் , மேகலா, ராதிகாவின் சீரியலுக்கெல்லாம் விமர்சனம் எழுதி பதிவின் எண்ணிக்கையை கூட்டி, //
ங்கொய்யால... இது வேறையா?

சின்னப் பையன் said...

/கோலங்கள் மாதிரி ஒரு ஆறு ஆண்டுகள் தரமா பதிவுகள் தரவேண்டும் என்ற என் எண்ணம் ஈடேறவில்லை./

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

தமிழ் நாடன் said...

நிரம்பவே ரசித்தேன் உங்கள் எழுத்தை!

வாய்ப்பு இருக்குமானால் மக்கள் தொலைக்காட்சியை பார்க்க சொல்லுங்கள். எனக்கு தெரிந்து முழுக்க முழுக்க தமிழில் வரும் தொலைக்காட்சி அது ஒன்றுதான்.