படம் பிடித்தவரின் விமர்சனம்
படம் பிடிக்காதவரின் மற்றொரு விமர்சனம்
குருவி,வில்லு வரிசையில் மீண்டும் ஒரு கொள்ளக்கூட்ட பாஸ் படம். மலேசியாவில் படம் எடுக்க குறைந்த செலவு ஆகும் போல அதனால் ஓசில பிளாக்ஸ்பாட் கெடக்கிறதுனால எழுதுற என்ன மாதிரி, மலேசியாவிக்கு விமானத்துல போற மாதிரி சினிமா எடுத்தா கொள்ளக்கூட்ட சினிமாதான் எடுப்பாங்க போல,காங்கோ சென்னை இங்கெல்லாம் படம் போகிறது.
படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே என் மகள் அப்பா பயமா இருக்கு ஒரே சத்தமா இருக்கு வீட்டுக்கு போகலாம் அப்படினு சொன்னா, சொன்னபடியே 20 நிமிடத்திற்கு முன்பாகவே அவங்கம்மாவும் அவளும் வீட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர்.நான் நண்பர்களின் காரில் வருகிறேன் எனறு முழுச்சத்தத்தையும் கேட்டேன். ஒன்று தியேட்டர் சரியில்லை அல்லது பின்னனி இசை தேவையில்லாத இரைச்சல் அல்லது என் காது சரியில்லை.
படத்தின் கதை என்னான்னா ரெண்டு நல்ல கொள்ளக்கூட்ட பாஸ் ஒருவர் பிரபு, இன்னொருவர் சேட்டு, சேட்டுவின் மகன் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு போதை மருந்தெல்லாம் கடத்துறார் அப்பா சேட்டையும் கொன்று விடுகிறார். இவருக்கு கோலங்கள் சீரியல் வருகிற ஆதி கேரக்டர் நடிகரின் குரல், ரொம்ப பயமா இருக்கு.சூர்யா, பிரபுவிற்காக கடத்தல் செய்யும் குருவி. மலேசியா காங்கோ இங்கெல்லாம் பறக்கிறார் ,வைரங்களை கடத்துகிறார். காங்கோவை அழகாக காட்டியிருக்கிறார்கள்.எல்லா முறையும் கஸ்டம்ஸிற்கு யாரோ தகவல் கொடுக்கிறார்கள். சூர்யாவும் அவரின் நண்பனும் எப்படியோ சமர்த்தியமாக தப்பிக்கிறார்கள். இந்த சூர்யாவின் நண்பனின் தங்கைதான் தமன்னா ஹீரோயினி.சூர்யா கூட லல் பண்ணுரார் டான்ஸ் ஆடுறார். இதுக்கெல்ல்லாம் அவங்க அண்ணன் சப்போட்டா இருக்கார்.
திடீரென்று இடைவேளையில் ஒரு திருப்பம், இந்த நண்பன் வில்லனோட ஆள். அப்புரம் மலேசியாவுக்கு ஹெராயின் வயித்துக்குள்ள வெச்சு தமன்னாவோட அண்ணன் வில்லனுக்காக கடத்துறாரு,அதே பிளைட்ல பிரபுவுக்கு சூர்யா தங்கம் கடத்துறாரு. நிறைய சண்டை போடுறாங்க,காது கிழியுது மியூசிக். நண்பன் வயித்திலேந்து ஹெராயின எடுக்க வில்லன் கோஷ்டி வயித்த கிளிச்சி எடுக்குறாங்க , தமன்னாவோட அண்ணனான இவர் சூர்யாகிட்ட சாகும் தருவாயில் சொல்றார் என்ன எரிச்சிருன்னு , அவரும் எரிக்கிறார்.
நீதான் எங்கண்ணன கொன்னேன்னு தமன்னா கோபப்டுறாங்க, கடைசில பாத்தா அவங்கண்னன் கையில உள்ள செல்போன்லேயெ யாரு கொண்ணதுன்னு படம் புடிச்சிருக்கு, அப்புரம் தமன்னாவுக்கு திரும்பி சூர்யாவை புடிச்சிருக்கு.
