பரமசிவம் : என்னடா முருகா நாந்தான் என் காலத்தில வீடு கட்ட முடியல எங்கப்பன் கட்டுன பழைய வீட்டிலேயே காலத்த தள்ளிட்டேன், நீ இப்போ புதுசா ஒரு வீடு கட்டுடா கடைசி காலத்துல ஒரு நல்ல வீட்ல இருந்துட்டு போறேன்.
விநாயகம்: நீ சம்பாதிச்சு என்ன பண்ண எல்லாத்தையும் குடிச்சே அழிச்ச,இப்பவாச்சும் குடிக்க காசு கேட்காம வீடு கட்ட சொன்னியே அதுக்கு உனக்கு ஒரு பாட்டில் வாங்கி கொடுக்கலாம்பா.
பரமன்: நீங்க பாட்டில் வாங்கித்தருவியன்னுதான் நாங்க நாக்க தொங்க போட்டுட்டு அலையுரோம், நான் குடிக்கிறது எப்படின்னு எனக்குத்தெரியும் நீ உன் வேலையபாருடா.
விநாயகம்: சரி நான் வீடு கட்டுற வேலை ஆரம்பிச்சிட்டேன், நம்ம ஆண்டிப்பட்டி கொத்தனார் வருவார் அவர் அளந்து கோடு போட்டு சொல்ற இடத்துல நீனும் முருகனுமா விடவு பறிங்க. அப்படியே போய் இரண்டு கிலோ மீன் வாங்கிட்டு வந்து அம்மா கிட்ட கொடுத்திரு,இன்னைக்கு கொத்தனாருக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு.
பரமன்: சரிடா செஞ்சிடறேன், அப்படியே ஒரு அம்பது ரூபாய் கூடகொடு.
விநாயகம்: உன்னையெல்லாம் திருத்தமுடியாது, நான் போய் பட்டைகிட்ட செங்கல் கேட்டிருக்கேன், பேசிட்டு வரேன்.
பரமன்: ஆண்டிப்பட்டி கொத்தன் நல்லா கட்டுவானா? ஆசாரி முத்தையன வெச்சுக்கலாம், அவனும் அவன் மவனுந்தான் இப்ப ஊர் காட்டுல உள்ள பத்தாயத்திலேர்ந்து, பெஞ்சு,நாற்காலியெல்லாம் செய்யிறாங்க ரொம்ப பேமசா பேசிக்கிறாங்க.
விநாயகம்: சரி அவரையே கூப்பிட்டுக்கலாம், கொத்து ஆண்டிப்பட்டியார் நல்லா பண்ணுவாரு அவரையே வெச்சுக்குவோம்.
--
சாப்பாடு நேரம், மீன் குழம்புடன் கொத்தனார், ஆசாரி புடைசூழ சாப்பாடு.
விநாயகம்: என்ன சாப்பாடு நல்லா இருக்கா?
ஆசாரி முத்தையன் : பிரமாதம்.
முருகன் : (ஆசாரி முத்தையன் மகன் ரமேசை சாப்பிட அழைக்கிறார்).நீங்களும் உட்காருங்க.
ரமேஷ் : இல்ல நான் வெளி இடத்தில சாப்பிட மாட்டேன்.வீட்ல சாப்பிட்டு வந்துட்டேன்
முத்தையன்: என்ன பழக்கமோ போ, நம்ம தொழில்ல நாலு இடத்திற்கு போயிதான் ஆகனும் , கை நெனச்சுதான் ஆகனும் பட்டினியாவா வேலை செய்ய முடியும். சரி என்ன சாப்பிட்ட.
ரமேஷ்: சாம்பார் சாப்பாடும்,காலி பிளவர் கூட்டும்.
முத்தையன் : காளி பிளவரோ , யோக்கியன் பிளவரோ வயித்துக்கு வஞ்சனை பண்ணாம சாப்பிட்டா சரி.
பரமன்: என்னதான் குழம்பு வைக்கிறாளோ உங்கம்மா, உப்பு உறைப்பு இல்லாம சப்புன்னு கெடக்கு.
விநாயகம் : டேய் முருகா அந்தாளுக்கு வைத்தி வீட்லேந்து கொஞ்சம் மீன் குழம்பு வாங்கி கொண்டாந்து கொடுறா?
முருகன்: இந்தாப்பா வைத்தி வீட்டு மீன் குழம்பு உனக்கு ஏத்த மாதிரி கார சாரமா இருக்கும்.
பரமன் : இது நல்லா ருசியா இருக்குடா,?
முருகன்: நம்ம வீட்டு மீன் குழம்புதான் அதுல ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி கொடுத்தேன் அத நல்லாயிருக்குன்னு சொல்ற நீ. உன்னையெல்லாம் என்ன பண்றது.
தொடரும்..
குடுகுடுப்பை: பாகம் 2:வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.
