Thursday, February 26, 2009

அமெரிக்காவில் கார் ஓட்டக்கற்றுக்கொண்ட அனுபவம்

அமெரிக்கா வந்து மூன்று மாதம் வரையில் நண்பர்களோடு அலுவலகம் வந்து விடுவது, கார் இல்லாதது ஒன்றும் பிரச்சினையாக இல்லை, திடீரென இன்னும் இரு வாரங்களில் 20 மைல் தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு போகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்,நான் மட்டும்தான் வாடகை கார் எடுத்துதான் போகவேண்டும். சரி கார் ஓட்ட கத்துக்கொள்வோம் என்று தென் அமெரிக்காவை சேர்ந்த ஒரு 60 வயது மதிக்கத்தக்க டிரைவிங் டீச்சரிடம் கத்துக்கொண்டேன், மனுசன் கொஞ்சம் கூட கருணையே இல்லாம திட்டுவாரு. பிரேக் வேகமா அடிச்சா thank you for the ஜெர்க்கி அப்படின்னு சொல்வாரு.

என்னோட அலுவலகத்தில வேலை பாத்த இன்னோரு பெண்ணும் இவரிடம் கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருந்தார், ஒருவழியாக எங்கள் இருவருக்கும் ஒரே நாளில் டிரைவிங் தேர்வு வந்தது. பின் சீட்டில் அமர்ந்தபடி அந்தப்பெண் என்னிடம் தமிழில் பேசியபடியே வந்தார். ரொம்ப நேரம் பொறுத்துப்பார்த்த தாத்தா, if you guys வாந்து தாக் i will டிரோப் you at புர்கர் கிங், talk and come back அப்படின்னாரு. அதுக்கு அப்புரம் அந்தப்பெண் பேசவே இல்லை.

முதலில் டெஸ்ட் எடுக்க நான் போனேன், left turn yield on green light இருந்தது. எதிர்த்தாப்ல ஒரு பெரிய டிரக் வந்துட்டு இருந்தது நான் அவருதான் நமக்கு yield பண்ணனும்னு நெனச்சி லெப்ட் எடுத்துட்டேன்.பக்கத்துல உக்காந்திருந்த டிரைவிங் டெஸ்ட் வாத்தியார் ஆடிப்போயிட்டாரு, நல்லவெலையா அந்த கார்ல(தாத்தாவோட டிரைவிங் ஸ்கூல் கார்) அவரு கால்லயும் ஒரு பிரேக் இருந்தது ஒரே அமுக்கா அமுக்கி அவரையும் என்னையும் காப்பாத்திட்டாரு. அடுத்த நிமிசமே அந்த பார்க்கிங்க் லாட்ல நிறுத்த சொல்லி பெயில் போட்டுட்டாரு.

அதுக்கு அப்புரம் அந்தப்பெண்ணும் ஏதோ பார்க்கிங்ல தவறு பண்ணி பெயில் பண்ணிட்டாரு, அந்த பெண் ரொம்பக்கவலையா இதுவரைக்கும் ஒரு தேர்வுலேயும் பெயில் ஆனதில்லை ஒரு புலம்பல்.

மறுபடியும் டெஸ்ட் இந்த முறையும் left turn yield on green light ல இலேசா தப்பு பண்ண போகும்போதே அவரு எச்சரிச்சிட்டு பாஸ் பண்ணி விட்டிட்டாரு. ஒருவேலை எல்லா நேரத்திலேயும் அவரு பிரேக் அடிச்சு உயிர காப்பாத்திக்க முடியுமான்னு பயந்து மனுசன் பாஸ் போட்டுட்டாருன்னு நினைக்கிறேன்.

இப்பவும் அந்தப்பெண் நான் கார் ஓட்டும்போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தமிழில் பேசுகிறார், ஆனால் நான் புர்கர் கிங்கில் இறங்கி பேசிவிட்டு வரச்சொல்வதில்லை.

30 comments:

பழமைபேசி said...

அனுபவம் பேசுகிறதாக்கும்?

பழமைபேசி said...

//கற்றுக்க்கொண்ட அனுபவம்//

?????

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//கற்றுக்க்கொண்ட அனுபவம்//

சரி பண்ணிட்டோம்ல

பழமைபேசி said...