இடைவேளைக்கு அப்புரம் சூர்யா கஸ்டம்ஸ்க்கு அல்லக்கையாவுறாரு, வில்லன் பிரபுகிட்டேந்து கிழிச்ச காங்கோ நாட்டு பணத்தில பாதிய (கொள்ளகூட்ட நோட்டு மேட்சிங் டெக்னிக்) எடுத்துட்ட கொல்றார்.சூர்யா தப்பிக்கிறார் காங்கோ செல்கிறார்.வைரத்தை வில்லனிடமிருந்து பறித்துவிட்டு கொல்கிறார்.
இந்தியா வருகிறார், கஸ்டம்ஸ்ல அவங்கம்மா போட்டுக்கொடுத்திட்டாங்க , இனிமேலாவது திருந்தி வாழச்சொல்லி, நாங்களும் சொல்லிக்கிறோம் நீங்க நல்ல படம் நிறைய நடிக்கலாம்.அவங்கம்மாக்காக கஸ்டம்ஸ்ல அவர் தலைல வெச்சுக்கிற வைரத்தெல்லாம் குடுக்கிறார்.
உடனே அவருக்கு ஆபிஸர் என்னமோ ஒரு வேலை கொடுக்க்கிறார். வெறும் உடம்போட இருக்கிற சூர்யாவிற்கு பக்கத்தில இருக்க ஆபிஸர் சட்டையை உருவி குடுக்கிறார். அப்படியே நம்ம சட்டை பேண்டையும்தான்.
தமன்னா அழகாய் இருக்கிறார், ஒரு பாடல் காட்சியில் அவர் கட்டியிருக்கும் சேலை நன்றாக இருக்கிறது.பிரபு,சூர்யா நன்றாக நடித்திருக்கிறார்கள், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஆனால் படம்....
அய்யா படம் எடுக்குறவுங்களே நீங்களே இந்த படங்களை முதலில் உங்கள் குடும்பத்தோட குழந்தை குட்டிகளோட பாருங்க அப்புரமா காசு குடுத்து பாக்கிரவங்களை சோதனை பண்ணுங்கப்பா.
இந்தகொள்ளக்கோஷ்டிப்படம் எனக்கல்ல. பெரும்பாலனவர்களுக்கு பிடித்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.இந்த மாதிரி கதைக்களம் உள்ள படங்களை தமிழகம் உண்மையிலேயே ரசிக்கிறதா. சூர்யா,தமன்னா,பிரபு இவர்களை வைத்து கண்டிப்பாக ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் எடுத்திருக்க முடியும்.
பதிவில் எழுத்துப்பிழை நிறைய இருக்கும். காரணம் அயன் செய்யப்பட்ட விரல்கள் இன்னும் சுடுகிறது.
மொத்தத்தில் அயன் குடுகுடுப்பை எழுதிய ஒரு கவிதை.
36 comments:
\\காரணம் அயன் செய்யப்பட்ட விரல்கள் இன்னும் சுடுகிறது.
\\
சுப்பரப்பூ
பதிவில் எழுத்துப்பிழை நிறைய இருக்கும். காரணம் அயன் செய்யப்பட்ட விரல்கள் இன்னும் சுடுகிறது.
மொத்தத்தில் அயன் குடுகுடுப்பை எழுதிய ஒரு கவிதை. //
இவ்வளவு சூடாக ஒரு விமர்சனத்தைப் படித்து ரொம்ப நாளாகிறது,குடுகுடுப்பையாரே.அதுவும்உங்கள் கடைசிப் பஞ்ச் லைன் அழகு.
மறந்து விட்டேன்,நீங்கள் எப்படி உங்கள் நாட்டில் இந்தப் படத்தைப் பார்த்தீர்கள்?அங்கேயும் படம் வெளியாகி இருக்கிறதா?
ஷண்முகப்ரியன் said...