21 comments:
அய்!சீட்டு காலி:)
பக்கத்து சீட்டுக்கும் துண்டு போட்டுகிட்டு தூங்க இல்ல பதிவ படிக்கப் போறேன்:)
தலைப்பில கூட கட்சிய வச்சுப் பார்ன்னு சொல்லியிருக்கலாமுல்ல.
//
பரமன்: நீங்க பாட்டில் வாங்கித்தருவியன்னுதான் நாங்க நாக்க தொங்க போட்டுட்டு அலையுரோம், நான் குடிக்கிறது எப்படின்னு எனக்குத்தெரியும் நீ உன் வேலையபாருடா.
//
அது சரி :))
//
அப்படியே போய் இரண்டு கிலோ மீன் வாங்கிட்டு வந்து அம்மா கிட்ட கொடுத்திரு,இன்னைக்கு கொத்தனாருக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு.
//
மீனை விடாதீங்க, நண்டு இல்லையா
சாப்பாடு கொத்தனாருக்கு மட்டுமா :))
//
முருகன்: இந்தாப்பா வைத்தி வீட்டு மீன் குழம்பு உனக்கு ஏத்த மாதிரி கார சாரமா இருக்கும்.
பரமன் : இது நல்லா ருசியா இருக்குடா,?
முருகன்: நம்ம வீட்டு மீன் குழம்புதான் அதுல ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி கொடுத்தேன் அத நல்லாயிருக்குன்னு சொல்ற நீ. உன்னையெல்லாம் என்ன பண்றது.
//
ஹா ஹா ஒரே சிரிப்பா இருந்திச்சு.
நல்ல நகைச்சுவையான பதிவு குடுகுடுப்பையாரே :))
:))
மேலும் தொடருங்கள்...
ராஜ நடராஜன் said...
அய்!சீட்டு காலி:)
//
இப்பயெல்லாம் பஸ்ஸே காலிதான்.
//
முருகன்: நம்ம வீட்டு மீன் குழம்புதான் அதுல ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி கொடுத்தேன் அத நல்லாயிருக்குன்னு சொல்ற நீ. உன்னையெல்லாம் என்ன பண்றது.
//
குவாட்டர் அடிச்சிட்டு சாப்ட்டா அப்பிடித் தான் :0))
குடுகுடுப்பை said...
அது சரி said...
//
முருகன்: நம்ம வீட்டு மீன் குழம்புதான் அதுல ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி கொடுத்தேன் அத நல்லாயிருக்குன்னு சொல்ற நீ. உன்னையெல்லாம் என்ன பண்றது.
//
குவாட்டர் அடிச்சிட்டு சாப்ட்டா அப்பிடித் தான் :0))//
இதெல்லாம் பாட்டில் பார்ட்டிப்பா.
:-)))
//முத்தையன் : காளி பிளவரோ , யோக்கியன் பிளவரோ வயித்துக்கு வஞ்சனை பண்ணாம சாப்பிட்டா சரி.//
காளி பிளவரோட எதிர்பதமா யோக்கியன் பிளவர்...?
ராஜ நடராஜன் said...
தலைப்பில கூட கட்சிய வச்சுப் பார்ன்னு சொல்லியிருக்கலாமுல்ல.
//
ஹா ஹா
கிச்சுக் கிச்சுக் கூட்டிச் சிரிக்க வைக்காமல் கதாபாத்திரங்களின் இயல்பான படைப்பாலேயே சிரிக்க வைத்திருக்கிறீர்கள், குடுகுடுப்பை சார்.VERY GOOD.
ஆமாம், மீன் குழம்பு உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா? பல பதிவுகளில் மீன் வாசனை அடிக்கிறது!
ஆமாம், மீன் குழம்பு உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா? பல பதிவுகளில் மீன் வாசனை அடிக்கிறது!
//நம்ம வீட்டு மீன் குழம்புதான் அதுல ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி கொடுத்தேன் அத நல்லாயிருக்குன்னு சொல்ற நீ. //
இதுல அரசியல் ஒன்னும் இல்லியே.. தல.......
ஷண்முகப்ரியன் said...
ஆமாம், மீன் குழம்பு உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா? பல பதிவுகளில் மீன் வாசனை அடிக்கிறது!//
ஆமாம் ஆமாம்
SUREஷ் said...
//நம்ம வீட்டு மீன் குழம்புதான் அதுல ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி கொடுத்தேன் அத நல்லாயிருக்குன்னு சொல்ற நீ. //
இதுல அரசியல் ஒன்னும் இல்லியே.. தல.......//
ஒன்னும் இல்லியே.
//"விடவு பறிங்க"//
அப்படின்னா என்ன??????
//விநாயகம் : டேய் முருகா அந்தாளுக்கு வைத்தி வீட்லேந்து கொஞ்சம் மீன் குழம்பு வாங்கி கொண்டாந்து கொடுறா?//
அது யாரு வைத்தி?? பக்கத்துக்கு ஊட்டுகாரா??? ஒரு முன்னுற போடலாம்ல...................
Post a Comment