//புர்கர் கிங்கில்//

தந்தை பெரியார் ஈ.வே.ராவும்
பேரறிஞர் அண்ணாவும்
முத்தமிழறிஞர் மு.கவும்
பேராசிரியர் பெருந்தகையும்
ஊட்டி வளர்த்த தமிழுணர்வை
அசட்டை செய்யாதே! செய்யாதே!!

ச்சும்மா...ஒரு லுலுலாயி....இஃகிஃகி!! எல்லாம் சின்ன வயசில கத்தின ஒரு அனுபவந்தான்....

Unknown said...

//இப்பவும் அந்தப்பெண் நான் கார் ஓட்டும்போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தமிழில் பேசுகிறார், ஆனால் நான் புர்கர் கிங்கில் இறங்கி பேசிவிட்டு வரச்சொல்வதில்லை//

இதுக்கு என்னா அர்த்தம்? அவங்களையே கல்யாணம் கட்டிக்கிட்டீங்களா? அல்லது போறீங்களா?

சீமாச்சு

Unknown said...

பழமைபேசி ஐயா ஒரு "க்" போடத்தான் சொன்னாராக்கும்..

கார் ஓட்டக் கற்றுக் கொண்ட அனுபவம்

இன்னொரு க்-கும் போட்டிருங்க !

சீமாச்சு

பழமைபேசி said...

//Seemachu said...
பழமைபேசி ஐயா ஒரு "க்" போடத்தான் சொன்னாராக்கும்..
//

இதான்...தீயாரோடு சேர வேண்டாம்ன்னு பெரியவிங்க சொல்லிட்டுப் போயிருக்காங்க போலிருக்கு.... எனக்குக் கெட்ட பேரு?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... பாத்து "க்" எல்லாம் சரியாப் போட்டு வையும்!

குடுகுடுப்பை said...

Seemachu said...

பழமைபேசி ஐயா ஒரு "க்" போடத்தான் சொன்னாராக்கும்..

கார் ஓட்டக் கற்றுக் கொண்ட அனுபவம்

இன்னொரு க்-கும் போட்டிருங்க !

சீமாச்சு//

போட்டாச்சுங்கய்யா

பழமைபேசி said...

தேகப் பயிற்சி சாலைக்குப் போய் வாறேன்.... நேத்தைய வாத்துக்கறி தின்டதுல ஏறின கொழுப்பு இறங்கணுமே?! அதான்!!

நசரேயன் said...

சரித்திரத்தை மாத்தக் ௬டாது ஒரு தடவையிலே தேர்ச்சி அடைந்தால் வரலாறு மன்னிக்காது

நசரேயன் said...

/*அந்தப்பெண் நான் கார் ஓட்டும்போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தமிழில் பேசுகிறார், ஆனால் நான் புர்கர் கிங்கில் இறங்கி பேசிவிட்டு வரச்சொல்வதில்லை */
இறக்கி விட்டா என்ன நடக்கும்னு எனக்கு தெரியுமே!!

Mahesh said...

//இப்பவும் அந்தப்பெண் நான் கார் ஓட்டும்போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தமிழில் பேசுகிறார், ஆனால் நான் புர்கர் கிங்கில் இறங்கி பேசிவிட்டு வரச்சொல்வதில்லை//

ஏன்.. ப்ரேக் அவங்க கிட்டா இருக்கா? :))))

அ.மு.செய்யது said...

//இப்பவும் அந்தப்பெண் நான் கார் ஓட்டும்போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தமிழில் பேசுகிறார், //

இந்த கிளைமாக்ஸ் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு குடுகுடுப்பையாரே !!!!!!!

நல்ல அனுபவம்..இண்டரஸ்டிங்க்..

நட்புடன் ஜமால் said...

யாருக்கும் ஒன்னும் ஆகலையே

நட்புடன் ஜமால் said...

if you guys வாந்து தாக் i will டிரோப் you at புர்கர் கிங், talk and come back அப்படின்னாரு. அதுக்கு அப்புரம் அந்தப்பெண் பேசவே இல்லை.\\

ஹா ஹா ஹா

T.V.ராதாகிருஷ்ணன் said...

haa..haa...haa..
super

SK said...