மறந்து விட்டேன்,நீங்கள் எப்படி உங்கள் நாட்டில் இந்தப் படத்தைப் பார்த்தீர்கள்?அங்கேயும் படம் வெளியாகி இருக்கிறதா?
//
ஆமாம்.தியேட்டரில் சென்றுதான் பார்த்தேன்.
ஷண்முகப்ரியன் said...
பதிவில் எழுத்துப்பிழை நிறைய இருக்கும். காரணம் அயன் செய்யப்பட்ட விரல்கள் இன்னும் சுடுகிறது.
மொத்தத்தில் அயன் குடுகுடுப்பை எழுதிய ஒரு கவிதை. //
இவ்வளவு சூடாக ஒரு விமர்சனத்தைப் படித்து ரொம்ப நாளாகிறது,குடுகுடுப்பையாரே.அதுவும்உங்கள் கடைசிப் பஞ்ச் லைன் அழகு.
//
தமிழ் சினிமாத்துறையில் உள்ள திறமைசாலிகள் கண்டிப்பாக நல்ல திரைப்படங்களை கொடுக்கமுடியும். இந்தக்கொள்ளகூட்ட கான்செப்ட் ஏன் இப்போ அதிகமா வருதுன்னு தெரியல.
குருவி,வில்லு மற்றும் அயன் ஒரு நேர்மையான ஒப்பீடு என் கோபத்தின் காரணத்த்தை விளக்கும். இந்த மூன்றும் தியேட்டரில் சென்று பார்த்தேன். இனி எந்தப்படமும் பாக்க தியேட்டருக்கு செல்வதாக இல்லை.
அயன் அய்யய்யோ ரகமா ? என் காசுக்கு ஆப்பு அடிக்காமல் காப்பாற்றிய குடுகுடுப்பைக்கு நன்றி.
படங்களுக்கு ஆப்பு வைபதே உங்கள் வேலை ஆகிவிட்டது
குடுகுப்பையார், பாதிக்கப்பட்டதை கண்டு, மனம் நொந்து டீ குடிக்க போகிறேன்.
(குழந்தையே பாக்கமுடியலனு, எழுந்திரிச்சி போனதுக்கு அப்பறம் உமக்கு என்னைய அங்க வேல, நல்ல வேணும்)
//குருவி,வில்லு வரிசையில் மீண்டும் ஒரு கொள்ளக்கூட்ட பாஸ் படம்.//
:-))))
//ர், ஒரு பாடல் காட்சியில் அவர் கட்டியிருக்கும் சேலை நன்றாக இருக்கிறது.//
தமிழில்
ஒரு
படத்தில்
நாயகி
கட்டியிருக்கும்
புடவை
அழகு
என்றால்
புடவை
கட்டியிருக்கும்
பெண்ணிடம்
ஒன்றுமே
அழகாக
தோணவே
இல்லையா...
அ(ய்ய்ய்ய்ய்ய்ய்யோஓஒ)யன் !!
வீட்ல அடங்க மாட்டீங்களா அண்ணே?! இருந்தமா, நாலு பின்னூட்டம் போட்டமான்னு இல்லாமப் போய்ட்டு, கதையப் பாருங்க..
இத விட ஒரு படம் எப்டி எடுப்பாங்க படம் பாத்தமா வந்தமான்னு இல்லாம
இதுக்கு தான் நான் முன்னாலே விமர்சனம் எழுதலை
shabi said...
இத விட ஒரு படம் எப்டி எடுப்பாங்க படம் பாத்தமா வந்தமான்னு இல்லாம//
அது காசு கொடுத்த பாத்த என்னோட விருப்பம்.
உங்களை இப்படி செய், படம் பார்க்காதே என்று சொல்லும் உரிமை எனக்கில்லை, அதே போல்....
pls watch the movie at some gud theater . movie was very gud.
ADA NAASAMA POGA........ AYAN SUPER FILM DA
don't spread false news.
movie was good.
you are the only person review like this....