நல்லா தான் இருக்கு ஆனா ஒரே அமெரிக்கா வாசனை... பதிவுகள் பூரா .................
இப்படியே போனா சீக்கிரம் போர் அடிச்சிரும் குடுகுடுப்பை அப்பு............. கொஞ்சம் நடைய மாத்துங்க.......

வேத்தியன் said...

ஏங்க ரொம்ப கஷ்டமா இருக்குங்க உங்களோட...
கார் ஓட்டச் சொன்ன கதைக்கிறது, கோழி வாங்கப் போயிட்டு முயலும், வாத்தும் வாங்கிட்டு வாரதுன்னு படு பேஜாராப் போச்சுங்க...
:-)))

jai said...

nanba, idhu oru sappa matter.. idhukku ellam oru blogaaaa...

andha ponnu Nalla typeaaa ,, adha sollunga

Nallavan

புல்லட் said...

மறுபடியும் டெஸ்ட் இந்த முறையும் left turn yield on green light ல இலேசா தப்பு பண்ண போகும்போதே அவரு எச்சரிச்சிட்டு பாஸ் பண்ணி விட்டிட்டாரு. ஒருவேலை எல்லா நேரத்திலேயும் அவரு பிரேக் அடிச்சு உயிர காப்பாத்திக்க முடியுமான்னு பயந்து மனுசன் பாஸ் போட்டுட்டாருன்னு நினைக்கிறேன்.

:)))))))

குடுகுடுப்பை said...

jai said...

nanba, idhu oru sappa matter.. idhukku ellam oru blogaaaa...

andha ponnu Nalla typeaaa ,, adha sollunga

Nallavan//

என் பொண்டாண்டி நல்லவன்னு நான் தலைப்பு வெச்சிருக்கலாம்.

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

//இப்பவும் அந்தப்பெண் நான் கார் ஓட்டும்போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தமிழில் பேசுகிறார், //

இந்த கிளைமாக்ஸ் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு குடுகுடுப்பையாரே !!!!!!!

நல்ல அனுபவம்..இண்டரஸ்டிங்க்..//
கடைசி வரிதான் பதிவுக்கே காரணம்

குடுகுடுப்பை said...

keerthi said...

நல்லா தான் இருக்கு ஆனா ஒரே அமெரிக்கா வாசனை... பதிவுகள் பூரா .................
இப்படியே போனா சீக்கிரம் போர் அடிச்சிரும் குடுகுடுப்பை அப்பு............. கொஞ்சம் நடைய மாத்துங்க.......
//

வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்.சரி நானும் வேற எதாவது கற்பனை கதை எழுத முயற்சி பண்றேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்
//

நான் எங்கே விருது வாங்கினேன். வேற எங்கியோ போட வேண்டிய பின்னூட்டம் இது மேடம்

SK said...

நன்றி. இந்த ஆர்வம் ஒன்னே போதும்... நீங்கள் கண்டிப்பாக நன்றாக எழுதுவீர்கள். நம்பிக்கை உள்ளது.

சந்தனமுல்லை said...

கடைசி பஞ்ச் நல்லாருந்தது...:-))

ஷண்முகப்ரியன் said...

இதென்ன பிரமாதம்.சென்னையில் நான் இருபது வருடங்களாகக் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.இன்னும் கற்று முடிந்த பாடில்லை சாமி.

வல்லிசிம்ஹன் said...

அடடா கார் ஓட்டக் கற்றபிறகுதான் கல்யாணமே பண்ணிக்கிட்டீங்களா:))))

மருதநாயகம் said...

//Seemachu said...

//இப்பவும் அந்தப்பெண் நான் கார் ஓட்டும்போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தமிழில் பேசுகிறார், ஆனால் நான் புர்கர் கிங்கில் இறங்கி பேசிவிட்டு வரச்சொல்வதில்லை//

இதுக்கு என்னா அர்த்தம்? அவங்களையே கல்யாணம் கட்டிக்கிட்டீங்களா? அல்லது போறீங்களா?

சீமாச்சு
//

ஃபிளாஷ்பேக் சொல்லும் போது பாட்டு, பைட்டு எல்லாம் சேர்த்து சொல்லனும், பாருங்க நம்ம சீமாச்சு குழம்பிட்டாரு