//அப்புரம் சூர்யா கஸ்டம்ஸ்க்கு அல்லக்கையாவுறாரு, //
சூர்யாவிற்கு கஸ்டம்ஸ் அல்லக்கை ஆகுது!! என்ன இருந்தாலும் அவரு அந்த படத்தோட ஹீரோ இல்ல ?
குருவி,வில்லு வரிசையில் இந்த படம்மா? எனக்கு அப்படி தெரியல..
நான் ஓபன் தியேட்டரில் பார்த்தால் சத்தம் பாதிக்க வில்லை போல!!
என்னப்பா நீங்க புதசா ஒரு கதை சொல்லுறீங்க... லோசனும் கார்த்திகைபாண்டியும் ஆகா ஓகோங்கிறாங்க! நான் பாக்கவா வேணாமா? :(
Anonymous said...
ADA NAASAMA POGA........ AYAN SUPER FILM DA
//
அது உன்னோட விருப்பம், என்னோட பார்வை வேறு. நான் எங்கேயும் யாரையும் படம் பார்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை. இதில் சூர்யா,விஜய்,அஜுத்தெல்லாம் ஏன்?
இதை வழக்கமா நசரேயன் தானே செய்வாரு! //மொத்தத்தில் அயன் குடுகுடுப்பை எழுதிய ஒரு கவிதை.//
:-))
அய்யே!அங்க இருந்துகிட்டு கொள்ளக்கூட்ட பாஸ் படம்.இங்க இருந்துகிட்டு ஆஸ்கர் படம்.
Bhuvanesh said...
//அப்புரம் சூர்யா கஸ்டம்ஸ்க்கு அல்லக்கையாவுறாரு, //
சூர்யாவிற்கு கஸ்டம்ஸ் அல்லக்கை ஆகுது!! என்ன இருந்தாலும் அவரு அந்த படத்தோட ஹீரோ இல்ல ?
குருவி,வில்லு வரிசையில் இந்த படம்மா? எனக்கு அப்படி தெரியல..
நான் ஓபன் தியேட்டரில் பார்த்தால் சத்தம் பாதிக்க வில்லை போல!!
சத்தத்திற்கு தியேட்டர் காரணமாக இருக்கலாம். கதையின் சாரம் குருவி, வில்லுவில் இருந்து எந்த விதத்தில் மாறுபட்டது. ஏன் ஒரே மாதிரி கதைக்களம் உள்ள படங்கள்.அயனில் விஜய் நடித்திருந்தால் நிறைய நெகடிவ் ரிவீவ் இருந்திருக்கலாம்.
பித்தன் said...
குடுகுப்பையார், பாதிக்கப்பட்டதை கண்டு, மனம் நொந்து டீ குடிக்க போகிறேன்.
(குழந்தையே பாக்கமுடியலனு, எழுந்திரிச்சி போனதுக்கு அப்பறம் உமக்கு என்னைய அங்க வேல, நல்ல வேணும்)//
அதுதான் என்னுடைய தவறு.
என்னோட ஒத்துப்போகிற மற்றொரு விமர்சனம்
நாங்கள் பத்து பேர் படம் பார்க்க சென்றோம் யாருக்கும் பிடிக்கவில்லை.நான் என்னுடைய பார்வையயே வைத்துள்ளேன்.
Anonymous said...
pls watch the movie at some gud theater . movie was very gud.
April 5, 2009 11:14 PM
Anonymous Anonymous said...
ADA NAASAMA POGA........ AYAN SUPER FILM DA
April 6, 2009 12:07 AM
Anonymous Anonymous said...
don't spread false news.
movie was good.
you are the only person review like this....//
மேலே உள்ள அனானிக்கு பதில் முடிந்தால் தனிப்பதிவாக தருகிறேன்.
malar said...
படங்களுக்கு ஆப்பு வைபதே உங்கள் வேலை ஆகிவிட்டது//
நான் எதையும் அதிகமாக எழுதவில்லை. நான் பார்த்ததை எழுதுகிறேன். அவ்வளவே
SUREஷ் said...
//ர், ஒரு பாடல் காட்சியில் அவர் கட்டியிருக்கும் சேலை நன்றாக இருக்கிறது.//
தமிழில்
ஒரு
படத்தில்
நாயகி
கட்டியிருக்கும்
புடவை
அழகு
என்றால்
புடவை
கட்டியிருக்கும்
பெண்ணிடம்
ஒன்றுமே
அழகாக
தோணவே
இல்லையா...//
நல்ல அழகுதான், ஒரு பாடலில் தமன்னாவின் சேலை என்ன ரொம்பவே ஈர்த்தது
புல்லட் பாண்டி said...
என்னப்பா நீங்க புதசா ஒரு கதை சொல்லுறீங்க... லோசனும் கார்த்திகைபாண்டியும் ஆகா ஓகோங்கிறாங்க! நான் பாக்கவா வேணாமா? :(
படத்தை பாருங்க சார், என் ரசனையும் உங்களுடையதும் வேறாக இருக்கலாம்.
கண்டிப்பா உம்ம காது சரியில்லை.... நல்ல மருத்துவரா போய் பாரும்.
ஆமா இது படம் பாத்து போட்ட பின்னுட்டமா இல்ல தலைவர் நசரேயன் விமர்சனம் போல உங்க கனவுல தென்பட்டதா... ஏன்னா இது படாத பாத்து போட்ட பின்னுட்டம்னா ஒரு ரெண்டு வெள்ளி மிச்சமாகும்க ... CD வாங்க வேண்டிய செலவு மிச்சம்..
பாத்தேன் சாமி, இர்விங் fun asia கொட்டாயில.
அன்புள்ள ஐன்ஸ்டைன் ஐயா,
இப்பவும் தாங்கள் அயன் படம் குடும்பத்துடன் பார்த்த செய்தி கேட்டு மிக மகிழ்ந்தோம்...கடும் சிரமத்தையும், தலை வலியையும் பொருட்படுத்தாது அழுகிய டமில் மகன், வில்லு, குருவி, ஏகன், அயன் போன்ற தரமான படங்களை தாங்கள் எங்களை தடுத்தாளும் பொருட்டு பார்க்கும் மனித நேயம் பாராட்டுக்குரியது...எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் என்ற உங்களைப் போன்ற "ரொம்ப நல்லவய்ங்களால்" தான் தமிழ் திரைப்பட உலகம் வாழ்கிறது...வாள்க டமில்...வழர்க ச்சூர்யா பொகள்...
(தல, அதெல்லாம் இருக்கட்டும், எவ்வளவு அடி வாங்கினாலும் அதெப்படி தைரியமா மொத ஷோவுக்கே கெளம்பிடுறீங்க?? ஒரு வேளை நீங்க நெஜமாவே "ரொம்ப நல்லவனா"??
:0))
அது சரி said...

:0))//
நாமக்கல் சிபியோட ரிவீவ் படிச்சிட்டு போகவேண்டாம்னுதான் இருந்தேன்.ஆனாலும் இப்படி ஆகிப்போச்சு, நீங்க கண்டிப்பா பாருங்க அது சரின்னு இருக்கும்.
வேல்,ஆறு சாதாரண ஊர்ப்படம், இது சேம்ஸ்பாண்ட் படம் மேரி.
//
குடுகுடுப்பை said...
நீங்க கண்டிப்பா பாருங்க அது சரின்னு இருக்கும்.
வேல்,ஆறு சாதாரண ஊர்ப்படம், இது சேம்ஸ்பாண்ட் படம் மேரி.
April 6, 2009 4:55 PM
//
இந்த நம்பியார் வேலை எல்லாம் நம்மக் கிட்ட நடக்காது....ஒங்க வெரலுக்கு அயன் வச்சுட்டாய்ங்கறதுக்காக என்னோட வெரலையும் எரிக்க பார்க்கிறீங்க....என்னா வில்லத்தனம்....
:0))
Post a Comment